கதையாசிரியர் தொகுப்பு: முனைவர் க.லெனின்

9 கதைகள் கிடைத்துள்ளன.

நாலணா சில்லரை

 

  அது ஒரு சிறிய வீடு. வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் சரியாக இருக்க வேண்டிய இடத்தில் கனகச்சிதமாகவே இருந்தன. வாழைப்பழமும் திராட்சையும் ஒரு பிளாஸ்டிக் பையில் அடைபட்டு கிடந்தன. அந்த வீட்டில் ஒற்றைக் கட்டில் மட்டும் போடப்பட்டிருந்தது. கட்டிலின் முன்னால் வெற்று நாற்காலி. ஆனாலும் கட்டிலில் மன இறுக்கத்தோடு படுத்திருந்தார் காசி தாத்தா. கண்களில் வழியும் நீரை துடைத்துக்கொள்ள கூட மனம் வரவில்லை. வழியட்டும் விடு என்று விட்டுருந்தார். வயசில் எப்படியெல்லாம் இருக்க முடியுமோ அப்படியெல்லாம்


தேன்மொழியாள் என்கிற தேவதை

 

  நடுசாமம். என் மனைவி அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தாள். நான் மட்டும் தூக்கம் வராமல் விழித்துக்கொண்டிருந்தேன். என் மனைவி நாற்பதைந்தை தாண்டியிருந்தாள். திருமணமாகி இருபத்தைந்து ஆண்டுகளில் நான் இப்படியொரு மனநிலையில் இருந்ததில்லை. எனக்கும் ஐம்பதை நெருங்கியிருந்தது. புரண்டு புரண்டு படுத்தும் தூக்கம் வருவதாக இல்லை. ஜீரோ வாட்ஸ் பல்ப் வெளிச்சத்தில் என் மனைவி தூங்குவதையே பார்த்துக் கொண்டிருந்தேன். அது கள்ள கபடமற்ற முகம். நான் என் மனைவிக்கு துரோகம் செய்யவில்லை. ஆனாலும் என்னுடய மனம் மட்டும் இப்பவும் பதற்றத்திலே


சைக்கிளுக்கு ஒரு ரூபாய் வாடகை

 

  ஆண்டு-1960. படிப்பறிவு இல்லாத கிராமம். பண்ணையார் முதல்கொண்டு தலையாரி வரை பலதரப்பட்ட மக்கள் வாழுகின்ற ஊர். அந்த ஊரில் எல்லோரும் அறிவாளிகள். ராத்திரி ஊருசனமெல்லாம் தூங்கிட்டாங்க. எல்லாம் அடங்கி இருட்டாய் இருந்தது அந்த ஊர். நடுசாமத்து வாக்குல மூணு மாசமா இழுத்துக்கிட்ட கிடந்த செல்லம்மா பாட்டி செத்துப்போச்சு. முடியாம கிடந்தப்ப மகன், மகள், பேரக்குழந்தைகள் என எல்லாரும் செல்லம்மா பாட்டிக்கு பாலு ஊத்துனாங்க. ஆனா பாட்டி உசிரு ரொம்ப கெட்டி போல. சாவே நெருங்கல. கடைசியா


ஒரு சிறுவனின் அழுகை

 

  காற்றைப் பிளந்து வந்து கொண்டிருந்தது அந்தப் பேருந்து. மேடு பள்ளங்களைத் தாண்டி குதிரையாய் பறந்தது. அந்தப் பேருந்தில் இரண்டு பக்கங்களிலும் குதிரையின் படம் வரையப்பட்டிருந்தது. அதனாலோ என்னவோ இப்படி வேகமாக புழுதிப் பரப்பியது. “என்னங்க பையன் ராத்திரி வரும்போது புரோட்டா கேட்டான்” என்றாள் சந்திரா. கையில் கோத்த பூவை மடக்கி மடக்கி இன்னும் வேகமாகக் கட்டிக்கொண்டிருந்தான் விநாயகம். பெருமாள் கோயிலு வாசல்ல பூ கட்டி விக்கிற தொழில்தான் விநாயகத்துக்கு. அப்பா அம்மா வயசானவங்க. படிப்பும் ஏறல


பேய்க்கதை

 

  இரவு 7 மணி. வானம் சிறு தூறலால் நிலத்தை நனைத்துக்கொண்டிருந்தது. மின்சாரம் வேறு நிறுத்தப்பட்டிருந்தது. கதவு சாத்தப்பட்டு நான் அப்பாவோடு பழையதும் புதியதும் பற்றி கதைத்துக்கொண்டிருந்தேன். பெரியவனா ஆனப்பிறகு அப்பாவுக்கு நேரம் ஒதுக்கி பேசுவதே தனி மகிழ்ச்சிதான். எங்கள் முன்னோர்களின் வாழ்க்கையைப் பற்றி என்னுடைய அப்பா சுவாரஸ்யமான நிகழ்வுகளை கூறிக்கொண்டிருந்தார். நானும் மனதை அலையவிடாமல் அப்படியே கேட்டுக்கொண்டிருந்தேன். அப்பா பேச ஆரம்மிச்சார்ன்னா பேசிக்கொண்டே இருப்பார். அவர் எதைச்சொன்னாலும் அப்படியே நம்புகிற பையன்தான் நான். அப்பாவும் உண்மையோடு