அழகு சிரிக்கிறது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 24, 2026
பார்வையிட்டோர்: 146 
வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்

(1990ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அமிர்தலிங்கம் தன் நண்பர் இராமசாமியின் மகளின் திருமணத்திற்குப் போய் இருந்தார். அந்தத் திருமணத்தில் ஓடி ஆடி வேலை செய்த அந்தப் பையனைப் பார்த்தார். பையன் ஒரு சராசரி மனிதனின் உயரம், அதற்கேற்ற உடல் அமைப்பு. அரும்பு மீசை, குறும்புப் பார்வை, சுறுசுறுப்பு நிறைந்தவனாக இருந்தான். ஆனால் காக்கைக் கூட தோற்றுப்போகும் அளவுக்கு நிறம். மூக்கு குடை மிளகாய் போன்றிருந்தது. அப்படி இருந்தும் அமிர்தலிங்கம் அந்தப் பையனைப் பற்றி அறிந்து கொள்ள விரும்பினார். இராமசாமி உட்பட அவரின் குடும்பத்தினர் அனைவரும் அப்பையனின் சொல் கேட்டு நடப்பவர்களாக இருந்தார்கள். அதனால் இராமசாமிக்கு நிச்சயம் அப்பையனை நன்றாக தெரியும் என்று நம்பிக்கை அமிர்தலிங்கத்திற்கு உண்டாயிற்று. லீவு முடிந்து அடுத்த வாரம் இராமசாமி வேலைக்கு வந்து விடுவார். அப்போது கேட்டு தெரிந்து கொள்வோம் என்ற எண்ணத்துடன் வீடு திரும்பினார்.

மறுவாரம் இராமசாமி வேலைக்குத் திரும்பிவிட்டார். சாப்பாட்டு நேரத்தில் அமிர்தலிங்கம் இராமசாமியைத் தனியே அழைத்துக் கொண்டு போய், அந்தப் பையனைப் பற்றி விசாரிக்கத் தொடங்கினார்.

“பையனின் பெயர் சுந்தரம். சிறுவயதிலேயே பெற்றோர்களை இழந்துவிட்டான். உறவு என்று சொல்வதற்கு இருப்பவள் உடன் பிறந்த அக்கா. அவளுக்கும் திருமணம் ஆகிவிட்டது. சுந்தரம் ஒரு வங்கியில் வேலை செய்கிறான். மிகவும் கெட்டிக்காரன், திறமைசாலி, சொந்தமாக வீடு வாங்கி வைத்திருக்கிறான். நல்ல பண்பாளன். இன்னும் திருமுணம் ஆகாதவன். ஆள் அழகாகத்தான் இல்லை. ஆனால் அன்பும் பண்பும் நிறைந்தவன். அவனை யாராவது மணந்து கொண்டாள் மகாராணியாக வாழலாம் என்று பையனின் சரித்திரத்- தையே இராமசாமி எடுத்துக் கூறிவிட்டார். அதுமட்டுமல்ல எனக்கு இன்னொரு பெண் இருந்தால் அவனை மருமகனாக்கி கொள்வேன். அவனை மருமகனாக்கிக் கொள்ளும் அதிர்ஷ்டசாலி யாரோ? என்றார் இராமசாமி.

“அந்த அதிர்ஷ்டசாலி நானாக இருக்கக் கூடாதா?” என்றார் அமிர்தலிங்கம்.

“நீ என்னப்பா சொல்கிறே?” என்றார் இராமசாமி.

“என் மகள் வதனாவுக்கு சுந்தரத்தை கணவனாக்க விரும்புகிறேன்”

”நீ உண்மையாகவா சொல்கிறாய்? அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வந்துவிடாதே. உன் மகள் வதனா மிகவும் அழகான பெண். அவளுக்கும் சுந்தரத்துக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. வேண்டுமானால், உன் மகளை முதலில் சுந்தரத்தைப் பார்க்கச் சொல்லிவிட்டு, பிறகு ஒரு முடிவுக்கு வருவது நல்லது என்று நினைக்கிறேன்” என்றார் இராமசாமி.

“அழகு மட்டும் இருந்தால் போதுமா? அன்பும் பண்பும் வேண்டாமா? அழகான பையன் என்று என் மூத்த மகளைக் கொடுத்தேன். அவள் நிலை என்ன? அடி, உதை என்று அழுது கொண்டு வீட்டில் வந்து இருக்கிறாள். அவளுடைய வாழ்க்கையைப் போன்று, சின்னவளுடைய வாழ்வும் அமைந்துவிடக் கூடாது என்றுதான் இந்த இந்த முடிவுக்கு வந்து வந்து இருக்கிறேன்” என்றார் அமிர்தலிங்கம்.

“என் வீட்டில் என் பேச்சுக்கு மறுபேச்சு என்பது கிடையாது. நீ பையனிடம் விவரத்தைச் சொல்லி சாதகத்தை வாங்கி கொண்டு வா” என்று தொடர்ந்தார் அவர்.

இராமசாமி சுந்தரத்தைப் பார்த்து, விவரத்தைச் சொல்லி, சாதகத்தை வாங்கி வந்தார். சுந்தரம் – வதனா இருவருக்கும் பொருத்தம் நன்றாக இருந்தது. பிறகு என்ன அமிர்தலிங்கம் பம்பரமாகச் செயல்படத் தொடங்கினார்.

மாப்பிள்ளையைப் பார்த்த வதனாவுக்கு அவனை எள்ளளவு கூட பிடிக்கவில்லை. அவள் தனக்கு அவனை மணந்து கொள்ள விருப்பமில்லை என்று எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் செவிடன் காதில் ஊதிய சங்கு போல் ஆயிற்று.

“நான் சொன்னபடி இந்தத் திருமணம் நடக்காவிட்டால் இந்த வீட்டில் என் பிணத்தைத்தான் பார்ப்பீர்கள்” என்று கூறிவிட்டார் அமிர்தலிங்கம்.

குறிப்பிட்ட நாளில் சிக்கனமாக பதிவு திருமணம் நடைபெற்றது. பிறகு அருகில் இருந்த ஆலயத்திற்குச் சென்றுவிட்டு, எல்லோரும் சுந்தரத்தின் வீட்டிற்குச் சென்றார்கள். அங்கு விருந்துக்கான ஏற்பாடு கள் எல்லாம் செய்யப்பட்டு இருந்தன.

விருந்து முடிந்ததும் வதனாவிடம், அமிர்தலிங்கமும் அவர் மனைவி கமலமும் போய், “எங்களுக்கு நேரமாகி விட்டது. நாங்கள் போய்விட்டு வருகிறோம்” என்றார்கள்.

“இனிமேல் இங்கே வராதீர்கள். என் பேச்சைக் கேட்டு நடக்காவிட்டால் என் பிணத்தைத்தான் பார்ப்பீர்கள் என்று என்னைப் பயமுறுத்தி பாழ் கிணற்றில் தள்ளி விட்டீர்கள். இனிமேல் நீங்கள் ஏன் இங்கு வரவேண்டும்? உங்கள் வீட்டில் இருந்த ஒருத்தி செத்துப் போய்விட்டாள் என்று நினைத்துக் கொண்டுப் போங்கள்” என்று கோபமாகக் கூறினாள் வதனா.

”வாயை மூட்டி. பெத்தவங்களுக்குத் தெரியும் பிள்ளைக்கு எப்படி வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பது என்று. இதைப் போகப் போகப் புரிந்து கொள்வாய்” என்று பதில் கூறினாள் கமலா.

“சரி! சரி புறப்படு நேரமாகிறது” என்று அமிர்தலிங்கம் கமலத்தை அழைத்துக் கொண்டு மாப்பிள்ளையிடமும் மற்றவர்களிடமும் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டார்.

அன்றிரவு, வதனா அலங்கரிக்கப்பட்டு, அறைக்குள் அனுப்பப்- பட்டாள். அங்கே. சுந்தரம் படுக்கையில் அமர்ந்திருந்தான். “வா வதனா” என்று அழைத்தான்.

“பயப்படாதே! நான் உன்னை ஒன்றும் செய்துவிட மாட்டேன். உன்னுடைய அப்பா என்னிடம் உன் சம்மதத்துடன்தான் இந்தத் திருமணம் நடக்கிறதுஎன்று சொல்லி என்னை ஏமாற்றிவிட்டார் என்பதை நானும் இப்போதுதான் தெரிந்துகொண்டேன். அதற்காக நான் உன்னிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்ளுகின்றேன். இன்னொன்- றும் இந்த நேரத்தில் கூறுகிறேன். கேட்டுக் கொள். உன்னைத் தொடவும் உன்னிடம் இன்பம் பெறவும் எனக்கு எல்லா உரிமைகளும் உண்டு. இருவர் மனம் கலந்தால்தான் இன்பம். ஒருவர் மட்டும் முயற்சித்தால், அவள் துணைவியாக இருந்தாலும் அது கற்பழிப்பு. எனவே நான் உன்னை உன் அனுமதி இல்லாமல் தொடவே மாட்டேன். போய் உடையை மாற்றிக் கொண்டு படு” என்றான்.

வதனா “தன்னை தொட வரும்போது அவனுடைய அசிங்கத்தைச் சுட்டிக்காட்டி அவனை இழிவுபடுத்த வேண்டும்” என்று எண்ணிக் கொண்டிருந்தாள். ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லாமல் ஆக்கிவிட்டானே சுந்தரம்.

“இன்னொரு விஷயமும் சொல்கிறேன். அதையும் கேட்டுக் கொள். இந்த அறைக்குள் தான் நாம் கணவன் மனைவி அல்ல. இந்த உலகுக்கு நாம் கணவன் மனைவிதான். அதாவது சட்டப்படி நாம் விவாகரத்து செய்து கொள்ளும் வரை. எனவே நீ வெளி உலகுக்கு என் மனைவியாக நடித்துத் தான் ஆக வேண்டும்” என்றான் சுந்தரம். 

சுந்தரம் வதனாவுக்கு வேண்டியவற்றை எல்லாம் அவள் கேட்காமலே வாங்கி வந்து கொடுத்தான். தனிமையில் இருந்த அவளுக்கு பொழுதுபோக்க வானொலி, தொலைக்காட்சி, வீடியோ, கதைப்புத்தகங்கள் எல்லாம் உதவின. 

தாய் வீட்டில் சமைக்கக் கற்றிருந்த வதனா. சுந்தரத்திற்குச் சுவையாக சமைத்துப் போட்டாள். சுவையான உணவைச் சாப்பிடும் போது அவன் வதனாவைப் பாராட்டத் தவறவில்லை. 

விபத்து ஒன்றில் நொண்டியாய்ப் போன ஒருவரைத் தன் அன்புத் தோழி ஒருத்தி மணந்து கொண்டதை வதனா அறிந்தாள். அழகான தன் தோழி அப்படிச் செய்ததை எண்ணி ஆச்சரியப்பட்டாள். ஒரு சமயம் அவளைச் சந்தித்தப்போது வதனா வெளிப்படையாகவே கேட்டுவிட்டாள். 

“தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் தரத்திலே குறை உண்டா- குமோ? அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் அவரின் அன்புக்கு குறை இல்லையே” என்றாள் அவள். 

அப்போதுதான் வதனம் அழகான கணவனைப் பெற்றிருந்தும் தன் அக்காளின் வாழ்க்கை துன்பம் நிறைந்து இருப்பதை உணர்ந்தாள். சுந்தரத்திற்கு அழகு இல்லாவிட்டாலும் அவரிடம் அன்பு நிறைந்திருந்- தது. அதனால்தான் அவருக்கு நண்பர்கள் பலர் இருந்தனர். 

கருமை நிறம் படைத்த கண்ணனையும், கவிமுகம் படைத்த ஆஞ்சனேயரையும் மக்கள் வணங்கவில்லையா? தன்னிடம் பக்தி- கொண்டுள்ள பக்தர்கள் மீது அன்பு காட்டுவதால்தானே அக்கடவுளை வணங்குகிறார்கள் என்று எண்ணிய வதனாவுக்கு தன் கணவன் மீது அன்பு உண்டாயிற்று. அதனை உடனே சுந்தரத்திடம் காட்டாமல், கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படுத்தினாள். வேலைக்குப் புறப்படும் போது சுந்தரத்திற்கு வேண்டியவற்றைச் செய்து, வாசல் வரை சென்று வழி அனுப்பினாள். வீடு திரும்பும்போது வாசலில் நின்று வரவேற்றாள். விடுமுறை நாட்களில் வெளியில் சேர்ந்து போனார்கள். தன்னுடன் கோயிலுக்கு வருமாறு தன் கணவனை அழைத்தாள். இவற்றிலிருந்து வதனா அடைந்துள்ள மனமாற்றத்தை சுந்தரம் அறியாமல் இல்லை. 

வதனா தானே கடைக்குச் சென்று ஓர் அழகான குழந்தை படம் ஒன்றை வாங்கி வந்து படுக்கையறையில் மாட்டி வைத்தாள். ‘உன் விருப்பம் இல்லாமல் உன்னைத் தொட மாட்டேன்” என்று கூறிய கணவன் காலில் விழுந்தாள். அவன் அவளைத் தூக்கி “இது எல்லாம் என்ன வதனா?” என்று கேட்டான். தன்னை மன்னித்து விடுமாறு அழுதாள். 

தான் தாய்மைப் பேறு பெற வேண்டும். தனக்கொரு குழந்தை வேண்டும் என்று கேட்டாள். அதைக் கேட்டசுந்தரம், “வதனா, நான் அழகாக இல்லாததால் கடந்த இரண்டு வருடங்களாக பெற்று வந்த வேதனை இருக்கிறதே. அதை சொல்ல வார்த்தையே இல்லை. அம்மாதிரியான வேதனையை எனக்குப் பிறக்கும் பிள்ளை என்னைப் போலவே பிறந்து விட்டால், அடைய வேண்டியிருக்கும். எனவே நமக்கு குழந்தை வேண்டவே வேண்டாம்” என்றான். 

அதைக் கேட்ட வதனாவின் உள்ளத்தில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல் இருந்தது. தன்னுடைய அழகு தன்னைப் பார்த்து சிரித்ததை உணர்ந்தாள். தன்னுடைய கணவனின் மனதை அந்த ஆண்டவன்தான் மாற்ற வேண்டும் என்று எண்ணி இறைவனை வணங்கத் தொடங்கினாள். 

– காலம் கடந்து விட்டது, முதற் பதிப்பு: ஏப்ரல் 1990, 25வது ஆண்டு நிறைவு விழா, இந்தியர் பண்பாட்டு நிகழ்ச்சி ஏற்பட்டுக் குழு, சிங்கப்பூர்.

இரா.துரைமாணிக்கம்2 இரா.துரைமாணிக்கம் (பிறப்பு: அக்டோபர் 15 1945) இவர் ஒரு சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளராவார். தமிழ்நாடு, தஞ்சை மாவட்டம் வேப்பக்குளம் எனுமிடத்தில் பிறந்த இவர் சிங்கப்பூருக்கு புலம்பெயர்ந்து அங்கு விவேகானந்தர் தமிழ்ப் பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியையும், உமறுப் புலவர் உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலைக் கல்வியையும் கற்றார். தமிழ், ஆங்கிலம், மலாய் போன்ற மொழிகளில் தேர்ச்சிமிக்க இவர் தமிழாசிரியராகப் பணியாற்றிவந்தார். அத்துடன் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் சார்பில் 1999ல் சிங்கப்பூர்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *