கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: மல்லிகை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 7, 2025
பார்வையிட்டோர்: 725 
 
 

(1985ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பின்வரிசைகளில் எங்கோ யாரோ எதற்கோ ஒருதரம் குசுகுசுத்ததை விட, மற்றப்படி இந்தச்சபை அமைதியாயிருக்கி றது. விசிறியின் ரீங்காரமும் பேச்சாளர் குரலும் மட்டுந்தான். விமர்சனத்துக்கான நூலைப் பத்து நிமிஷமாக அவர் உற்சாகத் துடன் ஆய்ந்துகொண்டிருக்கிறார் தத்துவார்த்தக் கண்ணோட்டத்தில்…

கட்டுபெத்தை. மண்டிக் கிடக்கின்ற காட்டுச் சூரியகாந்திச் செடிகள். வெய்யி லுக்கு மணங் கிளப்புகின்ற புற்கள் – கபூக் தரையை மூடிக் கம்பளமாய்க் கிடக்கிற புற்கள். இதமான மணம். நில அளவை வெளிக்களப்பயிற்சிக்கான நிலம், மேடும் சரி வும் வளைவுந் தொலைவுமாய்ப் பரந்து கிடக்கின்றது. இடையிடையே பொருத் திக் கொண்டிருக்கிற கட்டிடங்கள்-புதுக் கருக்கு அழியாதவை. 

இவர்களுக்கும் புதிதாய்த்தானிருந்தது. ‘த்றில்’லாய்த்தானிருந்தது. வெள்ளைத் தொப்பியும் கையிற் களக் குறிப்புக் கொப்பியுமாய், இந்தக் குழுவில் ஏழுபேர். அன்றைக்கு யார் சங்கிலி பிடித்ததென்று நினைவில்லை. ராஜாவும் சந்திரே யுந்தான் அளந்தார்கள். குழுவின் எல்லாக் குறிப்புகளிலும் அந்த அளவுகள் பதிந்தன. 

பயிற்சி ஆசிரியர் ஃபெர்னாண்டோ, பிறகு குறிப்புக் கொப்பிகளைப் பரிசீலித்துக் கொண்டிருந்தபோது கேட்டார். 

”எப்படி இது உங்களுக்கு வருகிறது?” 

சரியான அளவுகளிலும் பார்க்க எல்லா அளவுகளும் வஞ்சகமில்லாமல் ஆறடி ஆறம் கூடியிருந்தன. 

“இந்த ‘ரேப்’ சரியில்லை ஸேர்…” நாடாச் சுருளை வட்டப்பெட்டிக்குள்ளால் இழுத்துக் காண்பித்தான் ராஜா. முன்னால் ஒரு துண்டில்லை. நாலடியிலிருந்துதான் ஆரம்பித்தது. 

“…அப்படியிருந்தும் சரியாய்த்தான் அளந்தோம்” என்றான் சந்திரே. 

“எப்படி?”

“இல்லாத மூன்றடியைக் கூட்டிக் கூட்டி..” 

ஃபெர்னாண்டோ விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தார். 

கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது. 

– மல்லிகை, 1985.

– இன்னொரு வெண்ணிரவு (சிறுகதைகள்), முதல் பதிப்பு: அக்டோபர் 1988, வெண்புறா வெளியீடு, யாழ்ப்பாணம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *