இரும்புக்கை மனிதன்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: May 26, 2025
பார்வையிட்டோர்: 5,442 
 
 

(1976ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 11-15 | அத்தியாயம் 16-20 | அத்தியாயம் 21-25

அத்தியாயம்-16

இரவெல்லாம்விழித்துக் கொண்டிருந்ததால், மறுநாள் பகல் முழுவதும் புலிக்குட்டிக்குத் தூக்கம் வந்தது. அதனால் அவன் தூங்கினான். அயர்த்து தூங்கினான். அவன் தூக்கத்தைக் கெடுக்கும் வகையில் தொலைபேசியின் மணி ஓசை செய்தது. அவன் தூக்கம் மெல்லக் கலைந்தது. அரைத் தூக்கத்துடன் தலையைத் தூக்கி தலையருகில் இருந்த தொலைபேசியை எடுத்துப் பேசினான்.

கிளிமொழி பேசினாள், “இன்னுமா நீ தூங்கிக் நீ கொண்டிருக்கிறாய்? பம்பாயிலிருந்து வந்த களைப்பு இன்னும் உனக்குத் தீரவில்லையா? தூக்கத்தின் கலக்கம் உன் குரலில் தெரிகிறதே!”

“என்ன வேண்டும் கிளிமொழி உனக்கு?” என்றான் புலிக்குட்டி. 

“இனிமேலும் தூங்க நேரமில்லை. உடனே எழுந்து புறப்பட்டு மவுன்ட்ரோடுக்கு வா. உன்னிடம் நான் பேச வேண்டும். தொலைபேசியில் பேச முடியாதது அது!” 

“மவுண்ட்ரோடில் எங்கே வந்து உன்னை நான் பார்க்க வேண்டும்?” என்று கேட்டான் புலிக்குட்டி. 

“பசினான்கு மாடிக் கட்டடத்தின் பக்கக்தில் காரை நிறுக்கிவிட்டுக் காரிலேயே நீ இரு. நான் வந்து விடுகிறேன்.” 

”ஆகட்டும்” என்று சொல்லிவிட்டுப், படுக்கையிலிருந்து குதித்தான் புலிக்குட்டி. 

ஏதோ திட்டத்துடன் உலகையா கிளிமொழியை அனுப்புகிறார் என்பதை உணர்ந்து கொண்ட அவன், முடிந்தால் இந்தத் தடவையே தன் திட்டத்தை நிறைவேற்றி விடுவது என்று முடிவு கொண்டான். அவன் அரைமணி நேரத்தில் குளித்துவிட்டு, நல்ல உடைகளை அணிந்து கொண்டு புறப்பட்டான். 

பதினான்கு மாடிக் கட்டடத்கின் பக்கத்தில் அவன் காரை நிறுத்தியபோது, அவனுக்கு முன் கிளிமொழி அங்கே வந்து அவளுடைய காரிலேயே உட்கார்ந்திருந்தாள். அவனைக் கண்டதும் அவள் காரிலிருந்து இறங்கி வந்து, புலிக்குட்டியின் காருக்குப் பக்கத்தில் நின்றபடி பேசினாள்: 

“இந்தத் தடவை மிகப் பெரிய வேலையை என் தந்தை உன்னிடம் ஒப்படைத்திருக்கிறார்! இந்த வேலையில் ஒரு சிறு தவறுகூட நடக்கக் கூடாது! புரிகிறதா?” 

”புரிகிறது. மின்மினி எங்கே?” என்றான் புலிக்குட்டி. 

“மின்மினியைக் கொண்டு வரவில்லை. தேவைப்படும் போதுதான் மின்மினி வரும். இப்போது நான் சொல்லுவதைக் கவனமாகக் கேட்டுக்கொள். இதில் ஒரு தவறு கூடச் செய்யக் கூடாது. ஒரு சிறிய தவறு நடந்தாலும், அனைவரும் சிக்கிக் கொள்வோம். ஆபத்து மிகுந்த வேலை இது!” 

“விளக்கமாகச் சொல்லு.” 

கிளிமொழி அவனிடம் சொல்ல வேண்டியதை விளக்கமாகச் சொன்னாள். அவள் சொன்னதைக் கேட்டதும் அவனுக்கு மெல்ல உடல் நடுங்கியது! உடல் முழுவதும் வேர்த்தது! இப்படிப்பட்ட ஆபத்து மிகுந்த வேலையில் அவன் இவ்வளவு விரைவில் ஈடுபட வேண்டும் என்று கொஞ்சமும் எண்ணவே இல்லை. ஆனாலும் மறுக்க முடியாமல், ஆகட்டும் என்று ஒப்புக் கொண்டான். ஏனென்றால் எல்லாரையுமே ஏமாற்றித் தன் வாழ்க்கையில் மற்றொரு திருப்பத்தை உண்டாக்கிக் கொள்ள இந்த வாய்ப்பை நழுவவிடவும் அவனுக்கு மனமில்லை! 

உயிருக்குத் துணிந்து கடலில் இறங்கியவனைப் போல் அவன் செயலில் இறங்கினான்! 

அத்தியாயம்-17

அன்று மாலையே புலிக்குட்டியின் வீட்டுக்கு மின்மினி வந்து சேர்ந்தது. அது தன்னால் வந்ததா, அல்லது அதை எவராவது கொண்டுவந்து விட்டார்களா என்று தெரியவில்லை! அது மியாவ் மியாவ் என்று கத்திக்கொண்டு வந்ததும், புலிக்குட்டி அதை அப்படியே எடுத்து அணைத்துக் கொண்டான். 

“இதற்குள் நோமாகி விட்டதா? உன்னை யார் கொண்டு வந்து விட்டார்கள்?” என்று கேட்டபடி மின் மினியைத் தடவிக் கொடுத்தாள் புலிக்குட்டி. 

அது ‘மியாவ் மியாவ்’ என்று கத்தியபடி வெளியே ஓடிச் சென்று அவன் காரில் ஏறிக் கொண்டது. 

“இதோ வந்துவிட்டேன்! நேரமாகி விட்டதை உணர்த்தக் காரில் போய் உட்கார்ந்து விட்டாயா?” என்று சொல்லியபடி அவன் புறப்பட்டான். 

கொஞ்ச நேரத்தில் அவன் கார் புறப்பட்டது. காரில் புலிக்குட்டியையும் மின்மினியையும் தவிர வேறு எவரும் இல்லை. 

கார், அடையாறுக்குப் போகும் சாலையில் போய்க் கொண்டிருந்தபோது, நன்றாக இருள் சேர்ந்துவிட்டது. அவன் காரை ஒரு பக்கமாகச் சாலையில் நிறுத்தி விட்டு, விளக்குகளை அணைத்துவிட்டு, காரிலேயே உட்கார்ந்திருந்தான். 

புலிக்குட்டியின் காரில் இருந்த தொலைபேசியின் மணி அடித்தது. அவன் தொலைபேசியை எடுத்துப் பேசினான். 

கிளிமொழியின் குரல் வந்தது. “சாலையில் இப்போது ஒரு கார் வந்து கொண்டிருக்கிறது. அதே கார்தான். அது உன் காரைத் தாண்டிப் போகும்போது நான் சொன்னபடி நீ செய்ய வேண்டும்” என்றாள் கிளிமொழி. 

அவன் விழிப்புடன் உட்கார்ந்தான். மின்மினியைத் தூக்கி அவன் காரின் மேல் உட்கார வைத்துவிட்டு, அவன் காருக்குள்ளேயே உட்கார்ந்திருந்தான். 

கொஞ்ச நேரத்தில் எதிரே, சாலையில் பளிச்சென்று இரு விளக்குகள் தெரிந்தன. கிளிமொழி குறிப்பிட்டது அந்தக் காராகத்தான் இருக்க வேண்டும். புலிக்குட்டி அந்த விளக்குகளையே பார்த்தபடி உட்கார்ந்திருந்தான், 

அந்தக் காரின் விளக்குகள் நெருங்க நெருங்க அவனுக்கு அச்சம் மிகுந்தது! 

வந்தது பெரிய கார். புதிய பிளிமத் கார். சாலை முழுவதும் வெளிச்சத்தை அது அள்ளி வீசியபடி வத்தது. அது புலிக்குட்டியின் கார் இருந்த இடத்துக்குப் பக்கத்தில் வந்தபோது, புலிக்குட்டியின் காரின் மீது உட்கார்ந்திருந்த மின்மினி அந்தக் காருக்குள் தாவியது! அது காரோட்டியின் மீது பாய்ந்தது! அப்படியே அவன் குரல்வளையைப் பிடித்தது! அச்சத்திற்குரிய காட்சி! 

காரோட்டியால் கத்தக்கூட முடியவில்லை. அவன் பிடியிலிருந்து ஸ்டீயரிங் நழுவியது. கார், சாலையிலிருந்து விலகி, பக்கத்திலிருந்த பள்ளத்தில் விழுந்து அப்படியே உருண்டது! அச்சத்திற்குரிய காட்சி! 

புலிக்குட்டி ஓடினான். அவன் தன் கையிலிருந்த மின் பொறி விளக்கை அடித்துப் பார்த்தான். காரிலிருந்த காரோட்டியும், காரின் பின் சீட்டில் உட்கார்ந்திருந்த பருமனான மனிதர் ஒருவரும் அசைவற்றுக் கிடந்தார்கள். அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்பது கூடத் தெரியவில்லை! அச்சத்திற்குரிய காட்சி! 

புலிக்குட்டி மின்பொறி விளக்கை அடித்தபோது, காரில் பின்னால் இருந்த மனிதரின் சட்டையிலும், கைகளிலும் இருந்த வைரக் கற்கள் பளிச்சிட்டன! 

புலிக்குட்டி காரின் பின்னாலிருந்த டிக்கைத் திறந்தான், அதில் பெரிய பெட்டி ஒன்று இருந்தது. அதை அவன் தூக்க முடியாமல் தூக்கி வந்து தன்னுடைய காரில் வைத்தான். பிறகு பூனை என்ன ஆயிற்று என்று மின்பொறி விளக்கை அடித்துப் பார்த்தான். பூனை- 

கார் விழுந்துகிடந்த இடத்தில் பூனையைக் காண வில்லை! அவன் அதைத் தேடிவிட்டுத் தன் காருக்கு வந்த போது, அது அவன் காரில் உட்கார்ந்திருந்தது! அதன் உடலில் இரத்தம் படிந்திருந்தது! அச்சத்திற்குரிய காட்சி| 

புலிக்குட்டி காரை விரைவாகச் செலுத்தினான்! 

அத்தியாயம்-18

கார் விரைந்து சென்றபோது, அவன் காரில் இருந்த தொலைபேசி அலறியது. அவன் காரை நிறுத்திவிட்டுத் தொலைபேசியை எடுத்துப் பேசினான். 

இப்போது அவனுடன் பேசியவர் உலகையா. “புலிக்குட்டி, எல்லாம் வெற்றிகரமாக முடிந்ததா?” என்றார் அவர். 

“முடிந்தது.” 

“பெட்டியை நீயே வைத்திரு. இப்போது அதை என்னிடம் கொண்டு வரவேண்டாம். புரிகிறதா?” 

“புரிகிறது. மீண்டும் எப்போது உங்களைக் காண வரவேண்டும்?” என்று கேட்டான் புலிக்குட்டி. 

“இரண்டு மூன்று நாட்களுக்கு அமைதியுடன் வீட்டிலேயே இரு. நானாக உன்னுடன் மீண்டும் தொடர்பு கொள்கிறேன். அல்லது கிளிமொழி உன்னுடன் தொடர்பு கொள்வாள்.” 

“ஆகட்டும்” என்றான் புலிக்குட்டி, 

“பூனையை மட்டும் அனுப்பிவிடு பூனைக்கு ஒன்றும் ஆபத்து இல்லையே!” 

“இல்லை என்றுதான் நினைக்கிறேன். அதன் உடலில் இரத்தம் படிந்திருக்கிறது!” 

“அதன் உடலில் அடிபட்டிருக்கிறதா என்று பார். அடிபட்டிருந்தால் அதை அனுப்பாதே. அதற்கு முதல் சிகிச்சை கொடுத்து நீயே வைத்திரு. கிளிமொழி வந்து அதைக் கொண்டு வருவாள்”. 

“ஆகட்டும்” என்றான் புலிக்குட்டி. 

உலகையா தொலைபேசியை டக்கென்று வைக்கும் ஓசை கேட்டவுடன் புலிக்குட்டியும் தொலைபேசியை வைத்தான். 

புலிக்குட்டி இருப்பிடத்தை அடைந்ததும், பெட்டியை எடுத்துக் கொண்டு போய் உள்ளே வைக்கப் பெட்டியை எடுத்தான். பிறகு, ஏதோ தன் மனத்தை மாற்றிக் கொண்டவனைப்போல், பெட்டியைக் காரிலேயே வைத்து விட்டு, மின்மினியை உள்ளே தூக்கிச் சென்றான். 

அந்தப் பொல்லாத பூனையை விளக்கு வெளிச்சத்தில் சோதித்துப் பார்த்தான். அதன் உடலில் ஒரு கீறல்கூட இல்லை! மனித இரத்தம்தான் உடலில் படிந்திருந்தது என்பதை உணர்ந்துகொண்டு, பூனையைக் குளிப்பாட்டினான். பிறகு அதை உலகையாவின் பங்களாவுக்குப் போகும்படி சொல்லி வெளியே அனுப்பிவிட்டான்! 

மின்மினி மறைந்ததும், அவன் தன் திட்டத்தைச் செயலாற்ற எண்ணினான். இப்போது கிடைத்திருப்பதை விட ஓர் அரிய வாய்ப்பு மறுபடியும் தனக்குக் கிடைப்பது அரிது என்பதை உணர்ந்துகொண்ட அவன், அந்தப் பெட்டியை அப்படியே எங்கேயாவது ஒளித்துவைக்க முடிவு கட்டினான். எங்கே அதை ஒளித்து வைப்பது என்று நீண்ட நேரம் சிந்தனை செய்து ஒரு முடிவுக்கு வந்தான். அவன் காரில் செல்லும் இடமெல்லாம் உலகையாவுக்குத் தெரிவது அவனுக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை ஆகையால், அவன் தன் காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரும்புத் துண்டைக் கண்டுபிடித்து எடுத்து, அதை வீட்டில் வைத்துவிட்டான். கார் இப்போது எங்கெல்லாம் செல்லுகிறது என்பது உலகையாவுக்குத் தெரியாது| கார், வீட்டின் பக்கத்திலேயே நின்றிருப்பதைப் போல் உலகையாவுக்குத் தெரிந்து கொண்டிருக்கும்! 

அவள் காரை விரைவாசுச் செலுத்தினான். பெட்டியைக் கொண்டு வர வேண்டாம் என்று உலகையா சொன்னதிலிருந்து, எந்த நிமிடமும் போலீசார் அவனைத் தேடி வரக்கூடும் என்ற ஐயம் வந்துவிட்டது! இல்லா விட்டால் உலகையாவே ஏன் இப்படி அஞ்ச வேண்டும்? மீண்டும் அவர் தொடர்பு கொள்ளும் வரையில் அவனிடமே பெட்டி இருக்கட்டும் என்று அவர் எதற்காகச் சொல்ல வேண்டும்? 

அவன் காரை நீண்ட தொலைவு செலுத்தினான். பிறகு ஓர் இடத்தில் காரை நிறுத்தி விட்டுப் பெட்டியை எடுத்துத் திறந்து பார்த்தான். அவ்வளவு விலை உயர்ந்த நகைளை அவன் இதுவரையில் எங்கேயும் பார்த்ததில்லை. பழைய காலந்து மன்னர்களின் அரண்மனைகளில் நிறைந்த காவலுக்கு இடையில் வைத்திருக்கும் நகைகளைப் போல் இருந்தன அவை. அதில் இருந்தவை பல கோடி ரூபாய் பெறும்! அதற்குரிய மதிப்பைச் சொல்லிட நிபுணர்களால் மட்டும் தான் முடியும்! 

என்ன நடந்தாலும் சரி. இவற்றில் எல்லாவற்றையும் அப்படியே தனக்கு வைத்துக் கொள்வது. இத்துடன் இந்தத் திருட்டுத் தொழிலுக்கும் உலகையாவின் தொடர்புக்கும் ஒரு முழுக்குப் போட்டுவிடுவது என்று முடிவு செய்து பெட்டியை மூடினான். அப்படி மூடுவதற்கு முன் அதில் இருந்த ஒரு சிறிய வைரமாலையை மட்டும் எடுத்து வைத்துக் கொண்டான்! 

கார் மீண்டும் புறப்பட்டது. அவன் மனம் எதிர்காலத்தைப்பற்றியே எண்ணிக் கொண்டிருந்தது. ‘என்ன நடந்தாலும் சரி. இந்த நகைகளை ஒளித்து வைக்கும் இடத்தை எவருக்கும் சொல்லவே கூடாது. போலீசார் பிடித்துச் சிறையில் போட்டாலும் சரி, உலகையா தன்னை எவ்வளவு அச்சுறுத்தினாலும் சரி, கிளிமொழி எவ்வளவுதான் கொஞ்சிக் கேட்டாலும் சரி. இந்த நகைகள் இருக்கு மிடத்தைச் சொல்லவே கூடாது’. 

இப்படித் திண்ணமாக முடிவு செய்துகொண்ட அவன், எங்கேயோ போய்ப் பெட்டியைப் பாதுகாப்புடன் ஒளித்து வைத்து விட்டுத் திரும்பினான். 

அவன் திரும்பி வந்தபோது. காரில் இஞ்சின் சூடாகிப் போய்ப் புகை வந்தது. இஞ்சினைக் குளிர வைக்க ரேடியேட்டரில் போதிய தண்ணீர் இல்லை! எல்லாம் வற்றிவிட்டது! வழியில் எங்கேயும் தண்ணீர் கண்ணில் படவில்லை. ஆனாலும் அவன் காரை மெல்ல ஓட்டி வந்தான். அது டக் டக்கென்று இடிப்பதைப்போல் நகர்ந்தது! துள்ளிக் குதித்து ஓடியது! 

இறுதியில் அவன் ஒரு வழியாகக் காரைக் கொண்டு வந்து வீட்டுமுன் நிறுத்தியபோது, பக்கத்தில் கொஞ்சத் தொலைவில் இரண்டு போலீஸ் ஜீப்புகள் நிற்பதைக் கண்டான். அதிலிருந்து இரண்டு போலீஸ் அதிகாரிகள் இறங்கி அவனை நோக்கி விரைந்து வந்தார்கள்! 

அத்தியாயம்-19

இவ்வளவு விரைவில் போலீஸ் அதிகாரிகள் தன்னைத் தேடிவருவார்கள் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. 

போலீஸ் அதிகாரிகள் இருவரும் அவன் முன் வந்து நின்றார்கள். அவனை உற்றுப் பார்த்தார்கள். அவர்களில் ஒருவர் உதவிப் போலீஸ் கமிஷனர். மற்றொருவர் இன்ஸ்பெக்டர். 

புலிக்குட்டி, கொஞ்சம் வியப்புடன் பார்த்தான். அவன் பார்த்த பார்வையிலிருந்து, ”என்ன வேண்டும்?” என்று அவன் கேட்பதைப்போல் இருந்தது. 

உதவிப் போலீஸ் கமிஷனர் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டு, இன்ஸ்பெக்டரையும் அறிமுகம் செய்துவைத்தார். பிறகு, “உன்னிடம் கொஞ்சம் நாள் பேச வேண்டும்” என்றார். 

புலிக்குட்டி சிரித்துக்கொண்டே, ”உள்ளே வாருங்கள். பேசுவோம்” என்று அவர்களை அழைத்தான். 

இரண்டு அதிகாரிகளும் அவனைத் தொடர்ந்து உள்ளே வந்தார்கள். ஒரு கையை இழந்துவிட்டு இரும்புக் கையை வைத்திருந்த புலிக்குட்டி, அந்த வீட்டை அவ்வளவு அழகுடன் வைத்திருப்பான் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை! 

இருவரும் உட்கார்ந்தார்கள். அவர்களுக்கு எதிரில் புலிக்குட்டி உட்கார்ந்து, “என்ன சாப்பிடுகிறீர்கள்? ஏதாவது நீங்கள் சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும்” என்றான். 

”ஒன்றும் வேண்டா. நாங்கள் கடமையாற்ற வந்திருக்கும்போது மற்றவர்கள் எதைச் சாப்பிடச் சொன்னாலும் தொடுவதில்லை” என்றார் உதவிப் போலீஸ் கமிஷனர். 

”வேலையாகவா வந்திருக்கிறீர்கள்?” என்று வியப்புடன் கேட்டான் புலிக்குட்டி 

”ஆமாம்” என்றார் உதவிப் போலீஸ் கமிஷனர். பிறகு அவர் அவனை உற்றுப் பார்த்துக் கேட்டார்; “அண்மையில் நீ பம்பாய் போய் வந்தாய் அல்லவா?” 

”ஆமாம்” என்றான் புலிக்குட்டி அமைதியுடன். 

உதவிப் போலீஸ் கமிஷனர் அடுத்த கேள்வியைக் கேட்டார்; “உன்னுடன் ஒரு பூனையைக் கொண்டு சென்றாய் அல்லவா?” 

”ஆமாம்.” 

“அந்தப் பூனை எங்கே?” 

”அதை விற்றுவிட்டேன். நான் அந்தப் பூனையை விற்பதாக இல்லை. விமானத்தில் வந்த ஒரு பெண் அந்தப் பூனையை விடாப்பிடியாக விலை கொடுத்து வாங்கிக் கொண்டுவிட்டாள்.” 

*மீண்டும் அந்தப் பூனையைப் பார்க்கவே இல்லையா?” 

”இல்லையே, ஏன்?” 

“பூனை மறைந்து விட்டது. பூனையுடன் அந்தப் பங்களாவிலிருந்த விலை உயர்ந்த முத்துமாலை ஒன்று மறைந்துவிட்டது! முல்லைக்கோட்டை ராணிக்கு இரட்டை இழப்பு!” 

இதைக் கேட்டதும் முல்லைக்கோட்டை ராணிக்காக இரக்கம் கொள்பவனைப் போல் அவன் முகத்தை வைத்துக் கொண்டு சொன்னான்: “கொஞ்ச நாள்கள் பழக்கமாகும் வரையில் அந்தப் பூனையைக் கட்டிப்போட வேண்டும் அல்லது கூண்டில் அடைத்து வைக்க வேண்டும். புதியது தானே என்று எங்கேயாவது இது ஓடியிருக்கும். முத்து மாலையை எவனாவது திருடியிருப்பான்! இரண்டாவது தற்செயலாக நடந்த நிகழ்ச்சிகளாக இருக்கும்! பூனைக்கும் முத்துமாலைக்கும் என்ன தொடர்பு இருக்கப் போகிறது?” 

இதுவரை அமைதியுடன் இருந்த இன்ஸ்பெக்டர் சொன்னார்: ”உன்னிடம் யோசனை கேட்க நாங்கள் வர வில்லை! ஐயா கேட்ட கேள்விக்கு ஒன்று பதில் சொல்லு. முல்லைக்கோட்டை ராணியின் பங்களாவில் வந்து மறைந்த பூனை உன்னிடம் மீண்டும் வந்ததா? இல்லையா?”

“பூனை என்னிடம் வரவே இல்லை! அது அப்படியே வந்தாலும் விற்றுவிட்ட பூனையை நான் வைத்திருப்பேனா! மீண்டும் முல்லைக்கோட்டை ராணியிடமே ஒப்படைத்துவிட மாட்டேனா?” என்றான் புலிக்குட்டி. 

“இருந்தாலும் எங்களுக்கு ஓர் ஐயம்! பூனை மீண்டும் உள்ளிடமே வந்து விட்டிருக்குமோ என்று! ஆகையால் வீடு முழுவதும் நாங்கள் தேடிப் பார்த்து விடுகிறோம். உளக்கு இதில் தடை ஒன்றும் இல்லையே!” 

“எனக்கு ஒன்றும் தடையில்லை. தேடிப் பாருங்கள், அப்படியே முத்துமாலை இருக்கிறதா என்று வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளுங்கள்!” என்றான் புலிக்குட்டி. 

உதவிப் போலீஸ் கமிஷனர் இன்ஸ்பெக்டரைப் பார்த்துச் சாடை காட்டினார். இன்ஸ்பெக்டர் எழுந்து சென்று வீடு முழுவதும் தேடினாரி. மேசை அறைகள், நிலைப் பேழைகள், கூரை, தோட்டம், புறக்கடை எல்லா இடங்களிலும் அவர் பூனையையும் முத்துமாலையையும் தேடினார். 

இரண்டும் இல்லை! 

இந்த நேரத்தில் அந்தப் பொல்லாத மின்மினி திரும்பி அவனைத் தேடி வந்தால என்ன ஆகும் என்று அஞ்சியபடி உதவிப் போலீஸ் கமிஷனரிடம் பேசிசு கொண்டிருந்தான். ஆனால் அவள் அச்சம அவன் முகத்தில் கொஞ்சமகூட வெளிப்படவில்லை! 

வீடு முழுவதும் சல்லடைபோட்டு அரித்த இன்ஸ்பெக்டர், சன்னல பக்கமாக வந்து வெளியில் பார்த்தார். ஜீப்பின் பக்கத்தில் இரண்டு கான்ஸ்டபிள்கள் இருந்தார்கள். அவர்களைப் பார்த்து ஏதோ சாடை காட்டினார். அந்த இரு கான்ஸ்டபிள்களும் உடனே விரைந்து, புலிக்குட்டியின் காரைச் சோதனை போட்டார்கள். கார் முழுவதும் அவர்கள் தேடிப்பார்த்தார்கள். 

ஒன்றும் கிடைக்கவில்லை! 

இன்ஸ்பெக்டர், மீண்டும் சன்னல் பக்கமாகப் பார்த்த, போது, கான்ஸ்டபிள்கள ஒன்றும் கிடைக்கவில்லை என்று சாடை காட்டினார்கள். இன்ஸ்பெக்டர் உதவிப் போலீஸ் கமிஷனரிடம் தம் கைகளை விரித்துக் காட்டி முடிவைத் தெரிவித்தார். 

உதவிப் போலீஸ் கமிஷனர் உடனே, “உன் மீது இருந்த ஐயம் போய்விட்டது! எதற்கும் தேடிப் பார்த்தது நல்லதாகிவிட்டது! எங்கள் கடமையை நாங்கள் செய்தோம்” என்று புலிக்குட்டியிடம் கூறிவிட்டு புறப்பட்டார்! 

புலிக்குட்டி கதவுவரை வந்து அவர்களை வழியனுப்பினான். 

அவர்கள் மறைந்ததும், அவன் கொஞ்சமும் விரைவு கொள்ளவில்லை. உடனே அவன் உலகையாவுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ளவில்லை. அவள் கொஞ்சம் முன்பு விலை மதிக்க முடியாக நகைகளைப் புதைத்து வைத்துவிட்டு வந்த போது கையுடன் கொண்டு வந்த வைரமாலை பாதுகாப்புடன் இருக்கிறதா என்று பார்க்கவில்லை! ஒன்றுமே நடக்காததைப் போல் அவன் நாற்காலி ஒன்றில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு, சிகரெட் ஒன்றை இரும்புக் கையால் எடுத்துப் பற்ற வைத்தான். போலீசார் வந்து போனதும் விரைந்து அவன் ஏதாவது செய்தால் உடனே அது தெரிந்துவிடும். போலீசார் எப்போதும் குற்றவாளிகளை மறைந்து நின்று கவனிப்பது வழக்கம் என்று அவனுக்கு மிகத் தெளிவாகத் தெரியும்! 

அவன் மனம் சிந்தனையுள் ஈடுபட்டது. 

‘கார் விபத்து நடந்ததைப் பற்றித்தான் போலீஸ் அதிகாரிகள் கேட்க வருகிறார்கள் என்று அஞ்சிக் கொண்டிருந்தோம்! நல்லவேளை! அவர்களுக்குக் கார் விபத்தைப் பற்றியே ஒன்றும். இன்னும் தெரியாதா?’ என்று எண்ணியது அவன் மனம்! 

நீண்ட நேரத்துக்குப் பின், இனிமேலும் போலீசார் பொறுமையுடன் மறைந்திருந்து அவனைக் கவனிக்க வாய்ப்பு இல்லை என்று ஊகம் செய்துகொண்டு அவன் மெல்ல எழுந்து சென்றான். கார் போகும் இடமெல்லாம் இனி உலகையாவுக்குத் தெரிவிக்க வேண்டும். இல்லா விட்டால் அவருக்கு ஐயம் ஏற்படும் என்று காரிலிருந்து அவன் எடுத்துவிட்ட இரும்புத்துண்டை, கார் போகும் இடத்தை அறிவிக்கும் அந்தச் சிறிய இயந்திரத்தை மீண்டும் பொருத்திவிட்டாள். பிறகு, பானட்டைத் திறந்து. இஞ்சினுக்குள் இயங்காமல் கிடந்த ஒரு பாகத்தைக் கழற்றி, அதன் உள்ளே அவன் சட்டைப் பையிலிருந்த நெக்லஸை மறைத்து வைத்து மீண்டும் முடுக்கிவிட்டான்! 

வீடு முழுவதும் சோதனை போட்ட போலீஸ் அதிகாரிகள் அவன் சட்டைப் பைகளைச் சோதனை போடாமல்விட்டது, எவ்வளவு பெரிய வாய்ப்பு என்று எண்ணியது அவன் மனம்! 

அத்தியாயம்-20

மறுநாள். காலை பத்திரிகையை எடுத்துப் பார்த்தான் புலிக்குட்டி. கார் விபத்தைப் பற்றி என்ன செய்தி வந்திருக்கிறது என்று தேடிப் பார்த்தன அவன் கண்கள். முன் பக்கத்திலே அச்செய்தி வந்திருந்தது. 

அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், பலகோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளைக் காரில் எடுத்துக் கொண்டு வரும் போது, காரோட்டியின் மீது மிகப் பழக்கப்பட்ட பூனை ஒன்று பாய்ந்து அவன் குரல்வளையைப் பிடித்து கௌவிய தாகவும், இதனால் கார் சாலையிலிருந்து விலகி உருண்டு விட்டதாகவும், கார் விழுந்ததும் பூனை ஓடிவிட்டதாகவும், காரில் இருந்த நகைப்பெட்டி மறைந்து விட்டதாகவும் செய்தி வந்திருந்தது. காரோட்டியும் அரச குடும்பத்தைச் சேர்ந்தவரும் மருத்துவ விடுதியில் இருப்பதாகவும், இருவரும் இனிப் பிழைத்துக் கொள்வார்கள் என்றும் செய்தி வந்திருந்தது. அவர்கள் இருவரும் பிழைத்துக் கொள்வார்கள் என்பதை அறிந்ததுமே புலிக்குட்டிக்கு அச்சத்தால் தொண்டை குப்பென்று அடைப்பதைப்போல் இருந்தது!

பொதுவாகக் கார் பந்தயங்களில் ஈடுபடுகிறவர்கள் விரைந்து செல்லும் போது, கார் விபத்துக்குள்ளாகி உருண்டு விழுந்தாலும், அதில் உள்ள காரோட்டிகள் கொஞ்சமும் அடிபடாமல் எழுந்து கால் சட்டையிலுள்ள மண்ணைத் தட்டிவிட்டுக் கொண்டு போய்விடுவார்கள். அப்படியல்லவா இந்த இரண்டு பேர்களும் வியக்கக் தக்க வகையில் உயிர் பிழைத்துவிட்டார்கள் என்று எண்ணியது புலிக்குட்டியின் மனம்! 

செய்தி முழுவதையும் அவன் படித்தபோது, மேலும் அவனுக்கு அச்சம் மிகுந்தது. சாலை ஓரமாகக் கார் ஒன்று நின்றிருந்ததாகவும். பூனையும் நகைப் பெட்டியைக் கிளப்பிச் சென்றவனும் அந்தக் காரில்தான் போயிக்க வேண்டும் என்று விபத்துக்குள்ளானவர்கள் கூறியதாகவும் தகவல் வெளியிடப்பட்டிருந்தது. ஏற்கனவே பூனையும் முத்துமாலையும் மறைந்துவிட்ட வழக்கு தொடர்பக்கப் போலீசார் புலிக்குட்டியின் மீது ஐயப்பட்டு வந்து வீடு மூழுவதும் தேடிவிட்டுப் போன பிறகு, இப்படிபட்ட செய்தியைப் படித்ததும், போலீசார் எப்போதும் தன்னைத் தொடர்ந்து கவனிப்பார்கள் என்று முடிவு செய்தான். ஆகையால் அவன் மிகுதியாக எங்கும் வெளியில் போகவில்லை. உலகையாவுடன் தொடர்பு கொள்ளவில்லை. எப்படி இந்தச் சிக்கலிலிருந்து தப்புவது என்று ஆழமாக அவன் சிந்தித்துக் கொண்டிருந்தான். 

உலகத்தின் மிகப் பெரிய குற்றவாளிகளைப் பற்றியும், அவர்கள் எப்படிப்பட்ட தவறுகளால் சிக்கிக் கொண்டார் கள் என்றும் படித்துக் தெரிந்து கொண்டான். உலகத்தில் நடந்த மிகப் பெரிய கொள்ளைகளைப் பற்றிப் படித்தான். பெரும்பாலும் குற்றவாளிகள் பெண்களுடன் நட்புக் கொண்டதாகவும் பெண்களை நம்பியதாலும் தாம் போலீசாரிடம் சிக்கிவிட்டார்கள் என்பதை உணர்ந்து கொண்ட அவன், பெண்களின் நட்புக் தனக்குத் தேவையில்லை என்று முடிவு செய்தான். இதுவரையில் கிளிமொழியைத் தவிர வேறு எந்தப் பெண்ணையும் அவனுக்குத் தெரியாது. கிளிமொழியினால் அவனுக்கு ஆபத்து வர வாய்ப்பு இல்லை. இருந்தாலும் அவளுடன்கூடத் தொடர்பு கொள்ளக்கூடாது என்றே அவன் எண்ணினான். 

எல்லாவற்றிற்கும் திட்டம் போட்டிருந்த அவள், போலீசாரிடம் ஒரு வேளை சிக்கிக் கொண்டால் என்ன செய்வது என்று சிந்தித்தான். அவன் போலீசாரிடம் சிக்குவதாக இருந்தால் இதற்குள் சிக்கியிருக்க வேண்டும். கார் விபத்துக்குள்ளானவர்கள் அவனைப் பற்றிச் சரியான விவரங்களைத் தர முடியவில்லை. ஆகையால், போலீசாரிடம் சிக்குவது இல்லை என்று தெளிவாக முடிவு செய்தான். அவன் திறமையில் அவனுக்கு நம்பிக்கை இருந்தது. அவன் முடிவில் உறுதி இருந்தது! 

நாள்கள் மெல்ல ஓடிள. அவன் வெளியே போக விருப்பாததாலும் எவரையும் கண்டு பேச முடியாததாலும், பொழுது போவது கடினமாக இருந்தது. 

ஒரு நாள் மாலை தொலைபேசியின் மணி அடித்தது. தொலைபேசியின் மணிகூட இத்தனை நாள்கள் அடிக்க வில்லை. உலகையாவைத் தவிர, கிளிமொழியைத் தவிர வேறு யார் அவனுடன் தொலைபேசியில் பேசப் போகிறர்கள? இந்த இருவரில் ஒருவர்தான் தன்னை அழைக்கிறார்கள் என்று புரிந்துகொண்ட அவன் தொலைபேசியை எடுத்தான். குரல் கொடுத்தான். 

“புலிக்குட்டி, ஊரில் இருக்கிறாயா?” என்றாள் கிளிமொழி. 

“நான்கு சுவர்களுக்குள் அடைந்து கைதியைப்போல் கிடக்கிறேன்! நான் எங்கே போய்விட்டேன் என்று எண்ணுகிறாய்?” என்றான் புலிக்குட்டி. 

“அப்படியானால் தொலைபேசி வேலை செய்யவில்லை போலிருக்கிறது! போகட்டும். இன்று நான் உன்னைக் காண வேண்டும்.” 

”எங்கே காண வேண்டும்?” 

“கடற்கரையில் காணுகிறேன். காரைவிட்டு இறங்கி நேராகக் கடலின் அருகில் அலைகள் வந்து கால்களில் மோதும் இடத்தில் நீ நில். எந்த இடம் என்பது உனக்குத் தெரியுமே!” 

”தெரியும். புலிக்குட்டி. எத்தளை மணிக்கு?” என்றான் புலிக்குட்டி.

“ஏழு மணிக்கு. அப்போதுதான் இருள் வரும்” என்று சொல்லிவிட்டுத் தொலைபேசியை வைத்துவிட்டாள் கிளிமொழி. 

புலிக்குட்டி, மிகச் சரியாக எழு மணிக்குக் கடற்கரை யில் கப்பல் ஒன்று பாதி மூழ்கிக் கிடந்த இடத்துக்குச் சற்றுத் தள்ளி மணலில் நின்று காலில் வந்து மோதிய அலைகளைப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தான். அப்போது மிகச் சரியான நேரத்துக்கு கிளிமொழி வந்தாள். அவள், அவன் பக்கத்தில் வந்துநின்று கொண்டு, “நம்மை எவரும் பார்க்கவில்லை. நம்மை எவரும் தொடர்ந்து வரவில்லை. என்றாலும் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். கடலைப் பார்த்தபடியே நாம் பேசுவோம்” என்றாள். 

“மனத்தில் உள்ளதை விரைவாகச் சொல்லு” என்றான் புலிக்குட்டி. 

“இவ்வளவு பெரிய நகைத் திருட்டு இதுவரையில் இந்தியாவிலேயே நடந்தது இல்லை என்று அப்பா சொன்னார்.” 

“மிக்க மகிழ்ச்சி.” 

அவர்கள் இருவரும் பேசிக்கொண்டது அவர்களுக்கு மட்டுமே கேட்டது. அலை ஓசை கொஞ்சம் ஆற்றலுடன் இருந்தது அவர்களுக்கு வாய்ப்பாக இருந்தது! 

கிளிமொழி அடுத்தபடியாகச் சொன்னாள்: “போலீசாருக்கு எந்த வித உண்மையும். எந்த வித அடையாளமும் கிடைக்கவில்லை! அதனால் அவர்கள் ஒன்றும் புரியாமல் இருக்கிறார்கள்! அதே நேரத்தில், அவர்கள் ஒன்றும் செய்யாமல் பேசாமல் இருப்பது நமக்கு அச்சத்தையும் ஐயத்தையும் உண்டாக்குகிறது!” 

புலிக்குட்டி ஒன்றும் பேசவில்லை. கிளிமொழி தொடர்ந்தாள்: 

“ஆகையால் இன்னும் சில மாதங்களுக்கு நாம் தொடர்பு கொள்ளாமல் இருப்பது நல்லது. நகைப் பெட்டியை நீ எங்கே மறைத்து வைத்திருக்கிறாய் என்பதை மட்டும் அப்பா கேட்டுக் கொண்டு வரும்படிச் சொன்னார்.” 

“அது பாதுகாப்பான இடத்தில் இருக்கிறது. அதைப் பற்றித் துன்பம் கொள்ள வேண்டாம். இப்போது அது இருக்கும் இடத்தைச் சொல்வது ஆபத்து! நேரம் வரும் போது சொல்கிறேன்'” என்று சொல்லிவிட்டுப் புலிக்குட்டி விரைந்து சென்றுவிட்டான். 

புலிக்குட்டியின் இந்தச் செயலும் இந்த பதிலும் கிளிமொழிக்குத் தாக்குதலைத் தந்தன! 

புலிக்குட்டி உலகையாவையும் தன்னையும் ஏமாற்றப் பார்க்கிறான் என்ற முடிவுக்கு வந்துவிட்ட அவள், உடனே தன் தந்தையிடம் உண்மையைச் சொல்லிப் புலிக்குட்டியை வழிக்குக் கொண்டு வர விரைந்து சென்றாள்! 

– தொடரும்…

– கல்கண்டு இதழ்.

– இரும்புக்கை மனிதன் (நாவல்), முதற் பதிப்பு: 1976. மணிமேகலைப் பிரசுரம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *