இரும்புக்கை மனிதன்





(1976ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 16-20 | அத்தியாயம் 21-25 | அத்தியாயம் 26-30
அத்தியாயம்-21

கிளிமொழி உலகையாவிடம் புலிக்குட்டியின் பதிலைச் சொன்னதும் உலகையா கொஞ்சமும் சினம் கொள்ள வில்லை. அப்போதும் அவர் மெல்லச் சிரித்தபடி சொன் னார்: ”புலிக்குட்டி நம்மை ஏமாற்றலாம் என்று எண்ணி யிருக்கிறான் போல் இருக்கிறது! நம்மை ஏமாற்றிய வர்கள் முடிவு என்ன ஆகும் என்பது அவனுக்குத் தெரிந் தால், இந்த நிமிடமே நகைப் பெட்டியை நம்மிடம் கொண்டு வந்து வைத்துவிடுவான்! இப்போது அந்தப் பெட்டி நமக்குத் தேவையில்லை. கொஞ்ச நாளைக்கு அவன் பொறுப்பிலேயே அது இருக்கட்டும்!”
“எனக்கு என்னவோ ஐயமாக இருக்கிறது! அவன் பெட்டியை நம்மிடம் கொண்டு வருவான் என்ற நம்பிக்கை எனக்கு இப்போது இல்லை! நாம் நினைப்பதைவிட அவள் மிக மூளையுள்ளவன்!’ என்றாள் கிளிமொழி.
”அது எனச்குத் தெரியும்! இந்தப் புலிக்குட்டி பெட்டியை எங்கேயோ ஒளித்து வைத்திருக்கிறாள். அவன் போகும் இடம் நமக்குத் தெரியக்கூடாது என்று காரில் நான் வைத்திருந்த சிறிய இயந்திரத்தைக் கழற்றி வைத்திருக்க வேண்டும்! அல்லது வேறெரு காரில் பெட்டியை எடுத்துச் சென்றிருக்க வேண்டும்!” என்றார் உலகையா!
இதைக் கேட்டதும் கிளிமொழிக்குச் சுருக்கொன்று மனத்தில் பட்டது. புலிக்குட்டியின் கார் போகும் இட மெல்லாம் உலகையாவுக்கு எப்படித் தெரிகிறது என்று அவள் அவனிடம் சொன்னது எவ்வளவு கேடாகமுடிந்தது: அவள் தன் தந்தையிடம் தன் தவறைச் சொன்னாள்.
உலகையா அப்போதும் அமைதியுடன் சொன்னார்! “நீதான் புலிக்குட்டியிடம் அதைப் பற்றி சொல்லியிருப் பாய் என்று நான் அப்போதே முடிவுசெய்து விட்டேன்! நீ புலிக்குட்டியை நூற்றுக்கு நூறு நம்பி விட்டாய்! இனிமேலாவது விழிப்புடன் இரு! இந்த ஒற்றைக் கை மனிதன் அவன் நினைக்கும் அளவுக்குத் திறமைசாலி அல்லன்! இப்போது அவனிடம் உள்ள நகைளை அவனால் விற்க முடியாது! அவனிடம் சிக்கியிருப்பை விலைமிகுந்த, கிடைப்பதற்கு அரிய நகைகள்! அவற்றுள் ஏதாவது ஒன்றை விற்க அவன் முயன்றாலும் அவன் சிக்கி விடுவாள்! ஆகையால் நகைகளை விற்க நம்மிடம்தான் அவன் வந்தாக வேண்டும்!”
கிணற்று நீரை வெள்ளம் கொண்டுபோய் விடாது என்பார்களே! அதைப் போல. புலிக்குட்டியின் பாதுகாப் பில் இருக்கும் நகைகள் எங்கேயும் போய்விடாது என்று முழு நம்பிக்கையுடன் இருந்தார் உலகையா. அப்படி அவன் அவரை ஏமாற்ற எண்ணியிருந்தால், அதற்கும் அவர் ஒரு திட்டம் வைத்திருந்தார்!
உலகையாவும், கிளிமொழியும் பேசிக்கொண்டிருந்த போது மினிமினி அவர்கள் இருந்த இடத்துக்கு வந்தது. அது உலகையாவை ஏறிட்டுப் பார்த்து நின்றது, அதை அவர் அப்படியே வாரி அணைத்துக் கொண்டு, ”இந்த மின்மினியால் கண்டுபிடிக்க முடியாதது எது?இதைவிட்டே நாம் புலிக்குட்டி மறைத்து வைத்திருக்கும் பெட்டியைக் கண்டுபிடிக்கலாம்! இல்லையா? என்றார்.
கிளிமொழியின் முகம் உடனே மலர்ந்தது! “ஆமாம் அப்பா! மின்மினியை நாம் மறந்து விட்டோமே! இன்றே நாம் அந்தப் பெட்டி இருக்கும் இருக்கும் இடத்தைத் தெரிந்து வைத்துக் கொண்டால் என்ன? புறப்படுங்கள்” என்றாள் கிளிமொழி.
”விரைவு கொள்ளாதே! கொஞ்ச நாள் பொறுத்துப் பெட்டியைக் கண்டுபிடிப்போம்”
“நாளைக் கடத்தக் கூடாது! நாள் கடந்து போனால் மின்மினியால் மோப்பம் பிடித்து பெட்டி இருக்கும் இடத்துக்குப் போக முடியாது! புறப்படுங்கள்!**
கிளிமொழி விடுவதாக இல்லை. ஆகையால் அரைகுறை மனத்துடன் புறப்பட்டார் உலகையா. மின்மினியைப் பார்த்து அவர் கேட்டார்: “புலிக்குட்டி நம்மை ஏமாற்றிவிட்டு நகைப் பெட்டியை எங்கேயோ ஒளித்து வைத்திருக்கிறான்!அதைக் கண்டுபிடிக்க முடியுமா உன்னால்? ஏன் முடியாது? புறப்படு!” என்றார்.
மின்மினி ‘மியாவ், மியாவ்’ என்று கத்திக்கொண்டே அவர்களுடன் காரில் புறப்பட்டது.
கிளிமொழி காரைச் செலுத்தினாள். காரைப் புலிக் குட்டி இருந்த வீட்டுக்குக் கொஞ்சத் தொலைவில் நிறுத்தி விட்டு,பெட்டியைக் கொண்டுபோன இடத்துக்குப்போக முடியுமா என்று பார்” என்றாள் மின்மினியைப் பார்த்து,
மின்மினி அவள் சொன்னதைப் புரிந்து கொண்டு, காரியிருந்து வெளியே பாய்ந்தது. புலிக்குட்டியின் காரின் பக்கத்தில் சென்று கொஞ்ச நேரம் பார்த்தது. பிறகு காருக்குள் ஏறி இறங்கியது. காரைச் சுற்றிச் சுற்றி வந்தது. காரின் பின்னாலும் முன்னாலும் முகர்ந்து பார்த்துவிட்டு. பேசாமல் அது திரும்பி வந்துவிட்டது!
“என்ன மின்மினி? எந்தப் பக்சும் போசு வேண்டும்” என்று கேட்டாள் கிளிமொழி.
மின்மினி முகத்தைச் சோர்வுடன் வைத்துக் கொண்டு மௌனமாக உட்கார்ந்துவிட்டது!
”என்ன ஆயிற்று உனக்கு? மோப்பம் பிடிக்க முடிய வில்லையா உன்னாலே? உனக்கு ஜலதோஷம் பிடித்துக் கொண்டதா?” என்று கேட்டபடி மின்மினியை இரு கைகளால் தூக்கிப் பிடித்து அதன் முகத்தைத் தன் முகத் துக்கு அருகே வைத்துக் கேட்டாள்,
மின்மினி கத்தவில்லை.
அமைதியுடன் இருந்தது.
காரணம் புரிந்துவிட்டது கிளிமொழிக்கு. “அப்பா புரிந்துவிட்டது!” என்றாள் அவள்.
”எப்படி?” என்றார் உலகையா.
”இந்தப் புலிக்குட்டி மிகவும் விவரம் தெரிந்தவன். மோப்பம் பிடித்துத் தொடர்ந்து செல்லும் நாய்களுக்கோ பூனைகளுக்கோ மிளகுத் தூளை முகர்ந்ததும் மோப்பம் பிடிக்கும் ஆற்றல் போய்விடும் என்று உணர்ந்து, பியட் காரில் மிளகுத் தூளைத் தூவியிருக்கிறான்! மின்மினியின் மூக்கிலிருந்து மிளகுத் தூள் வாசனை வருகிறது பாருங்கள்!” என்றாள் கிளிமொழி.
”காரை விடு! எப்படியிருந்தாலும் புலிக்குட்டி என் பிடியிலிருந்து தப்ப முடியாது! அவன் நம்மை ஏமாற்றி விட்டதாக எண்ணியிருக்கிறான். நம்மை எவராலும் ஏமாற்ற முடியாது என்பது அவனுக்குத் தெரியாது!” என்றார் உலகையா
உலகையா எப்போதும் எல்லாவற்றிற்கும் இரண்டு திட்டங்கள் வைத்திருந்தார். ஒரு திட்டம் தோற்றால், மற்றொரு திட்டத்தைக் கடைப்பிடிப்பார்! அவரைப் பொறுத்தவரையில் இரண்டாவது திட்டம் தவறுவ தில்லை! புலிக்குட்டியின் பிரச்சினையில் அவர் தனது இரண்டாவது திட்டத்தைப் பயன்படுத்த முடிவு செய்தார்!
அத்தியாயம்-22
நாள்கள் ஓடின.
புலிக்குட்டி உலகையாவுடனோ கிளிமொழியுடனோ தொடர்பு கொள்ளவில்லை. தனிமையில் அவன் தவித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு இப்போது நிறையப் பணம் தவறாது தேவைப்பட்டது.
மேல்நாடுகளில் சில கொடியவர்கள் சிகரெட்டில் போதை தரும் மருந்தை ஏற்றி இலவசமாக அந்தச் சிகரெட்டுகளை இளைஞர்களுக்குக் கொடுப்பார்களாம். அந்தப் போதை தரும் சிகரெட்டுகளைப் பயன்படுத்திய இளைஞர்கள், நாளடைவில் அந்தச் சிகரெட் இல்லாமல் வாழமுடியாது. வெறி பிடித்தவர்களைப்போல் அவர்கள் குறிப்பிட்ட சிகரெட்டுகளையே கேட்கும்போது முதலில், இலவசமாகக் கொடுத்த கொடியவர்கள் நூற்றுக் கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு சிகரெட்டுகளைக் கொடுப் பார்கள்! இப்படி, கொடிய பழக்கத்துக்கு வயப்பட்ட இளைஞர்கள் இன்றும் பலியாகி வருகிறார்கள்! இந்த மாதிரி உலகையா புலிக்குட்டிக்கு ஏகப்பட்ட வசதிகளை முதலில் செய்து கொடுத்து, பணத்தையும் வாரிக் கொடுத்தார். செலவு செய்யக் கற்றுக்கொண்ட புலிக் குட்டியால் இப்போது செலவுகளைக் குறைக்க முடிய வில்லை. பணத்துககாக இப்போது உலகையாவிடம் துணிந்து சென்றாலும், முதலில் அதை அவர் விரும்ப மாட்டார். இரண்டாவதாக, நகைப்பெட்டி இருக்கு மிடத்தை எவருக்கும் சொல்லுவதில்லை என்று முடிவு செய்திருந்தான் அவன். ஆகையால், அவன் நகைப் பெட்டியிலிருந்து எடுத்து வந்து காரில் ஒளித்து வைத் திருந்த வைரமாலையை விற்றுவிட முடிவு கட்டினான்!
வேறு வழியில்லை!
போலீஸ் இலாகாவைச் சேர்ந்தவர்கள் அவனைத் தொடர்ந்து கவனிப்பது குறைந்து விட்டது. அவன் கண் களுக்கு எவரும் தெரியவில்லை. ஆகையால் வைர மாலையை விரைவில் விற்றுவிட அவன் எண்ணினான். எவரிடம் அதைக் கொண்டுபோய் விற்பது என்ற பிரச்சினை அவனுக்கு வந்தது. விலை உயர்ந்த வைர மாலை அது! விலைமதிக்க முடியாதது அது! நகைகளைத் திருடத் தொடங்கியதில் இருந்து அவன் விலை உயர்ந்த நகைகளுக்கும் போலி நகைகளுக்கும், உள்ள வேறுபாட்டைக் கொஞ்ச கொஞ்சமாகத் தெரிந்து கொண் டாள். பல ஆயிரம் ரூபாய் பணத்தைக் கொடுத்து உடனே அதை வாங்கக் கூடிய இடத்துக்குப் போக அவன் முடிவு செய்தான். உடனே புறப்பட்டான்.
அவன் காரில் புறப்பட்டபோது, காரில் தூவப்பட்டிருந்த மிளகுத் தூளின் வாசனை அவன் மூக்கில் ஏறியது. அவன தனக்குள் சிரித்துக் கொண்டே காரைச் செலுத்தினாள்.
சென்னையில் பெரிய நகைக் கடைகள் எல்லாம் நேத்தாஜி சாலையில்தாம் இருந்தன. ஆகையால் அவன் நேத்தாஜி சாலையில் ஒரு பக்கம் காரை நிறுத்திவட்டு இறங்கி மெல்ல நடந்தான்.
நகைக்கடைகளை அவன் பார்த்துக் கொண்டே சென்றாள். நகைக்கடைகளின் முகப்பில் கண்ணாடிக் கேஸ்களில் வைக்கப்பட்டிருந்த நகைகள் அவன் கண்களைப் பறித்த போதிலும் அவை மலிவானவை என்பதைத் தெரிந்துகொண்டான். ஒரு பெரிய கடையின் உள்ளே நுழைந்தான்.
ஒரு மார்வாடியின் கடை அது. மிகப் பெரிய நகைக் கடைகளை மார்வாடிகள் தாம் வைத்திருந்தார்கள். அந்தக் கடைக்குள் சென்றதும் ஏதோ வாங்க வந்தவனைப்போல் மெல்ல நடந்து, உள்ளே கணணாடிக் கேஸ்களில் இருந்த நகைகளைப் பார்த்தான். அந்தக் கடைக்காரரிடம் வைர மாலையை விற்பதா வேண்டாமா, வைரமாலையைக் கண்டதும் கடையின் முதலாளி போலீசுக்குத் தொலை பேசியல் செய்தி அனுப்பிவிடுவாரோ என்ற அச்சம் எழுந்தது. அப்போது கடைக்காரர் அங்கே வந்த மற்றொருவரிடம் பேசிக்கொண்டது காதில் விழுந்தது.
சித்ரா என்னும் பிரபல நடிகைக்கு விலை உயர்ந்த வைரமாலை வேண்டும் என்றும், கடைக்காரரிடம் கையில் வைரமாலை ஒன்று இல்லாததால் அதனால் அவருக்கும் பெரிய நஷ்டம் என்றும் சித்ராவுக்கு வேண்டிய நகையைச் செய்து கொடுக்கும் வரையில் அவளால் பொறுத்திருக்க முடியாது என்று சொல்லுவதாகவும், இரண்டு நாள்களில் அவள் மலேசியாவுக்குப் படப்பிடிப்பில் கலந்து கொள்ளப் போவதாகவும் கூறினார் அத்தக் கடைக்காரர்,
இதைக் கேட்டதும் புலிக்குட்டிக்குப் புதிய எண்ணம் பிறந்தது. இந்தக் கடைக்காரரிடம் நகையை விற்றுவிட்டு அகப்பட்டுக் கொள்வதைவிட, நேரடியாகச் சித்ராவிடமே அதைக் கொண்டுபோய் விற்றுவிடலாம் என்று முடிவு கட்டினாள்.
சித்ரா ஒரு கன்னடத்துப் பெண். தமிழிலும் தெலுங் கிலும் நடித்துப் பெரும் பணம் சேர்த்துவிட்ட நடிகை அவள். சித்ராவின் படங்களைப் புலிக்குட்டி பார்த்திருக் கிறான். அவளிடம் அழகு இருந்தது. பெரும்பாலும் அழகு மிகுதியாக உள்ள நடிகைகளுக்கு மூளை இருக்காது என்று எண்ணி, அவளிடம் நகையை உடனே கொண்டு போய்க் காட்ட உறுதி செய்துகொண்டான். பிறகு அவன் அங்கு நிற்கவில்லை!
அத்தியாயம்-23
சீனிமா நடிகை சித்ராவின் மிகப் பெரிய பங்களா நுங்கம்பாக்கத்தில் இருந்தது. தொலைபேசி எண் புத்தகத்தில் பார்த்து அவன் முகவரியைக் கண்டுபிடித்துக் கொண்டு அங்கே சென்றான். முதலில் பங்களாவைப் பார்த்ததும் கொஞ்சம் அயர்ந்து நின்றான். அவ்வளவு அழகிய பங்களா அந்தப் பகுதியில் வேறு எதுவும் இல்லை!
இருள் சேர்த்துவிட்ட நேரமாகையால், பங்களாவில் விளக்குகள் ஒளி தந்து அதன் அழகை மேலும் எடுத்துக் காட்டின. அவன் காரிலிருந்து இறங்கி, வாயிற்காப் போனைச் சரிப்படுத்தி, எங்கேயோ குரைத்த வேட்டை நாய் ஒன்று எந்த வினாடி தன் மீது பாயுமோ என்று அஞ்சியபடி உள்ளே சென்றான். நல்ல வேளையாக நாய் கட்டப்பட்டிருந்தது. அவன் பிழைத்தான்.
நகை ஒன்றை விற்க வந்திருப்பதாகவும். சேட் ஒருவர் அவளை அனுப்பி வைத்ததாகவும் நடிகையின் செயலாளரிடம் அவன் கூறினான். ஐந்தே நிமிடத்தில் அவனுக்குச் சிதராவின் பேட்டி கிடைத்தது. அவள் மட்டும் தனியாக வந்தாள்.
வைத்த கண் வாங்காமல் கொஞ்ச நேரம் அவளைப் பார்த்தான் அவன். சினிமாவில் பார்த்ததைவிட நேரில் அவள் அழகாக இருந்தாள். எழுமிச்சம்பழ நிறம். எடுப்பான உடல்.
புலிக்குட்டியைப் பார்த்ததும் அவள் சிரித்துக் கொண்டே, “சேட் அனுப்பினாரா? எந்த சேட்?” என்று கேட்டாள்.
”எந்த சேட்டிடம் நீங்கள் வைரமாலை வேண்டும் என்று சொல்லியிருந்தீர்கள்?” என்று கேள்வியிலேயே பதில் சொன்னான் புலக்குட்டி.
அவள் சிரித்துக் கொண்டே “எங்கே நகை?” என்றாள்.
புலிக்குட்டி கால் சட்டைப் பையிலிருந்து வைர மாலையை இரும்புக் கையால் எடுத்து, மிகத் திறமை யுடன் அவள் முன் நீட்டினான். அவள் வியப்புடன் அவன் கையைப் பார்த்தாள். அதைவிட வியப்புடன் வைரமாலையைப் பார்த்தாள்.
“இந்த இரும்புக் கையைப் பார்த்தால், எனக்கும் என் கையைப் வெட்டிக் கொண்டு இப்படி ஓர் இரும்புக்கை வைத்துக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது! இயற்கைக் கையைவிட இந்தச் செயற்கைக் கை மிக அழகாக இருக் கிறது” என்றாள் சித்ரா,
புலிக்குட்டி சிரித்துக் கொண்டே, ”நீங்கள் செயற்கைக் கை வைத்துக் கொண்டால் உங்களை யார் நடிக்க ஒப்பந்தம் செய்வார்கள்?” என்று சொல்லிவிட்டு, ”நகையைப் பாருங்கள்” என்றான்.
வைரமாலையை அவள் இப்படியும் அப்படியும் விளக்கு வெளிச்சத்தில் பார்த்தான். அது மிக விலை உயர்ந்த வைரங்களால் ஆனது என்பது அவளுக்குப் பார்த்ததும் தெரிந்துவிட்டது. அவள் சிந்தனையுடன் அதை நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள்,
“நீங்கள் மலேசியாவுக்குப் படப்பிடிப்புக்காகப் போவ தாகக் கேள்விப்பட்டேன். இதைக் கொண்டுபோய் அங்கே விற்றால் மூன்று மடங்கு விலை கிடைக்கும்!” என்றான் புலிக்குட்டி.
”விற்பதற்காகவா நான் இதை வாங்குகிறேன்?” என்றாள் சித்ரா,
”அப்படியில்லை! வடநாட்டில் உள்ள சில நட்சத் திரங்கள் இப்படித்தான் விலை உயர்ந்த நகைகளை எடுத்துச் சென்று வெளிநாடுகளில் விற்று, வெளிநாட்டுப் பாங்கில் போட்டு வைக்கிறார்களாம்! சுவிட்சர்லாந்தில் ஒரு பாங்க் இருக்கிறது. இங்கே சுறுப்புப் பணத்தைப் போட் டாலும் இரகசியமாக வைத்துக் கொள்கிறார்களாம்! அங்கே பணத்துக்கு எந்த விதமான வரியும் கிடையாது! தேவைப்படும்போது எடுத்துக் கொள்ளலாம்!” என்றான் புலிக்குட்டி.
எப்படியாவது அவளை அந்த வைரமாலையை வாங்கும்படி செய்யவேண்டும். என்று எண்ணினான் புலிக்குட்டி.
“நிறைந்த விவரங்களை நீ தெரிந்து வைத்திருக் கிறாய்! இந்த நகைக்கு எவ்வளவு பணம் வேண்டும்?”
”முதலில் இதை அணிந்து பாருங்கள்! பிறகு விலை பேசுவோம்!'”
சித்ரா அந்த வைரமாலையை அணிந்து பார்த்தாள் அவளுடைய செயலாளரும் பணியாளர்களும் தற்செயலாக அந்தப் பக்கம் வந்தவர்கள். அவளைப் பார்த்துவிட்டு, வைரமாலை மிக அழகாக இருப்பதாகச் சொன்னார்கள்.
வைரமாலையை விற்றாகிவிட்டது என்றே எண்ணிக் கொண்டாள் புலிக்குட்டி.
“எவ்வளவு பணம் வேண்டும்?” என்றாள் சித்ரா.
“இலட்சம் ரூபாய் வேண்டும்.”
“ஓர் இலட்சமா? மிக அதிகம் இல்லையா?”
“இது எதிர்காலத்தில் இரண்டு இலட்சம் வரையில் போகும்! கொஞ்சம் பொறுத்து விற்க நேரமில்லை! பெயர் சொல்லக்கூடாத பெரும் பணக்காரர் ஒருவர் இதை விற்று வரும்படி சொன்னார்!” என்றான் புலிக்குட்டி.
“கொஞ்சம் இரு. வந்து விடுகிறேன். என் அன்னையிடம் இதைக் காட்டிவிட்டு வருகிறேன்” என்று சொல்லி விட்டு உள்ளே சென்றாள்.
அவள் திரும்பிவரப் பத்து நிமிடங்கள் ஆகிவிட்டன!
அதற்குள் புலிக்குட்டிக்கு வேர்த்துவிட்டது! அவள் எங்கே மாலையை மாற்றிவிடுவாளோ என்று அவன் அஞ்சினான்!
அவள் திரும்பி வருவதற்கும் அந்தப் பங்களாவின் முன் ஒரேயடியாக நான்கு போலீஸ் வண்டிகள் வந்து நிற்பதற்கும் மிகச் சரியாக இருந்தது!
புலிக்குட்டி அச்சத்துடன் திரும்பிப் பார்த்தாள். உதவிப் போலீஸ் கமிஷனர், போலீஸ் படையுடன் உள்ளே வந்து அவனைப் பிடித்தார்.
போலீஸ் கமிஷனர் கையில் வைரமாலையைக் கொடுத்தாள் சித்ரா!
அத்தியாயம்-24
சினிமா நட்சத்திரம் சித்ராதான் தொலைபேசியில் உதவிப் போலீஸ் கமிஷனருக்குச் செய்தி கொடுக்கிறாள். என்பது புரிந்து விட்டது புலிக்குட்டிக்கு!
உதவிப் போலீஸ் கமிஷனர் சித்ராவைப் பார்த்து, “உங்கள் உதவிக்கு நன்றி. பலகோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் அண்மையில் களவுபோய் விட்டன. அந்த விலை உயர்ந்த நகைகள் ஒரு மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவை. அவற்றில் ஒன்றாகத்தான் இது இருக்க வேண்டும்” என்று அவர் சொன்னார்.
சித்ரா உடனே சொன்னாள்: “இது விலை உயர்ந்த வைரமாலை. நீங்கள் சொல்லுவது மெய்தான். பல இலட்சங்கள் வரையில் விலை போகும் இந்த வைர மாலையை மிக அண்மையில், அடையாறில் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் பொருட்காட்சியில் வைத்திருந்தார். சென்னையில், அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எவரும் இப்படி ஒரு பொருட்காட்சியை நடத்திய தில்லை. இந்தப் பொருட்காட்சியில் அரசகுடும்பத்தைச் சேர்ந்த விலைமதிக்க முடியாத பொருள்கள் வைக்கப் பட்டிருந்தன! இந்தப் பொருட்காட்சிக்குப் பெரும் பணக்காரர்கள் மட்டுமே தனிப்பட்ட முறையில் அழைக்கப் பட்டிருந்தார்கள்.”
”உண்மைதான். அந்தப் பொருட்காட்சி சாலை நடந்த நேரத்தில் அங்கே பாதுகாப்புக்காகப் போலீசார் சிலரை எளிய உடையில் அனுப்பி வைக்கும்படி அந்த மன்னர் போலீஸ் இலாக்காவிடம் கேட்டிருந்தார். நாங்கள் சில கான்ஸ்டபிள்களை எளிய உடையில் அனுப்பி வைத்தோம்!” என்றார் உதவிப் போலீஸ் கமிஷனர்,
”அந்த மன்னர் இப்போது வசதியுடன் இல்லாததால், விலை உயர்ந்த பொருள்களை விற்கவே இப்படிப் பொருட் காட்சிசாலை வைத்திருக்கிறார் என்று எண்ணுகிறேன்! அங்கே உள்ள விலை உயர்ந்த நகைகளையும் மற்றப் பொருள்களையும் பார்த்ததும் பெரும் பணக்காரர்கள் வியப்புடன் அவற்றின் விலைகளைக் கேட்பார்கள் அல்லவா!” என்றாள் புலிக்குட்டி.
களவு செய்துவிட்டு, கொஞ்சமும் கலங்காமல் இப்படி அவன் பேசியது உதவிப்போலீஸ் கமிஷனருக்கும், நடிகை சித்ராவுக்கும் வியப்பை உண்டாக்கியது!
“அப்படியானால் மன்னரின் நகைகளில் ஒன்றுதான் இது என்பதை ஒப்புக் கொள்கிறாயா?” என்றார் உதவிப் போலீஸ் கமிஷனர்.
”அது எனக்குத் தெரியாது! இது மன்னரின் நகைதான் என்று சாட்சி சொல்ல சித்ரா துடித்துக் கொண்டிருக்கிறாளே!” என்றான் புலிக்குட்டி மிகத் துணிவுடன்!
“இவள் பேசுவதைப் பார்த்தால் சிறைக்குப் போகத் துடிப்பவனைப் போல் அல்லவா இருக்கிறது! சாட்சி சொல்ல நான் அஞ்சமாட்டேன்! இந்த வைரமாலையை மன்னரின் பொருட்காட்சியில் நான் பார்த்திருக்கிறேன்!” என்றாள் சித்ரா.
புலிக்குட்டி, உதவிப் போலீஸ் கமிஷனரைப் பார்த்து மெல்லச் சிரித்தான். அவன் ஏதோ சொல்லத்தான் அப்படிச் சிரிக்கிறான் என்பதை உணர்ந்துகொண்ட உதவிப் போலீஸ் கமிஷனர் அவனையே பார்த்துக் கொண்டிருந்தார், புலிக்குட்டி சொன்னான்: வைரமாலையை விற்க வந்த புலிக்குட்டியைச் சித்ரா பிடித்துக் கொடுத்தாள் என்ற பெருமை இவனைச் சார்ந்தது. தினப்பித்து என்னும் பத்திரிகையில் நாளைக் காலையில் வைர மாலை பற்றிய முக்கிய செய்தியும், நடிகை சித்ராவின் புகைப்படமும் வரும்! வைரமாலை மன்னருடையதுதான் என்பதற்கு மன்னரே சாட்சி கூறிவிடுவார்! அவர்தான் உயிருடன் இருக்கிறாரே! இல்லையா!”
புலிக்குட்டி இப்படி பேசுவான் என்று உதவிப் போலீஸ் கமிஷனர் கொஞ்சமும் எதிர்பார்க்கவே இல்லை. அவனுக்கு ஒரு வேளை வெறி பிடித்திருக்குமா என்றுகூட ஐயம் வந்துவிட்டது!
அவன் பேசிய ஒவ்வொரு சொல்லும் அவனைச் சிறைக்கூடத்துக்கு மிக அருகில் அழைத்துச் சென்றன!
“நீ என்ன பேசுகிறாய் என்பதைப் புரிந்துகொண்டு பேசுகிறாயா?” என்று கேட்டார் உதவிப் போலீஸ் கமிஷனர்.
“மிகத் தெளிவாகப் புரிந்து கொண்டுதான் பேசுகிறேன்!” என்றாள் புலிக்குட்டி.
“அப்படியானால் நீ சிறைக்குப் போக மிக விரும்புகிறாய் போல் இருக்கிறது! குற்றத்தை ஒப்புக் கொள்கிறவர்களுக்கு எப்போதும் தண்டனை குறைவு! போலீசாரிடம் சிக்கிய பிறகு உண்மையைப் பேசுவது மிக நல்லதுதான்! இந்த நகை மன்னருடையது என்பது உறுதி. மற்ற தகைகளையெல்லாம் எங்கே நீ வைத்திருக்கிறாய்?” என்று கேட்டார் உதவிப் போலீஸ் கமிஷனர்.
இவ்வளவு எளிதாக ஒரு வழக்கு முடிந்துவிடுகிறதே என்று உதவிப் போலீஸ் கமிஷனருக்கு வியப்பாகக் கூட இருந்தது! ஆனால், அடுத்தபடியாகப் புலிக்குட்டி சொன்ன பதில் அவரைத் திடுக்கிட வைத்தது!
“மீதி நகைகளா? என்னிடம் எது?” என்றான் புலிக் குட்டி!
உதவிப் போலீஸ் கமிஷனர் ஒரு சில வினாடிகள் பேச வில்லை. பிறகு சமாளித்துக் கொண்டு கேட்டார்; ”இந்த வைரமாலை உன்னிடம் எப்படி வந்தது?” என்றார்.
“அப்படிக் கேளுங்கள்” என்றான் புலிக்குட்டி. பிறகு சொன்னான். “இந்த வைரமாலையை ஒரு காக்காய் தூக்கி வந்து என் வீட்டு மாடியில் போட்டு விட்டுச் சென்றது! என் வீட்டில் வந்து விழுந்த பொருள் எனக்குச் சொந்தம் என்று எண்ணி நான் விற்க வந்தேன். இந்த வைரமாலையைப் பற்றிய சரித்திரம் எதுவும் எனக்குத் தெரியாது!”
புலிக்குட்டி எவ்வளவு அழுத்தமானவன் என்பதை இப்போது உணர்ந்துகொண்டார் உதவிப் போலீஸ் கமிஷனர்.
“இங்கே நின்று கொண்டு நீ கேலியாகவே பேசிக் கொண்டிருக்கிறாய்! உன்னைப் பேச வைக்க எத்தனையோ வழிகள் போலீஸ் இலாக்காவுக்குத் தெரியும்! உண்மையைச் சொல்லாதவர்களைப் பேச வைத்து, உண்மையை வரவழைப்பதில் நாங்கள் நிபுணர்கள். ஊமைகள் கூட எங்களிடம் வந்தால் வாய் திறந்து பேசத் தொடங்கி விடுவார்கள்!” என்று சொல்லி விட்டு. பக்கத்திலிருந்த போலீஸ் பொறுப்பாளர் ஒருவருக்குச் சாடை காட்டினார்.
மறுகணம் புலிக்குட்டியின் கையில் விலங்கு விழுந்தது. அவனுடைய இயற்கைக் கையையும் செயற்கைக் கையையும் இணைத்து விலங்கு போட்டார் அவர்!
நடிகை சித்ரா, புலிக்குட்டியை இரக்கத்துடன் பார்த்த படி நின்றாள். புலிக்குட்டியைக் கைது செய்த போலீஸ் படை அவனைத் தள்ளிக் கொண்டு வெளியே சென்றது!
அத்தியாயம்-25
ஒரு சில மாதங்கள் ஓடிவிட்டன. ஒரு நாள் இரவு, பதினோரு மணிக்குமேல் ஆகிவிட்டது. அப்போதும் உலகையாவின் பங்களாவில் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. உலகையாவும் தூங்கவில்லை. கிளிமொழியும் தூங்கவில்லை. அவர்கள் வளர்த்து வந்த கொடிய பூளை மின்மினியும் தூங்கவில்லை!
மாடியிலிருந்த ஓர் அறையில் உலகையாவும் கிளிமொழியும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். மின்மினி கிளிமொழியின் மடியின்மேல் உட்கார்ந்து கொண்டிருந்தது மின்மினியைத் தடவிக் கொடுத்தபடி கிளிமொழி கொன்னாள்: “என்ன இருந்தாலும் இந்த ஒற்றைக்கை மனிதனுக்கு இவ்வளவு துணிவும் மன அழுத்தமும் இருக்கும் என்று நான் நம்பவே இல்லை! தம்மை ஏமாற்றிவிட்டான்! பலகோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை எடுத்துச் சென்று எங்கேயோ ஒளித்து வைத்து விட்டான்! போலீஸாரிடமும் வைரமாலையைத் தவிர வேறு எதுவும் தன்னிடம் இல்லை என்று ஒரேயடியாக அடித்துக் கூறிவிட்டானே!”
உலகையா அமைதியுடன் சொன்னார்: “புலிக்குட்டி ஏமாந்தவன் அல்லன்! அதனால்தான் அவனைக் கண்டதும் எனக்குப் பிடித்துவிட்டது. மூளையற்றவன் அவன். நம்மை ஏமாற்றவே திட்டம்போட்டு இந்த வேலையை அவன் செய்திருக்கிறாள். போலீஸார் தங்களால் முடிந்தவரையில் எல்லா வழிகளையும் பயன் படுத்திப் பார்த்துவிட்டார்கள். நகங்களின் இடுக்கில் தீக்குச்சியைக் கொளுத்தி வைத்தார்கள். அப்போதும் அவன் பேசவில்லை. அடுத்தபடியாக ஜப்பானிய முறைப் படி இருட்டறையில் அவனைக் கட்டிப்போட்டு, தகர இடப்பா ஒன்றைத் தலைக்குமேல் கட்டித் தண்ணீர் நிரப்பி, அதை இப்படியும் அப்படியும் விடாமல் ஆடவிட்டார்கள். தகர இடப்பாவில் இருந்து ஒரு சிறிய துளையின் வழியாகத் தண்ணீர் சொட்டுச் சொட்டாகப் புலிக்குட்டியின் மீது விழும். முதலில் இது துன்பமாக இல்லாவிட்டாலும், நேரம் ஆக ஆக மிகவும் துன்பமாக இருக்கும். மண்டை வெடித்து விடுவதைப் போல் இருக்கும்! ஒற்றர்களிட மிருந்தும், போர்க் கைதிகளிடமிருந்தும் இரகசியங்களைத் தெரிந்து கொள்ள இரண்டாவது உலகப் போரில் இந்த முறையைக் கடைப்பிடித்தார்கள். ஒற்றர்களிடமிருந்தும், போர்க் கைதிகளிடமிருந்தும்கூட இரகசியங்களை வர வழைக்க அவர்களால் முடிந்தது. போலீஸாரால் புவிக்குட்டியிடமிருந்து நகைகளை மறைத்து வைத்திருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை!”
“பேசாதவர்களைப் பேசவைக்க உடலில் ஊசியால் மருந்து செலுத்துகிறார்களே. அந்த முறை பயன்பட வில்லையா?” என்றாள் கிளிமொழி.
“புலிக்குட்டியின் உடலில் மருந்து செலுத்தி. மயக்க முறச் செய்து பேச வைத்தார்கள். அவன் பேசிய பேச்சுக் களிவிருந்து அவன் மனத்தில் உள்ள இகரியம் வெளிப்படவே இல்லை! போலீஸார் தலைகீழாக நின்று முயற்சி செய்து பார்த்துவிட்டார்கள்!” என்று கொஞ்சம் மகிழ்ச்சியுடன் சொன்னார் உலகையா.
இது கிளிமொழிக்குச் சினத்தையும் வியப்பையும் அளித்தது. “புலிக்கட்டி பேசவில்லையே என்பது பற்றி நீங்கள் ஏன் மகிழ்ச்சி கொள்கிறீர்கள்!” என்றாள் அவள்.
“இது புரியவில்லையா உனக்கு? அவன் தன் மனத்தில் உள்ள எந்த இரகசியத்தையும் வெளியிடக் கூடாது என்று பல்லைக் கடித்துக்கொண்டு இருந்திருக்கிறான். அதனால்தான் அவன் உடலில் மருந்தைச் செலுத்தியும் உண்மை வாவில்லை! அவன் மனத்திலுள்ள உண்மைகளை வரவழைக்க முடிந்திருந்தால். இப்போது நீயும் நானும் இந்தப் பூனையும்கூடச் சிறையில் இருப்போம்! நம்முடைய உளவு பற்ரியும், உறவுகள் பற்றியும் நம்முடைய திட்டங்கள் பற்றியும் போலீஸார் தெரிந்து கொண்டிருப்பார்கள்!” என்றார் உலகையா!
“இப்போது புலிக்குட்டி தம்மையும் ஏமாற்றிவிட்டு, போலீஸாரையும் ஏமாற்றிவிட்டான்! உயிரே போனாலும் அவன் புதையல் இருக்கும் இடத்தை எவருக்கும் சொல்லப் போவதில்லை! புதையலைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் மின்மினியும் தோற்றுவிட்டது! அடுத்தபடியாக என்ன?” என்று கேட்டாள் கிளிமொழி.
“இனிமேல்தான் என்னுடைய திட்டத்துக்கு நான் உயிர் கொடுக்க வேண்டும்! புலிக்குட்டி இப்படி நம்மை ஏமாற்றுவான் என்று அன்றொரு நாள் நீ கடற்கரையில் இறுதியாகக் கண்டு பேசிவிட்டு வந்ததுமே நான் முடிவு செய்துவிட்டேன். இப்போதுதான் என் மூளைக்கு வேலை கிடைத்திருக்கிறது. புவிக்குட்டி தண்டனையை அனுப வித்துவிட்டுச் சிறையிலிருந்து வந்ததும் நகைகளைக் கிளப்பிச் சென்று விற்றுப் பணமாக்கிக் கொண்டு அமைதி யுடன் வாழலாம் என்று முடிவு செய்துவிட்டான். அவ னுக்குப் பதினைந்து ஆண்டுகள் சிறைவாழ்வு கிடைத் திருக்கிறது! அவன் சிறையில் ஒழுக்கத்துடன் நடந்து கொண்டால் ஒரு சில ஆண்டுகள் தண்டனையைச் குறைத்துவிடுவார்கள். என்னுடைய திட்டம் என்ன தெரியுமா?”
“புலிக்குட்டி சிறையிலிருந்து விடுதலையாளதும், இருக்கும் அவனைத் தொடர்ந்து சென்று புதையல் இடத்தைக் கண்டு பிடித்துப் புதையலைப் பிடுங்கிக் கொள்வதா?”
உலகையா சிரித்தார். “வர வர உனக்கு மூளை முன்னைப்போல் இயங்கவில்லை. புலிக்குட்டி சிறையீ லிருந்து விடுதலையாகும்போது, நாம் மட்டும் அவனைத் தொடர்ந்து செல்லமாட்டோம். நகைகளைப் பறிகொடுத்த மன்னர் சில ஆட்களை வைத்து நகைகளைக் கண்டுபிடிக்க முயற்சி செய்வார். போலீசார் புலிக்குட்டியின்மீது ஒரு கண் வைத்திருப்பார்கள்!” என்று சொல்லி நிறுத்தினார்.
“அப்படியானால் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்!” என்று கேட்டாள் கிளிமொழி.
“புலிக்குட்டி சிறையிலிருந்து தப்பி வெளியே வர ஏற்பாடு செய்யப் போகிறேன்!”
”என்ன! உண்மையாகவா?”
“ஏன் ஐயப்படுகிறாய்?”
“புலிக்குட்டி சி றைக்கு ஏன் போய்விட்டான் தெரியுமா? உங்களுடைய தொல்லையிலிருந்து விடுபடவே அவன் சிறைக்குப் போய்விட்டான்! தண்டனை முடித்து வந்ததும் சுற்றுப்புறம் வேறு மாதிரியாக இருக்கும். ஆகையால் பாதுகாப்பை விரும்பி இப்போது வெளியே வரமாட்டான். இப்போது தப்பி வந்தால், போலீஸார் ஒரு பக்கம் அவனை வேட்டையாடுவார்கள், நகைகளைப் பறிகொடுத்த மன்னர் ஒரு பக்கம் அவனை வேட்டை யாடுவார்! எனவே, சிறையில் இருப்பதுதான் அவனுக்குப் பாதுகாப்பு. வெளியே வந்தால் அவள் உயிருக்கு ஆபத்து!”
“நீ சொன்ன இறுதி வரியில்தாள் என் திட்டமே அடங்கி இருக்கிறது. புலிக்குட்டி வெளியில் தப்பி வந்ததும் புதையல் இருக்குமிடத்துக்குப் போவான். அப்போது புதையலை நாம் பறிக்க முயற்சி செய்ய வேண்டும். தப்பி வந்த கைதியைச் சுட்டுக் கொல்வதால் குற்றமில்லை!”
“நீங்கள் சொல்லுவது மிக வேடிக்கையாக இருக் கிறது. நீங்கள் என்ன உதவி செய்தாலும் சிறையிலிருந்து அவன் தப்பிவர விரும்பமாட்டான். ஆகையால் உங்கள் திட்டம் உருப்படாது•
*புலிக்குட்டி தப்பிவர விரும்ப மாட்டான் என்பதால், ஒரு சிறு மாறுதலைச் செய்திருக்கிறேன். அவனைச் சிறை யிலிருந்து தப்பவைத்துக் கொண்டு வரவேண்டும்!”
“அப்படியானால் அவனைக் கடத்தி, சிறைக்கு வெளியே அவன் விருப்பத்துக்கு மாறாகக் கொண்டுவர வேண்டும் என்கிறீர்களா?”
”ஆமாம்.”
“போலீஸாராலேயே அவனைப் பேச வைக்க முடியாதபோது உங்களால் மட்டும் அவனை எப்படிப் பேச வைக்க முடியும்? அவன் புதையல் இருக்கும் இடத்தைத் தேடிச் செல்லமாட்டான்!”
உலகையா கிளிமொழியை வேடிக்கையாகப் பார்த்தார். “ஏன் போகமாட்டான்? சிறையிலிருந்து வெளியே வந்ததும் மீண்டும் சிறைக்கே ஓடி விடுவானா? அப்படி அவன் ஓடினாலும், போலீஸார் அவளை நம்பாமல், மேலும் அவனுக்குத் தண்டனை அதிகமாகும் படி செய்துவிடுவார்கள். ஆகையால், புலிக்குட்டி கடத்தப் பட்டு வெளியே வந்தாலும், வெளியே வத்தபிறகு, தப்பி நகைகளுடன் வேறு எங்கேயாவது ஓடவே அவன் விரும்புவான்!”
“புதையல் இருக்கும் இடத்தை நோக்கி அவள் போகாமல் வேறு எங்கேயாவது ஓடி விட்டால்?”
“போலீஸாரால் பேச வைக்க முடியாத புலிக்குட்டியை என்னால் பேசவைக்க முடியும்! போலீஸாருக்குத் தெரியாத, போலீஸார் பயன்படுத்தாத சில வழிகளை நான் கடைப்பிடித்து உண்மையை அவனிடம் இருந்து வரவழைப்பேன்!”
இப்போதுதான் கிளிமொழிக்கு உலகையாவின் மீது நம்பிக்கை பிறந்தது. இதுவரையில் உலகையாவின் திட்டங்கள் எதுவும் வீணானது இல்லை. புலிக்குட்டியின் தொடர்பால் உலகையா பெரிதும் ஏமாத்துவிட்டார் என்றே எண்ணியிருந்தாள் கிளிமொழி. இப்போது அவர் தன்னுடைய திட்டத்தை விளக்கமாகச் சொள்ளதும் அவள் மனத்தில் மகிழ்ச்சி பரவியது!
“புலிக்குட்டியைத் தப்ப வைக்க எப்போது முயற்சி செய்யப் போகிறீர்கள்?” என்று கேட்டாள் கிளிமொழி.
“இன்னும் ஒரு வாரத்தில் புலிக்குட்டி சிறையிலிருந்து தப்பப் போகிறான் என்ற உண்மை எவருக்கும் தெரியாது! புலிக்குட்டிக்கே தெரியாது! புதையல் நயமிடம் கிடைத்து விட்டால், நம் மீது எவருக்கும் எப்போதும் ஐயம் வராது! அந்த நகைகள் பலகோடி ரூபாய்க்குப் போகும! அவற்றை தம்மால் எளிதில் விற்கவும் முடியும்!” என்றார் உலகையா,
பிறகு அவர் எழுந்துவந்து மின்மினியைப் பார்த்தார். அதைக் கைகளால் வாரிஎடுத்து முகத்துக்கு நேரே பிடித்து, ”என் திட்டத்தில் முதல் வேலை உனக்குத்தான்! விரைவில் நீ மத்திய சிறைச்சாலைக்குள் சென்று புலிக் குட்டியைக் கொஞ்சம் பார்தது விட்டு வா!” என்றார்.
அவர் சொன்னதைப் புரிந்து கொண்டதைப் போல் மின்மினி ‘மியாவ் மியாவ்’ என்று கத்தியது!
– தொடரும்…
– கல்கண்டு இதழ்.
– இரும்புக்கை மனிதன் (நாவல்), முதற் பதிப்பு: 1976. மணிமேகலைப் பிரசுரம், சென்னை.