அல்பனில்லையா நான்?





வசந்த் வாட்டமாக இருந்தான். ‘என்ன ஒரு மாதிரி இருக்கீங்க? ஒடம்பு கிடம்பு சரியில்லையா?’ என்றாள் மனவி.
‘ஒண்ணுமில்லை…!’ மழுப்பினான்.
‘ஒங்களை எனக்குத் தெரியாதா? ஏதோ மனசுக்குள்ள பொகையுது.. அது நல்லாத் தெரியுது.. சொல்லுங்க என்ன பிரச்சனை?’ என்றாள்.
‘சே! எப்படிக் கண்டு பிடித்தாள்?’ தெரியவில்லை. ‘சொல்லு எப்படிக் கண்டு பிடிச்சே?’ என்றான்.
‘அப்படி வாங்க வழிக்கு. ஒண்ணுமில்லைன்னு சொன்னீங்களே?! என்ன பிரச்சனை?’ என்றாள் மாறுபடியும்.

‘இல்லே… வரவன் போறவனுக்கெல்லாம் எப்பவும் நாமதான் ஏதாவது கொடுக்கிறோம். இன்னைக்கு வரைக்கும் நாளு கிழமைன்னா நம்மக் கூப்பிட்டு யாரவது ஒரு பொடவை சட்டைத் துணி இல்லை., அதிகமா இல்லை ஒரு நூறு ரூபாய் காசு கொடுத்திருக்காங்களா? நல்ல நாள் பொல்லாத நாளைக்கு ஊருக்கெல்லாம் நாமே கொடுத்து அழவேண்டி யிருக்கே?!’ அங்கலாய்த்தான்.
அவள் சொன்னாள். ‘இத பாருங்க., இதுக்கா வருத்தப் படுறீங்க?! யோசிச்சீங்கன்னா ஒண்ணு நல்லாப் புரியும். நாளும் கிழமையும் கொடுக்கிறோமேன்னு சொல்றீங்களே?! மத்தவங்களுக்குக் கொடுக்க நமக்குக் கடவுள் கொடுத்திருக்கானேன்னு நெனைங்க..! நாம போய் மத்தவங்கிட்ட கைநீட்டறா மாதிரி பகவான் வைக்கலையே நம்மை!’ என்றபோதுதான் ‘சீ! பிறருக்குக் கொடுக்கக் கிடைத்த வாய்ப்பைக் குறைபட்டுக் கொண்டோமே?! அல்பனில்லையா நான்னு!? அவன் மனசுக்குப் பட்டது.
வளர் கவி எழுதிய ” அல்பனில்லையா
நான் ” சிறுகதை படித்தேன். பிறர்க்கு
உதவி செய்வதில் உள்ள இன்பமே அவனியில் பெரிது என்பதை கதாசிரியர் எளிமையாக எடுத்துரைத்
துள்ள விதம் அருமை.. வாழ்த்துக்கள்…