ஆபிரகாம் லிங்கன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 13, 2025
பார்வையிட்டோர்: 89 
 
 

(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஆபிரகாம் லிங்கன் அமெரிக்க ஐக்கிய மாகாணத் தின் ஜனாதிபதியாயிருந்த சமயம். அங்கு உள்நாட்டுக் கலகம் உண்டானது. லிங்கனின் ராணுவத் தளபதி களில் ஜெனரல் கிராண்ட் என்பவரைத் தவிர மற் றெல்லாரும் உதவாக்கரைப் பேர்வழிகள்; சோம் பேறிகள்.

லிங்கனுக்கு கிராண்ட்மீது மாத்திரம் முழு நம் பிக்கை. கிராண்ட்டும், நம்பிக்கைக்குப் பாத்திரமாக. நடந்து கெரண்டான்.

மற்றத்தளபதிகளுக்கு கிராண்ட் மீது பொறாமை ஏற்பட்டது. லிங்கனிடம் போய் கிராண்டைப் பற்றி பலவாறாகக் குறை கூறினார்கள்.

ஒரு தளபதி லிங்கனிடம் சென்று, கிராண்ட் பெரிய குடிகாரன் என்று புகார் செய்தார்.

“அப்படியா, நான் இதுவரை கேள்விப்பட்ட தில்லையே; அப்படியானால் ஒன்று செய்யும். அவர் எந்தக் கம்பெனியில் தயாரிக்கப்பட்ட ‘விஸ்கி’ குடிக் கிறார் என்று உடனே போய் அறிந்து வந்து சொல்லும். அதே விஸ்கியையே வாங்கி மற்ற எல்லாத் தளபதிகளுக்கும் கொடுத்துப் பார்க்கலாம்” என்றாராம் லிங்கன்.

லிங்கனுடைய ஞானம் இங்கு விளங்குகிறது.

குறைகூற வந்த தளபதி தலை கவிழ்ந்தார்.

பிறர் உங்களைக் குறைகூறுவதைக் கண்டு லட்சியம் செய்யாதீர்கள். தெருவில் ஒவ்வொரு நாய் குலைக்கும் போதெல்லாம் நின்று பார்க்க ஆரம்பித்தால் நாம் ஒரு இடத்துக்கும் போய்ச் சேர முடியாது.

“எஜமானிடத்தில் அவனுடைய வேலைக்காரன் மேல் குற்றஞ் சுமத்தாதே, அவன் உன்னை சபிப்பான், நீ குற்றவாளியாகக் காணப்படுவோம்” [நீதிமொழிகள் 30:10]

“ஒருவருக்கொருவர் விரோதமாய் முறையிடாதிருங்கள்” [யாக்கோபு 5:9]

– குருமாணிக்கம் உவமைக் கதைகள் 101, முதற்பதிப்பு: ஏப்ரல் 1962, ஜெயா நிலையம், பாளையங்கோட்டை.

ஆர்.எஸ்.ஜேக்கப் பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *