கதையாசிரியர் தொகுப்பு: திலகவதி

8 கதைகள் கிடைத்துள்ளன.

வதம்

 

 2.9.99 பைத்தியக்கார நிலா. வெறி பிடித்து வழிந்தது. அதனுடன் ‘மேசையில் அமர்ந்து ஒரு டீ சாப்பிடவேண்டும்.’ மாyaa காவ்ஸ்கியின் விருப்பம். பாவி கடவுள் இவனைப் பார்த்தால் தொப்பியைத் தூக்கி மரியாதை செய்ய வேண்டுமாம். வார்த்தைகளில் நெருப்பு. பேப்பர் எரியுமோ? பாரதிக்குக் கூட வார்த்தை மந்திரம். நிறைய்ய வேலை. பைகொள்ளாத வேலை. இன்று பார்த்து லலிதா அவள் மேசையில் கவிழ்ந்து படுத்து அழுதாள். என்ன என்றதற்கு ஒண்ணுமில்லை என்று பதில். ஒண்ணுமில்லாததற்கா ஒருத்தி அழுவது. அவள் சிநேகிதன் ஏதாவது


ஒப்பனை

 

 பூமிநாதன் லேசாக முனகுவது கேட்டது. “”””எப்படியோ இருக்குது?”” நளினி, பூமிநாதனின் காலின் மேல் போர்வையை இழுத்துவிட்டாள். நல்ல வேளையாக ஜுரம் இல்லை. அதனால் கவலைப்படாமல் இருந்துவிட முடியாது. மழைக்கு முன்னால் வரும் காற்று போல மாளாத துயரத்துக்கு முன்னால் வந்தது பூமிநாதனுக்கு வியாதி. அதற்கு முன்பே வந்துகுடி புகுந்தது வறுமை. எல்லா சினிமாக் கலைஞர்களையும் போல அதற்கும் முன்னதாகவே வந்து தொற்றிக் கொண்டது குடிப்பழக்கம். நளினி கைப்பையில் இருந்த சில்லறையை எண்ணிப் பார்த்தாள். தேறவில்லை. துருப்பிடித்துக்கிடந்த தகரப்


உள்ளூர்க்காரன்

 

 மதிய உணவுக்குப் பின் நான் படுக்கையில் படுத்துக்கொண்டு, `எல்லையற்ற பனியும் காடும்’ என்ற நாவலைப் படித்துக் கொண்டிருந்தேன், எழுத்தர் சூ ஃபாங் உள்ளே வந்து, `சென் அய்யா! உங்களோட சொந்த ஊர்லருந்து ஒருத்தர் வந்து, வெளியில காத்திருக்காரு. அவரு உங்களைப் பார்க்கணுமாம்.’ என்றார். `நெஜமாவா? யாரு அவரு? அவரு என்னோட சொந்த ஊர்க்காரருன்னு உனக்கு நிச்சயமாத் தெரியுமா?’ நான் எழுந்து, புத்தகத்தை படுக்கையருகே இருந்த மேசை அருகே வைத்தேன். `ஆமா. அவரு உங்களைப் பாக்க விரும்பறதா சொல்றாரு.’


ஆறடி நிலம்

 

 உண்மையில் நானும் என் மனைவியும் விவசாயிகள் இல்லை. என் மனைவி லீரிஸ் கூட விவசாயி இல்லை. நாங்கள் ஜோகன்னஸ்பர்க்கை அடுத்த ஒரு முக்கிய சாலையிலிருந்து பத்து மைல்களுக்கு அப்பாலிருந்த இந்த இடத்தை, அது எங்களுக்குள் ஒரு உள்ளார்ந்த மாற்றத்தை உருவாக்கும் என்ற எண்ணத்தில் வாங்கினோம் என்றே நான் கருதுகிறேன். எங்களுடையதைப் போன்ற ஒரு திருமணத்தைப் பற்றி ஏராளமான பிதற்றல் வார்த்தைகள் சொல்லப்படுவது உண்டு. திருமணம் என்றதும் திருப்தியோடு கூடிய ஒரு ஆழ்ந்த மௌனத்தைத் தவிர, நாம் வேறு


பின்னோக்கி

 

 இன்று, நான் பிறந்ததற்கு இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின் வரும் ஏப்ரல் 15-ம் நாள். ஜன்னல்கள் குலுங்கிக் கடகடக்க இரயில் வண்டி இருளைக் கிழித்தபடி என் ஒருவனுக்காகவே ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த வேகத்தின் தாக்கம் ஒவ்வொரு இரும்புப் பலகையிலும் பரவியிருக்க வேண்டும். எல்லாமும் சேர்ந்து பயங்கரமாக அதிர்ந்து துடிக்கின்றன. நானும் அசைந்து அதிர்கிறேன். அந்த அதிர்வுகள், என் உடலின் ஆழத்தில் எங்கோ பரவி என் உறுப்புகளின் அமைப்பை சுருளச் செய்து, மின்னோட்டம் பாய்ந்ததைப் போலச் சீண்டிக் கிளறி, நோய்