இரும்புக்கை மனிதன்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: May 24, 2025
பார்வையிட்டோர்: 4,373 
 
 

(1976ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 6-10 | அத்தியாயம் 11-15 | அத்தியாயம் 16-20

அத்தியாயம்-11

“என்ன அப்படிப் பார்க்கிறீர்கள்? இந்த நகைகள் எதுவும் உங்களுக்குப் பிடிக்கவில்லையா?” என்று கேட்டான் புலிக்குட்டி ஷோபாவிடம். 

”இந்த நகைகள் ஏறக்குறைய என்னிடம் உள்ள நகைகளைப் போலவே உள்ளன. கொஞ்சம் கூர்ந்து பார்த்தால், எல்லாமே என்னிடம் உள்ள நகைகளைப்போல் இருக்கின்றன!” என்றாள் ஷோபா! 

“என்னால் நம்ப முடியவில்லை! இவை எப்படி எல்லாமே உங்களிடம் உள்ளதைப் போல் இருக்கும்? ஒன்று கூட வேறு மாதிரியாக இல்லையா?” என்றான் புலிக்குட்டி. 

“இல்லை. அதனால்நான் எங்களுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஐயமாகவும் இருக்கிறது” என்றாள் பாட்டி 

”ஐயமா? என்ன ஐயம்?” என்றான் புலிக்குட்டி. 

“இவை எல்லாம் எங்கள் இரும்புப் பெட்டியிலிருந்த நகைகளோ என்று எனக்கு ஐயமாக இருக்கிறது!” என்றாள் பாட்டி!

இதைக் கேட்டுப் புலிக்குட்டி சிரித்தான். “அப்படிப் பட்ட ஐயமே உங்களுக்கு வேண்டாம்! நீங்கள் இப்போதே போய் உங்கள் இரும்புப் பெட்டியைத் திறந்து பாருங்கள். உங்கள் நகைகள் பாதுகாப்பாக இருக்கின்றன என்று நீங்கள் சொன்ன பிறகு நான் இங்கிருந்து போகிறேன்” என்றான் புலிக்குட்டி! 

பாட்டிக்கு இரும்புப் பெட்டியைத் திறந்து பார்க்க வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. தன்னிடம் உள்ள நகைகளைப் போலவே இவன் நகைகளைக் காட்டியதால். ஒரு வேளை இது கண்கட்டி வித்தையோ என்று கூட அவளுக்கு ஐயம் எழுந்தது! அதன் விளைவாக அவளுக்கு அச்சமும் பிறந்தது! 

ஷோபாவுக்கு அவனை எப்படியாவது அனுப்பி விட்டால் போதும் என்று இருந்தது. இரும்புப் பெட்டியை மற்றவர்கள் அவ்வளவு எளிதில் திறக்க முடியாது என்பதால், அவன் இருக்கும்போதே தன் நகைகளைப் பார்க்க அவள் விரும்பவில்லை. அவன் போன பிறகு வேண்டுமானால் பார்த்துக் கொள்ளலாம் என்று “இந்த நகைகள் எனக்கு வேண்டாம் வேறு நகைகள் இருந்தால் கொண்டு வா” என்றாள். 

புலிக்குட்டி உடனே சொன்னான்: “அப்படியே ஒரே மாதிரியாக இருந்தால் என்ன? மேல் நாட்டில் உள்ள திரை நட்சத்திரங்கள் ஒரே மாதிரியான கார்களையோ, ஒரே மாதிரியான நகைகளையோ, ஒரே மாதிரியான வீடுகளையோ வாங்குவது அவர்களுக்குப் பொழுது போக்கு! பணமாக இருப்பதைவிட நகைகளாக வாங்கி வைத்துக் கொள்வது எப்போதும் நல்லது! இல்லையா!” 

“இந்த நகைகள் வேண்டாம்” என்று கொஞ்சம் கண்டிப்பாகக் கூறிவிட்டாள் ஷோபா. 

புலிக்குட்டி அமைதியுடன் நகைகளை எடுத்து அடுக்கிக் கொண்டு புறப்பட்டான். அவன் எப்போது ஒழிவான் என்று காத்திருந்த ஷோபாவும் அவள் பாட்டியும் அவன் வெளியே சென்றதும், விரைந்து சென்று உள்பக்கம் இருந்த அறையில் இருந்த இரும்புப் பெட்டியைத் திறந்தார்கள். அதிலிருந்த நகைகளை எடுத்து வெளியே மேசை மீது வைத்தார்கள். 

எல்லா நகைகளும் அப்படியே இருந்தன! அவன் கொண்டு வந்த நகைகளுக்கும் இவற்றுக்கும் கொஞ்சமும் வேறுபாடு இல்லை! இது எப்படி என்று அவர்கள் வியந்து கொண்டிருந்தார்கள்! 

மேசை மீது கிடந்த நகைகளை மரக்கிளையில் தொத்தியிருந்த மின்மினி பார்த்தது! அதன் பார்வையில் நஞ்சு கலந்திருந்தது! 

அத்தியாயம்-12

பங்களாவை விட்டு வெளியே வந்த புலிக்குட்டி, பங்களாவின் பக்கவாட்டில் இருந்த சுற்றுச் சுவரின் ஓரமாக வந்து நின்றபடி எட்டிப் பார்ததாள். மின்மினி மரக்கிளையில் நின்றபடி மாடியில் எதையோ கூர்ந்து கவனிப்பது தெரிந்தது. மின்மினியின் பார்வையிலிருந்து அது எதை அப்படிப் பார்க்கிறது என்பதைத் தெரிந்துகொண்டான் புலிக்குட்டி. 

புலிக்குட்டி, தன் பெட்டியிலிருந்த நகைகளைக் காட்டிவிட்டு வந்ததும், திரைநடிகை ஷோபாவும் அவள் பாட்டியும் தங்கள் நகைகள் பாதுகாப்பாக இருக்கின்றனவா என்று எடுத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொண்டான் அவன். பூனையின் பார்வையிலிருந்து இனிமேலும் நேரத்தைக் கடத்தக் கூடாது என்பது அவனுக்குத் தெரிந்தது. அந்தக் கொடிய பூனையும் அவன் இருந்த பக்கம் ஒரு தடவை திரும்பிப் பார்த்துவிட்டு, மீண்டும் பங்களாவுக்குள் பார்த்தது. 

மின்மினியின் பார்வை அவனுக்குக் கட்டளையிடுவதைப் போல் இருந்தது. மின்னல் போன்ற அதன் பார்வை வெட்டிவிட்டுத் திரும்பியதும், புலிக்குட்டி விரைந்து நகர்ந்தான். சுவரின் பின்னால் ஒரு விளக்கு மங்கலாக எரிந்து கொண்டிருந்தது. அது பெயருக்கு எரிந்து கொண்டிருந்தது. அந்தப் பக்கமாக உள்ளே நுழைய நினைக்கும் திருடர்கள் விளக்கு எரிவதைப் பார்த்ததும் உள்ளே நுழையும் எண்ணத்தை விட்டு விடுவார்கள் என்று அந்த விளக்கைப் போட்டு வைத்திருந்தார்கள். புலிக்குட்டி அந்த விளக்கின் பக்கத்தில் சென்றான். கைப்பெட்டியைக் கீழே வைத்துவிட்டு இடக்கையால் விளக்கைத் தொட்டான். அந்த வளக்கு மிகவும் சூடாக இருந்தது. ஆகையால் சூடு தெரியாமல் இருக்கத் தன இருமபுக் கையால் அந்தப் பல்பைக் கழற்றினான். பல்பைக் கழற்றியதும் அங்கே இருள் படர்ந்தது. பங்களாவுக்குள் மற்ற விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. 

அவன் தன்னுடைய சடடைப் பைகளைத் துழாவிச் செப்புக் காசு ஒன்றை எடுத்தான். பழைய காலணா அது. இப்போது கடைகளில் கொடுத்தால் எவரும் அதை வாங்க மாட்டார்கள். அது செல்லாது. அந்தச் செப்புக் காசைத் தன் இடக்கையால எடுத்து மிகத் திறமையுடன் பல்புக்கும், அதன பிடிப்புக்கும் இடையில் வைத்து மீண்டும் பல்பை மாட்டினான. மீண்டும் பல்பு பளிச்சென்று எரிந்து தீய்ந்து அணைந்தது! அதே நேரத்தில் பங்களாவுக்குள் இருந்த அத்தனை பல்புகளும் அணைந்துவிட்டன. ஒரு விளக்கு கூட எரியவில்லை! 

இருட்டு! 

எங்கும் இருட்டு! 

அவன் சிரித்துக் கொண்டே நகர்ந்து வந்தான். அந்தப் பங்களாவல் மீண்டும் பழுது பார்தது விளக்குவர எப்படியும் அரை மணி நேரமாவது ஆகும் என்பது அவனுக்குத் தெரியும். அந்த அரைமணி நேரத்துக்குள் அவன் அங்கிருந்து பறந்து சென்றுவிட வேண்டும்! 

மின்மினி, இருளிலே தாவிச் சென்று மாடி அறையில் பரப்பியிருந்த நகைகளைத் தன் வாயில் கௌவிக் கெண்டு விரைந்து வந்தது. திரும்பிப் போகும்போது புலிக்குட்டி கொடுத்த நகைகளை எடுத்துச் சென்று நகைகள் பரப்பியிருந்த இடத்தில் பதிலுக்கு வைத்தது! 

பதினைந்து நிமிடங்களில் அது எல்லா நகைகளையும் கொண்டு வந்து விட்டது! பதிலுக்குப் புலிக்குட்டி கொடுத்த எல்லா நகைகளையும் அங்கே வைத்துவிட்டது! ஆகையால் விளக்குகள் எரியத் தொடங்கியதும் நகைகள் அப்படியே இருக்கும். நகைகள் மாறிவிட்டது ஷோபாவுக்கோ அவள் பாட்டிக்கோ உடனே தெரியாது! புலிக்குட்டி கொண்டு வந்தவை போலி நகைகள்! ஷோபாவிடம் உள்ள நகைகள் என்னென்ன என்பதை அவள் நகைகளை வாங்கிய கடைக்காரர்களிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிந்து கொண்டு, அவற்றைப் போலவே திட்டம் போட்டுச் செய்து வைத்திருந்தார் உலகையா! 

நகைகள் மாறிக்கொண்டிருந்த நேரத்தில், ஷோபாவும், அவள் பாட்டியும் நகைகள இருந்த அறையைச் சாத்திப் பூட்டிக்கொண்டு, பங்களாவில் இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருந்தார்கள்! தொலைபேசியில் மின்சார இலாகாவுடன் தொடர்புகொண்டு விளக்குகள் அணைந்து விட்டதாகவும், உடனே கவனிக்கும்படியும் சொன்னார்கள். 

பணியாளர்கள் மின்பொறி விளக்கின் உதவியுடன் பங்களாவில் இருந்த தொடர்புகளைப் பார்த்தார்கள். பங்களாவில் இரண்டு இடங்களில் தொடர்பு எரிந்து அறுந்து போயிருந்தன. பியூஸ் போய்விட்டிருந்தது. அவற்றைப் பழுது பார்த்தார்கள் அதற்குப் பிறகும் விளக்குகள் எரியவில்லை! 

மின்சார இலாகாவினர், வந்து வெளியில் எங்கேயோ போயிருந்த தொடர்பு எரிந்து போயிருப்பதைக் கண்டு பிடித்துப் பியூஸ் போட்டதும் மீண்டும் விளக்குகள் எரிந்தன. புறக்கடையில் இருந்த விளக்கு மட்டும் எரியவில்லை. 

மின்சார இலாகாவைச் சேர்ந்தவர்கள் எப்படித் திடீரென்று விளக்குகள் அணைந்துவிட்டன என்பதைக் கண்டு பிடிக்க ஆராய்ந்தபோது பின்புறம் இருந்த விளக்கு எரியாமல் இருப்பதைக் கண்டார்கள். பல்புத் தீய்ந்து போயிருப்பதைக் கண்டதும் அதைக் கழற்றினார்கள். பல்பைக் கழற்றியதும் அதிலிருந்த செப்புக் காசு கீழே விழுந்தது! 

எவரோ வேண்டுமென்றே விளக்குகளை அணைத்திருக்கிறார்கள் என்பதை அறிந்ததும் பங்களாவில் பரபரப்பு ஏற்பட்டது! 

ஷோபாவும் அவள் பாட்டியும் விரைந்து சென்று நகைகள் பாதுகாப்புடன் இருக்கின்றனவா என்று பார்த்தார்கள்! 

மேசைமீது கிடந்த நகைகள் அப்படியே இருந்தன! அவற்றை அவர்கள் எப்படி வைத்திருந்தார்களோ அப்படியே இருந்தன! 

நகைகள் மாறிவிட்டன என்பது அவர்களுக்கு அப்போது தெரியாது! நகைகளை அவர்கள் இரும்புப் பெட்டியில் வைத்துப் பூட்டிவிட்டு, விளக்குகள் அணைந்ததும் அந்த அறையின் கதவைப் பூட்டிவிட்ட தங்களுடைய திறமையைத் தாங்களே பாராட்டிக் கொண்டிருந்தார்கள். 

அத்தியாயம்-13

மின்மினியைக் கோட்டின் மறைவில் மறைத்துத் தூக்கிக் கொண்டு, கைப் பெட்டியுடன் அந்த இடத்தை விட்டு விரைந்து நடந்த புலிக்குட்டி, வழியில் வந்த வாடகைக் கார் ஒன்றைப் பிடித்து அதில் ஏறினான். 

“எங்கே போக வேண்டும்?” என்று கேட்டான் காரோட்டி 

“விக்டோரியா டெர்மினஸ் புகைவண்டி நிலையத்துக்கு” என்றான் புலிக்குட்டி. 

காரோட்டி. காரை விரைவாகச் செலுத்தினான். சாய்ந்து உட்கார்ந்துகொண்ட புலிக்குட்டிக்கு மகிழ்ச்சி தாளவில்லை. பம்பாயில் எல்லாம் இவ்வளவு விரைவாக முடியும் என்பதை அவன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை! ஒரே கல்லில் இரண்டு மாங்காய் விழுந்தது என்பார்களே, அதைப்போல அவனுக்கு ஒரே பயணத்தில் இரட்டை ஊதியம் கிடைத்தது! 

எதிர்பாராத வகையில் முல்லைக்கோட்டை ராணி யிடம் பூனையை விற்றுப் பெரும் பணத்தையும் பெற்றுக் கொண்டு, அவளுடைய முத்துமாலையையும் அவள் பூனையின் உதவியுடன் பெற்றுக் கொண்டான்! அடுத்த படியாக ஷோபாவின் நகைகளைக் கிளப்பிக் கொண்டு வந்துவிட்டான்! பூனையை விற்று அவன் பணம் பெற்றதையோ, முல்லைக்கோட்டை ராணியின் முத்து மாலை தன்னிடம் இருப்பதையோ அவன் உலகையாவிடம் சொல்ல விரும்பவில்லை! அந்த லாபத்தை முழுக்க முழுக்க அவனே அடைய அவன் முடிவு செய்து கொண்டான்! 

எத்தனை நாள்களுக்குத்தான் இப்படி உலகையாவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து ஆபத்தான வேலைகளில் ஈடுபட்டிருப்பது. தாமாகக் கொஞ்சம் பணம் சேர்த்துக் கொண்டு இந்தக் கொடிய தொழிலிலிருந்தே விலகி விடலாம் என்ற எண்ணம் அவன் மனத்தில் படர்ந்தது. 

புகைவண்டி நிலையத்தை அடைந்ததும், வாடகைக் காரை அனுப்பிவிட்டு, கைப்பெட்டியுடன் புகைவண்டி நிலையத்துக்குள் அவன் சென்றான். அந்தப் பெட்டியை அவன் புகைவண்டி நிலையத்தில் பாதுகாப்பாக வைத்து விட்டு, அதற்கு உரிய சீட்டைப் பெற்றுக் கொண்டு, அவன் தான் தங்கியிருந்த ஓட்டலுக்குத் திரும்பி வந்தான். மறு நாள் அவன் சென்னைக்கு விமானத்தில் புறப்படவில்லை. புகைவண்டியில் அந்தக் கைப்பெட்டியுடன் புறப்பட்டான்! 

மின்மினியும் அவனுடன் புகைவண்டியில் பயணம் செய்தது. பூனையுடன் பயணம் செய்வது ஆபத்து என்பதை அவன் உணர்ந்ததால், பூனைக்கு டிக்கெட் வாங்காமல் பூனையை மறைத்துத் தன்னுடன் எடுத்துச் சென்றான். அந்தப் பொல்லாத பூனை, டிக்கெட் சோதகர் வரும்போதெல்லாம் சீட்டுக்கு அடியில் அமைதியுடன் ஒளிந்துகொண்டது! 

சென்னையை அடைவதற்குள் எத்தனைப் பத்திரிகைகள் வழியில் புகைவண்டி நிலையங்களில் கிடைக்குமோ, அவ்வளவு பத்திரிகைகளையும் அவன் வாங்கிப் பார்த்தான். எந்தப் பத்திரிகையிலும் முல்லைக் கோட்டை ராணியின் முத்துமாலை மறைந்து விட்டதைப் பற்றியோ, முல்லைக்கோட்டை ராணி விலை கொடுத்து வாங்கிய பூனை காணாமல் போனதைப் பற்றியோ செய்தி வரவில்லை! அவள் போலீஸ் இலாகாவுக்கே இதைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையா? அவள் பெயர் பத்திரிகைகளில் அடிபடுவதை அவள் விரும்பாததால் வாயை மூடிக் கொண்டு சும்மா இருக்கிறாளா? அல்லது போலீஸார்தான் பூனையையும் புலிககுட்டியையும் கண்டுபிடிக்கும் வரையில் எல்லாவற்றையும் இரகசியமாக வைத்திருக்கிறார்களா? 

அவனுக்கு உண்மை விளங்கவில்லை! 

ஷோபாவின் நகைகள் பறிபோய் விட்டதைப் பற்றி ஒன்றும் செய்தி வரவில்லை. அப்படியானால் அவள் இப்போது தன்னிடமிருப்பது போலி நகைகள் என்பதைக் கண்டுபிடிக்கவில்லையா? 

சென்னையை அவன் அடைந்தபோது சென்ட்ரல் ஸ்டேஷனில் அவனுக்காக உலகையாவின் கார் காத்திருந்தது! அந்தக் காரில் உலகையாவின் மகள் கிளிமொழி உட்கார்ந்திருந்தாள்! 

அத்தியாயம்-14

காரில் பெட்டியை வைத்துவிட்டு அவன் ஏறி உட்காருவதற்குள் புலிக்குட்டியின் கோட்டுக்குள் பதுங்கியிருந்த மின்மினி மியாவ், மியாவ் என்று கத்தியபடி கிளிமொழியின் மீது தாவியது. அதை அவள் வாரி அணைத்துத் தட்டிக் கொடுத்தாள்! 

“நன்றி கெட்ட பூனை இது!” என்றான் புலிக்குட்டி!

“ஏன்?” என்றாள் கிளிமொழி. 

“இது உண்மையில் உன்னிடம்தான் அன்பாக இருக்கிறது! மற்றவர்களிடம் இது நடிக்கிறது! பம்பாய்க்கு வந்து திரும்பும் வரையில் இது என்னுடன் உயிருக்கு உயிராய் வளர்ந்ததைப் போல் நடித்தது” என்றான் புலிக்குட்டி! 

“இந்தப் பூனைக்கு இருக்கும் அறிவு மனிதர்களுக்குக் கூடக் கிடையாது! இதை எவராலும் ஏமாற்ற முடியாது! உன்னுடைய அன்பும் போலி அன்பானது என்று இதற்குத் தெரியும்” என்றாள் கிளிமொழி! 

பிறகு அவள் காரைச் செலுத்தினாள். மின்மினி அவள் மடியிலேயே உட்கார்ந்துவிட்டது! 

“திட்டப்படி வந்து சேர்ந்து விட்டாய்! எல்லா வேலை களும் திட்டப்படி நடந்ததா?” என்று கேட்டாள் கிளிமொழி. 

“எல்லாம் திட்டப்படி வெற்றிகரமாக முடிந்தது. இவ்வளவு எளிதில் எல்லாம் முடியும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. நான் கொண்டு போயிருந்த நகைகள் எல்லாம் ஷோபாவின் நகைகளைப் போலவே இருந்தன இவ்வளவு பொருத்தமாக எப்படி உன் தந்தை நகைகளைக் கொடுத்தனுப்பினார், என்று எனக்கு வியப்பாக இருக்கிறது!” என்றான் புலிக்குட்டி! 

“என் தந்தையைப் பற்றி உனக்குத் தெரியாது. போகப் போக நீ அவரைப் பற்றிப் புரிந்து கொளவாய்!” என்றாள் கிளிமொழி. 

காரில் வாய்ப்புடன் சாய்ந்து உட்கார்ந்து கொண்டிருந்த புலிக்குட்டி அவளிடம் அடுத்தபடியாகக் கேட்டான், “கிளிமொழி, எனக்கு ஓர் ஐயம். அதைத் தெளிவுபடுத்த உன்னால் முடியுமா?”‘ 

”கேள்” என்றாள் கிளிமொழி. 

“என்னை எவரும் தொடர்ந்து வருவதில்லை. ஏனென்றால் நான் எப்போதும் வழிப்புடன பார்த்துப் போகிறேன். ஆனால், நான் எங்கே இருக்கிறேன் என்பதை உலகையா தெரிந்துகொண்டு, இந்த இடத்துக்கு உன்னை அனுப்புகிறார். இது எப்படி?” 

கிளிமொழி சிரித்தாள். அவள் சிரித்தது, உண்மையை அவனிடம் சொல்லலாமா வேண்டாமா என்று சிந்தனை செய்து கொண்டே சிரித்ததைப் போலிருந்தது. 

பிறகு சொனனாள், ”இன்று நீ புகைவண்டியில வரப்போவது தான் முதலிலேயே தெரியுமே, ஆகையால் உன்னை அழைத்துச் செல்ல வந்தேன. அன்று நீ காரில் இருந்த போது உன்னைத் தேடி வந்தேன். அது எப்படி என்று தானே கேட்கிறாய்?” 

“ஆமாம்” என்றான் புலிக்குட்டி. 

“என் தந்தை உனக்கு ஒரு கார் கொடுத்தபோது அந்தக் காரில் கையளவுள்ள சிறிய இரும்புத் துண்டு ஒன்றைப் பொருத்தி வைத்துவிட்டார். அந்த இரும்புத் துண்டு காரில் எங்கே ஒட்டியிருக்கிறது என்பதைக் கண்டு பிடிப்பது கடினம்! காந்த ஆற்றல் கொண்ட இரும்புத் துண்டு அது. அந்த இரும்பிற்குள் செய்தியனுப்பும் சிறிய இயந்திரம் ஒன்று இருக்கிறது!” 

புலிக்குட்டி மிகுந்த வியப்புடன் பார்த்தான்! 

அவள் தொடர்ந்து சொன்னாள். “எங்கள் வீட்டில், அப்பாவின் இரகசிய அறைக்குள் கண்ணாடியிலான படம் ஒன்று இருக்கிறது. தமிழ் நாட்டின் படம் அது. உன்னுடைய கார் எங்கு சென்றாலும், எந்த இடத்தில் அது போய்க்கொண்டிருக்கிறது என்பதை அந்தப் படத்தில் ஒரு சிறிய விளக்கு அணைந்து அணைந்து எரிந்து தெரிவிக்கும்! ஆகையால் நீ காரில் எங்கு போகிறாய் என்பதைக் கண்டுபிடிக்க முடியும்.” 

“தமிழ் நாட்டிற்குள் எங்கு சென்றாலும் காரின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க முடியும். தமிழ்நாட்டை விட்டு வேறு மாகாணத்துக்குப் போய்விட்டால்” என்றான் புலிக்குட்டி. 

”அப்போதும் ஏமாற்ற முடியாது! அதே கண்ணாடியில் இந்தியாவின் படமும் மறைந்திருக்கிறது. மற்றொரு பொத்தானை அழுத்தினால் இந்தியாவின் படம் தெரியும். அதில், உன் கார் எங்கே இருக்கிறது என்பதைக் கண்டு பிடிக்க முடியும்!” 

வாய்ப்பு வரும்போது உலகையாவின் இரகசிய அறையையும், கார் போகும் இடத்தைக் காட்டும் அந்த வியப்புக்குரிய டெலிவிஷனையும் பார்க்க வேண்டும் என்று எண்ணியது அவன் மனம். 

உலகையாவின் பங்களாவை அடைந்ததும், உலகையா அவனை வெற்றிச் சிரிப்புடன் வரவேற்றார். 

போர்முனைக்குச் சென்று திரும்பிய மகளை ஒரு தந்தை எப்படி வரவேற்பாரோ அப்படி வரவேற்றார் அவர். பிறகு, அவன் கொண்டு வந்த பெட்டியை வாங்கி, உள்ளேயிருந்த நகைகளை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்தார். அவற்றை அவர் ஆற்றல் மிகுந்த கண்ணாடியின் உதவியால் கடிகாரம் பழுது பார்ப்பவர் வேடிக்கையான கண்ணாடி அணிந்து பார்ப்பதைப் போல் பார்த்தார். பிறகு, அவர் சிரித்துக்கொண்டே புலிக்குட்டியையும், மின்மினியையும் தடவிக் கொடுத்தார். 

“இவ்வளவு விரைவில் நீ இவ்வளவு பெரிய வேலையைச் செய்து முடித்ததில் மிக்க மகிழ்ச்சி, உனக்கு என்ன வேண்டும். கேள்?” என்றார் உலகையா. 

“எனக்கு என்ன வேண்டும்? கேலி செய்யாதீர்கள்” என்றான் புலிக்குட்டி. 

“நீயாக கேட்க மாட்டாய்! எனக்குத் தெரியும். இதோ வருகிறேன்” என்று சொல்லி உள்ளே சென்றார் உலகையா. பிறகு திரும்பி வந்ததும் பத்தாயிரம் ரூபாய் பணத்தை நீட்டினார். 

“இதை வைத்துக்கொள். அவ்வப்போது உன் கணக்கைத் தீர்த்துவிடுகிறேன்!” என்றார் உலகையா. 

அவன் தயங்கிக் கொண்டே அந்தப் பணத்தைப் பெற்றுக் கொண்டான். பிறகு அவன் போகத் திரும்பிய போது ”சற்று நில்” என்றார் உலகையா. 

அவன் திரும்பினான். 

“முத்துமாலையை எடு! அதை என்னிடம் தராமல் நீ போகிறாய்!” என்றார் அவர், 

அவன் உடல் இதைக் கேட்டதும் சிலிர்த்தது! “எந்த முத்துமாலை? எல்லா நகைகளும் பெட்டியில் இருக்கின்றனவே!” என்றான் புலிக்குட்டி. 

“ஷோபாவின் நகைகள் எல்லாம் இருக்கின்றன! அவற்றைச் சொல்லவில்லை. நன்றாக நினைவுபடுத்திப் பார்!” 

அவன் திணறினான். 

உலகையா அழுத்தமான குரலில் சொன்னார். “முல்லைக்கோட்டை ராணியின் கழுத்திலிருந்த முத்து மாலை இப்போது உன்ளிடம் இருக்கிறது! அதை நீ என்னிடம் ஒப்படைக்க மறந்து செல்லுகிறாய்!” 

“அது எப்படி உங்களுக்குத் தெரியும்!” என்றான் புலிக்குட்டி. 

“எல்லாம் எனக்கு என் கனவில் தெரியும்!” என்று சொல்லி அவன் நீட்டிய முத்துமாலையை அவர் பெற்றுக் கொண்டார். 

இந்த உலகையாவுக்குக் தெரியாமல் எதையுமே செய்ய முடியாது என்று புலிக்குட்டியின் மனம் வியப்பினுள்ளும் துன்பத்தினுள்ளும் மிக மூழ்கியது! 

அத்தியாயம்-15

புலிக்குட்டி தனக்கென்று வைத்துக்கொண்ட முத்து மாலையை உலகையா அவனிடமிருந்து பிடுங்கிக் கொண்டதும் அவனுக்குப் பெரும் ஏமாற்றம் ஏற்பட்டது. உலகையாவின் மீது சினம் ஏற்பட்டது. இவரிடமிருந்து தப்பவே முடியாதா, இவரைக் கொஞ்சமும் ஏமாற்றவே முடியாதா என்று எண்ணித் தவித்தது அவன் மனம். முத்துமாலை அவனிடம் இருப்பது உலகையாவுக்கு எப்படித் தெரிந்தது என்று கற்பனை செய்தபடி தனது வீட்டை அவன் அடைந்தான். 

நீண்ட நேரம் சிந்தித்துப் பார்த்ததில் அவனுக்கு இரண்டு ஊகங்கள் ஏற்பட்டன. மின்மினி என்னும் அந்தக் கொடிய பூனை பேசும் தன்மை வாய்ந்ததாக இருக்குமோ? அதுதான் முத்துமாலையைப் பற்றிச் சொல்லியிருக்குமோ என்று எண்ணியது அவன் மனம். இது முதல் எண்ணம். பூனை பேசும் ஆற்றல் படைத்திருப்பதாக இதுவரையில் அவன் எங்கேயும் படித்ததில்லை, கேட்டதில்லை. அப்படியே அது பேசும் ஆற்றல் படைத்திருந்தால், பூனையை அவன் முல்லைக்கோட்டை ராணியிடம் முதலில் விற்றுப் பணம் பெற்றுக் கொண்டதையும் அது சொல்லியிருக்குமல்லவா! ஆகையால், இந்த முதல் எண்ணம் தவறானது என்று அவன் முடிவு செய்தான். 

இரண்டாவது எண்ணம் அவனுக்கு மிகச் சரியான தாகப்பட்டது. அதாவது போலீஸ் இலாகாவில் உலகையாவுக்கு உதவியாக எவரோ இருக்க வேண்டும் என்று அவன் எண்ணியதுதான் இரண்டாவது எண்ணம். முத்துமாலையும் பூனையும் மறைந்து விட்டதை உணர்ந்த முல்லைக்கோட்டை ராணி, போலீஸில் இதுபற்றிக் கூறியிருப்பாள். போலீஸார் இந்த உண்மையை விளம்பரப்படுத்தாமல் பூனையையும் முத்துமாலையையும் கண்டு பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம். பூனைதான் முத்துமாலையை எடுத்துச் சென்றிருக்க வேண்டும் என்று உலகையாவுக்குத் தெரிந்த போலீஸ் அதிகாரி எவரோ உலகையாவுக்கு உண்மையைச் சொல்லியிருக்க வேண்டும்! முல்லைக்கோட்டை ராணி பூனையை விலை கொடுத்து வாங்கியதைச் சொல்லியிருக்க மாட்டாள்! இல்லாவிட்டால், அந்தப் பணத்தையும் உலகையா கேட்டிருப்பார் என்று முடிவு செய்தது அவன் மனம்! 

உலகையாவின் பிடியிலிருந்து மெல்ல எப்படியாவது தப்ப வேண்டும் என்று எண்ணினான் அவன். உலகையா மூளையுள்ளவர், செல்வம் மிக்கவர். அவருக்குத் தெரியாமல் எந்த வேலையையும் நம்மால் செய்ய முடியவில்லையே! என்ற துன்பம் புலிக்குட்டியின் மனத்தில் புகுந்து கோண்டது. இதை அவன் கொஞ்சமும் விரும்பவில்லை, எக்ஸ்ரெ எடுத்தால் உடலில் உள்ள எல்லா எலும்புகளும் தெரிவதைப் போல், என்ன செய்தாலும் உலகையா கண்டு பிடித்து விடுகிறார். நண்டு தனது பிடியில் அகப்பட்டதை எளிதில் விடுவதில்லை. அதைப்போல, இந்த உலகையாவின் பிடியில் அகப்பட்டவர்களும் எளிதில் தப்பமுடியாது என்பதை உணர்ந்து கொண்டான் அவன். இப்படிப்பட்ட எண்ணத்தினால் எப்படியாவது அவரை ஏமாற்ற வேண்டும். உலகையாவின் மூளையைவிடத் தன் மூளை சிறந்தது என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று மனத்துக்குள் அவன் முடிவு எடுத்துக் கொண்டான். 

புலிக்குட்டிக்கு அன்றிரவு தூக்கமே வரவில்லை. படிக்கும் அறையில் உட்கார்ந்து, அங்கிருந்த புத்தகங்களை ஒவ்வொன்றாக எடுத்துப் புரட்டிப் பார்த்தான். உலகத்தில் மிகப் பெரிய நகைச் கொள்ளைகள் எப்படி நடந்தன என்பதை விளக்கும் புத்தகம் ஒன்று கிடைத்தது! அதை அவன் ஒரே மூச்சாக உட்கார்ந்து விடிய விடியப் படித்தான்! 

– தொடரும்…

– கல்கண்டு இதழ்.

– இரும்புக்கை மனிதன் (நாவல்), முதற் பதிப்பு: 1976. மணிமேகலைப் பிரசுரம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *