உதவி – ஒரு பக்க கதை
கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 7,205
வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்
“லேகா… டைனிங் டேபிள் சேர் பின்னணும்ன்னு சொன்னியே, ஆள் வந்தாச்சு’ என்று, இரண்டு கண்களும் தெரியாத ஒரு வயதானவரை கையைப் பிடித்துக் கூட்டி வந்து, ஹாலில் அமர வைத்தான் மணி.
வயர் பிய்ந்து போன இரண்டு நாற்காலிகளை வாசல் வராண்டாவுக்கு எடுத்துச் சென்ற லேகா, “அவரை வராண்டாவில் உட்கார்ந்து பின்னிட்டு கூலியை வாங்கிட்டுப் போகச் சொல்லுங்க’ என்றாள்.
“என்னடீ இது, ரெண்டு கண்ணும் தெரியாதவரைக் கூடவா சந்தேகப்படறே?’ என்று கிசுகிசுத்தான் மணி.
“இவரு வாசல்ல உட்கார்ந்து பின்னும் போது, தெருக்காரங்க நாலுபேரு பார்த்து, இவரைக் கூப்பிட்டு வேலை கொடுப்பாங்க இல்லையா?’ என்றாள் லேகா.
மனைவியை நினைத்து பெருமிதப்பட்டான் மணி.
– சு.மி. சீனிவாசன் (11-4-12)
தொடர்புள்ள சிறுகதைகள்
உறுதி
மா.வீ.தியாகராசன்
September 18, 2026
விரல்கள்
செம்பியன் செல்வன்
September 18, 2026
இடைவேளை
எஸ்.சங்கீதா
September 18, 2026