இரக்கம்
கதையாசிரியர்: ஆர்.எஸ்.ஜேக்கப்
கதைத்தொகுப்பு:
ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 13, 2025
பார்வையிட்டோர்: 74
(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
புயலில் அடிபட்டு அடைக்கலம் தேடி ஓடிய ஒருவன் ‘பரிசுத்தம்’ என்று எழுதியிருந்த வாயிலைத் தட்டினான். வெள்ளை அங்கி தரித்த ஒருவர் வந்தார். பரிசுத்தவான்கள் மட்டும் இங்கு வரலாம் என்றார்.
அடைக்கலம் தேடி வந்தவன் நடுங்கி ஓடினான். ‘சத்தியம்’ என்று எழுதியிருந்த பிறிதோர் வீட்டைத் தட்டினான், உளளேயிருந்து வந்தவர் ‘சத்தியவான்கள் மட்டும் வரலாம். என்றார்.
வந்தவன் தன் பாவ உணர்வினால் ஓடினான். தூதர் கள் வந்து அவனை அழைத்துச் சென்றார்கள். அடைக் கலம் கொடுத்தார்கள். அதுதான் ‘இரக்கத்தின் வீடு’.
நீதியின் தூதன் கடவுளிடம், ‘நீர் மனி தனை உண்டாக்கினால், அவன் நீதியையே புரட்டி விடுவான், எனவே வேண்டாம்’ என்றானாம். சத்தியத்தின் தூதன், ‘மனிதன் உம்மையே பொய்யனாக்கி விடுவான்; எனவே மனிதனைப் படைக்க வேண்டாம்’ என்றானாம்.
இரக்கத்தின் தூதன் மட்டும் ‘உம்மைத் தொழுது கொள்ள பகுத்தறிவுள்ள மனிதனால்தானே கூடும்’ என்றான்.
இரக்கத்தின் இருப்பிடமாகிய தெய்வத்தை மகிமைப்படுத்துவது மனிதன் கடமையல்லவா?
‘கர்த்தர் இரக்கமும் மன உருக்கமும் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையுமுள்ளவர்.” [யோனா 4:2]
”உங்கள் பிதா இரக்கமுள்ளவராயிருக்கிறது போல நீங்களும் இரக்கமுள்ளவர்களாயிருங்கள்”. (லூக்கா 6:36)
– குருமாணிக்கம் உவமைக் கதைகள் 101, முதற்பதிப்பு: ஏப்ரல் 1962, ஜெயா நிலையம், பாளையங்கோட்டை.
![]() |
பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க... |
