இவருக்குப் பதிலாக இவர்
கதையாசிரியர்: எஸ்.மதுரகவி
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: May 31, 2026
பார்வையிட்டோர்: 153
(இந்தப் புனைகதை முற்றிலும் கற்பனையே. யாரையும் குறிப்பிடுவன அல்ல)

நடுத்தர வயது வெள்ளித்திரை நட்சத்திரம் வசந்தா. முன்னணி நடிகர்களுடன் நடித்து குணச்சித்திர நடிகை என்று பெயரும் விருதுகளும் பெற்றவள்.
இரண்டு மூன்று மாதங்களுக்கு மேல் ஓய்வில் இருக்க வேண்டிய அளவுக்கு வசந்தாவுக்கு உடல் சுகவீனம்.
அவள் நடித்து வந்த சரித்திரக் கதை படத்தின் படப்பிடிப்பு நிற்கிறது. தயாரிப்பாளரும் இயக்குநரும் அவள் குணமடைந்த பின்னரே படத்தை தொடர்வோம் என்று அவளிடம் வாக்கு தருகின்றனர்.
சில நாட்களில் ஒரு நாள், வசந்தா, யூடியூபில் அந்த பிரம்மாண்ட சரித்திரக் கதை திரைப்படத்தின் ட்ரெயிலரைப் பார்த்து விட்டு அதிர்ச்சி அடைகிறாள். இவள் நடித்த ராஜ மாதா வேடத்தில் இவளைப் போலவே தோற்றம் கொண்ட பெண்ணை நடிக்க வைத்து படத்தை முடித்து விட்டார்கள் என்பதை அறிந்து வசந்தாவின் பிபி அதிகரிக்கிறது.
வசந்தா ட்ரெயிலரைப் பார்த்து விட்டாள் என்பதை அறிந்து கொண்ட அவளுடைய கணவர் திவாகர், மனைவி நம்மை விளாசி விடுவாள் என்று பயந்து அவளுடைய அறைக்குப் போகவே பயப்படுகிறார்.
திருமண நாளில், அண்ணன் அண்ணியிடம் வாழ்த்து பெறலாம் என்று கணவனுடன் திவாகரைப் பார்க்க வீட்டுக்கு வந்த அவரது தங்கை திலகா, அண்ணனின் நிலையை அறிகிறாள்.
“இவ்வளவதானா? அண்ணே நான் அண்ணியை பார்த்து அவங்கள சிரிக்க வைக்கிறேன் பாரு” என்று சொல்லி விட்டு திலகா, வசந்தாவின் அறைக்குப் போகிறாள். திவாகரும் திலகாவின் கணவன் ராஜாவும் அவளைப் பின்தொடர்கின்றனர்.
“அண்ணி” என்று திலகா அழைக்க, வசந்தா வா என்றும் சொல்லாமல், டிவியில் யூடியூபில் ஓடிக் கொண்டிருக்கும் ட்ரெயிலரை ம்யூட் செய்து பார்க்கிறாள்.
திலகா, கட்டிலில் உள்ள படுக்கையில் வசந்தாவின் அருகில் வந்தமர்ந்தாள். அவளுடைய தோள்களை வருடினாள்.
“அண்ணி அவங்க ரெண்டு பேரும் பண்ணது தப்பு தான். ஆனால் பொருளாதார நெருக்கடி அவங்களுக்கு…நீங்க நடிச்ச ராஜமாதா கேரக்டர் ல நடிச்சு கொடுத்தது வேற யாரும் இல்ல…. இத்தனை வருசமா நீங்க தொடர்பு… போக்குவரத்து இல்லாம இருந்தீங்களே கடலூர் ல இருக்கிற ஒங்க அண்ணன் லாயர் பாலகிருஷ்ணன் மகள், அச்சு அசலாக ஒங்கள மாதிரியே இருக்கிற கண்மணி தான்…”
வசந்தாவின் முகம் மலர்ந்தது. முகத்தில் புன்னகை தோன்றுகிறது. திலகா, திவாகரைப் பார்க்கிறாள்.
அந்த அறையின் வாசலில் அவளுடைய அண்ணன் பாலகிருஷ்ணன், தன் மகள் கண்மணி உடன் தயக்கத்துடன் நின்று கொண்டிருந்தார்.
“வாங்க அண்ணே” என்று முகம் மலர வரவேற்றாள் வசந்தா. அனைவரும் புன்னகை பூத்தனர்.
![]() |
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
எத்தித் திருடுமந்தக் காக்கை!
மா.சித்திவினாயகம்
May 31, 2026
வேண்டுதல்
ஜெயந்தி சங்கர்
May 31, 2026
நினைவு அலைகள்
ஸ்ரீவத்ஸன்
May 31, 2026
