அன்பை மட்டுமே தேடும் மனம்





ஒரு பிரபலமான நகரத்தில் ஒரு கம்பனியில் டேவிட் என்பவர் அலுவலகம் பணியில் வேலைப்பார்த்து வந்தார். அவர் மனதில் இருக்கும் சில காயங்களை வெளியில் காட்டிக்கொள்ளாமல் வேலைப் பார்த்து வந்தார். அந்த சூழ்நிலையில் மகேஷ் என்பவர் அலுவலக பணிக்கு சேர்ந்தார். நாளடைவில் இவர்கள் இருவரும் நண்பர்களானார்கள். மீண்டும் அலுவலக பணிக்கு தேவன், வேல் என்ற பெயருடன் இருவர் சேர்ந்தார்கள். இவர்கள் நால்வர்களும் ஒற்றுமையுடனும், சந்தோஷத்துடனும், தனது பணிகளை செய்து வந்தார்கள் .
டேவிட் என்பவரின் காயங்கள் நாளடைவில் மறந்து அவருடைய இயல்பான குணங்களை வெளிக்காட்டி பழக ஆரம்பித்தார். அவருடைய இந்த மாற்றத்துக்கு காரணமானவர் மகேஷ். டேவிட் என்பவர் அன்பிற்காக ஏங்கிக்கொண்டிருந்த தருணத்தில் டேவிட், தேவன், வேல் இவர்கள் மூவரும் மூலமாக டேவிட் க்கு அதிகமான மாற்றமும், சந்தோஷமும், கிடைத்தது.
டேவிட் தனது காயங்கள், வேதனைகள், எல்லாவற்றையும் மறந்து தனக்கு கிடைத்த அன்பை மட்டுமே ஏற்றுக்கொண்டு வாழ ஆரம்பித்தார். டேவிட் தன் நண்பர்கள் மூவரின் வாழ்க்கையை பற்றி யோசிப்பார் . இவர்கள் மூவருக்கும் எதாவது ஒரு நல்லது நடக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருப்பார். தன் நண்பர்களிடம் இதை விட நல்ல வேலையில் அமர வேண்டும் என்று அவ்வப்போது கூறிக்கொண்டே இருப்பார்.
டேவிட் , தேவன், வேல் இவர்கள் மூவரும் தங்களுடைய தகுதியை வளர்த்துக்கொண்டு வேற ஒரு நல்ல வேலைக்காக தயாராக இருந்தார்கள். மூன்றாவது நண்பர் வேல் என்பவர் வங்கியில் வேலைக்கிடைத்து சென்று விட்டார். டேவிட் க்கு மிகுந்த சந்தோசம் . அதே சமயத்தில் ஒருவர் நம்மை விட்டு பிரிந்து செல்கிறார் என்ற வருத்தமும் இருந்தது. நமக்கு இன்னும் இரண்டு நண்பர்கள் கூட இருக்கிறார்கள் என்று மனதை தேற்றி கொண்டார். ஒரு நாள் தேவன் என்பவர் திடீர் என்று நான் படித்து அரசு வேளைக்கு செல்ல ஆசைப்படுகிறேன். ஆதலால், நான் இந்த வேலையை பணிநீக்கம் செய்யப்போவதாக கூறினார். டேவிட் க்கு இது ஒரு நல்ல விஷயமாக தோன்றினாலும், டேவிட் மனம் தேவனை பிரிய இடம் கொடுக்கவில்லை. வேதனைக்கு தள்ளப்பட்டார் டேவிட். பின்பு, தேவன் நாங்கள் நல்லா இருக்க வேண்டும் என்று எங்களுக்கு வழிகாட்டினீர்கள். நீங்கள் சொன்ன பாதையில் நாங்கள் செல்கிறோம். நீங்கள் வேதனை படக்கூடாது, நாங்கள் எப்போதும் உங்களுடன் இருப்போம் என்று அவரும் பிரிந்து செல்கிறார்.
மகேஷ் என்பவர் மட்டும் தன்னுடன் இருக்கிறார். இவர்கள் இருவரும் ஏழு வருடங்களாக நண்பர்களாக இருக்கிறார்கள். சில வருடங்களுக்கு பிறகு . மகேஷ் க்கு வெளிநாட்டில் வேலை கிடைத்தது. மகேஷ்க்கு மிகுந்த சந்தோசம் நான் எதிர்பார்த்த வேலை எனக்கு கிடைத்து விட்டது என்று, மிகுந்த ஆனந்தத்தில் இருக்கிறார். டேவிட் டும் நண்பன் எதிர் பார்த்த வேலை கிடைத்தது என்று நண்பன் சந்தோஷத்தில் பங்கு எடுத்துக்கொண்டார். ஆனால் , தனது நண்பர் தன்னை விட்டு பிரியப்போவதை பற்றி அவர் மனதுக்கு தோன்றவில்லை. டேவிட் தனது இரண்டு நண்பர்களை பிரிந்து மனதை பக்குவப்படுத்தி வைத்துக்கொண்டார். ஆதலால்,
மகேஷ் பிரிவதை டேவிட் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. தனது நண்பர்கள் மூவரும் நல்ல நிலைமைக்கு வந்துவிட்டார்கள் என்ற சந்தோசம் மட்டுமே அவர் மனதில் ஆழமாக இருந்தது. சில நாட்களில் மகேஷ் வெளிநாடு சென்று விட்டார். தன் நண்பர்கள் தன் அருகில் இல்லை என்றாலும் கைபேசி மூலமாக எல்லாவற்றையும் பகிந்து கொள்வார்கள்.
நாட்கள் போக … போக…. நண்பர்களின் வேலை பளுவின் காரணமாக கைபேசி மூலம் பேசுவது குறைய ஆரம்பித்தது. டேவிட் மறுபடி தனிமையாக இருப்பதாக உணர ஆரம்பித்தார். துயரத்தில் தள்ளப்பட்டார். மீண்டும் தனது விட்டு போன நண்பர்கள் எல்லாருடைய அலைபேசி எண்ணை சேகரித்து பேச ஆரம்பித்தார்.
இருந்தாலும், அவர் மனம் படும் துன்பத்தை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. தனது நண்பர் மகேஷ் யிடம் அவர் படும் துன்பத்தை பற்றி எடுத்துரைத்தார். மகேஷ் தனது நண்பர் துன்பத்தை பற்றி புரிந்து கொண்டு சமாதானம் கூறுவார், ஆறுதல் கூறுவார், அந்த நேரத்தில் டேவிட் மனம் சமாதானம் ஆகவும், தன் நண்பர்களுடைய நிலைமையையும் புரிந்து நடந்து கொள்வார்.
நண்பர் கூறும் சமாதானம் நான்கு நாட்கள் தான் அவர் மனதில் இருக்கும். மறுப்படி புலம்ப ஆரம்பிப்பார். ஒரு கட்டத்தில் டேவிட் யிடம் மகேஷ் நீ புறப்பட்டு நான் இருக்கும் இடத்துக்கு “வா” என்று கூறினார். இவருக்கு தன் நண்பரை பார்க்கப்போகிறோம் என்று அளவு கடந்த மகிழ்ச்சியோட செல்கிறார். தனது நண்பனை பார்த்து ஆனந்த கண்ணீர் மல்க உறவாடினார்.
மகேஷ் பசியோட வந்த தன் நண்பருக்கு சாப்பாடு கொடுத்து அவரிடம் பேசி, சிரித்து, மனம் மகிழ்ச்சியோட உறவாடிக் கொண்டார்கள் . டேவிட் தன் நண்பரிடமிருந்து பிரிந்து செல்ல நேரம் வந்து விட்டது. மகேஷ் தன் நண்பரிடம் நான் இப்போது ஒன்று உன்னிடம் சொல்கிறேன் கேள் என்றார். டேவிட்டும் , ம்ம்ம் கூறு என்றார். எனக்கு என் வாழ்க்கையை நினைத்தால் பயமாக இருக்கிறது என்றார் . டேவிட் ஏன்? என்றார் .
நான் உன்னை பார்க்க வேண்டும், பேசவேண்டும் என்று நீ அடிக்கடி கூறுவது என்னால் எனது வேளையில் கவனம் செலுத்த முடியவில்லை என்று கூறினார். டேவிட்க்கு அதிர்ச்சியாக இருந்தது. ஓ!!! அப்படியா!!! என்று கூறி தன் நண்பரிடமிருந்து விடை பெற்றுக்கொண்டார். டேவிட் மூன்று நாட்கள் தனது நண்பனை சந்தித்த மகிழ்ச்சியில் இருந்தார். மறுபடி மகேஷ் கூறியதை யோசிக்க ஆரம்பித்தார். தன்னால் தன் நண்பன் கஷ்டப்படுவதை உணர்ந்தார். மகேஷ் க்கு தொந்தரவாக இருப்பதை டேவிட் விரும்பவில்லை. மீண்டும் டேவிட் தனிமையில் தள்ளப்பட்டார்….
அன்பை மட்டுமே எதிர்பார்த்து வாழ்பவன் அனாதைதான்.
மீண்டும்…
டேவிட் வாழ்க்கை அதே அன்பை தேடி போகிறது…
ஆசிரமத்தில் இரண்டு குழந்தைகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தேவையான அன்பை கொடுத்து அவர்கள் வளர்ச்சிக்கு பொறுப்பேற்றார் டேவிட்.
இப்படிக்கு
அன்பை மட்டுமே தேடும் மனம்
(மெய் நிகழ்வு)