அக்கா – ஒரு பக்க கதை






”உங்க அக்கா ஒரு கிரவுண்ட் வாங்கியிருக்கா…! உங்க தங்கை ஒரு லட்சம் அரியர்ஸ் வாங்கினா. ரெண்டும் கஞ்சப் பிசாசு…”
என் மனுஷாளை குறை சொல்லாம இருக்க மாட்டியா?
ரவி வெடித்தான்.
“ஹூம்..! என் அம்மா வீட்டுக்குப் போறேன்…” போய் விட்டாள்.
ரமாவின் தாய் வீடு.
”சொந்தக்காரா பக்கத்துல வீடு பார்க்காதீங்கன்னேன். இப்ப, டாண்ணு உங்க அக்கா வந்துடறா, டேரா போடறா, ச்சேய்…”
ரமாவின் தம்பி மனைவி அங்கலாய்த்தாள்.
ரமாவுக்கும் கேட்டது, வெளியேறினாள்.
ரவியின் செல் ஒலித்தது.
”வினய் பேசறேன்….மாமா…அக்காவை என் ஒய்ஃப் குறையா பேசச் சொன்னேன். ஐடியா ச்க்ஸஸ். இனிமே, ரமா கோச்சிக்க மாட்டா…”
ரவி சிரித்தான்
– ச.பிரசன்னா (30-3-11)