ஆணுக்கும் பெண்ணுக்கும் சகசம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 14, 2025
பார்வையிட்டோர்: 287 
 
 

(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு ஊர்ல ஒரு தாசி இருந்தா. அவளுக்கு நாலு பொண்ணுக. அந்த நாலு பொண்ணுகளயும், தாசியாக்கி, பொளப்பு நடத்திக்கிட்டிருக்கா. அப்டி, பொளப்பு நடத்திக்கிட்டிருக்கயில, தெனம், பத்துப் பயக, அந்த வீட்டுக்குப் போயிட்டு வருவாங்க. 

அந்த தாசி வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்காரி நல்லவ. சுத்தமானவ. எத்தன பயக, அந்த வீட்டுக்குப் போறாங்கண்டு எண்ணியெண்ணி, அடுத்த பொம்பளகிட்ட சொல்லுவாளாம். ஒரு பய போகயில, ஒரு கல்லெடுத்து குலுமைக்குள்ள போட்டு வப்பாளாம். 

இப்டிப் போட்டுக்கிட்டிருக்கயில, குலும நெறையறதுக்குள்ள நல்லவ செத்துப் போயிட்டா. சாகவும், எமன், அவ உசுர, மேலயும் போகவி டாம, கீழயும் இருக்கவிடாம, கல்லு – முள்ளு – காடு மேடுகள்ல இழுத்துக்கிட்டிருக்கா. 

அந்தரத்ல இருக்கயில, ஈஸ்வரியும் ஈஸ்வரனும் அந்த வழியா வராங்க. நாதா! இந்தப் பொண்ணுசுர, ஏ… இப்டி, மேலயும் போக வி டாம, கீழயும் இருக்கவி டாம, இப்டி, கல்லுலயும், முள்ளுலயும் இழுத்துக்கிட்டிருக்கானேண்டு கேக்குறா. 

அப்பு: பரமசிவன், ரொம்ப கோவப்பட்டு, இந்தப் பொம்பளகளே இப்டித்தர். எதுக்கெடுத்தாலும் வௌக்கங் கேட்டுக்கிட்டே இருக்குறது. ஒங்கூட வந்ததே தப்பு. சரி பெண்ணே! இங்ஙன ஒக்காந்திரு,நர் ஒரு எடத்துக்குப் போயிட்டு, சீக்கிரம் வந்திர்ரேண்ட்டு பரமசிவன் போயிட்டாரு. 

ஈசுவரி, அங்க ஒக்காந்திருக்கா, ஒக்காந்திருக்கயில, குண்டிப் பகுதிச் சீலயக் கரயான் திண்டிருச்சு. பின்னால் பூராம் ஒட்டோட்டயா இருக்கு. அவமானப்பட்டுப் போனோம்ண்ட்டு தெகச்சு நிக்கிறா. 

அப்ப ஈசுவரன், ஊசி பாசி விக்கிற கொறவன் மாதிரி, அங்கிட்டிருந்து, வாராரு. 

ஆம்பள வர்ரத பாத்திட்டு, ஈசுவரி கூனிக்குறுகி நிக்கிறா. கிட்ட வந்தாரு. கிட்டத்ல வரவும் ஐயா!! இந்த சீலயத் தச்சு குடுங்கயாண்டு, ஈசுவரி கேக்குறா. தச்சுக் குடுத்தா, எனக்கு என்னா குடுப்பேண்டு ஈசுவரன் கேக்குறாரு. அதுக்கு அவ, என்னா கேட்டாலும் தரேண்டு சொல்றா. 

மானத்த எனக்கு அடிமையாக்குவயாண்டு கேக்குறாரு. மானத்தக் காத்த ஒரு ஆடவனுக்கு, மானத்த அடிமையாக்குறதில தப்பில்லண்டு சொல்றா.. 

என்னா பெண்ணே!! சீலயத் தச்சுக்குடுத்த ஒரு சின்ன ஒதவிக்கு தன்னயே குடுக்க தயாராயிட்டயே, ஒன்ன மாதிரிதா, பூலோகத்ல இருக்கிற பொண்ணுகளும், சந்தர்ப்பங்களாலும், தேவைகளாலும், இச்சைக்கு அடிமையாகுராங்க. இது ஆணுக்கும் – பெண்ணுக்கும் சகசம். 

ஒரு தேவைக்காக, நிய்யி அடிமையாயிட்ட, நிய்யி கெட்டுப் போனதப் பெரிசா நெனச்சு, ஒன்னய நர் அவமானப்படுத்ல. பொண்ணுக்குப் பொண்ணு அவமானப்படுத்துனதுனாலதர், அந்த உசுரு எமங்கையில இந்தப்பாடுபடுது. ஒரு பொண்ணு பொரசு, அதது பிரியத்துக்கு நடந்தா, அத, ஏ…வெளிப்படுத்தணும். இவ, நீதியா இருந்தால் இவ அளவுக்குத்தான இருக்கணும், அடுத்தவங்களப் பத்தி பேசுறதுக்கு உரும இல்ல. சரி! வா பெண்ணே! போவோம், எல்லாம் விதிப்படித்தா நடக்கும்ண்ட்டு போயிட்டாங்களாம். 

– மதுரை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள், நீதி விளக்கக் கதைகள், முதற் பதிப்பு: 1999, மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *