உதிக்காத சூரியன்
கதையாசிரியர்: நஞ்சப்பன் ஈரோடு
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: அறிவியல் புனைவு
கதைப்பதிவு: August 17, 2023
பார்வையிட்டோர்: 3,555
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: அறிவியல் புனைவு
கதைப்பதிவு: August 17, 2023
பார்வையிட்டோர்: 3,555
ஒரு திங்கட்கிழமை காலை.
“இந்த ப்ராஜெக்ட் ஸ்டேட்டஸ் மீட்டிங்க்கு வந்த எல்லோருக்கும் நன்றி. முதலாவதாக நாம் பேசப்போவது போன வார இறுதி டிப்லாய்மென்ட் பற்றி. அந்த டிப்லாய்மென்டில் ஆயிரக்கணக்கான தேவையற்ற நட்சத்திரங்களை அணைத்து விட்டோம். அதனால் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டதா?”
“ஒன்றே ஒன்று சார்… சூரியன் என்ற ஒரு நட்சத்திரத்தை தவறுதலாக அணைத்துவிட்டோம்.”
“அதன் பாதிப்பு என்ன என்று தெரியுமா?”
“பெரிய பாதிப்பு ஒன்றும் இல்லை சார். ஒரு சிறிய கிரகத்தில் வசிப்பவர்கள் மட்டுமே சூரியனைச் சார்ந்துள்ளனர்.”
“நல்லது. அதற்கு ஒன்றும் செய்யத் தேவையில்லை. நாம் பேச வேண்டிய அடுத்த ஐட்டம் என்ன?”