அடடா மழைடா… அடைமழைடா?

2
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 24, 2026
பார்வையிட்டோர்: 183 
வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்

சிறுகதைகள் இணையதளத்தில் 300வது சிறுகதை வெளியீட்டுள்ள எழுத்தாளர் வளர்கவி அவர்களுக்கு எங்களின் இதயம் கனிந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

ஒரு கதையை எழுதுவது சாதனை என்றால், தொடர்ந்து 300 கதைகள் படைத்து வாசகர்களின் உள்ளங்களைத் தொட்டிருப்பது ஒரு மாபெரும் இலக்கியப் பயணம். உங்கள் கற்பனை வளமும், எழுத்தாற்றலும், கதையாடல் திறனும் மேலும் மேலும் உயரங்களை எட்டட்டும்.

300வது கதை வெளியீடு என்ற இந்த மகத்தான மைல்கல்லை பெருமையுடன் கொண்டாடுகிறோம்.


அந்தக் கோயிலுக்குள் நுழையும் போதே வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது. அன்று நியூஸில் கூட இன்று கனமழைக்கு வாய்ப்பு என்று அறிவித்திருந்தது நினைவுக்கு வந்தது.

குழந்தை ரிஷிகாவையும் கூட்டி வராமல் இருந்திருக்கலாம். என்ன செய்வது.

படிக்கற குழந்தைகள் மழையில் நனைந்தால் வரும் ஜூன் ஒன்றாம்தேதியே பள்ளி என்று அறிவித்துவிட்டார்கள். மழையில் நனைந்துவிட்டால், சளி, இருமல் காய்ச்சல்னு தொந்தரவு வந்தா மறுபடியும் லீவு போடணும். லீவு நாள் பூராவும் பண்ணின அடாவடியால வீடு ரெண்டு பட்டதுதான் மிச்சம். ஏண்டா பெத்தோம்னு பண்ணீடுதுக இன்றைக்குக் குழந்தைகள்!.

ரிஷிகா மற்ற குழந்தைகளிலிருந்து மாறுபட்டவள். அடிக்கடி ஏன் எதாற்கு என்று கேள்வி கேட்டே நச்சரிப்பாள். சும்மா ஏன் என்னு கேட்காதேன்னு எவ்வளவு சொல்லியும் கேள்வி கேட்பதை விடவில்லை குழந்தை. கேள்வி கேட்பதைத் தடுக்கக் கூடாதாம். ம்ம்ம்ம்!

வானம் இருண்டது. கருக்கல் கட்டியது “டமால்னு” ஒடு பெரிய இடி இடித்தது சடசடவென கொட்டத் தொடங்கியது கனமழை. கனமழை அல்ல..! கல் மழை! ஐஸ்கட்டிகள் டண்ணு டண்ணு கோயில் கூரையில் விழ குலை நடுங்கத் தொடங்கியது.

“ஏம்ப்பா டம்மு டம்முன்னு மழை விழுது?’ குழந்தை ரிஷிகா கேட்க

“இது ஐஸ்மழை ‘ஆலங்கட்டி’ மழைனு இதைச் சொல்லுவாங்க” என்றான் பிரேம்.

இது எப்படி பெய்யுது?.

வானத்திலிருக்கற மேகத்திலிருக்கிற குளிர்ந்த நீர் ஐஸ் மழையா பொழியுது.

இல்லை! நீ சொல்றது தப்பு! என்றது குழந்தை.

அப்புறம் ஏனாம்?

நான் சொல்லட்டுமா? என்றது குழந்தை.

சொல்லேன் என்றதும்.

“மழைநீர் உறைஞ்சு மேகத்தில பெரிய அப்பம் மாதிரி இருந்ததாம். கடவுளுக்குத் தெரியாம வானத்திலிருக்கிற இரண்டு பூனைகள் அதைத் திருடிட்டு போய் ஒரு வானரத்திடம் கொடுக்க அது சரி நான் பங்கித் தரேன்னு சொல்லி கையிலிருக்கற தராசில் அந்த பனிக்கட்டி அப்பத்தை கொஞ்சம் கொஞ்சமாக கடிச்சு எடை போட, அப்போ அதுல இருந்து சின்ன சின்ன துண்டுகளா செதறின துண்டுகள்தான் இப்ப ஆலங்கட்டி மழையா மண்ணில் விழுது!” என்று குழந்தை சொல்ல…

அய்யே… இதென்ன புதுக்கதை? நீ சொல்றதை எப்படி நம்பறதாம்? என்றான் பிரேம்.

அட, அந்தக் காலத்துல நீங்களெல்லம் சொன்ன பூனைக்கு அப்பத்தைக் குரங்கு பங்கு போட்டுச்சுன்னு கதை சொன்னீங்க நாங்க நம்பலை?! திருடக்கூடாதுங்கறதை உணர்த்த கதை சொன்னீங்க.

கல்மழைக்கு நான் ஒரு காரணம் சொல்லீருக்கேன். காலத்துக்குத் தக்கபடி கற்பனை மாறும் தானே? மாற்றத்தை ஏற்றுக்க ஏன் மறுக்கறீங்க? ன்னு கேட்க, வாயடைத்து கடவுளை வணங்கினார்கள், குழந்தையைக் கோயிலுக்குக் கூட்டி வந்த பிரேமும் ஹரிணியும்.

வளர்கவி இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். கதைகள்: வளர்கவி வெளியிட்ட நால்கள் -…மேலும் படிக்க...

2 thoughts on “அடடா மழைடா… அடைமழைடா?”

  1. மன்னிக்கவும் பிழை .
    தங்களது 300 கதைகளுக்கும்
    வாழ்த்துக்கள்.

    வித்யா விஜயகுமார்.🙏🙏

  2. வளர்கவி அவர்களுக்கு எனது 300
    சிறு கதைகளுக்கு வாழ்த்துக்கள்.
    நான் தினமும் தங்களின் கதைகளை படித்து வியந்து
    இருக்கிறேன்.
    மேலும் மேலும் எழுத தங்களுக்கு வாழ்த்துக்கள்.
    வித்யா விஜயகுமார் 🙏🙏

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *