உணர்வே கடவுள்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 10, 2018
பார்வையிட்டோர்: 6,028
ஒருவர் மலைகளை பார்வையிட சுற்றுல்லா வந்தார். அவர் மலைகள் மீது வெண்புகை மேகங்கள் மலையை முட்டி மோதுகின்ற அழகான காட்சிகளை பார்த்துக் கொண்டே சென்றார் அப்பொழது எதிர்ப் பாராதவிதமாக அவர் கால்கள் நழுவின மலை மேலிருந்து தவறி கீழே விழத் தொடங்கினான்.
இதை மலைக்கு கீழே இருந்த மூன்று நபர்கள் பார்த்துவிட்டார்கள்.
இந்த மூவரும் வெவ்வேறு மதத்தினர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளமாட்டார்கள். தங்கள் மதக் கடவுளே உண்மையானவர் மற்ற மதத்தினரின் கடவுள் எல்லாம் போலிகள் என்று மூவரும் சண்டையீட்டுக் கொள்வது வழக்கம்.. ஆனால் இப்போது மலை மேலிருந்து கீழே விழுபவரை எப்படியாவது உயிருடன் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு. மூவரும் ஒற்றுமையாக கைக்கொர்த்து நின்று அருகில் வைத்திருந்த வலையால் அவனை தாங்கிப் பிடித்தார்கள்.
அவனும் மலைமேலிருந்து விழுந்த அதிர்ச்சியில் மயங்கிய படியே இருந்தான். மூவரும் தங்களின் தோல் மீது சுமந்துச் சென்று அவனது முகத்தில் தண்ணீரைத் தெளித்து மயக்கத்தை போக்கினார்கள்.
அவன் கண் விழித்து பார்த்து அதிர்ச்சி அடைந்தான்.. இது நிஜமா அல்லது கனவா என்று திகழ்த்து நின்றான். பிறகு தெளிவுப் பெற்றான் நாம் இன்னும் சாகவில்லை உயிரோடு தான் இருக்கிறோம். “நமக்கு ஆயுள்” கெட்டி தான் என்று மகிழ்ந்து காப்பாற்றியவர்களிடம் இருகளை தூக்கி வணங்கினான்.
ஐய்யா நீங்கள் யார் என்று எனக்கு தெரியாது மலைமேல்லிருந்து விழும் என்னை காப்பாற்றி விட்டிர்கள். உங்கள் மூவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என் வாழ்க்கை முழுவதும் உங்களை நான் மறக்கவே மாட்டேன் யாரும் துணிந்து செய்தீடாத பெரும் உதவியை நீங்கள் மூவரும் எனக்கு செய்துள்ளீர்கள் இதற்கு கைமாறாக நான் என்ன செய்வதேன்றே எனக்கு தெரியவில்லை.
நீங்கள் கடவுளாகத் தோன்றி என்னை காப்பாற்றிவிட்டிற்கள் இனி எனக்கு நீங்கள் கடவுள் ஐய்யா என்றான்.
அதற்கு அந்த மூவரும் நீ யாருடைய கடவுளுக்கு நன்றியை சொல்கிறாய் என்று கேட்டார்கள்.
அவன் சற்று நேரம் சிந்தித்துவிட்டு நான் எந்த மதக் கடவுளையும் குறிப்பிட்டு சொல்லவில்லை.
“மற்றவருக்கு உதவ வேண்டும் என்கின்ற நற்குணமும், “ஆபத்தில் ஒற்றுமையாக செயல்பட்டு, “நல்ல மனித உணர்வுகளைக் கொண்ட உங்களைளை தான், ‘நான் கடவுள்கள்” என்கிறேன் என்றான்.
அதற்கு இந்த மூவரும் உனது பேச்சி எங்களுக்கு இரசிக்கும் படியில்லை. ஆகையால் நீ எங்கள் மூவரின் எந்த கடவுள் உன்னை காப்பாற்றியது என்பதை சொல்லியே ஆக வேண்டும் ஏனென்றால் நாங்கள் மூவரும் வெவ்வேறு மதத்தினர்கள் வெவ்வேறு கடவுளை வணங்குபவர்கள் என்பதை உன் நினைவில் வைத்துக் கொண்டு சொல்.
அந்த மூவரின் பேச்சைக் கேட்டாதும் அவன் நடுங்கிப் போனான் செய்வதறியா விழித்துக் கொண்டிருந்தான்.
பிறகு அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது அதனை அப்படியே சொன்னான் நான் மலை மேலிருந்து கீழே விழுப்போவதை உங்கள் மூவரில் முதலில் யார் பார்த்தது?
நாங்கள் மூவருமே ஒன்றாக தான் பார்த்தோம்
சரி அப்போது உங்கள் கடவுள் என்னை காப்பாற்றும் படி சொல்லியதா? இல்லை உத்தரவு தான் கொடுத்ததா? எந்த மதக் கடவுள் என்னை காப்பாற்றும் படி உங்களுக்கு உத்தரவுக் கொடுத்ததாக நினைக்கிறீர்களோ அந்த கடவுளுக்கு எனது நன்றி என்றான். அது மட்டும் இல்லாமல் நீங்கள் மூவரும் வெவ்வேறு மதத்தினராச்சே அப்படி இருந்தும் நீங்கள் ஏன் ஒன்றாக கைக்கொர்த்துக் கொண்டு என் உயிரைக் காப்பாற்றினிர்கள் சொல்லுங்கள்?
அது எங்கள் மூவர் மனதிலும் தோன்றிய உணர்வு. அதை குறை சொல்கிறாயே உன்னை காப்பாற்றியது எங்கள் தவறு தான் என்றார்கள்.
அவன் சிரித்துக் கொண்டே கேட்டான் அப்போ உங்கள் கடவுள் சொல்லி என்னை காப்பாற்றவில்லை உங்கள் உள்ளுணர்வு சொல்லியதால் தானே காப்பாற்றினீர்கள்.
மூவரும் அதற்கு ஆமாம் அதுதான் உண்மை.
உங்கள் மூன்று பேர்களின் உணர்வுகளை மதிக்கிறேன் இங்கு நாம் கடவுள் வேறு உணர்வு வேறு என்று நினைக்கிறோம் ஆனால் மனிதனின் உணர்வில் தான் கடவுள் இருக்கிறான் என்பதை நாம் உணரவில்லை. உதாரணம் மனிதனின் இரத்தம் வலி ஆழுகை துக்கம் என்று கலந்துள்ளான்.. மனிதனின் சிந்தனைகள் வெவ்வேறாக இருக்கலாம் ஆனால் உணர்வு ஒன்றே.
உங்கள் மூவரின் கடவுள் சொல்லி நீங்கள் என்னை காப்பாற்றவில்லை உங்கள் மன உணர்வு தான் மூவரும் ஒன்று சேர்ந்து காப்பாற்றியுள்ளீர்கள் அல்லவா? சில அரசியல்வாதிகளும் சுயநலம் கொண்ட மனிதர்களாலும் தான் கடவுள் எனும் பெயரில் மதங்களை ஆட்க் கொண்டு மனிதர்களை பிரித்தால வைக்கிறான்.
நாமும் அதை உண்மையென நம்பிக்கை கொண்டு மனிதர்குள் வேற்றுமையை உருவாக்கிக் கொண்டு பழிக்கிறோம் இது தவறு
ஒரு உயிர் ஆபத்தில் இருக்கும் போது அதற்கு உதவ வேண்டும் என்ற உணர்வினால் ஒற்றுமை உள்ளது என்றால் அதை நீ கடவுளாக வணங்கினால் போதும்.
சக மனிதற்களை மதிக்கக் கற்றுக் கொள்வாய் உன் மதம் என் மதம் என்ற பேதைமை இல்லாமல் ஒற்றுமையாக வாழ முடியும் என்றான்.
அந்த மூவரும் தெளிவுப் பெற்றார்கள் இனி எங்களுக்கான கடவுள் ஒருவரே அவர் பலவித வடிவங்களின் உணர்வாக எவ்வித பாகுபாடுமின்றி ஒன்றாக வாழ்வோம் என்றார்கள்.