எதிரி – ஒரு பக்க கதை






”என் மாமியாரைக் கேட்டுச் சொல்றேனே…”
ராதா,பக்கத்து வீட்டுக்காரியிடம் சொன்னாள்.
அட…! ஷாப்பிங்க் போகவுமா கேக்கணும்..?
இல்லடி..என் மாமியார் சொல்றது கரெக்டா இருக்கும்னுதான்…
கேட்ட ராஜனுக்கு மயக்கமே வந்தது.
‘ப்ச்…என் இஷ்டத்துக்கு வத்தக்குழம்புகூட வைக்க முடியலே, ச்சே…’ இதே ரமா காலையில் அதே மாமியாரிடம் சொன்னாள்.
ராஜன் வெடித்தான்.
எப்பவும் உங்களுக்குள்ள சண்டைதான். இப்ப அம்மாவை ஆ….ஊங்குற…
ரமா சிரித்தாள்.
‘வீட்டுக்குள்ள சண்டையாகலாம், ஊருக்குள்ள சொல்லக்கூடாது. சொன்னா, ஊரே கூடி நின்னு பிரிச்சுடும். அது எங்களுக்கு புரிஞ்சதாலதான், இன்னும் நாம தனிக்குடித்தனம் போகலை..ஓ.கே’
ராஜன் மறுக்க வில்லை.