கதையாசிரியர் தொகுப்பு: துடுப்பதி ரகுநாதன்

111 கதைகள் கிடைத்துள்ளன.

நல்ல மகன்!

 

 நீங்க எல்லோருமே பத்திரிகைகளில் வரும் சிறுகதைகளை விரும்பிப் படிப்பவர்கள் தானே! அம்மாவின் பெருமைகளைப் பற்றி, சிறப்புகளைப் பற்றி இதுவரை ஆயிரம் கதைகள் படித்திருப்பீர்கள்! கொஞ்ச காலமாக நல்ல அப்பாக்களைப் பற்றியும் நிறைய கதைகள் வரத் தொடங்கி விட்டன! நல்ல அம்மா, நல்ல அப்பாக்கள் மட்டும் தான் நம்மிடம் இருக்கிறார்களா? நம்மிடம் நல்ல மகன்களும் இருக்கிறார்கள்! மகன்கள் என்றால் பொண்டாட்டி பேச்சைக் கேட்டுக் கொண்டு, வயசான காலத்தில் பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் கொண்டு போய் தள்ளும் மகன்களைப் பற்றித்


மர்ம நோய்!

 

 வேந்தனின் கண்டிஷன் வெகு சீரியஸ்! டாக்டர்களே நம்பிக்கை இழந்து விட்டார்கள்! வேந்தன் அரசியலில் நுழைந்து 50 வருடங்களாகி விட்டன! கட்சியின் கிளை செயலாளரில் ஆரம்பித்து, கட்சியின் மாவட்டச் செயலாளர் என்று சுமார் இருபத்தி ஐந்து வருடங்களுக்கு மேல் கடினமாக உழைத்திருக்கிறார். அதனால் கட்சி மேலிடத்திற்கு செல்ல பிள்ளையாக வலம் வந்தார். அவரை கட்சியே வற்புறுத்தி எம்.எல்.ஏ. வுக்கு ஒரு முறை நிறுத்தியது. அந்த ஐந்து வருடப் பதவியில் அவர் நிறைய தெரிந்து கொண்டார். அதனால் அடுத்த முறை


டைட்டில் கார்டு!

 

 கோவை பீளமேட்டில் தொழிலதிபர் கோமதி நாயகத்தின் பங்களா. குழந்தை காணாமல் போய் இருபத்தி நான்கு மணி நேரமாகி விட்டது. குடும்பமே துடித்துக் கொண்டிருந்த நேரத்தில் அவர் செல்போனுக்கு ஒரு வீடியோ கால்! குழந்தை பற்றிய தகவலாக இருக்கும் என்று பதறிப் போய் பார்த்தார் கோடீஸ்வரன் கோமதி நாயகம்! “ஐயோ!…. அம்மா!….எனக்கு பயமா இருக்கு !” என்று கத்தி கதறிய குரல் அவரின் அருமை பேத்தி சித்ரலேகாவின் குரல் தான்! அவரை சுற்றி நின்று கோமதி நாயகத்தின் குடும்பமே


தமிழ் பெண்!

 

 சிவராமன் நியூ ஜெர்ஸிக்குப் போய் கிட்டத்தட்ட முப்பது வருஷங்களாகி விட்டன. இன்று சிவராமனும் அவர் மகன் ஶ்ரீதரும் அமெரிக்காவில் புகழ் பெற்ற டாக்டர்கள். சிவராமனின் மகன் ஶ்ரீதர் பிறந்தது வளர்ந்தது படித்தது எல்லாம் அமெரிக்காவில் தான்! சிவராமனுக்கு தன் மருமகள் தமிழ்நாட்டுப் பெண்ணாக இருக்க வேண்டும் என்று ஆசை! கோவையிலிருக்கும் தந்தை விசுவநாதனுக்கு விபரமாக எழுதி, மகனை ஒரு மாத விடுப்பில் கோவைக்கு அனுப்பி வைத்தார். விசுவநாதன் தன் மனைவி சாந்தியுடன் நியூஜெர்ஸிக்குப் போய் மாதக் கணக்கில்


உடையாத கொலு பொம்மைகள்!

 

 சிதம்பரம் பூங்கா. மாலை ஆறுமணிக்கு வழக்கமாக கூடும் அந்த ஐந்து முதிய நண்பர்களும் ஒதுக்குபுறமாக இருக்கும் இரண்டு பெஞ்சுகளில் உட்கார்ந்து கொண்டு அவரவர் வீடுகளில் தங்களுக்கு நடக்கும் மரியாதை குறைவான விஷயங்களை வேதனையோடு சொல்லிக் கொண்டிருந்தார்கள்! அவர்கள் எல்லோருக்கும் சுமார் என்பது வயசு இருக்கும்! எல்லோரும் பதவியில் இருந்து ஓய்வு பெற்று, இருபது வருஷங்களுக்கு மேலான பென்சன் வாங்கும் முதியவர்கள்! பதவி காலத்தில் சம்பாதித்த வீடு, வாசல், பாங்கு பேலன்ஸ் எல்லாம் மகன், மகளுக்கு கொடுத்து விட்டு,