அழைத்து வருவோம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 13, 2025
பார்வையிட்டோர்: 88 
 
 

(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஆதித்திருச்சபை நாட்களில் மானுடப் பிறவிகளை அடிமைகளாக விற்கும் வழக்கமிருந்தது.

‘ஒனேசிமு பிலேமோனுடைய அடிமை. அவன் பிலமோனை விட்டு ஓடி வந்துவிட்டான். பவுலடியா ரால் குணப்பட்டான். பவுல் மீண்டும் அவனைப் பிலமோனிடம் அனுப்பினான்’ என்ற செய்தியை விவி லிய நூலில் வாசிக்கிறோம்.

அடிமைகளாயிருந்த நம்மை இயேசுகிறிஸ்து தம் இரத்தத்தால கிரயத்துக்கு வாங்கினார். ஆம், நாம் கிரயத்துககுக் கொள்ளப்பட்டவர்கள். ஆனாலும், நாம் கிறிஸ்துவுக்குள் சுதந்திரமும்- சுபிட்சருமாய் இருக் கிறோம்.

கிரயத்துக்குக் கொண்ட கிறிஸ்து பெருமானுக்கு நாம் ஆற்றவேண்டிய கடமை யாது?

அந்திரேயா முதலாவது தன் சகோதரனாகிய சீமோனைக் கண்டு, அவனை இயேசுவினிடத்தில் கூட்டிக் கொண்டு வந்தான்.

கால் காயப்பட்ட ஒருநாய்க்கு வைத்தியனொருவன் சிகிச்சை செய்து சுகம் பெற்றவுடன்—அந்நாய் காயம் பட்ட மற்ற நாய்களை அந்த வைத்தியனிடம் கூட்டிக் கொண்டு வந்ததாம்.

ஆன்ம சுகம் பெற்ற நாம் பாவப்பிணியிலும் அடிமைத்தனத்திலும் உழண்டு கிடப்போரை ஆண்ட வரிடம் அழைத்து வருவதே நம் கடமையாகும்.

“கர்த்தாவே, நான் உமது அடியேன், என் கட்டுகளை அவிழ்த்து விட்டீர்” [சங்கீதம் 116;16]

“கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே, ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும், உங்கள் ஆவி யினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள்”. [கொரிந்தியர் 6:20]

– குருமாணிக்கம் உவமைக் கதைகள் 101, முதற்பதிப்பு: ஏப்ரல் 1962, ஜெயா நிலையம், பாளையங்கோட்டை.

ஆர்.எஸ்.ஜேக்கப் பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *