கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 6,589 
 
 

‘’ஜானகி….சங்கர்கிட்டே இருந்து போன் வந்துச்சா?’’ வீட்டிற்குள் நுழையும் போதே குரல் கொடுத்தார் இராமலிங்கம். ‘’காலையில் ஆறரை மணிக்கே போய்ச் சேர்ந்துட்டானாம்….பத்து மணிக்கெல்லாம் ஆபிஸ் போயிடுவேன்னு சொன்னாங்க?’’

அதென்னவோ ஜானகி…நம்ம பையனுக்கு ஒங்கிட்ட மட்டும்தான் அட்டாச்மெண்ட ஜாஸ்தி…எங்கிட்ட நிமிர்ந்து கூட பேச மாட்டேங்கறான். இத்தனைக்கும் நான் ஃப்ரெண்ட்லியாதான் பழகிட்டு இருக்கேன்…’’

‘’அதெல்லாம் ஒண்ணுமில்லீங்க…’’ அதில்லை ஜானகி….போனவாரம் கால் வலிக்காக டாக்டர்கிட்டே போயிட்டு வந்தேன்…டெய்லி செர்ரி பழம் சாப்பிடச் சொன்னார்னு சொன்னதும் எல்லோரும் சிரிச்சீங்களே…அப்பகூட இவன் பக்கத்திலேதான் இருந்தான்.

‘ஏம்பா கால் என்னாச்சுன்னு ஒரு வார்த்தை கூட கேட்கலியே. அதான் வருத்தமாயிடுச்சு ஜானகி’’

இரண்டு நாட்களுக்குப் பிறகு..,

‘’சார் கூரியர்…’’

கூரியரில் வந்த பார்சலை ஆச்சரியதுதடன் பிரித்தார் இராமலிங்கம்.

‘’நம்ம ஊர்ல செர்ரி பழத்திற்காக அலைஞ்சு பார்த்தேன், கெடக்கலை. அதான் இப்ப வாங்கி அனுப்பி இருக்கேன். உடம்பை கவனமா பார்த்துக்குங்க அப்பா’’

மகனின் கடிதத்தைப் படித்து இராமலிங்கத்தால் கண்ணீரை அடக்க முடியவில்லை.

– கொ.வை.அரங்கநாதன் (26-11-2008)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *