உருக்கிய தங்கம்!
கதையாசிரியர்: ஆர்.எஸ்.ஜேக்கப்
கதைத்தொகுப்பு:
ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 13, 2025
பார்வையிட்டோர்: 79
(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
பெரியார் ஒருவர் மண்பாண்டத் தொழிற்சாலைக் குச் சென்றார். அன்று கருப்பு நிற மண்பாண்டங்களைச் செய்து கொண்டிருந்தார்கள். ஒரு கன்னங்கருப்பு நிற மண்பாண்டத்தை நெருப்பிலிருந்து எடுத்தபோது பொன் நிறமாக இலங்கியது. பெரியவர் ஆச்சரியத் தில் மூழ்கிப் போனார்.
நெருப்பைப் போன்ற உபத்திரவத்தில் நாமும் ஜொலிக்கவேண்டும். சங்கீதக்காரன், “நான் உபத்திரப் படுவதற்கு முன்பு வழிதப்பி நடந்தேன்” என்று ஆத்தும சோதனை நாளிலும் ஆனந்தித்துப் பூரிக்கிறான். தட்டான் தங்கத்தை உருக்கும்போது – தங்கத் தண்ணீரில் தன் முகம் நன்கு தெரியும்வரை உலையில் வைத்துக்கொண்டிருப்பான். முகம் தெளிவாய்த் தெரிந்தவுடன் வெளியே எடுத்துவிடுவான்.
உருக்கின தங்கத்தண்ணீர் கணப்பொழுது அதிக மாக நெருப்பிலிருக்குமானால் வேலைக்கு உதவாது, அந்தத் தங்கத்தண்ணீர் மீது மாசு, மறு. தூசி, துரும்பு இருக்கும்வரை அவனுடைய முகம் நன்றாகத் தெரியாது. பக்தன் யாக்கோபும் தன்னைப் பூரணமாக சுத்திகரித்த பின்புதானே “நான் ஆண்டவரை முகமுகமாய்க் கண்டேன்” என்கிறான்.
ஆண்டவர் தம் பிள்ளைகளில் சிலரைத் துன்ப நெருப்பில் புடமிடலாம். ஆனால் இந்த மனுஷன் அல்லது மனுஷி நெருப்பில் புடமிடுவதை இனித்தாங்க முடியாது என்று கண்டவுடன் நெருப்பை உடனே அணைத்துவிடுவார்.
”அவர் என்னைச் சோதித்த பின் நான் பொன்னாக விளங்குவேன்” [யோபு 23:10]
“மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை” [1 கொரிந்தியர் 10:13]
– குருமாணிக்கம் உவமைக் கதைகள் 101, முதற்பதிப்பு: ஏப்ரல் 1962, ஜெயா நிலையம், பாளையங்கோட்டை.
![]() |
பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க... |
