இரந்து, உயிர் கொண்டான் எமன்
கதையாசிரியர்: முல்லை பி.எல்.முத்தையா
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 3,645
வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்
சோழன் கிள்ளி வளவன், குள முற்றத்து அரண்மனையில் இறந்தான் என்ற செய்தி நாடெங்கும் பரவியது. நப்பசலையார் அதனை நம்பவில்லை .
“நமன் வந்துதானே கொண்டுபோயிருப்பான்? வளவன் முன் நமன் எம்மாத்திரம்?
“போர் செய்திருந்தால் அப் புல்லன் நொறுங்கியிருப்பான். விற்போராயினும் சரி, மற்போராயினும் சரி. எப்போரிலும் வளவன் வென்றேயிருப்பான். ஆயின் நமன், பாணரைப்போல் வந்து பாடித் தொழுது, வளவன் உயிரையே பரிசிலாய்க் கேட்டுப் பெற்றிருக்க வேண்டும். ஆம், வேறு எதுவும் நடந்திருக்காது.” என்றார் நப்பசலையார்.
– மாணவர்களுக்குப் புறநானூற்றுச் சிறுகதைகள் – முதற்பதிப்பு : ஆகஸ்ட் 2002 – முல்லை பதிப்பகம்
தொடர்புள்ள சிறுகதைகள்
அன்புமிக்க அரசன்!
வளர்கவி
May 10, 2026
மின்மினிப்பூச்சிகள்!
வளர்கவி
May 4, 2026
படகு பயணம்!
பே.செல்வ கணேஷ்
May 1, 2026