இரும்புக்கை மனிதன்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: May 30, 2025
பார்வையிட்டோர்: 4,621 
 
 

(1976ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 21-25 | அத்தியாயம் 26-30 | அத்தியாயம் 31-35

அத்தியாயம்-26

இரும்புக் கை மனிதன் புலிக்குட்டி தண்டனை பெற்றுச் சென்னைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தான். அவன் சென்னையிலேயே சிறையில் கிடைப்பானா அல்லது அவனை வேறு எங்கேயாவது அனுப்பி விடுவார்களா என்பது தெரியாமல் இருந்தது. 

புலிக்குட்டியையும், காளியப்பன் என்னும் மற்றொரு கைதியையும் ஒரே அறையில் போட்டு அடைத்து வைத் திருந்தார்கள். புலிக்குட்டி சிறையில் அமைதியுடன் இருந் தாள். இந்த வேளையில் சிறையே அவனுக்குப் பாதுகாப்பாக இருந்தது. அவன் இப்போது வெளியே இருந்தால் எந்த நிமிடமும் அவன் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதை அவன் எண்ணிப் பார்த்தபோது, அவனுக்குக் கொஞ்சம் மகிழ்ச்சிகூட ஏற்பட்டது! சிறையின் கம்பிகளையே அவன் உற்றுப் பார்த்தபடி உட்கார்ந்து நீண்ட நேரம் சிந்தனை செய்வாள். காளியப்பனிடம் அவனாக ஒன்றும் பேசமாட்டான். 

காளியப்பன் முதன்முதலில் அவனிடம் பேச்சுக் கொடுத்தபோது, “எதற்காக நீ சிறைக்கு வந்தாய்? ஒரு கையை இழந்து இரும்புக் கையை வைத்திருக்கும் நீ. அப்படி என்ன குற்றம் செய்துவிட்டார்?” என்று கேட்டான். 

”எவரோ ஒரு மன்னரின் நகைகளைத் திருடிக் கொண்டு வந்துவிட்டதாக என்மீது குற்றம் சாட்டி என்னை இங்கே உள்ளே தள்ளிவிட்டார்கள்!” என்றான் புலிக்குட்டி. பிறகு அவன் காளியப்பனிடம் கேட்டான், ”நீ என்ன குற்றம் செய்தாய்?” 

காளியப்பன் பெருமூச்சு விட்டுவிட்டு, ”நான் என்ன குற்றம் செய்திருப்பேன் சொல்லு?” என்றாள். 

“உன்னைப் பார்த்தால் குற்றவாளியைப்போல் எனக்குத் தெரியவில்லை!” என்றான் புலிக்குட்டி. அவன் மனம் எண்ணியது: குறைந்தது. அரை டஜ கொலைகளையாவது நீ செய்திருக்க வேண்டும்! உன் மூகத்தில் அது எழுதி ஒட்டியிருக்கிறது!’ இப்படி புலிக் குட்டியின் மனம் எண்ணிய போதிலும் முகத்தில் அதைக் காட்டிக் கொள்ளாமல் அவள் நடந்துகொண்டான்! 

”பார்த்தாயா நீ மிகவும் அறிவுடையவன். உனக்கு இருக்கும் அறிவு இந்தப் போலீஸாருக்கு இல்லையே! நான் சொன்னதை அவர்கள் நம்பினால்தானே?” என்றான் காளியப்பன். 

”என்ன நடந்தது? என்ன சொன்னாய்?” என்றான் புலிக்குட்டி.

“என் மனைவி, வீட்டைப் பூட்டிக் கொண்டு அடிக்கடி திரைப்படத்திற்குப் போய்விடுவாள். எங்கள் வீட்டுப் பூட்டுக்கு ஒரே சாவிதாள், மற்றொரு சாவி வாங்கப் பணமில்லை. சொன்னால் நீ நம்பமாட்டாய்!!” என்றான் காளியப்பன். 

“நான நம்புகிறேன், சொல்லு.” 

“நான் எப்போது போவேன். எப்போது வருவேன் என்று என் மனைவிக்கே தெரியாது! ஆகையால் நான் எப்படியாவது பூட்டைச் சாவி இல்லாமலே திறந்து கொள்வேன் என்று அக்கம் பக்கத்தில் எவரிடமும் சாவி கொடுக்காமல் அவள் போய்விடுவாள்! பூட்டை நான் எåபடியாவது திறந்து கொள்வேன்! என் மனைவி வரும் வரையில் தான் காத்திருப்பதில்லை!” 

“நீ பூட்டுப் பழுதுபார்க்கும் வேலை செய்து வந்தாயா?” என்று கேட்டான் புலிக்குட்டி 

”அப்படித்தான் வைத்துக்கொள்ளேன். ஒரு கம்பியின் உதவியாலேயே எப்படிப்பட்ட பூட்டையும் நான் திறந்து விடுவேன்! பிறகு, அதே கம்பியாலேயே, பூட்டை மீண்டும் பூட்டிவிடுவேன்!” 

“மிகவும் திறமையுடையவன்தான் நீ! நடந்ததைச் சொல்லு” 

“ஒருநாள் பிற்பகல். வெளியில் சென்றிருந்த நான் வெப்பம் தாங்க முடியாமல் வீடு திரும்பினேன். வழக்கம் போல் வீடு பூட்டிக கிடந்தது! மற்ற வீடுகளில் இருந்த பெண்கள் எல்லோரும் உண்டுவிட்டு உறங்கும் நேரம! சாலையில்கூட நடமாட்டமே இல்லை. அவ்வளவு வெயில்! காத்திருக்க முடியுமா?” 

“அதுதான் பழக்கமே இல்லையே!” 

“பூட்டைத் திறந்துகொண்டு உள்ளே புகுந்தேன். திடீரென்று நான் பணக்காரனாகிவிட்ட ஓர் உணர்வு எனக்கு ஏற்பட்டது! வீடு முழுவதும் புதிய பொருள்கள்! பெட்டிகள்! வெள்ளிப் பாத்திரங்கள்! என்னால் நம்பவே முடியவில்லை!” 

“பிறகு?” 

“எப்படி நாம் இவ்வளவு பெரிய பணக்காரனாகிவிட் டோம் என்று எண்ணிக் கொண்டிருந்தபோது, போலீசார் விசில் ஊதும் ஓசையும், குபுகுபுவென்று மிகுந்த பேர்கள் ஓடிவரும் ஓசையும் கேட்டது! பூட்டைத் திறந்து எவரும் இல்லாத வீட்டினுள் புகுந்து திருடியதாகப் போலீசார் என்னைப் பிடித்துக்கொண்டார்கள்!” 

“அது உன் வீடு இல்லையா?” 

“இல்லை! வேறு எவருடைய வீடோ! கவனக் குறை வாகப் பூட்டியிருந்த வீட்டைப் பார்த்ததும், என் வீடு என்று நாள் உள்ளே புகுந்துவிட்டேன்!” 

“உன் வீட்டுக்குப் பக்கத்து வீடா?” 

“பக்கத்து வீடு இல்லை! மூன்றாவது தெருவில் இருந்த மற்றொரு வீடு! ஏதோ நினைவில் வேறொரு தெருவுக்குப் போய்விட்டேன்! இதைத்தான் விதி என்கிறார்களோ!” 

”ஆமாம். ஆமாம்” என்று காளியப்பனுக்கு இரக்கப் படுவதைப்போல் நடித்த புலிக்குட்டி, இறுதியில் ஒரு கேள்வி கேட்டான்: “உன் மனைவி திளமும் திரைப்படத் திற்குப் போவது வழக்கமா? தினமும் திரைப்படம் பார்க்கப் பணம் ஏது?” 

”அதைக் கேட்கிறீர்களா? அவள் தினமும் திரைப்படம் பார்க்கப் போவதில்லை! டிக்கெட்டுகளை வாங்கிக் கள்ள மார்க்கெட்டில் விற்கவே தினமும் திரைப்படக் கொட்டகைக்குப் போவாள்!” என்றான் காளியப்பன்.

“கணவன் மனைவி இருவரும் சம்பாதித்தால்தான் இந்தக் காலத்தில் வாழ முடியும்!” என்று மேலும் தன் இரக்க உணர்வைக் கேலியுடன் சொன்னான் புலிக்குட்டி! 

இவர்கள் இருவரும் இப்படிப் பேசிக்கொண்டேயிருந்த போது, அவர்கள் அறைக்கு வெளியே எவரோ சுற்றிச் சுற்றி வருவதைப் போன்ற ஓர் உணர்வு ஏற்பட்டது புலிக் குட்டிக்கு. அவன் எழுந்து சென்று பார்த்தாள். 

பூனை ஒன்று ‘மியாவ், மியாவ்’ என்று சுத்தும் ஓசை கேட்டது! இதைக் கேட்டதும் அவனுக்குத் தூக்கிவாரின் போட்டது! மின்மினியின் குரல்தான் இது! 

அவன மனத்தில் இதுவரையில் இல்லாத அச்சம் இப்போது புதிதாக வந்து புகுந்துகொண்டது! பழிவாங்க எனனும் பேயைப்போல் அல்லவா இந்த மின்மினி அவளைச் சிறைக்குள்ளும் தூரத்தி வருகிறது என்று எண்ணியபோது அவன் மனம் சினம்கொண்டது! உலகையாவும் அவர்களும் சேர்ந்து ஏதோ திட்டம் போட்டுத்தான் இந்தக் கொடிய பூனையை ஏவிவிட்டிருக்கிறார்கள் என்று எண்ணினான அவன், சிந்தனையுடன் அவன் அந்த அறையின் பின்பக்கம் இருந்த வட்டமாள சன்னலின் வழியாகப் பார்த்தான். அந்த வட்டமான சன்னலுக்கும் கம்பிகள் போடப்பட்டிருந்தன. சன்னலின் பக்கமாக அவள் தலை தெரிந்தது, பின்னால் இருந்த மதில் சுவரின்மீது உட்காரத்திருந்த மின்மினி அவனைப் பார்த்து ‘மியாவ், மியாவ்’ என்று மேலும் தொடர்ந்து மெல்லக் கத்தியது! 

”என்ன அது? பூனையா?” என்று சொல்லி அவன் பக்கத்தில் வந்து நின்றான் காளியப்பன். மின்மினியைப் பார்த்தான். “எவ்வளவு அழகிய பூனை! இதைப் பார்த்தால் எளிய பூனையாகத் தெரியவில்லையே!” என்றான். 

“இது எளிய பூனை அல்ல! இதைவிட காட்டில் வாழும் புலி எவ்வளவோ சாதுவானது!” என்றான் புலிக் குட்டி! 

”நீ வளர்த்து வந்த பூனையா? உன்னைத் தேடி இது சிறைக்கே வந்து விட்டதே!” என்றாள் காளியப்பன்! 

“நான் வளர்த்த பூனை அல்ல! இது எவருடைய பூனையோ! இதைப் பார்த்தாலே அச்சமாக இருக்கிறது எனக்கு! இந்தப் பூனை மனம் வைத்தால் மனிதர்களைக் கூடக் கொல்லும்!” என்றான் புலிக்குட்டி! 

சன்னலில் இரண்டு தலைகளைக் கண்டதும் கொஞ்சம் விழிப்புடன் பார்த்த மின்மினி, ஒரு சில வினாடிகளில் மாய மாய் மறைந்துவிட்டது! 

மின்மினி எதற்காகச் சிறையில் வந்து சுற்றிக் கொண்டிருக்கிறது என்று எண்ணிக் கொண்டே கல்லாய் நின்றான் புலிக்குட்டி! 

அத்தியாயம்-27

மின்மினி சிறைக்கு வந்துபோய் மூன்று நாள்கள் ஆகி விட்டன! மீண்டும் மீண்டும் அது வரும் என்று எண்ணி எதிர்பார்த்த புலிக்குட்டிக்கு ஏமாற்றமே காத்திருந்தது! மின்மினி மீண்டும் தலைகாட்டவில்லை! அது ஒரு வேளை உலகையாவுக்குத் தெரியாமல் சிறைக்கு வந்து போயிருக் குமோ என்று எண்ணியபோது, மற்றொரு நிகழ்ச்சி நடந்தது. 

புலிக்குட்டியுடன் பேசிக்கொண்டிருந்த காளியப்பன் மெல்ல அவனிடம் ஒரு கேள்வி கேட்டான்: 

“சிறைப் பொறுப்பாளர்கள் உள் மீது மிகவும் இரக்கம் கொண்டிருக்கிறார்கள் தெரியுமா?” 

புலிக்குட்டி வியப்புடன் பார்த்தான். ”அப்படியா? எனக்கு ஒன்றும் புரியவில்லையே!” 

“சிறையில் இருக்கும் கைதிகள் ஒரு சிறு குண்டூசியைக் கூட வைத்துக் கொள்ளக் கூடாது! குண்டுசி இருத்தாலும் அதன் உதவியால் பூட்டைத் திறத்து கொண்டோ, சுவரைக் குடைந்துகொண்டோ விடுவார்கள் என்பது அவர்கள் எண்ணம்!” 

“உண்மைதானே? அதற்கும் எனக்கும் என்னதொடர்பு?” 

“உன் கைகளில் ஒன்று இரும்புக் கை. அந்த இரும்புக் கை மிகவும் பளுவானது. அதன் உதவியால் அவரைக் குடையலாம். அல்லது ஐன்னல் கம்பிகளை நீக்கித் தப்பிப் போகலாம்! ஆனாலும் சிறைப் பொறுப்பாளர்கள் அந்த இரும்புக் கையை எடுக்காமல் உள்ளிடமே விட்டு வைத் திருப்பது உனக்கு வாய்ப்புத்தான்.” 

“தப்பிப் போவதைப் பற்றி நான் எண்ணவே இல்லை!” 

“எத்தனை நாளைக்கு இப்படி அடைந்து கிடப்பது? உலகம் பெரியது! அதில் ஓடி ஒளிய நமக்கு ஏகப்பட்ட இடம் இருக்கிறது!” 

“போலீசாரின் கை மிகவும் நீளமானது! அது எங்கேயும் நம்மை வந்து பிடித்துவிடும்! சிறையிலிருந்து தப்பினால், மேலும் தண்டனை மிகுதியாகும்! குறையாது!” 

காளியப்பன் சிரித்தாள். “பிழைக்கத் தெரியாதவன் நீ!” என்றாள்! 

புலிக்குட்டி பேசவில்லை. 

அப்போது சிறையின் கதவு திறந்தது. இருவரும் எழுத்து நின்று பார்த்தார்கள். 

சிறைப் பொறுப்பாளர் ஒருவர் சிறைக் காவலர்களுடன் வந்து புலிக்குட்டியைப் பார்ததுச் சொள்ளார்; “உன்னை செங்கல்பட்டுக்கு அருகில் உள்ள சிறைக்கு மாற்றியிருக்கிறேன். புதிய சிறை அது. மிகப் பெரிய ஏரி ஒன்றின் நடுவில் உள்ள தீயில் அமைந்துள்ள திறந்தவெளிச் சிறை அது. சிறையைச் சுற்றிலும் காடு, கொசுக்கள் அதிகம். பாம்புகள் மிகுதி. அந்தத் தீவில் உள்ளவள் தப்பி ஓட முயன்றால் ஏரியில் உள்ள முதலைகள் அவளை விழுங்கி விடும். ஏரி ஓரத்தில் உள்ள சேற்றில் காலை அவன் வைத்தால் அவன் அப்படியே அந்தச் சேற்றுக்குள் சென்று மறைந்துவிடுவான்! 

இதைக் கேட்டதும் புலிக்குட்டி பெருமூச்சு விட்டாள். தப்பிப் போகும் எண்ணத்துடன் இருக்கும் காளியப்பனிட மிருந்து தப்பிப்போனால் போதும் என்று இருந்தது அவனுக்கு! மற்றொரு பங்கம், அந்தத் தீவில் மின்மினி வராது: உலகையாவின் தொல்லை இருக்காது; எவரும் அங்கே வரமுடியாது என்ற மகிழ்ச்சி! 

புலிக்குட்டி காளியப்பனை ஒரு தடவை இரக்கத்துடன் பார்த்துவிட்டு வெளியே நடந்தான். 

அத்தியாயம்-28

உலகையா வெளியே புறப்பட முன்னேற்பாட்டுடன் இருந்தார். அவர் சிந்தனையுடன் சன்னல் வழியாகக் கீழே ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்த பூனை மின்மினியைப் பார்த்தார். 

அப்போது அவர் பக்கத்தில் வந்து நின்றான் கிளிமொழி. அவளும் மின்மினியைப் பார்த்தான். 

“என்ன திட்டம் போட்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டாள் அவள், 

“பிறகு சொல்லுகிறேன் மின்மினியைக் கொஞ்ச தானைக்கு வெளியில் இப்படி விடாதே! அதை மறைவாகக் கூண்டுக்குள் அடைத்து வை! முல்லைக்கோட்டை ராணி யின் முத்துமாலை பறிபோனதிலிருந்து, மின்மினியையும் முத்துமாலையையும் போலீசார் தேடி வருகிறார்கள்! மின்மினிதான் மாலையைக் கிளப்பிக்கொண்டு வந்தது என்பது தெரிந்துவிட்டால் தாம் சிக்கிக்கொள்வோம்!” 

“ஆகட்டும் அப்பா” என்று சொல்லிமீட்டு மின்மினி யைப் பிடித்துக் கூண்டில் அடைக்க விரைத்து சென்றாள் கிளிமொழி. 

இந்த நேரத்தில் தொலைபேசியில் உலகையாவுக்கு ஏதோ செய்தி வந்தது. “இதோ வந்து கொண்டிருக்கிறேன்” என்று சொல்லிவீட்டுத் தொலைபேசியை வைத்துவிட்டுப் புறப்பட்டார் அவர். 

உலகையா மட்டும் தனியாகக் காரில் புறப்பட்டார். அவரே காரைச் செலுத்திக்கொண்டு, கடற்கரை ஓரமாகச் சென்றார். கடற்கரையில் புதிய ஓட்டல் ஒன்று உருவாகி யிருந்தது அந்த ஓட்டலில் எல்லாமே விலை உயர்த்தன வாக இருந்ததால் பணக்காரர்கள் மட்டுமே அங்கே சாப்பிடச் சென்றார்கள். ஆகையால் கூட்டம் இல்லாமல் இருந்தது அந்த ஓட்டலில் ஐம்பது பேர்கள் சாப்பிட்டால் எவ்வளவு பில் ஆகுமோ அவ்வளவையும் ஒருவர் தலையில் கட்டினார் ஓட்டல் முதலாளி! 

உலகையா, அந்த ஓட்டலின் முன்பு காரை நிறுத்தி விட்டு உள்ளே சென்றார். 

கண்கள் கூசாத மங்கலாள விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன உள்ளே. விலை உயர்த்த மேசை விரிப்புகள் மேசைகளின் மீது போடப்பட்டிருந்தன. பரிமாறுபவர்களைப் பார்த்ததும் கவர்னர் மாளிகைக்குள் நுழைந்துவிட்டோமோ என்ற ஐயம் வத்துவிடும். அப்படி மடிப்புக் கலையாத விலை உயர்ந்த ஆடைகளை அணிந்திருந்தார்கள். 

ஒரு மூலையில் இருந்த மேசையின் முன் தடுத்தர வயதுள்ள மனிதன் ஒருவன் உட்கார்ந்திருந்தாள். அவன் கையில் சிகரெட் புகைத்து கொண்டிருந்தது. அவன் விலை உயர்ந்த உடைகளை அணிந்திருத்தான் கைகளி லும் சட்டைப் பொத்தாள்களிலும் வைரங்கள் மின்னின. அவன் முகத்தில் ஏற்பட்டிருந்த தழும்பு ஒன்று கத்தியினால் ஏற்பட்ட காயமாக இருக்க வேண்டும். அந்தத் தழும்பு அவனுக்கு அச்சம் தரும் தோற்றத்தை அளித்தது. எப்படிப்பட்ட ஆபத்தான வேலையையும் செய்துமுடிக்க வல்லவன் அவன் என்பது அவளைப் பார்த்ததும்புரிந்தது. 

உலகையா அவன் பக்கத்தில் சென்றதும் அவள் எழுந்து தின்றான். “தென்னவன்” என்று சொல்லித் தன் பெயரை அறிமுகப்படுத்திக் கொண்டு உலகையாவுடன் அவன் கைகுலுக்கினாள். 

உலகையா உட்கார்ந்தார். அவனும் உட்கார்த்தான். இருவரும் உணவு வகைகளை உண்டபடி மெல்லப் பேசினார்கள். 

உலகையா தொடங்கினார்: “புலிக்குட்டி என்னும் ஒரு கைதி அண்மையில் சென்னைச் சிறையிலிருந்து செங்கல்பட்டுக்குப் பக்கத்தில் புதிதாக நிறுவப்பட்ட புதிய மாற்றப்பட்டிருக்கிறான். திறந்தவெளிச் சிறைக்கு அவனை மீட்டு வெளியே கொண்டுவர வேண்டும் ” 

புலிக்குட்டி என்ற பெயரைக் கேட்டதும் தென்னவன் முகம் மலர்ந்தது. *”புலிக்குட்டியா? அண்மையில் தண்டிக்கப்பட்டவள் அல்லவா? பலகோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளைத் திருடி ஒளித்து வைத்துவிட்டவன் இல்லையா அவன்!” என்றாள். 

”ஆமாம்.” 

“அவன் தப்ப உதவினால் போதுமா?”

“அவன் தப்ப உதவினால் மட்டும் போதாது. அவன் தப்ப விரும்பாவிட்டால். அவனைத் தப்ப வைத்துக் கடத்தி, அவனை வெளியே கொண்டுவர வேண்டும்.” 

தென்னவன் நிமிர்ந்து உட்கார்ந்தான். அவன் பதிலை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார் உலகையா. 

அத்தியாயம்-29

தென்னவன் சொன்ன பதில் உலகையாவைத் தூக்கி வாரிப் போடும்படி செய்தது. அவர் கொஞ்சநேரம் தெள்ளவனை உற்றுப் பார்த்தார். அவர் சொன்ன வேலைகளை மற்றவர்கள் செய்துவிட்டுப் பணத்தை வாங்கிக் கொண்டு போக வேண்டும் என்று மட்டுமே அவர் விரும்பினார். மற்ற விவரங்களை அவர் சொல்ல விரும்பவில்லை. 

தென்னவன் உலகையாவைப் பார்த்துச் சிரித்தான். “ஏன் அப்படிப் பார்க்கிறீர்கள்?” உங்கள் திட்டம் என்ன என்பதைத் தெரிந்துகொண்டு விட்டேனே என்று பார்க்கிறீர்களா?” என்றான் அவன். 

“உன்னை எந்த அளவுக்கு நம்பலாம் என்று பார்க் கிறேன். நான் சொல்லும் இந்த வேலையை உன்னால் தான் வெற்றிகரமாகச் செய்ய முடியும்! அதனால்தான் உன்னைத் தேர்ந்தெடுத்தேள். காதும் காதும் வைத்தாற் போல் இந்த வேலையை நீ செய்து முடிக்க வேண்டும். ஆபத்து நிறைந்த வேலைதான்! உன்னால் இந்த வேலையில் வெற்றிபெற முடியாவிட்டால் உன் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம்! அதற்கு ஏற்ற பணம் இதில் இருக்கிறது!” 

“புரிகிறது! புலிக்குட்டியை எப்படியாவது மீட்டுக் கொண்டுவர வேண்டும். அவனாக வராவிட்டால் அவனைக் கடத்திக் கொண்டுவா வேண்டும். போலீஸாரால் பேச வைக்க முடியாத புலிக்குட்டியை நீங்கள் பேசவைத்து, அவன் மறைத்து வைத்திருக்கும் புதையலைக் கிளப்பப் போகிறீர்கள்! இல்லையா?” 

“வாயை மூடு! புலிக்குட்டியை மீட்டுக் கொண்டுவத்து என்னிடம் ஒப்படைப்பதுடன் உள் வேலை முடித்து விடுகிறது! இப்போது பாதிப் பணம் தருகிறேன். புலிக் குட்டியை மீட்டுக் கொண்டு வந்ததும் பாதிப் பணம் தருகிறேன்! என்ன சொல்லுகிறாய்?” 

“புலிக்குட்டியை மீட்டுக்கொண்டு வருவதற்குள் ஒருவனால் மட்டும் முடியாது! எனக்குத் துணையாக மற்றொரு ஆள் வேண்டும்! இதற்கு நிறையச் செலவாகும்!” 

“செலவைப் பற்றித் துன்பம் கொள்ளாதே! பொறுப் புள்ள ஒருவனைப் பார்த்து உன்னுடன் அழைத்துச் செல்ல வேண்டும்! நீ எவருக்காக வேலை செய்கிறாய் என்பது அவனுக்குத் தெரியக்கூடாது!” 

“என்னுடைய உயிரே போனாலும் ண்மை வெளியில் வராது! முதலில் நான் அந்தத் திறந்தவெளிச் சிறையைப் பற்றிய முழு விவரங்களையும் அதன் அமைப்பு, எத்தனை பேர்கள் அங்கே காவல் இருக்கிறார்கள், புலிக் குட்டியை எப்போது மீட்பது எளிது, எப்படி மீட்பது எளிது. என்பன போன்ற செய்திகளைச் சேகரித்துக் கொள்கிறேன். எப்படியும் இதற்கு ஒரு வாரம் பிடிக்கும்! பிறகு நான் புறப்படும் நாளைத் தெரிவிக்கின்றேன்!” 

“ஆகட்டும், எங்கேயும் நீ ஒரு சிறிய தவறும் செய்யக் கூடாது! எவ்வளவு பணம் வேண்டும்?” 

“புலிக்குட்டி ஒளித்து வைத்திருக்கும் நகைகளின் மதிப்புக்கும் என் வேலைக்கும் தொடர்பு வைத்தே இனி நாம் பணத்தைப்பற்றி பேச வேண்டும்!'” என்றான் தென்னவன். 

“எவ்வளவு பணம் வேண்டும்?” 

“ஐந்தில் ஒரு பங்கு வேண்டும்.” 

“பங்கு கொடுப்பது என் வழக்கமில்லை! இந்த வேலைக்கு எவ்வளவு உனக்குப் பணம் வேண்டும் என்று சொல்லு?” 

தென்னவன் விழித்தான். “பத்து இலட்சம் கொடுங்கள்” என்றான். 

“ஐந்து இலட்சம் ரூபாய் தருகிறேன்! அதற்குமேல் ஒரு பைசா கிடைக்காது!” என்றார் உலகையா. 

“தென்னவன் ஒரு சில வினாடிகள் சிந்தித்தான். அவன் ஏதோ சொல்ல வாயெடுத்தான். 

“வேறு ஏதாவது பேசினால் இன்னும் பணம் குறையும்! இந்த வேலை உள்ளிடமிருந்து போய்விடும்!” என்றார் உலகையா கண்டிப்பாக, 

இந்த வேலை தென்னவனிடமிருத்து போய்விட்டால், அத்துடன் அவன் ஆயுளும் முடிந்துவிட்டது என்று பொருள்! புலிக்குட்டிக்கும் உலகையாவுக்கும் தொடர்பு உண்டு என்பது தெரிந்துவிட்டால் தென்னவனை உயிருடன் விட்டு வைப்பது ஆபத்து என்பது உலகையாவுக்குத் தெரியும். ஆகையால் உலகையாவால் தனக்கு ஆபத்து வருவதை அவள் விரும்பவில்லை! 

“ஆகட்டும்” என்றான் தென்னவன் அழுத்தமான குரலில், 

உலகையா சிரித்தார். 

இருவரும் உண்டு முடித்தார்கள். புறப்படும்போது உலகையா தன் கைப்பையிலிருந்து புலிக்குட்டியின் புகைப் படம் ஒன்றை எடுத்துக் கொடுத்தார். “இவனை அடையாளம் கண்டுபிடிப்பது மிக எளிது. ஒரு கையை இழந்தவன் இவள். இரும்புக்கையை வைத்திருக்கிறான். சிறைக்குச் சென்ற பிறகும் இவன் இரும்புக் கையுடன் தான் இருக்கிறாள்” என்றார். 

தென்னவன் அத்தப் புகைப்படத்தைப் பாதுகாப்புடன் மறைத்து வைத்துக் கொண்டான். 

“இன்றே உனக்குப் பாதிப்பணம் உன் வீட்டுக்கு வந்து சேரும். இன்னும் ஒரு மணி நேரத்தில் அனுப்பி வைக்கிறேன்.” 

“நான் இனிமேல் ஒரு நிமிடத்தைக் கூட வீணாக்க மாட்டேன். இப்போதே நான் எல்லா விவரங்களையும் சேகரிக்கத் தொடங்கிவிடுகிறேன்” என்றான் தென்னவள். 

உலகையா ஓட்டல் பில்லுக்குப் பணத்தைக் கொடுத்து சிட்டுப் புறப்பட்டார். அவர் போளவுடன் புறப்படாமல், கொஞ்சநேரம் உட்கார்ந்து சிந்தித்தான் தென்னவன். 

அவன் மனம் எண்ணியது: “நாம் மேற்கொண்டிருப்பது மிக ஆபத்தான வேலை! இந்த வேலையில் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம். தப்பி வெற்றிகரமாக வேலையைச் செய்து முடித்தால், வாழ்நாள் முழுவதும் உட்கார்ந்து கொண்டு தரமான வாழ்க்கையை நடத்தலாம்! இந்த உலகையா கொடுக்கும் ஐந்து இலட்சம் எந்த மூலைக்கு! பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளில் பாதியையாவது பெற நான் திட்டம் வகுக்கப் போகிறேன்! அது இந்த உலகையாவுக்கு இப்போது எப்படித் தெரியும்!'” 

அவன் எழுந்து விரைந்து சென்றுவிட்டான் வெளியே. 

அத்தியாயம்-30

பங்களாவை அடைந்த உலகையா வேறு ஒரு திட்டம் வகுத்துக் கொண்டிருந்தது தென்னவனுக்குத் தெரியாது! 

அவர் அவனிடம் சொன்னபடி இரண்டரை இலட்சம் ரூபாயை ஒரு நோல் பெட்டியில் போட்டுக் கிளிமொழியிடம் கொடுத்து அனுப்பினார். தென்னவன் இருக்குமிடத்துக்கு போய்த் தென்னவளிடம் அவள் பாத்தைக் கொடுத்து விட்டுத் திரும்பி வந்தாள். உலகையா அப்போது ஆழ்ந்த சிந்தனையில் ஈடுபட்டிருந்தார். 

”அப்பா, உங்கள் திட்டம் நல்லபடி நிறைவேறும் என்று எண்ணுகிறீர்களா?” என்றான் கிளிமொழி. 

”ஏன் அப்படிக் கேட்கிறாய்?” 

”இந்தத் தென்ளவளைப் பார்த்தால் நல்லவனாகத் தெரியவில்லையேர்” 

“நல்லவர்கள் எப்படி இந்த வேலைக்கு வருவார்கள்! நல்லவர்களால் இப்படிப்பட்ட வேலைகளைச் செய்ய முடியாது!”

“நீங்கள் சொல்லுவது புரிகிறது. அவளைப் பார்த்தால் நம்பிக்கையானவனாகத் தெரியவில்லையே.” 

“இந்தத் தொழிலில் ஒருவரை ஒருவர் நம்பித்தான் ஆக வேண்டும்! புலிக்குட்டி நம்பிக்கையானவனாகத்தான் தோன்றினான்! இறுதியில் அவன் என்ன செய்தாள்?’’ 

“தென்னவன் செயலில் இறங்க இன்னும் ஒருவாரம் பிடிக்கும் அல்லவா? அதற்குள் நாமாக ஒரு திட்டம் போட்டு முயற்சி செய்து பார்த்துவிட்டால்?” 

“என்ன முயற்சி!” 

“மின்மினியைப் புலிக்குட்டி வாழும் திறந்தவெளிச் சிறைக்கு அனுப்பி வைப்பது! மின்மினி மனம் வைத்தால் நடக்காதது இல்லை! இந்தப் பூனை அவளை எப்படி யாவது கவர்ந்து தப்பி அழைத்துவர முயற்சி செய்யும்!” 

கிளிமொழியின் திட்டம் உலகையாவுக்குப் பிடித்திருந் தது. ஆகையால் இரகரியமாக மின்மினியை அந்தச் சிறைத் தீவுக்கு அனுப்ப அவர் முடிவு செய்தார். 

மறுநாள் உலகையாவும் கிளிமொழியும் மின்மினியுடன் காரில் புறப்பட்டார்கள். செங்கற்பட்டுக்கு அப்பால் உள்ள வேடன்தாங்கல் என்னும் இடத்துக்கு வரும் பறவை களைப் பார்க்கப் போகிறவர்களைப் போல் அவர்கள் உல்லாசமாகப் புறப்பட்டார்கள். 

வேடன்தாங்கல் என்னும் இடத்தில் உலகத்தின் எல்லாப் பாகங்களிலிருந்தும் வகை வகையான பறவைகள் வகும் காலம் அது, அங்கே உள்ளக் களிப்புப் பெறப் போகின்றவர்கள் நாளுக்கு நாள் மிகுதியாகி வந்நார்கள். வெளிநாட்டிலிருந்து வருகிறவர்கள்கூட இந்த வேடன் தாங்கலுக்குப் போகாமல் திரும்புவதில்லை. வேடன்தாங்கலுக்குச் சில கல் தொலைவில்தான் இந்தந் திறந்தவெளிச் சிறை இருந்தது. 

“வேடன்தாங்கலில் நாம் தங்குவோம். அங்கிருந்து புலிக்குட்டி இருக்கும் தீவுக்குப் பக்கத்தில் போவது என்று. மின்மினியைப் புலிக்குட்டி இருக்கும் இடத்துக்கு அனுப்பி விட்டுக் காத்திருப்போம்!” என்றார் உலகையா. 

”மின்மினியின் உதவியுடன் சிறைக்காவலிலிருந்து தப்பி ஓடிவிடலாம் என்ற எண்ணம் புலிக்குட்டிக்கு வந்து விடும்! சிறை வாழ்க்கை இப்போதே அவனுக்குக் கசந்து விட்டிருக்கும். நமக்குத் தெரியாமல் மின்மினி வந்திருக்கிறது என்ற எண்ணம் அவனுக்கு வந்துவிட்டால், எப்படியும் அவன் தப்பி வருவான். மின்மினி அவனை நாம் சொல்லும் வழியில் அழைத்து வரும்.” என்றாள் கிளிமொழி. 

இருவரும் வேடன்தாங்கலுக்குச் சென்று ஒரு வீட்டில் இறங்கினார்கள். கொஞ்சம் களைப்பாறிவிட்டு, வேடன் தாங்களில் வந்து இறங்கிய வகை வகையான பறவைகளைத் தொலைநோக்கியால் பார்த்துக் கொண்டிருந்தார்கள். 

மாலை வேளை வந்தது. 

உலகையாவும் கிளிமொழியும் மின்மினியுடன் காரில் புலிக்குட்டி இருந்த இடத்தை நோக்கிப் புறப்பட்டார்கள். 

தீவுக்குப் போகும் சாலையே கரடுமுாடாக இருந்தது. அந்தச் சாலையில் உலகையா போக விரும்பவில்லை. சிறைக்குப் போய்வரும் போலீஸ் லாரிகளும், சிறைப் பொறுப்பாளர்களின் கார்களும் அந்த ஒரே சாலையில் தான் போகவேண்டும். அந்தப் பக்கம் வேறு எவருடைய கார் வந்தாலும், எவர் நடந்து வந்தாலும் ஐயத்துடன் பார்ப்பார்கள். ஆகையால் உலகையா வேறு பக்கமாகக் காரைச் செலுத்தினார். சாலையே இல்லாத பக்கங்களில் கார் சென்றது. 

சுற்றிலும் அடர்ந்த காடு. கார் சென்றபோது மரங் களின் கிளைகளும், செடிகளும் காரின்மீது உராய்ந்தன. மரங்களும் முட்செடிகளும் அடர்ந்து இருந்ததால் சூரிய வெளிச்சமே இல்லை. 

“இந்த இடத்தைப் பார்த்தாலே அச்சமாக இருக் கிறது. மீண்டும் வந்த வழியைக் கண்டுபிடித்துக் கொண்டு போவது கடினம்” என்றாள் கிளிமொழி. 

உலகையா ஒரே திக்கில் காரைச் செலுத்தினார். திரும்பி வரும்போதும் திக்கை பனத்தில் கொண்டுதான் புறப்பட்ட இடத்திற்கு வரவேண்டும் எனறு எண்ணினார், 

கார் ஒரு வழியாக ஏரியின் ஓரமாக வந்து நின்றது. காரிலிருந்து பார்த்தபோது அந்த ஏரி கடலலைபோல் இருந்தது. மிகப் பெரியது. அதன் நடுவில் சிறைச்சாலை அமைந்திருந்த தீவு இருந்தது. தீவிலும் காடு அடர்ந்து வளர்ந்திருந்தது. மலைகள் நிறைந்திருந்தன. 

“தீவுக்குப் போகப் பாலம் ஒன்று அமைத்திருக்கிறார்கள். அந்தப் பாலத்தில் மிகுந்த போகள் காவல் இருப்பதால் அந்தப் பக்கம் எவரும் உள்ளே போகவும் முடியாது; தப்பவும் முடியாது!” என்றார் உலகையா. 

“படகில் போளால் தீவை எளிதில் அடைந்து விடலாம் போலிருக்கிறதே!” என்றாள் கிளிமொழி. 

“பார்ப்பதற்கு அப்படித் தெரிகிறது. தண்ணீரின் ஓரத்தில் படகைத் தள்ளிக் கொண்டு போவதே ஆபத்து! இங்கே சுழல் மணல் நிறைந்திருக்கிறது. காலை வைத்ததும் அந்த மணல் மனிதனை அப்படியே உள்ளே இழுத்துக் கொள்ளும்! மறுகரையில் இதற்கு மேல் ஆபத்துக்கள் மிகுதி!” 

”வேறு என்ன ஆபத்துகள்?” என்றாள் கிளிமொழி, 

”இந்தப் பகுதிகளில் பாம்புகள் மிகுதி. பாம்புகள் என்றால் எளிய பாம்புகள் அல்ல. கொடிய நஞ்சுள்ள பாம்புகள்! சுடித்ததும் என்ன கடித்தது என்றுகூடத் தெரிந்து கொள்ள நேரமில்லாமல் மனிதன் இறந்து வடுவான! ஏரியில் முதலைகள் மிகுதி! தண்ணீரில் இரத்தத்தை உறிஞ்சும் அட்டைகள் வேறு! காட்டு மிருகங்கள் வேறு இந்தப் பகுதிகளில் உள்ளனவாம்!” என்றார் உலகையா. 

“இவ்வளவையும் கடந்து புலிக்குட்டி எப்படித் தப்பிவர முடியும்?” என்று கேட்டாள் கிளிமொழி. 

“வேறு வழி? அவன் தப்பித்தான் வரவேண்டும்? அதற்காகத்தானே நாம் பல இலட்சங்களைச் செலவு செய்ய முடிவு செய்திருக்கிறோம். மின்மினியால் புலிக் குட்டிக்குத் தப்ப வழி சொல்ல முடியாவிட்டால், தென்னவன்தான் அவனைக் கடத்தி வரவேண்டும்!” என்றார் உலகையா, 

பிறகு அவர் காரில் உட்கார்ந்திருந்த மின்மிளியை இரு கைகளாலும் தூக்கி மடியின்மீது உட்கார வைத்துத் தடவிக் கொடுத்தார். 

மின்மினி உலகையாவின் முகத்தைப் பார்த்தது. 

உலகையா காரிலிருந்து கீழே இறங்கினார். மின்மினியை ஒரு கையால் பிடித்துக் கொண்டு தீவைச் சுட்டிக் காட்டினார். “அதோ அந்தத் தீவில் புலிக்குட்டி வாழ்கிறான். அவனை எப்படியாவது நீ அழைத்துவர முயற்சி செய்ய வேண்டும்! நானா மாலை நான் இங்கே வருகிறேன். இதே இடத்துக்கு அவனை நீ அழைத்துவர முயற்சி செய்! முடியாவிட்டால் நீ மட்டும் திரும்பி வா!” என்றார். 

மின்மினி அவர் சொன்னதைப் புரித்து கொண்டதைப் போல் ‘மியாவ், மியாவ்’ என்று சுத்தியது! 

“புறப்படு இந்தப் பகுதியில் நீ நடந்து தரையில் செல்லுவது ஆபத்து. மரங்களின் கிளைகளைப் பயன் படுத்தி தாவித் தானி அந்தத் தீவுக்குப் போக வேண்டும்’ என்றார். 

மின்மினி, உலகையாவையும் கிளிமொழியையும் ஒரு தடவை பார்த்துவிட்டுப், பக்கத்திலிருந்த மரத்தின்மீது தாவியது! அந்த மரத்திலிருந்து அதற்குப் பக்கத்திலிருந்த மரத்துக்குத் தாவியது! 

“இது என்ன பூனையா குரங்கா! தவறித் தண்ணீரில் விழுந்தால் என்ன ஆகும்!” என்றாள் கிளிமொழி! 

”இந்தத் தண்ணீரில் மனிதன் விழுந்தாலே பிழைக்க முடியாது!” என்றார் உலகையா. 

ஏரியிலும், ஆழம் இல்லாத சில பகுதிகளில் மரங்கள் வளர்ந்து நின்றன. மரங்கள் வளர்ந்த பகுதியிலேயே மரத்துக்கு மரம் தாவிச்சென்றது மின்மினி. அது மரத்துக்கு மரம் தாவும்போது கிளிமொழிக்கும் உலகையாவுக்கும் கொஞ்சம் அச்சமாகந்தான் இருந்தது. களைப்பினால் அது தவறி விழுந்துவிடுமோ என்று அஞ்சினார்கள் அவர்கள். 

அந்தக் கொடிய பூனை மூச்சுவிடாமல், உலகையாவின் கட்டளையைத் தலைமேல் கொண்டு விரைந்து தாவிச் கரையை அது சென்றது. ஒரு வழியாகத் தீவின் அடைந்தது. 

புலிக்குட்டி இருக்குமிடத்தைத் தேடி அது குன்றுகளின் மீதும், மலைகள் மீதும் ஏறிச் சென்றது. இறுதியில் தொலைவில் ஓர் இடத்தில் புகை வரும் இடம் தெரிந்தது. அதுதான் மனிதர்கள் வாழும் இடமாக இருக்க வேண்டும் என்று மின்மினி மிகவும் விரைந்தது. 

புலிக்குட்டி இருந்த இடத்தை மின்மினி கண்டுபிடித்து விட்டது!

– தொடரும்…

– கல்கண்டு இதழ்.

– இரும்புக்கை மனிதன் (நாவல்), முதற் பதிப்பு: 1976. மணிமேகலைப் பிரசுரம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *