உள்ளதும் போச்சு
கதையாசிரியர்: ஆர்.எஸ்.ஜேக்கப்
கதைத்தொகுப்பு:
ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 13, 2025
பார்வையிட்டோர்: 60
(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
மிகவும் இனிமையாகப் பாடுகிற ஒரு பட்சி ஒரு வரிடமிருந்தது. அவருடைய நண்பர் ஒருவர் இந்தப் பாடுகிற பட்சியைக் கொண்டுபோய் சிட்டுக்குருவிகள் கூண்டில் விட்டால் பாடுமா என்று பரிசோதிக்க இரவலாக வாங்கிச் சென்றார். சின்னாட்களுக்குள் பாடுகிற பட்சி பாட்டை நிறுத்திவிட்டு குருவிகள் ‘சர்ப்-சர்ப்’ என்று சப்தமிடுவது போன்று கூச்சலிட ஆரம்பித்து விட்டது.
பாடுகிற பட்சியின் சொந்தக்காரன் தன் பட்சி யைக் கொண்டுபோய்ப் பிறிதொரு பாடுகிற பட்சியின் கூண்டில் விட்டு, பல பிரயத்தனங்களுக்குப் பின்பு பாட ஆரம்பித்ததாம்.
இவ்விதமாகக் கிறிஸ்தவர்கள் பலர் உலக மக்க ளோடு உண்டு, உடுத்தி, உறங்கி, உறவாடும்போது அவர்களைப் போலவே ஆகிவிடுகிறார்கள். தேவனுடைய பிள்ளைகளோடு ஊடாடி, உறவாடி வரும்போது அவர் களைப் போலவே ஆகிவிடுகிறார்கள்.
“என் காலடிகள் வழுவாதபடிக்கு, என் நடைகளை உமது வழிகளில் ஸ்திரப்படுத்தும்” [சங்கீதம் 17:5]
“நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந் தரியாமல், உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்”. [ரோமர் 12:2]
– குருமாணிக்கம் உவமைக் கதைகள் 101, முதற்பதிப்பு: ஏப்ரல் 1962, ஜெயா நிலையம், பாளையங்கோட்டை.
![]() |
பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க... |
