இயேசுவின் இரத்தம்
கதையாசிரியர்: ஆர்.எஸ்.ஜேக்கப்
கதைத்தொகுப்பு:
ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 13, 2025
பார்வையிட்டோர்: 92
(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
இசைத்தட்டுகளின் இரகசியம் தெரியுமா? கிராமப் போன் ஊசி போகிற இடத்தில் சாராயத்தில் துணியை நனைத்துத் துடையுங்கள். வார்த்தையோ, பாட்டோ ஒன்றும் கேட்காது; அழிந்துபோம். மனிதர் பேசின வார்த்தைகள் அனைத்தும் ரெக்கார்டு’ செய்யப்பட் டுள்ளன. ஆனால் அந்த ரெக்கார்டை எதுவும் அழிக்க முடியாது. ஒன்றே ஒன்றினால்தான் அழிக்கமுடியும். அதுதான் இயேசு கிறிஸ்துவின் இரத்தம்.
இக்காலத்தில் இரத்த தானம் செய்ய விருப்ப முள்ளோர் பலர் இருக்கிறார்கள். இவர்களால் நோயாளிகளுக்கு மிகவும் பெரிதான நன்மை உண் டாகிறதென்பது கண்கூடு.
இது புதிதான ஓர் வைத்திய முறை எனச் சொல்ல முடியாது. இதைப்பற்றி மிகவும் பழைய புத்தக மொன்றிலிருக்கிறது. அதில் பரம வைத்தியரும், அவர் ஏற்படுத்திய இரத்த தானமும் என்ற விஷயம் விபர மாகக் கூறப்பட்டுள்ளது. அந்த இரத்த தானம் செய்த பரம வைத்தியர்தான் இயேசுகிறிஸ்து. அந்தப் பழைய உலகத்தார் எல்லோருடைய புத்தகம்தான் பைபிள். பாவ வியாதிக்கும் பரிகாரம் இயேசுவின் இரத்தமே.
“அவருடைய [இயேசு கிறிஸ்து) தழும்புகளால் குணமாகிறோம்”. (ஏசாயா 53:5)
“இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்” [யோவான் 1:7]
– குருமாணிக்கம் உவமைக் கதைகள் 101, முதற்பதிப்பு: ஏப்ரல் 1962, ஜெயா நிலையம், பாளையங்கோட்டை.
![]() |
பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க... |
