இடுக்கணில் மனமழியாமை
கதைத்தொகுப்பு: சமூக நீதி சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 14, 2024
பார்வையிட்டோர்: 251
(1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
இடுக்கணில் வேணுமென்றே இழியக்கூடாது; அப்ப டிச் செய்வது மதியீனம். ஆனாலும் இடுக்கண் நேரிட்டு விடுமானால் மனவுமதியைக் கைவிடாமல், அமைதியோடு நடந்துகொள்ளவேண்டும். நாம் எவ்வளவு உன்னிப்பாக இருந்தபோதிலும் ஒவ்வோர் வேளையிலாயினும் இடுக்கண் படாமல் உயிர்வாழ முடியாது. நமது உடைகளிலாவது நெருப்புப் படலாம், வீடாவது நெருப்புப்பிடித்து எரிய லாம், நாம் ஆழநீரில் தவறி விழுந்துவிடலாம், அல்லது நாம் ஒரு வண்டியில் ஏறிச்செல்லும்போது குதிரை மிரண்டு வண்டியோடு நம்மையும் இழுத்துக்கொண்டு கண்டபடி யோடலாம். இப்படிப்பட்ட நேரங்களில் நமது உடல் புண்பட்டு வருந்தும், அல்லது அதற்குச் சாக்காடே நேரி னும் நேரும். ஆனாலும் நம்மால் கூடியவரையில் அமைதி யோடும் சூழ்ச்சியோடும் நடந்துகொண்டால் நம்மைநாமே காப்பாற்றிக்கொள்ளலாம்; ஊறுபாடுகள் உண்டானாலும் அவை மிக எளிதாகப்போய்விடும்.
இடுக்கணிற் சிலர் திகிற்பட்டு மனந்தடுமாறித் தாம் அதனினின்றுந் தப்பித் தம்மைக் காப்பாற்றிக்கொள்ள யாதொரு சூழ்ச்சியுஞ் செய்துகொள்வதற்கு வகைவழி யறியாமற் பாழ்படுகின்றார்கள். அதனால் இடுக்கண் மிகுதிப்பட்டுத் துன்பத்திலாழ்ந்து அவர்கள் உயிர்விடவும் நேருகின்றது. ஆகையால், இடுக்கண் வந்துழி ஏக்கத் துக்கு இடங்கொடுக்கக்கூடாது; ஆனால் நாம் அமைதியும் உன்னிப்புங்கொண்டு நேரிடவிருக்கும் துன்பத்தை நீக்கிக் கொள்ள நம்மாலான மாற்றுச் செயல்களையெல்லாம் எண்ணி நிறைவேற்றிக்கொள்ளவேண்டும். அஃதே இடுக் கணில் மனம் உடையாதிருப்பதாகும். அத்தன்மையே மிக மெச்சத்தக்கதொன்றாகும்.
உடையில் நெருப்புப் பிடித்துக்கொண்டால் வெருண்டு இங்குமங்கும் ஓடக்கூடாது. அப்போது அப்படியே நின்றுகொண்டிருந்தாலும் ஓடினாலும் தீ விரைந்து பற்றி எரிந்து உடலைக் கரியாக்கிவிடும். எவரும் பக்கத்தில் இல்லாவிட்டால் அந்நேரத்தில் உடனே கீழே விழுந்து புரளவேண்டும் அப்படிச் செய்தால் தீப்பற்று தல் அடங்கி அவியத்தொடங்கிவிடும். பக்கத்திலிருப்பவர்கள் கம்பளியையாவது துப்பட்டியையாவது உடம்பைச்சுற்றி நெருங்க மூடிவிட்டால் தீ அவிந்தே போய்விடும்.
ஒரு வீடு பற்றிக்கொண்டு உள்ளே புகை நிறைந்திருந் தால், ஒருவன் உள்ளே நிமிர்ந்து போகக்கூடாது. அப்படிச் செய்தால் உடல் திக்குமுக்குப்பட்டு மூச்சடைத்துக்கொள்ளும். புகை மேல்நோக்கிச் செல்லுமே தவிர கீழ்நோக்கி வராது; ஆகையால் உள்ளே போகவேண்டியவன் தரை யோடு தரையாய் மார்பால் நகர்ந்து போகவேண்டும்.
நீந்தத் தெரியாதவன் ஆழமுள்ள நீர் நிலையில் விழுந்து. விட்டால் அவன் திகிற்பட்டுக் கைகால்களைத் தண்ணீரில் அடித்துக்கொண்டு போராடக்கூடாது; அப்படிச் செய் தால் அவன் விரைவில் உள்ளே முழுகிப்போய்விடுவான். அந்நேரத்தில் என்ன செய்யவேண்டுமென்றால், மூச்சுப் பிடித்துக்கொண்டு அசையாமல் அமைதியோடிருந்து, வாயை மாததிரம் நீருக்குமேலே வைத்துக்கொள்ளவேண் டும். நமது உடல் நீரில் மிதக்கும் இயல்புடையது; அச் சங்கொண்டு கைகால்களை நீரில் அடித்துக்கொள்ளாமல் அமைதியாக இருந்துவிட்டால் உடல் ஒருகாலும் நீரிற்குள் முழுகிப்போகாது. வாய் ஏன் நீரின்மேலேயே இருக்க வேண்டுமென்றால், நீர் டலுக்குள் சென்றுவிட்டால். உடல் எடை மிகுதிப்பட்டு மூழ்கிவிட நேரும்.
வண்டிக் குதிரை மிரண்டு வண்டியை இழுத்துக் கொண்டோடினால் நாம் உடனே வண்டியைவிட்டுக் கீழே குதித்துவிடக்கூடாது; அமைதியாயிருந்து என்ன செய்ய வேண்டுமென்று எண்ணவேண்டும்; அதற்குள்ளாகக் குதிரை மிரட்சியடங்கி நின்றுவிடக் கூடும். வண்டியை விட்டு நீங்கவேண்டுவது இன்றியமையாததாயின் வண்டிக்குப் பின்வாக்காகக் குதிக்கவேண்டும். வண்டி ஒரு திக்கு நோக்கிப் போகும்போது நமது உடல் முன்னுக்குத் தாக்குதலடைந்திருக்கின்றது; ஆகையால் திடீரென்று அப்பக்கமே குதித்தால் நாம் மல்லாக்காக விழுந்து மார்பு அடிபட நேரும். வண்டி போகும் திக்குக்கு எதிர்த்திக்கில் குதித்தால் அவ்வாறு நேரிடாது
1. இடுக்கணழிந்த மகள்
ஓர் இரவு ஒரு மெத்தைவீட்டின் கீழ்த்தட்டு நெருப்புப் பிடித்து எரியத்தலைப்பட்டது. மேல்மாடியில் ஓர் அறையில் பிள்ளைகள் படுத்துறங்கிக் கொண்டிருந்தன. கீழிருந்த தாய் மேலே சென்று குழந்தைகளைக் காப்பாற்ற எண்ணியவள் மெய்ம் மறந்துபோய்த் தீயிலும் புகையிலும் நுழைந்து தெருவுக்கு வந்து விட்டாள். இதற்குள்ளாகப் படிக்கட்டுக்களும் தீப்பிடித்துக் கொண்டன. என்செய்வாள் பாவம்! வீடும் எரிந்துபோயிற்று, பிள்ளைகள் உயிரும் பிரிந்து போயிற்று!
2. இடுக்கணழியா மகள்
இரவில் தீப்பிடித்துக்கொண்ட இன்னொரு வீட்டின் மெத்தை யின்மேல் ஒன்றுக்குள் ஒன்றாகக் கட்டப்பட்ட அறைகள் இருந் தன. முன்னறையில் வீட்டுக்காரி படுத்துக்கொண்டிருந்தாள்; பின்னறையில் நான்கு பிள்ளைகளோடு வேலைக்காரி படுத்துறங் கிக் கொண்டிருந்தாள். கீழமாடியில் திடீரென்று தீப்பிடித்துக் கொண்டதை உடனே அறிந்துகொண்ட தாய் உள்ளறைக்கு விரைந்து சென்று ஒரு கம்பளியால் வேலைக்காரியின் உடம்பை மூடிக்கட்டி அவளை ஒரு கயிற்றினால் பலகணியின் மூலம் இறக்கிக் கீழே விட்டு விட்டாள். பிறகு அவள் குழந்தைகளையும் அவ் வாறே கட்டி இறக்கிவிட்டுத் தானும் அக்கயிற்றின் உதவியினா லேயே கீழே இறங்கிவிட்டாள். அவள் மன அமைதியுடைய வளாய்ச் சூழ்ச்சி செய்து தானுந் தப்பித்துக்கொண்டு தன் மக் களையும் வேலைக்காரியையும் தீயால் இறப்பதினின்றும் காப்பாற்றிக்கொண்டாள்.
3. கதிர் அறுப்பவன்
ஒருவன் வயலில் நெற்கதிர் அறுத்துக்கொண்டிருந்தான். அவன் கைமேல் அரிவாள் பட்டு நரம்பு அறுந்துபோய்விட்டது; அதனால் செந்நீர் வெள்ளம்போல் வெளிவரத் தொடங்கியது; இருந்தவிடமும் செந்நீர்க்காடாய்ப் போய்விட்டது. பக்கத்தில் இருந்தவர்கள் பார்க்கக் கண்கூசிப்போய் வெருண்டு நாலாபக்கங் களிலும் சிதறியோடிவிட்டனர். எதிர்பாராமல் அவ்வழியே வந்த ஒரு பெண் இக்கொடுமையைக்கண்டு மனமழியாது அமைதி கொண்டு, தன் அங்கியினின்றும் ஒரு துண்டுத் துணியைக் கிழித் தெடுத்து நாடியின் மேற்பக்கத்தைக் கெட்டியாகக் கட்டிவிட் டாள். செந்நீர்ப் போக்கு அந்நிமிடமே நின்றுவிட்டது. அப்பெண் அப்படிச் செய்திராவிட்டால், அவ்வறுப்பாளியின் உடற் செந்நீ ரெல்லாம் கழிந்துபோய் இறந்துபோயிருப்பான்.
4. பலபொருள் வணிகன்
ஒரு நகரில் பல்பொருள் வணிகன் ஒருவன் இருந்தான். அவன் பல பொருள்களுடன் வெடிமருந்தும் வைத்து விற்பனை செய்துவந்தான். அவன் தன் வாணிபப்பொருள் மூட்டைகளை ஒரு கீழறையில் வைத்திருந்தான்.
அவன் ஒருநாள் வேலைக்காரியைக் கூப்பிட்டு ஏதோ ஒரு. பொருளைக் கீழறையிருந்து கொண்டுவர அனுப்பினான். அஃது இருட்டாயிருக்குமாதலால், அவள் ஒரு சிறு மெழுகுதிரியைக் காளுத்திக் கொண்டுபோனாள். அவள் அவ்வறைக்குச்சென்று ஓர் உழுந்துமூட்டையென்று நினைத்த ஒரு மூட்டையின்மேல் மெழுகுதிரியைச் செருகி வைத்துவிட்டு, வேண்டிய பொருளை இரண்டு கைகளாலுந் தூக்கியெடுத்துக்கொண்டு திரும்பிவிட்டாள்.
கடைக்காரன் ”விளக்கு எங்கே” என்று கேட்ட த ற்கு. அவள் அதனைப் பக்கத்திலிருந்த ஓர் உழுந்துமூட்டைமேல் செருகி வைத்திருப்பதாகப் பராமுகமாய்ச் சொல்லியபோது அவன் பேரச்சங்கொண்டு மனங்கலங்கிப்போய் விட்டான் ! ஏனெனில் அம்மூட்டை வெடிமருந்துப்பொடிகள் கொண்டது;. அதனில் நெருப்புப் பட்டுவிட்டால் பொருட்கேடும் உயிர்க்கேடும் உண்டாகிவிடுமல்லவா? இவன் உட்செல்லுவதற்குள் அம்மூட்டை யில் நெருப்புப் பட்டுவிடக் கூடுமே! உட்செல்லலாமா, வெளியேறி விடலாமா என்று இருதலைக்கொள்ளி எறும்புபோல் ஒன்றுந் தோன்றாமல் நின்று கடைசியாக மனத்தை உறுதிசெய்து கொண்டு கீழறைக்குள் நுழையத் துணிவுகொண்டுவிட்டான்!
துணிந்தவன் கீழறைக்குச் சென்றான்; வெடிமருந்து மூட்டை யின்மேல் மெழுகுதிரி பளபளப்புடன் எரிந்துகொண்டிருப்ப தைக் கண்டான்; அடிமேலடி வைத்து மூட்டையின் கிட்டப் போனான்; பரபரப்பாகச்சென்றால் காற்றுப்பட்டுத் தீப்பொறிகள் காணுமல்லவா? தீப்பொறி கீழ்நோக்கி விழுந்தால் என்ன வாகும்?
அவன் நீளநினைந்து, உள்ளங்கையைக் கிண்ணம்போல் குவித்து மெதுவாக அம்மெழுகுதிரியை இருவிரல் நீக்கி இடுக்கி யெடுத்துக்கொண்டான். அப்போது தீப்பொறி அவன் உள்ளங் கையில்தானே விழவேண்டும்? அவ்வூறுபாட்டுக்கு அவன் அஞ்ச வில்லை. அஃதும் படாமலே அவன் அத்திரியோடு மெதுவாக வெளியேறிவிட்டான்.
வணிகனின் இடுக்ஈணழியாமைத்தன்மையே அவன் தன் பொருட்களையும் ஆங்குள்ள மக்களையும் நீறுபட்டுப்போய்விடாமற் காப்பாற்றினதன்றோ?
– நல்லொழுக்கப் பாடம், முதற் பதிப்பு: ஏப்ரல் 1951, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிட், திருநெல்வேலி.