உண்மைப் பண்டமாற்றல்
கதைத்தொகுப்பு: சமூக நீதி சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 16, 2024
பார்வையிட்டோர்: 809
(1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
பண்டமாற்றலினும், பொருள் கொடுக்கல் வாங்கல் களினும், மக்கள் ஒருவரையொருவர் வஞ்சிப்பதும், ஒருவருக்கொருவர் மிஞ்சிப்போதலும் கூடாது. கடைக்காரர்கள் எடை குண்டுகளை ஒரு குன்றிமணியளவு எடை குறையாமலும், அளவுகோல்களை ஒரு நூலளவு நீளம் குறையாமலும், மரக்கால் படிகளை ஓர் எள்ளளவுங் குறை யாமலும் வைத்துக்கொண்டிருக்கவேண்டும்.
பொருள்க உண்மைத் தரத்தை மறைத்துச் சொல்லக்கூடாது. பொருள்களின் தரத்தின் படியே விலைசொல்ல வேண்டும்; மிகையாக வாங்கக்கூடாது. பொருள் வாங்குபவரும் கடைக்காரன் தவறாக அதிகப்படியான பொருள் கொடுத்து விட்டாலும், அல்லது விலைமுடித்த பொருளுக்கு மேற் பட்ட தாமுடைய பொருளைக் கொடுத்துவிட்டாலும் வாங் குபவன் அத்தவற்றைக் கடைக்காரனுக்குத் தெரிவித்து விடவேண்டும். இவ்வாறான் தவறுகள் ஏற்படின் அவற்றை விற்பவன் வாங்குபவன் மீதும், வாங்குபவன் விற்பவன் மீதும் ஏற்றிக்கூறி மாறான மனநிலை அடைகின் றனர். இது மிகத் தவறே.
வஞ்சிக்கின்றவன் நல்வாழ்வு வாழ்வதில்லை. சட்டப் படி அவன் தண்டனை அடையாவிட்டாலும், அக்கம் பக் கத்தாரால் அவன் தண்டனை அடைகின்றான். எவ்வா றெனில் வஞ்சிக்கப்பட்டவர்கள் அவனிடம் பிறகு அணு கவேமாட்டார்கள். மேலும் தான் அவர்களால் புறகக ணிக்கப்பட்டும் இகழப்பட்டும்போய்க் கடைசியாக ‘உண் மையே வாழ்க்கையில் உயர்நிலை தரும்,’ என்பதை யுணர்ந்து கொள்கின்றான்.
1. உண்மையுள்ள பையன்
ஒரு நாட்டுப்புறப் பெரிய மனிதன் தன் மகனை அடுத்த நகரில் உள்ள ஓர் அறுவை வணிகரிடம் வேலைக்கு இருத்தினான் அச் சிறுவன் அங்குத் தன் வேலையை ஒழுங்குபடச் செய்துவந்தான். ஒருநாள் ஒருத்தி அக்கடைக்கு வந்து பட்டுத்துணி வாங்கினாள். பையன் அதனை மடிக்கும்போது அது சிறிது பழுதுபட்டிருப் பதைக் கண்டு, அதனை அவளுக்கு அறிவிக்க, அவள் அதனை வாங்காமலே போய் விட்டாள். இதனை உள்ளிருந்து கேட்டுக் கொணடிருந்த முதலாளி சினங்கொண்டு வைதுவிட்டு, உடனே அவனை அழைத்துக்கொண்டு போகுமாறு அவன் தந்தைக்குத் தெரிவித்துவிட்டான்.
பையனின் தந்தை உடனே வந்து முதலாளியைக் காண, அவன் நிகழ்ந்ததை அவனுக்குரைத்து “இத்துறைக்கு இவன் உதவான்,” என்றான். அதற்குப் பையனின் தந்தை, உண்மையை உரைப்பது குற்றமானால், பிள்ளை உம்மிடமிருப்பது தகாது; இனி அவனை இங்கு ஒருநாளும் தங்க விடேன், ” எ என் று சொல்லிவிட்டு, மகனைக் கூட்டிக்கொண்டு தன்னுடைய ஊருக்குச் சென்றான்.
2. வெடிமருந்துப் பயிர்
நூறாண்டுகளுக்குமுன் வட அமெரிக்காவிலிருந்த சிவப்பிந்தி’ யர்கள் ஐரோப்பியருடைய பழக்கவழக்கங்களையும் நாகரிகத்தை யும் அறியாத சீர்திருத்தக் குறைவுடையவர்களாக இருந்தார்கள். அக் காலத்தில் ஐரோப்பிய வணிகனொருவன் துப்பாக்களையும் வெடி மருந்தையும் உடன்கொண்டு வட அமெரிக்காவுக்குச் சென்று அவைகளை எவ்வாறு பயன்படுத்துவதென்று அவர்களுக் க் கற்றுக் கொடுக்க, அவன் கொண்டுவந்த சரக்குகளையெல்லாம். அவர்கள் வாங்கிக்கொண்டு தங்களிடமிருந்த மெல்லிய விலங்குத் தோல்களையும் மயிரையும் கொடுத்தார்கள். இஃது ஒரு வாணிப மாகப் பலகாலம் நடந்தன.
அதற்குச் சில ஆண்டுகளுக்குப் பின் பிரான்சிய வணிகன் ஒரு வன் துப்பாக்கி மருந்துகளுடன் பண்டமாற்றுச் செய்ய அவ்விந்தி களிருக்குமிடம் வந்தான். அச்சரக்குகள் அப்போது அவர் களிடம் ஏராளமாகக் கிடக்கவே பிரான்சியனுக்குத் தன் பொருட். களை விற்பனை செய்ய வசதியில்லாமற் போயிற்று.
இதற்குமேல் அப் பிரான்சியன் அம்மக்களை ஏமாற்ற வெடி மருந்து ஒரு வித்து என்றும், அதனை மண்ணிற் போட்டுப் பயிர் செய்தால் சோளம்போன்ற பொருள் விளையுமென்று சொல்லியும் அவர்களை மயக்கிவிட்டான். அறியாமையுடைய அம்மக்கள் அவ் வெடிமருந்தை வாங்கி நிலங்களில் விதைத்தனர். அப்பிரான்சியன் சரக்குகளையெல்லாம் விற்றுவிட்டு விரைவில் வீடுபோய்ச் சேர்ந் தான்.
இந்தியர்கள் அந்நிலங்களுக்கு நீர்பாய்ச்சிக் கவலையுடன் கண்காணித்துவந்தனர். பலநாட்கள் சென்றும் அந்நிலங்களில் முளைகளே கிளம்பவில்லை. அதற்குமேல் அம்மக்கள் தாங்கள் ஏமாற்றமடைந்து போய்விட்டதாக எண்ணி மிக வருத்தத்துக் குள்ளாயினர்.
இப்படியிருக்கப் பலதிங்கள் கழித்து முதல் ஏமாற்றிய பிரான்சியன் தன் பங்காளி ஒருவனைப் பலவித சரக்குகளுடன் வட அமெரிக்காவுக்கு அனுப்பிவைத்தான். இந்தியர்கள் அவ் வணிகன் பழைய பிரான்சியனுடன் சேர்ந்தவனென்று எவ்வாறோ கண்டுகொண்டார்கள். கண்டுகொண்டு அவனையும் அவன் சரக்கு களையும் ஒரு வீட்டில் இருக்கச்செய்து சரக்கு வாங்குகிறவர்களைப் போல நடித்து, அவனுடன் சிலநாட்கள் புழங்கிக்கொண்டிருந்தனர். ஒரு நாளில் அவ்விந்தியர்கள் பெருங் கும்பலாகக் கூடிக் கொண்டுவந்து, பேருக் கொன்றாக அச்சரக்குகளையெல்லாம் வாரிக்கொண்டு போய்விட்டார்கள்.
அவ்வணிகன் திறுதிறு என விழித்து, தன்னால் ஒன்றுஞ் செய்யமுடியாமல் வருத்தத்தோடு சென்று, அவ்விந்தியருடைய தலைவனிடம் முறையிட்டுக்கொண்டான். தலைவன் அவனை நோக்கி, ‘ஐயா, தங்களுக்கு விற்பனைத்தொகை சேரவேண்டியது நீதியே; அத்தொகையை எங்கள் மக்கள் வெடிமருந்துப் பயிர் அறுவடையானவுடன் கொடுத்துவிடுவார்கள்; அதுவரை தாங்கள் காத்திருக்கவேண்டும்,” என்று சொன்னான். மேலும் அவன் சொன்னதாவது: “உங்கள் நாட்டு மனிதர் ர் ஒருவர் எங்கள் மக்களுக்கு விலைக்கு வெடிமருந்து கொடுத்து விதைத்துப் பயிர் செய்யும்படி சொல்லிப்போந்தார். அவ்வறுப்புக் காலத்துக்குபின் எங்கள் மக்கள் நாலாபக்கங்களிலுஞ் சென்று வேட்டையாடித் தோலுமயிரும் ஏராளமாகக் கொண்டுவருவார்கள். அதனைத் தங்களுடைய சரக்குகளுக்கு ஈடாகக் கொடுத்து விடுவார்கள் என்பதாம். அதற்குமேல் அப் பிரான்சிய மனிதன் “வெடிமருந்து விளைவதற்கு உங்கள் நிலத்தின் மண் தக்கதன்று; அஃது உங்கள் நாட்டில் பயிராகவே ஆகாது, என்றான்.
பிரான்சியன் சொன்னதெல்லாம் இந்தியருக்கு ஏற்கவில்லை. காட்டுமிராண்டிகளால் அறிவூட்டப்பட்டு அதனால் மிக்க வெட்க மடைந்து, அவ்வணிகன் வெறுங்கையோடு வீடுபோய்ச் சேர்ந் தான். ஒரு பிரான்சிய மனிதன் ஏமாற்றத்தின் விளைவு அவனே நிற்கவில்லை. அதுமுதல் இந்தியர்கள் பிரான்சியரோடு பண்ட மாற்று அறவே விட்டுவிட அவ்வைரோப்பிய நாடு வட அமெரிக்கா வுடன் வாணிபஞ்செய்தலை அறவே இழந்துவிட்டது.
உதவியற்ற பொருளைச் சிறந்த ஒன்றுபோற் காட்டி மக்களை ஏமாற்றி விற்பனை செய்வதும், நல்ல பொருள்களோடு உதவியற்ற பொருள்களைச்சேர்த்து மிகை அளவைக்காட்டி வஞ்சித்து விற் பதும், இவ்வாறு பலவிதமாக வாங்குபவர்கள் ஐயுறுமாறு பொருள் களில் மாறாட்டஞ்செய்து வைப்பதும் வாணிபத்தை அறவே கெடுத்து வணிகர்க்குக் கேட்டையும் வீண் பகட்டையும் உண்டாக்கிவிடும்.
க. பலவகையான மாறுபாடுகள் கொண்ட எடை குண்டுகளையும் அளவு கருவிகளையும் உங்களிடத் தில் நீங்கள் வைத்துக்கொண்டிராதீர்கள். -விவில்லியம்.
உ. தப்புத் தராசுக்கோல் ஆண்டவனுக்கு வெறுப்பு உண்டாக்கும், சரியானதொன்று அவனுக்கு விருப்பு உண்டாக்கும்.
ங. பிள்ளைகள் தன்மையை அவர்களின் செயல் களினால் அறியலாம்.
௪. முதலில் ஆவலோடு அடையப்பட்ட உரிமைச் சொத்துக்கள், முடிவில் சீர்மை யுண்டாக்கு மென்பது ஐயுறவே. -நீதிமொழிகள்.
ரு. நடிப்பைக் கொண்டுள்ள ஒருவர் உண்மையைக் கொள்வாரானால், அவருக்குத் துன்பங்கள் நேரிடா. -ஸ்டெர்னி.
சா. உலகிலுள்ள எல்லா அழகைக் காட்டிலும், நேர் மையான மனமும், தாராளமான அன்பும், மேலான அழகுடையன. எள்ளத்தனை உண் மையும் இயற்கைத் தகுதியும் பகட்டான நகை கள், பெருஞ் சொத்துக்கள், மேல்நிலைகள் ஆகிய இவைக ளெல்லாவற்றையும்விட மேலானவை. பின் சொன்னவைகளையெல்லா முடை யவர்கள் பித்தலாட்டக்காரர்கள் ஆனாலும் ஆவார்கள். -ஷப்ட்ஸ்மெரி.
– நல்லொழுக்கப் பாடம், முதற் பதிப்பு: ஏப்ரல் 1951, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிட், திருநெல்வேலி.