அநியாயம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 14, 2025
பார்வையிட்டோர்: 216 
 
 

(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு ஊர்ல – ஒரு ராசா இருந்தாரு. அவரு நாப்பது கிராமங்களுக்கு ஒரு ராசாவா இருந்தாரு.  அவரு ராசாவா இருந்துங்கூட, தென்னாட்டச் சுத்திப் பாக்கல. அதுனால, தென் நாட்டச் சுத்திப் பாக்கணும்ண்டு, ராசாவுக்கு ஆசயா இருந்திச்சு. மந்திரியக் கூட்டிக்கிட்டு, நாட்டச் சுத்திப் பாக்கப் போறாரு. ஒரு – ஒரு ஊராப் போயிக்கிட்டிருக்காரு. 

போயிக்கிட்டிருக்கயில, அநியாயபுரம்ண்டு ஒரு ஊரு. அந்த ஊருக்கு வரயில, ராசாவே!! இந்த ஊருப்பேரு அநியாயபுரம். அநியாயமா ஏதாச்சும் நடக்கும். நம்மதர் எச்சரிக்கயாய் இருக்கணும்ண்டு, மந்திரி எச்சரிக்க செய்றாரு. 

இப்டி, பேசிக்கிட்டே, நடந்து வர்ரபோது, எதுக்கால ஒரு நொண்டி, நொண்டி நொண்டி நடந்து வந்துகிட்டிருக்கர் நொண்டியப் பாத்து, எப்டி இருக்றேண்டு ராசா கேட்டாரு. 

அதுக்கு நொண்டி, நிய்யி தானே எங்கால ஒடிச்ச. இப்ப எப்டி இருக்கேண்டு கேக்றீயேண்டு, அநியாயமாச் சொல்றா. இதென்னடா! வம்பா இருக்குண்ட்டு, ராசாவும் – மந்திரியும் நொண்டியக் கடந்து போறாங்க. போகயில, அங்கிட்டிருந்து,  ஒரு குருட் வரா. குருடனப் பாத்து, நலம் விசாரிச்சுட்டு, ஏம்ப்பா!! அதோ போறானே, நொண்டி, அவ், நாந்தர் அவங்கால ஒடிச்சேண்டு சொல்றானே, இது அநியாயமா? இல்லயாண்டு ராசா கேட்டாரு. அதுக்கு, அந்தக் குருட், அவங் கால மட்டுமா ஒடுச்ச, எங்கண்ணயும் நீ தான கெடுத்தேண்டு சொல்றர். 

இது என்னடா அநியாயமா இருக்குண்ட்டு, அவன விட்டுத் தள்ளிக் கொஞ்ச தூரம், ராசாவும் – மந்திரியும் போறாங்க. எதுக்கால பிள்ளத்தாச்சி ஒருத்தி, ரெண்டு கொழந்தைகள நடத்திக் கூப்பிட்டுக்கிட்டு வரா. 

அவளப் பாத்த ராசா, ஏம்மா நல்லா இருக்கியாண்டு கேட்டுட்டு, நொண்டி சொன்னதயும், குருட் சொன்னதயும் அவகிட்டச் சொல்லறாரு. சொல்லவும் அதுக்கு அவ, அத மட்டுமா செஞ்சே. நீ தானே! என்னய, ரெண்டு பிள்ளைகளக் கையிலயும், ஒண்ண வகுத்துலயும் குடுத்திட்டு, விட்டுட்டுப் போனண்டு சொன்னா. 

ராசாவுக்கு ஒரே ஆச்சரியம். மந்திரிக்கிட்ட ஓசன கேக்குறாரு. அப்ப, மந்திரி சொல்றாரு, ராசாவே!! நொண்டிக்கிட்டப் போயி, நொண்டி!! உன், ஒரு காலயும் எடுத்திட்டு, என் இரண்டு காலயும் தரேண்டு, சொல்லுங்க. குருடனோட மற்றொரு கண்ணயும் எடுத்திட்டு, என் ரெண்டு கண்ணயும் தரேண்டு சொல்லுங்க. பிள்ளத்தாச்சிய, எங்கூட வாண்டு கூப்பிடுங்கண்டு, மந்திரி சொன்னாரு. 

அதேபோல, நொண்டியக் கூப்பிட்டு, நொண்டி!! அந்த ஒரு காலயும் வெட்டி எடுத்திட்டு, எங்காலு ரெண்டயும் வைக்ரேண்டு ராசா சொன்னாரு. 

அதுக்கு நொண்டி, வேணாம் ராசா. இந்த ஒரு காலே எனக்கு உருப்படியா இருந்தாப் போதும்ண்டு சொல்லிட்டுப் போயிட்டா. 

குருடங்கிட்டப் போயி, அந்த ஒத்தக் கண்ணயும் தோண்டிட்டு, அங்க, எங்கண்ணு ரெண்டயும் வைக்கிறேண்டு, ராசா சொன்னாரு. 

அதுக்கு குருட், வேணாம் ராசாவே! எனக்கு இந்த ஒத்தக் கண்ணே போதும்ண்டு, சொல்லிட்டு நகண்ட்டர். 

பிள்ளத்தாச்சியக் கூப்பிட்டு, ஒம் புள்ளக்கி என்னத்தானே தகப்பண்டு சொன்னே, எங்கூட வாண்டு கூப்பிட்டாரு. 

அதுக்கு அவ சொல்றா, என்னய்யா! எம் புருச் மலபோல இருக்கா. அதெப்டி ஒங்கூட வர முடியும்ண்டு சொல்லிட்டு நழுவிப் போயிட்டா. 

ராசாவுக்கு ஒரே வருத்தம். ஊருப் பேருக்குத் தக்கபடி நடக்குறாங்களே. ஊருப்பேர மாத்தணும்ண்டு, நெனச்சு, பேர மாத்தறதுக்கு ஆணை போட்டாரு. இப்டிச் செஞ்சா, என்னா வௌங்கும் மனுசரு, இப்டிப்பட்ட ஊருக்குள்ள குடியிருக்க முடியுமா? 

– மதுரை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள், நீதி விளக்கக் கதைகள், முதற் பதிப்பு: 1999, மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *