ஆத்துமக் குருடன்
கதையாசிரியர்: ஆர்.எஸ்.ஜேக்கப்
கதைத்தொகுப்பு:
ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 13, 2025
பார்வையிட்டோர்: 94
(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
கடவுள் இல்லை என்று வாதிடுகிற ஒருவன் மேடை யில் நின்று கர்ஜித்தான்.
நான் சூரியனைப் பார்க்கிறேன்- எனவே
சூரியன் இருக்கிறது.
நான் மரங்களைப் பார்க்கிறேன்-எனவே
மரங்கள் உண்டு என்று நம்புகிறேன்.
நான் கடவுளைக் காணவில்லை- எனவே
கடவுள் இல்லை” என்றான்-
கூட்டத்தில் உட்கார்ந்திருந்த ஒரு கண்தெரியாத சகோ தரன் மேடைக்குச் சென்றான். அவன் குருடர் பள்ளி யில் நன்கு பயின்றவன்-அவன் சொன்னான்,
“நான் உன்னைப் பார்க்க முடியவில்லை-எனவே
நீ இல்லை” என்றான்-
கூட்டம் சிலிர்த்து நின்றது.
‘நீ குருடன்’ என்றான் நாத்திகன்—
‘நீ ஆத்துமக் குருடன்’ என்றான் கபோதகநண்பன்- நாத்திகன் வெட்கி தலை குனிந்தான்.
‘குருடரான வழிகாட்டிகளே, உங்களுக்கு ஐயோ!’
“கர்த்தருடைய முகம் செம்மையானவனை நோக்கி இருக்கிறது”. [சங்கீதம் 11:7]
”உன் வார்த்தையினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுவாய்” [மத்தேயு 12:37]
– குருமாணிக்கம் உவமைக் கதைகள் 101, முதற்பதிப்பு: ஏப்ரல் 1962, ஜெயா நிலையம், பாளையங்கோட்டை.
![]() |
பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க... |
