திருடாதே! பாப்பா திருடாதே!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 25, 2026
பார்வையிட்டோர்: 10 
வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்

(சிறார் புதிய கதைப் பாடல்)

கொட்டும் பனிக் காலையில்
குடிசை வீடு ஒன்றிலே
எட்டும் திக்கும் மணந்திட
இனிப்பு அப்பம் செய்தனர்!

ஊரின் எட்ட தூரத்தில்
ஒளிந்தி ருந்த பூனையில்
ஒன்று கருப்பு வண்ணமாம்
ஒன்று வெள்ளைப் பால்நிறம்!

இரண்டும் ஒன்று சேர்ந்தன
இனிய அப்பம் திருடியே
மென்று தின்னும் ஆசையில்
மெல்ல குடிசை புகுந்தன!

யாரும் பாரா வேளையில்
எந்தச் சபதமு மின்றியே
ஒரோர் அப்பம் எடுத்தன
ஓட்டம் பிடித்து ஓடின!

இரண்டு அப்பம் இருந்தன
இருந்த போதும் அடுத்ததன்
உருண்ட அப்பம் மீதிலே
உள்ளம் வைத்த தாலவை

ஒன்றை யொன்று பகைத்தன
ஒன்றை ஒன்று தாக்கின!
சென்று அவற்றுள் அமைதியைச்
செய்து வைக்கக் குரங்கொன்று

நன்று நானும் இங்குதான்
நல்ல முறுக்கு விற்கிறேன்
தின்று பார்ப்பீர் எனச்சொல்லி
தீய்ந்த முறுக்கைத் தந்தது!

முறுக்குதனைத் தின்றதால்
இருக்கும் அப்பம் எனக்கென
உரக்கச் சொல்லி அப்பத்தோடு
குரங்கு ஓடி மறைந்தது!

திருடித் தின்னல் தவறென
திருட்டுப் பூனை இரண்டிற்கும்
முறுக்கை வைத்துக் குரங்குமே
புரிய வைத்த கதைஇது!

வளர்கவி இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *