ஆபீஸ் பாய்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 3, 2019
பார்வையிட்டோர்: 8,865 
 
 

கமல் வீடு ,காலை அலுவலகம் கிளம்பும் பரபரப்பு, இருவரிடமும், கமல் தனியார் பேங்க் வேலை. ப்ரியாவும் பெரிய எக்ஸ்போர்ட் கம்பெனியில் வேலை, திருமணமாகி 9 மதங்கள் ஆகிறது,

ப்ரியா என்னோட ஷர்ட் அயர்ன் பண்ணினியா?, என்னத்தான் பண்ற வீட்லே, எனக் கூறிக்கொண்டே எடுத்து அயர்ன் பண்ண ஆரம்பித்தான்.

நானே எல்லாமும், செய்யனுமா? கூட மாட ஏதாவது செஞ்சாதானே. வர வேண்டியது செல்ல நோன்ட வேன்டியது, டிவி பார்க்க வேண்டியது அதுவும் பதினொன்று மணி வரை, காலையில என் உயிரை எடுக்கவேண்டியது, என்று சொன்னதுதான் தாமதம் கமலுக்கு ஆத்திரம் வந்தது,

ஏய், என்ன வேலைக்கு போற திமிரா? முடிஞ்சா செய், இல்லைனா சும்மா இரு, நாங்க பார்த்துக்குறோம், நீ ஒன்னும் எனக்காக செய்யவேண்டாம், என எல்லா ஆண்கள் போலவே கர்ஜித்தான். ப்ரியவுக்கோ நேரமில்லை ,சரிங்க விடுங்க நான் கிளம்பனும், உங்க பாக்ஸ் ரெடி, என கூறினாள்.

ஆமாம் சீக்கிரம் போ அங்கே உனக்காகத்தான் எல்லோரும் வெயிட் பண்ணறாங்க, உங்க ஆபீஸ் பாய் அதான் உன் பாய் friend காத்துக்கிட்டு இருப்பான் அவன் கூட வண்டிலே போறதுக்குத்தானே ஓடறே, என்று கூறவும் அழுகை வந்தது அவளுக்கு, அடக்கிக் கொண்டு கிளம்பினாள்.

அவனுக்கு எப்படி தெரியும்?, சங்கர் கூட வண்டியில் அன்றைக்கு போகலைன்னா பின்னால் வரும் மேனேஜர் காரில் ஏறும்படி ஆகி இருக்கும் என்று, அதை தவிர்க்கவே அன்று சங்கர் உடன் சென்றாள்.

பேருந்தில் சிரமப்பட்டு ஏறினாள். எல்லா ஆண்களும் வீசும் இறுதி அஸ்திரம் இந்த கேவலமான சந்தேகம் தான். இதுதான் அவர்களுக்கு வசதி போலே என நினைத்தபடி ஆபீஸ் வந்து சேர்ந்தாள். ஆபீசில் தான் எத்தனை சோதனை பெண்களுக்கு,

அதுவும் இவள் பின்னே இருக்கையில் மேனேஜர் , அருகில் வேலை பார்க்கும் வயதில் முதியவர், அன்பாக பேசும் மேனேஜர் சில சமயங்களில் வேறு மாதிரி பேசுவர் ,உடையில் கவனமாக இருக்கனும், பேச்சில் கவனம், சிரிக்கும்போது கூட கவனமாக இருக்கனும் இதெல்லாம் பெண்களிடம் இருந்து பறிக்கப்பட்ட சுதந்திரம்.. தனியாக பெண் ஒருத்தி என்ன படித்திருந்தலும் அலுவலகத்தில் பணி புரிவது சிரமம்தான்,

இவர்களில் ஆபீஸ் பாய் ஆக பணிபுரியும் சங்கர் , +2 வரை படித்தவன், இவளை நன்கு தெரிந்தவன் ,இருவரும் ஒரே பள்ளியில் படித்தவர்கள் ,இவளை விட பெரியவன். அவள் மனைவி நன்கு படித்து தனியார் வேலை என்று சொல்லுவார், இவளின் அலுவலக கஷ்டம் நன்கு புரிந்தவன். அன்று ஆபீஸ்க்கு மேனேஜர் மகள் சந்தியா தனது அப்பாவை சந்திக்க வந்து இருந்தாள்.

அப்பா எங்க என கேட்க, மீட்டிங் நடைபெறுகிறது சற்று காத்திருங்கள் என கூறி பிரியா இருக்கையில் அமர்த்தி, குடிப்பதற்கு டீ கொடுத்தான் சங்கர்.

மீட்டிங் முடிந்து வந்த ப்ரியாவை சற்று நேரம் வெளியே செல்ல சொன்னான். ஏன் எனக் கேட்ட ப்ரியாவை விஷயமாகத்தான் சொல்றேன் போங்க என்றான்.

அவளும் வெளியே சென்றுவிட்டாள். மீட்டிங் முடித்து வெளியே வந்த மேனேஜர் , என்ன பிரியா, மீட்டிங்க்லே அசத்திட்டிங்க, என கூறிக்கொண்டே கன்னம் கிள்ளக் கையைக் கொண்டு வந்தார்,

அப்பா, என் வண்டி ரிப்பேர் ஆகிவிட்டது அதான் உங்க கூட வீட்டுக்கு போகலாம்னு இங்க வந்தேன், போகலாமா இன்னும் டைம் ஆகுமா? எனக் கேட்டாள். அவர் அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவே இல்லை, கன்னம் கிள்ளபட்டிருந்தால் என்ன ஆகிருக்கும், என் மகள் என்னைப் பற்றி என்ன நினைப்பாள், என வெட்கி தனது இருக்கைக்கு திரும்பினான்.

அதை கண்ட சங்கர் ப்ரியாவை உள்ள செல்லுமாறு கூறினான், தனது சமயோசித புத்தியை வைத்து மேனேஜர் மகள், ப்ரியாவைப் போல் புடவை அணிந்து வந்ததைக் கண்டு அவளை ப்ரியாவின் இருக்கையில் அமரவைத்து மேனேஜருக்குப் பாடம் புகட்டினான்.

மேடம், இனி கவலை இன்றி நீங்கள் அலுவலகம் வரலாம் என் சங்கர் கூற , நட்புக்கு நன்றிக் கூறினாள் பிரியா.

AyyasamyP பா.அய்யாசாமி தந்தை பெயர்: கி.பாலசுப்ரமணியன். பிறந்த ஊர்: சீர்காழி. நான் 15/10/1969 ஆம் ஆண்டு சீர்காழி எனும் ஊரிலே பிறந்தவன் என்னுடைய இளங்கலை இயற்பியல் படிப்பினை பூம்புகார் பேரவைக் கல்லூரியிலே 1989 ஆம் ஆண்டு முடித்து , தற்போது முதுகலை தமிழ் படித்துக்கொண்டு இருக்கின்றேன். தில்லி, உத்தர் பிரதேஷ் ,சென்னை என பல இடங்களில் பணிபுரிந்து தற்போது மயிலாடுதுறையிலே வசித்துக் கொண்டு இருக்கின்றேன்.2015 ஆம் ஆண்டு முதல் என்னை ரோட்டரியில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *