நரி பரியான அற்புதம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 15, 2021
பார்வையிட்டோர்: 6,771 
 

(1924ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

குசிகர் குட்டிக் கதைகள் – மூன்றாம் பாகம்

சிவனார் சிரித்த திரிபுரம் போல் இந்நாள்
நவமாக எம்மை நலியும்-அவமெல்லாம்
நான் சிரிக்க வே அழிய நாவினின்று நீ மொழிக
தேன் சிரிக்கும் வெண்மலர் மா தே.

இவை

பத்மாவதி சரித்திரம், விஜயமார்த்தாண்டம், முத்து மீனாக்ஷி , 4 உதயலன், திருமலை சேதுபதி, சித்தார்த்தன், புத்தசரிதை, பால ரொமாயணம், பாலவிநோதக் கதைகள், பொது தர்ம சத்கீதமஞ்சரி, புதுமாதிரிக் கலியாணப் பாட்டு, ஆசாரச் சீர்திருத்தம், பாரிஸ்டர் பஞ்சந்தம், தில்லைக் கோவிந்தன் முதலிய பல பிரபலமான நூல்களின் ஆசிரியரும், பஞ்சாமிர்தம் பத்திராதிபருமான அ. மாதவையர் இயற்றியன

சென்னை
ஆசிரியர் அச்சுப்பிரசுராலயம் – புஸ்தகசாலை,
எட்வர்டு எலியட் ரோடு–மயிலாப்பூர்
1924

நரி பரியான அற்புதம்

இன்று காலையில் அப்பா இறந்து போனார்; உடனே புறப்பட்டு வர வேண்டும்,” என்ற அவசரத் தந்தி, மாலையில், கேசவையர் கச்சேரியி லிருந்து திரும்பி வந்த தும், அவருக்குக் கிடைத்தது. ” ஐயோ! என் தங்கை பரம ஏழையே! சட்டையும் சவலையு மாய்க் குழந்தைக ளே! இனி என்ன செய்வாள் ” என்று பரிதபித்துப் புலம்பி யழுதார் கேசவையர். பல்லாரி ஜில்லாவில் கலெக்டர் ஆபீஸ் ஹெட் குமாஸ்தா அவர். அவர் கூடப் பிறந்தவள் அம்மாளு அம்மாள் ஒருத்தியே ; அவள் புருஷர் கொச்சி சமஸ்தானம் திருச்சூரில் திவான் ஆபீஸில் குமாஸ்தா, சம் பளம் சொற்பமே; சந்தான சம்பத்தோ யதேஷ்டம். பத்து வயதுக் குட்பட்ட குழந்தைகள் ஆறுண்டு; மூத்தவ னான ரமணன் தான் தந்தி கொடுத்தவன். தன் சகோதரி புருஷர் கொஞ்ச நாளாய் சௌக்கியத் தப்பா யிருந்தது கேசவையருக்குத் தெரியும். தனது கஷ்ட நஷ்டங்களைக் கவனியாமலும், சில சமயங்களில் கடன் பட்டுங் கூட, வைத்தியச் செலவுக்கும் குடும்ப சம்ரக்ஷனைக்கும், அவர் சில மாதங்களாகப் பணம் அனுப்பி வந்தார் ; ஆனால், நோய் சீக்கிரம் சொஸ் தமாய் விடுமென்று நினைத்திருந் தார் ; இவ்வாறு முடியு மென்று எண்ணவே யில்லை. ஆகவே திடீ ரென்று தந்தி வந்தவுடன், இடி விழுந்தாற் போல் திகைப் புற்றுப், பின்பு தன் சகோதரிக்கு நேர்ந்த கதியை நினைந்து பரிதபித்துப் பிரலாபிக்கலானார்.

கேசவையருக்கும் அவர் மனைவி சுந்தரிக்கும் அடிக்கடி யுண்டாகும் மனஸ்தாபங்களுக்கு, அவர் சகோதரி அம்மாளுவின் குடும்ப விஷயமே முக்கிய காரணம் ; அவள் புருஷர் வியாதிப் பட்டு, மாதம் தவறாமல் மணியார் டர் அனுப்பும்படி ஏற்பட்டது முதல், தம்பதிகள் ஒரு நாளேனும் சண்டை யின்றி மனோ ரம்மியமாய் வாழ்ந்த தில்லை. தந்தி வந்ததும், முட்டுத் தட்டுக்குச் சில சமயங் களில் பணம் அனுப்புவது போய், மற்றொரு குடும்பப் பாரம் ஸ்திரமாகவே தந்தலைப் பொறுப்பாகி விடுமோ வென்ற பயம் சுந்தரி யம்மாளுக்கு அதிகப்பட்டது. ஆயினும், தன் புருஷர் படும் துயரத்தைக் கண்டு மனம் வருந்தி, அப்பொழுது வேறொன்றும் சொல்லாமல், அவ ரைத் தேற்றினாள்.

மறு நாள் காலையில், கேசவையர் கலெக்டரிடம் சென்று, வைதவ்யம் அடைந்து விட்ட தன் சகோதரியை யும் அவள் குழந்தைகளையும் அழைத்து வரப், பதி னைந்து நாள் ரஜா கேட்டார். கலெக்டர் தனது ஹெட் குமாஸ்தாவின் நாணயமான யோக்கியதையும் நற்குணங் களையும் நன்றாய் அறிந்தவர் ; அவரிடத்தில் மிக்க மதிப் புள்ளவர். ஆயினும், ஹிந்துக்களுக்குள் வழங்கும் ஏக குடும்ப சம்பிரதாயம் கெட்டதென்பதும், அவ்வழக்கமே யோக்கியர்களான பல உத்தியோகஸ்தரைக் கெடுத்துக் கைக்கூலி வாங்கும்படிச் செய்து விடுகிற தென்பதும், அனு பவ பூர்விகமான அவர் கொள்கை. ஒருவன் தன் மனைவி மக்களுடன் மட்டுமே சுகமாக வாழ்வதற்கு வேண்டிய அளவு சர்க்காரில் சம்பளம் ஏற்படுத்தி யிருக்க, அக்கா ளென்றும், தங்கை யென்றும், அம்மா ளென்றும் பல கிளைக் குடும்பங்களையும் அவன் காப்பாற்ற முயலும் பொழுது செலவுக்குக் காணாமலும், அவர்கள் துர்ப் போ தனைகளினாலும், இவன் பேரை வைத்துக் கொண்டு அவர்கள் லஞ்சம் வாங்குவதினாலும், நாளடைவில் நாண யம் அழிந்து அவன் கெட்டுப் போவான் என்பது, அவர் அபிப்பிராயம். அதனால், ரஜா கொடுக்க முடியா தென்று, துரை ஒரே பிடிவா தமாய் மறுத்து விட்டார்.

சுபாவத்தில் கேசவையர் சாதுப் பிராமணர் ; கா லின் கீழ்ச் செருப்பாய் மேலதிகாரிகள் விஷயத்தில் நடக் கப் பட்டவர். ஆயினும், இப்படிப் பட்ட சந்தர்ப்பத்தில் ராஜா வில்லை என்ற வுடன், நாமென்ன அடிமையிலும் கேடா? இந்த உத்தியோகம் இருந்தென்ன போயென்ன?’ என்ற மனவெறுப்பு அவருக்குமே உண்டாயிற்று.

“வீடு நிலங்கள் பொருளை விற்பார் இந்த மேதினியில்; நீடும் எண் சாண் மெய்யை ஓர்சாண் உதிர நிமித்தம் விற்று, நாடும் அரசர்க் கடிமை யென்றே முன்பு நாம் கொடுத்த ஏடு கிழி பட்ட தன்றோ உத்யோகம் இழந்ததுவே

என்னும் கவி அவர் ஞாபகத்துக்கு வந்தது. என்ன செய்வார்? சிநேகி நர்கள் வேலையை ராஜிநாமாக் கொடுக்கக் கூடா தென்று தடுத்தார்கள். அவர் மனைவியோ, சொல்ல வேண்டாமே ? முடிவில், இதுவும் விதிவசமே என்று மனத் தை ஒருவாறு தேற்றிக் கொண்டு, தான் புறப்பட்டு வா முடியாததைப் பற்றி விவரமாய்த் தன் சகோதரிக்குக் கடித மெழுதி, 100 ரூபாய் தந்தி மணியார்டரும் உடனே அனுப்பினார்.

கேசவையர் ஏழைக் குடும்பத்திற் பிறந்தவர். அவ ரது பதின் மூன்றாவது பிராயத்தில், திடீ ரென்று ஒரு நாள், அவர் தாயும் தந்தையும் பேதி உபத்திரவத்தினால் இறந்து போனார்கள். தாயும் பிள்ளையு மானாலும் வாயும் வயிறும் வேறு,’ என்று கூறுமே பழமொழி. அவரையும் பதினொரு வயதான அவர் தங்கை அம்மாளுவையும், ஐந்து வயதுத் தம்பியையும், எவ்வளவு இரக்க மிருந்த போதினும், ஏழைப் பந்துக்கள் எத்தனை நாள் காப்பாற்று வார்கள் ? அவர் தகப்பனார் ஜீவனோபாயமாக வைத்திருந்த ஜோஸியமும் அவரோடு போயிற்று. ஆகவே, தன் சிறு தம்பியுடன், கேசவையர், தர்ம ராஜ்யமாகிய திருவாங் கூருக்குப் புறப்பட்டுப் போனார். அம்மாளுவுக்கு நல்ல வேளை கலியாணமா யிருந்தபடியால், அவள் புருஷர், தமக்கு ஆக்கி யிடும்படி, அவளை அழைத்துப் போய் விட் டார். சுபாவத்திலுள்ள நற்குணங்களினாலும் விடா முயற்சியினாலும் பேருழைப்பினாலும் மனோ தீரத்தி னாலும், எப்படியோ கஷ்டப் பட்டு, தான் பி. ஏ. வரை படித்துத் தேறியது மன்றி, கேசவையர், உதவாக் கட்டையான தன் தம்பியையும் தன்னா லேன்ற மட்டும் படிப் பித்து வந்தார். அந்தோ! தனவான்கள் வீட்டுத் தலை வாசல் தோறும் காத்துக் கிடந்து பற் காட்டிக் கெஞ்சி யும், அவர்கள் காலாலிட்ட வேலையைத் தலைமேற் கொண்டு ஊழியஞ் செய்தும், அவர்கள் தயவைச் சம்பாதிக்கும் மானக் கேட்டால் வரும் மனக் கசப்பை அவர் அதிபர்லி யத்திலேயே அனுபவித்தார். பார்த்தும் பாராதவர் போ லும், கேட்டும் கேளாதவர் போலும் பாசாங்கு செய்து நடித்து, அவர்கள் சொல்வதற் கெல்லாம் ஒத்துப் பாடி, தன் மனவருத்தத்தை ஒரு சிறிதும் வெளிக் காட்டாமல் அவர்களோடு கூடிச் சிரிக்கும் ஜாலத்தையும் தெரிந்து கொண்டார். தன்னோ டொத்தவயதினர்களான அவர்க ளின் பிள்ளைகள், செல்வச் செருக்கால் தன்னை இகழ்ந்து பரிகசித்துத், தங்களிஷ்டப்படி ஆட்டுவிக்கும் கூத்துக்களுக் கெல்லாம் தாழ்மையாய் இணங்கி யாடும் சாமர்த்தியத்தை யும், அக்குழந்தைப் பருவத்திலேயே தேடிக் கொண்டார். சிறு குடரைப் பெருங் குடர் தின்பது போல் வயிற்றிற் காந்தும் பசியின் கொடுமையும், தரித்திரத்தால் வரும் மனச் சோர்வும், களைப்பும், பல சங்கடங்களும் அவருக்கு நன்றாய்த் தெரியும். ஆனால், இவற்றை யெல்லாம் அவர் அவ்வளவு பாராட்ட வில்லை. கல்வி கற்று முன்னுக்கு வருவதற் கென்றே தான் இப்பாடு பட்டும், தனவான் களின் தயவைச் சம்பாதிக்கும் பிரவர்த்தியில், நன்கு படிப்பதற்கு வேண்டிய அவகாசம் தனக்கு இல்லாமற் போனதே அவர் மனத்தைப் புண்படுத்தியது. அக்கார ணத்தினால், பிரவேசப் பரீக்ஷையில் இரு முறையும், எப். ஏ. பரீக்ஷையில் ஒரு தரமும் அவர் தவறிப் போனார். ஆயினும், எப். ஏ. தேறின பின்பு, தூர பந்து ஒருவர் முன் வந்து, தன் பெண்ணை அவருக்குக் கன்னிகா தானம் செய்து கொடுத்து, பி.ஏ. பரீக்ஷைக்கு வாசிக்கவும் பொருள் உதவினார்; அப்பொழுதும் கூட, தத்தாரியாய்த் திரியும் தன் தம்பியின் படிப்புக்கும் சம்ரக்ஷணைக்குமாக, இரண் டொரு பிள்ளைகளுக்கு வீட்டிற் படிப்புச் சொல்லிக் கொ டுத்துத் தாமாகவே சிறிது பொருள் சம்பாதித்து வந்தார். பி. ஏ. பரீக்ஷை தேறிய பின்பு, தன் மாமனார் மேற் படிப் புக்குக் கை யுதவும் சக்தியற்றவ ரென அறிந்து, கலெக்டர் கச்சேரியில் சொற்பச் சம்பள முள்ள குமாஸ்தாவாக அமர்ந்தார். பேருழைப்பினாலும் சிறிதும் நெறி தவறாத யோக்கியதையினாலும், அருமையான நல்ல சுபாவத்தினா லும், முக்கியமாய்ப் பிறரைச் சந்தோஷப் படுத்தித் திருப்தி செய்யும் சாதுரியத்தினாலும், அவர், தன் மேலதி காரிகளின் நம்பிக்கையையும் நல்லபிப் பிராயத்தையும் எளி தில் சம்பாதித்து மேன் மேலும் பெரிய உத்தியோகங்க ளைச் சீக்கிரம் அடைந்தார். இன்னும் ஒரு சங்கதி அவ ரைப் பற்றி இங்கே சொல்லத் தக்கது. அவர் பிறந்து வளர்ந்ததோ பரம்பரையாக வைதீக சிரத்தை யுள்ள குடும் பம்; அவர் கல்வி கற்ற நாடோ, பிராமண விசுவாசமும் செல்வாக்கும் தழைத்து மேலிட்டதும், புராதனப் பழக்க வழக்கங்களும் நடையுடை பாவனைகளும் மூட பக்தியும் இக்காலத்து ஆங்கிலேயக் கல்விப் பயிற்சி நாகரிகங்களையும் கூட ஒருவாறு சிதைக்கு மளவு மலிந்துள்ள துமான திரு வாங்கூர் இராச்சியம். ஆகவே, கேசவையர், கேவலம் கர்நாடக மனுஷர் என்றே சொல்ல வேண்டும். மதசம் பந்த மாயும், மற்றும் ஆசார அநுஷ்டான விஷயமாயும் நம் முன்னோர்கள் வழியை விட்டுத் தற்காலத்துக் கேற்ற படி பல சீர்திருத்தங்களைச் செய்ய முயல்வோரது முழக்க மும் கம்பலையும் அவர் காதில் விழுந்ததே யில்லை. இருப் தாவது நூற்றாண்டாகிய இந்தக் காலத்தில், ஆங்கிலேய துரைத்தனத்தில், கலெக்டர் ஆபீஸ் ஹெட் குமாஸ்தா ஒரு வர், வருணா சிரம தர்மம் வழுவாது எவ்வளவு நடக்க முடியுமோ, அவ்வளவு அவரும் அனுஷ்டித்து வந்தார்; வைதீகமாக நினைக்கப்படும் பழக்க வழக்கங்கள் அனைத் தையும் ஒப்புக் கொண்டு, தன் ஜாதியாருக்கு அவற்றினும் உத்தம மானவை வேறில்லை யென்று மதித் தொழுகி வந்தார்.

தான் சம்பாதிக்கத் தொடங்கின நாள் முதல், கேச வையர், தன் ஏழைச் சகோதரிக்கும் உதவி புரியலானார். அவரும் அவளும் தம் ஏழைத் தாய் தந்தையர் வீட்டில் குழந்தைகளாகச் சந்தோஷமாக வாழ்ந்து வந்த சில வரு ஷங்களை, அவர் ஒரு பொழுதும் மறக்க வில்லை. அதற்குப் பின் அவர் அடைந்த பல கஷ்ட நிஷ்டூரங்களால், அக் குழந்தைப் பருவத்தைப் பற்றிய அவர் ஞாபகங்க ளெல் லாம் அவருக்கு அதிக மனோகாமா யிருந்தன. அவர் மனைவி சுந்தரியோ, தன் நாத்தனாருக்குத் தன் கணவன் செய்யும் உதவிகளை ஒரு சிறிதும் ஒப்பா தவளாய், அடிக் கடி வாதாடி மல்லுக்கு நின்றாள் ; தன் தகப்பனார் அவருக் குப் பொருளுதவி செய்து வந்த படியால், தன் கண வரை அவ்வாறு கண்டிப்பதற்குத் தனக்கு விசேஷ சுதந் தர முண்டென்று நினைத்துக் கொண்டாள். கேசவைய ரோ, மனைவி மேல் மிக்க வாஞ்சை யுள்ளவர்; அவள் சொல்வது நியாயந்தான் என்று அவர் மனத்திலும் சில சமயங்களிற் பட்டது ; தனவான்கள் வீடுகளில் அடிமை போல் ஊழியஞ் செய்து வந்த தன்னை, அவ் விழிப்பதவியி னின்றும் உயர்த்தி, பி.ஏ. பட்டமும் பெறும்படிக் கையுத விய தன் மாமனாரிடத்தில், மிகவும் நன்றியறிதலுள்ளவரா. யிருந்தார். ஆயினு மென்ன? ஒரு காசேனும் தானாகச் சுயசம்பாத்தியம் செய்யும் வரை, தன் சொந்தத் தங்கை யும் தம்பியும் தன்னால் நிவர்த்திக்கக் கூடிய கஷ்டங்களை அநுபவிப்பதைப் பார்க்க, அவர் எவ்விதம் சகிப்பார்? ஆகவே, தன் மனைவி சொல்வதையும் தன் குடும்பச் செலவு களையும் மதியாமலும், சில வேளை கடன் பட்டும் கூட, தன் தங்கைக்கும் தம்பிக்கும் அவர் பொருளுதவி செய்து வந்தார்.

மாதந் தப்பினாலும் தன் நாத்தனாருக்கு மணியார்டர் தப்பாமல் செலவு ஸ்திரமாக ஏற்படவே, சுந்தரி கொஞ்ச நாள் வரை வீட்டை அதல குதலப் படுத்திப் பார்த்தாள்; ஆனால் ஒன்றும் பயன்பட வில்லை. பின்பு, அனுப்பப் படும் பணத்தைக் குறைக்க முயன்றாள். தன் சகோதரி குடும்பத்தைத் தன் வீட்டோடே வைத்துக்கொண்டால், அவ்வளவு செலவாகா தென்றும், அவ்வாறு செய்வதாயும் கேசவையர் சொன்னார்; ஆனால், சுந்தரி அதற் கிணங் கவே யில்லை. அவள் அபிப்பிராயமே சரி யென்றும், தன் எண்ணப்படி ஏக குடும்பமாய் வாழ்ந்தால், வீட்டில் ஒய்வொழி வின்றிக் கலகமே விளையு மென்றும், அவ்வித மனஸ்தாபங்க ளில்லாம லிருக்கக் கொஞ்சம் பொருட் செலவு அதிகமானாலும் பாதக மில்லை யென்றும், அவர் புத்தியிலும் பட்டது. தன் மனைவி மட்டுக்குமிஞ்சித் தன்னை உபத்திரவஞ் செய்த காலங்களில், தங்கள் மூத்த பெண்ணாகிய சீதையை, இங்காளைப் பாழ் வழக்கம் போல வர தக்ஷணை ஏதுமே யின்றி, தன் மருமகன் ரமண னுக்குக் கன்னிகா தானம் செய்யலா மென்றும்; அதனால், தான் இப்பொழுது தங்கைக் குதவும் பொரு ளொன்றும் வியர்த்த மில்லை யென்றும், அவர் சமாதானம் சொல்வ துண்டு. ரமணன் நல்ல புத்திசாலி, கண்ணுக்கு லக்ஷண மான பையனென்றும், அவன் ஜாதகம் சிறந்த ராஜ யோக முள்ள தென்றும், அவர்களிருவருக்கும் தெரியும். தன் மனைவியைச் சமாதானப் படுத்துவதற் கன்றிக் கேச வையர் இதைப் பற்றி அதிகம் நினைக்க வில்லை ; அவர் மனைவி சுந்தரியோ, சாஸ்தாப் பிரீதி செய்தவர் தேங்கா பாவது கிடைத்ததே யென்று சந்தோஷப் படுவது போல, இதை நம்பியே தன் கணவர் செய்கைகளுக்கு ஒருவாறு உடன் பட்டு வந்தாள். அடுத்த வருஷம் ரமணன் உப நயனச் செலவுக்காகக் கேசவையர் கடன் வாங்கி ரூ 50 அனுப்பிய பொழுது, இதை நினைத்தே பல முணு முணுப்புக்களுடன் அவள் ஒருவாறு சம்மதித்தாள்.

மேற்கூறிய உபாயம் நடந்து சில வருஷங்களாய் விட்டன. கேசவையர் அப்பொழுது சென்னப்பட்ட ணத்தில் உத்தியோகமா யிருந்தார். ஒரு நாள் சாயங் காலம் அவர் கச்சேரியி லிருந்து வந்தவுடன், தன் மனைவி யைப் பார்த்து: ” உன் மாப்பிள்ளைக்கு எப். ஏ. பரீக்ஷை முதலாவது வகுப்பில் தேறி யிருக்கிறது ; இந்த ராஜதா னிக்கே அவன் தான் இரண்டாவது” என்று சொன்னார்.

கலியாணம் ஆகாவிட்டாலும், அதை முடிந்த தாகவே பாவித்து, தன் மருமகன் ரமணனை மாப்பிள்ளையாகக் குறிப்பிட்டே அவர் பேசுவது வழக்கம். கேசவையர் :- இனி மேல் அவர்களை இங்கே கூட்டிக் கொண்டு வந்து விட வேண்டியது தான் ; பி. ஏ. பரீ க்ஷைக்கு, அவன் பிரஸிடென்ஸி காலேஜில் தான் வாசிக்க வேண்டும்.

சுந்தரி :- எனக்கு அதைப் பற்றி நினைத்தாலே நடுங்குகிறது.

கேசவையர் ,- ஏன், என் தங்கை யென்ன புலியர், கரடியா ? நற்குணங்களில் அவள் தங்களுக்குத் தாழ்ந்தவ ளில்லை யென்று பவ்வியமாய்த் தெரியப் படுத்திக் கொள் கிறேன். தவிரவும், இந்த மாதிரி ஒதுக்கி விலக்கினால், நீங்கள் சம்பந்திகளாவ தெப்படி?

சுந்தரி :- சம்மந்திக ளாவதற்கு இது அவசியமே யில்லை. உங்கள் மருமான் வரட்டும் ; நம்முடன் கூட விருந்து வாசிக்கட்டும் ; நாத்தனார் மற்றக் குழந்தைக ளுடன் அங்கேயே இருக்கட்டும். எல்லாம் தூரத்துப் பச்சை தான் கண்ணுக்குக் குளிர்ச்சி.

கேசவையர் :- அது நடக்குமா ? உன் பிள்ளையை, நீ, அவன் வேட்டகத்தில் விட்டிருப்பாயா? எந்தத் தாய் தான் அதற்குச் சம்மதிப்பாள் ?

சுந்தரி :- (பேச்சை மாற்ற விரும்பி) வருகிற சித் திரையிலே கல்யாணத்தை முடித்து விட்டா லென்ன?

கேசவையர் :– செய்யலாம் ; மருமாள் சேஷிக்கும் அதே பந்தலில் தாலியைக் கட்டி விடலாம், பன்னிரண்டு நிறைந்து விட்டது அந்தக் குட்டிக்கு

சுந்தரி – வா தக்ஷணை யார் கொடுக்கிறது? ஆயிரத் துக்குக் குறையாமல் வேண்டுமே.

கேசவையர் :- அந்த விசாரம் உனக்கு வேண்டாம் ; என் தங்கை அதெல்லாம் ஏற்பாடு செய்து விட்டாள் ; வர தக்ஷணை யில்லாமல், துவி தீயமாகக் கொடுப்பதாக உத் தேசம்; வரனுக்கு வயசு நாற்பதுக் குள்ளே தான் ; மூத் தாளுக்கு இரண்டு குழந்தைகளே ; பள்ளிக்கூட உபாத்தி யாயர் ; மாதம் 30 ரூ. சம்பளம். குட்டி சேஷியின் லக்ஷ ணத்தையும் வயசு வளர்ச்சியையும் பார்த்த பின், தக்ஷணை வேண்டு மென்று கேட்க வில்லையாம். அவ்வளவு வயசான வனுக்குக் கொடுக்கிறது கஷ்டந்தான். ஆனால் என்ன செய்கிறது? பெண்ணை ஆசையும் அருமையு மாகவாவது வைத்துக் கொண்டிருக்க மாட்டானா?

சுந்தரி :- என் செல்வக்குழந்தை சீமந்த புத்திரியை, இரண்டாந் தாரக்காரன் ஒருத்தன் கல்யாணத் தோடு உரேபந்தலில் கன்னிகாதானம் செய்து கொடுக்க நான் ஒருநாளும் சம்மதிக்கவே மாட்டேன். நன்றாய்த்தான் சொன்னீர்கள்!

கேசவையர் :- நீ அப்படிச் சொன்னால் எனக்கும் தான் அது இஷ்டமில்லை ; நான் அந்த மாதிரி நினைத்துப் பார்க்கவில்லை. கூடக் கொஞ்சம் செலவானாலும் சரி, வேறாகவே செய்வோம், என் தங்கைக்கு ஆக்ஷேபமிராது.

சுந்தரி :- அவளேன் ஆக்ஷேபிக்கப் போகிறாள்? முத லில் அவள் பெண் கலியாணம் ஆகட்டும், பிற்பாடு, நம்ம சீதை கலியாணத்தை வைத்துக் கொள்வோம்.

அப்படியே ஏற்பாடாயிற்று. அம்மாளு, தன் ஆறு குழந்தைகளுடன் வந்து, தமயனுட னிருந்தாள். தன் குழந்தைகள் வேறு, அவள் குழந்தைகள் வேறு என்ற வித்தியாசம் பாராட்டாமல், கேசவையர், அவள் குடும்பத் தை மனப்பூர்வமாய் ஆதரித்து வந்தார். இப்பொழுது பதினெட்டு வயதாகி அழகான வாலிபனா யிருந்த தன் மருமான் ரமணன் மேல் அவருக்கு அதிகப் பிரியம் ; அவன் தன் மாப்பிள்ளையாகப் போவதை நினைந்து, மனத்தில் கொண்ட கர்வமும் சந்தோஷமும் கொஞ்சமல்ல. சர்க் காரில் அளிக்கப்பட்ட நன்கொடை பெற்று, அவன், பிரஸிடென்ஸி காலேஜில் சேர்ந்து, வெகு சிரத்தையுடன் ஒழுங்காய் வாசித்து வந்தான். சுந்தரியும், தன் கணவர் மனோபீஷ்டத்துக்கு இணங்கி, தன் நாத்தனாருடன் அதிகச் சண்டை சச்சரவின்றி வாழ்ந்து வந்தாள். கேசவையர் மருமாள் சேஷி, கல்யாணமாகிச் சில வாரங் களுக்குள் பக்குவவதி யானாள்; தன் முதல் தாரம் தவறிப் போனது முதல் இதுவரையும், பள்ளிக்கூடத்தில் வாத்தி யார் வேலை, வீட்டில் சமையல் வேலை, சிறு குழந்தைகளைப் பேணிப் போஷிக்கும் வேலை, ஆக மூன்று உத்தியோகங் களையும் தானே பார்த்து வந்த அவள் புருஷர், உடனே அவளைத் தன் ஊருக்கு அழைத்துக் கொண்டு போய் விட்டார்.

பின்பு, சீதையை ரமணனுக்கு மணஞ் செய்வதைப் பற்றிப் பேச்சுக் கிளம்பிற்று. தன் பெண்ணை ஒன்பது வயதுக்கு முன் மணம் புரிவித்து அதி சிலாக்கியமான கன்னிகாதான பலனைத் தான் பெறுவதற்கில்லாமல் போய் விட்டதே யென்று மனஸ்தாபங் கொண்டிருந்த கேசவை யர், ஜோஸியர்களைக் கொண்டு மும்முரமாய் ஜாதகப் பொருத்தம் பார்க்கத் தொடங்கினார்.

வீட்டில் கலியாணப் பேச்சு இவ்வளவு நடக்கவும், அம்மாளு மட்டும் ஒன்றும் கவனியாமல், உபேட்சையா யிருப்பது போல் தோன்றியது, தன் மதுனி சுந்தரியுடன் எப்பொழுதாவது பேசுகையில், தன் பிள்ளையின் அழகை யும், புத்தி விசாலத்தையும், வருஷா வருஷம் அவன் கெலித்த நன்கொடைப் பரிசுகளையும், அவன் வாத்தியார் களும் ஜாதகத்தைப் பார்த்த ஜோஸியர்களும் அதி உன்னதமான ராஜ யோகத்தை அவன் அடைவானென்று சொல்வதையும் பற்றியே பிரதாபங் கூறிப் பேசினாள். அச்சமயங்களில், இந்த நாளில் சாதாரண மானவர தக்ஷிணை யையும், யார் யார் எத்தனை ஆயிரம் கொடுத்தார்கள் என்பதையும், மாப்பிள்ளைச் சந்தையில் அகவிலையின் ஏற் றத் தாழ்ச்சிகளையும் பற்றிக் குறிப்பாயும் வியக்தமாயும் பேசத் தொடங்கினாள். இதைப் பற்றிச் சொப்பனத்தி லும் சந்தேகித்திராத கேசவையரோ, கலியாணத்துக்குத் தன் தங்கையின் சம்மதத்தைக் கேட்க வேண்டுமென்று கூட நினைக்கவில்லை. தன் மருமகன் ராமணனுக்கு ஸங்கீ தத்தில் பிரியமுண்டு என்றறிந்தவுடன், தன் மகளுக்கு பிட்டில் கற்றுக்கொடுக்கும்படி ஒரு வித்வானை நியமித்தார். வைதீக அநுஷ்டானமும் பழைய மாதிரிக் கொள்கைகளு முள்ள தான் அப்படிச் செய்தது, தன் மகள் மருமகன் அவர்களது அத்தியந்த சந்தோஷத்தையே கருதி, ஏதோ அபாண்டமான ஒரு நூதன ஏற்பாட்டைத் தான் துணிந்து செய்து விட்டதாகப் பெருமை யடித்துக்கொண்டார். ரமணன் படிப்புக்குச் சிறிதும் இடையூறாகாமல், பள்ளிக் கூட விடுமுறையில் ஒரு முகூர்த்தம் வைக்கப்பட்டது ; ஆனால், அவன் கடைசித் தங்கை வைசூரிகண்டு சற்று முன் தவறிப் போய்விட்டதால், அப்பொழுது விவாகம் நடக்கவில்லை. கேசவையருக்கு இதனால் மனஸ்தாபமே; தன் நாத்தனார் பேச்சு நடவடிக்கைகளையும், தன் பெண் வயதாகிக் குதிரைபோல் வளர்ந்து விட்டதையும் கண்டு, சுந்தரிக்கு உள்ளூர் நேர்ந்த மன விசாரம் கொஞ்சமில்லை. கொஞ்சநாள் துக்கம் காத்தபின், முதலில் சுந்தரியின் பிரஸவமும் பின்பு மருமாள் சேஷியின் பிரஸவமும் விவாகத்துக்குத் தடைகளாயின ; சேஷியின் பிரஸவ காலத்தில், அம்மாளு, ஐந்து மாச காலம் தன் மாப்பிள்ளையின் வீட்டிற் போயிருந்தாள்; அதற்குள் கலியாண மாசங் கள் கழிந்து விட்டன. பின்பு ரமணன் பரீக்ஷைக் காலம் தடையாயிற்று. பரீக்ஷை முடிந்ததும், அதிகப் படிப்பி னால், ரமணன் அசௌக்கிய மடைந்தான். பிழைப்பதே அரிதென்று சொல்லும்படி பாயும் படுக்கையுமாய்க் கிடந் தான். பணச் செலவைப் பாராமல் வாரியிறைத்து, மிகச் சிறந்த வைத்தியர்களைக் கொண்டு வைத்தியம் செய்வித் தார் கேசவையர்; தன் ஒரே மகனுக்கு நோய் வந்தது போல நினைத்து விசாரப் பட்டுப் பணச்செலவு செய்து பார்த்தார். உடம்பு சொஸ்தமாகி வரும்பொழுது, எல்லாராலும் மதிக் கப்பட்ட தங்கப் பதக்கங்கள் பரிசுகள் கெலித்து, ராஜ தானியில் முதலாக, ரமணன் பரீக்ஷையில் தேறின ஸந்தோஷ சமாசாரம் வெளி வந்தது.

கேசவையர் :- இல்லை அம்மாளு, இனிமேல் தாம ஸிக்கலாகாது. சீதைக்கு வயசு பன்னிரண்டாகி விட்டது; அவள் தாயார் விசாரப் படுவது கிரமந்தான். வைதீகம், வைதீகம் என்று வேஷமட்டும் போட்டுக்கொண்டு, இந்த நாளைப் புது மாதிரிக்காரர்களைப் போல, குதிர்போல பெண் ணைக் கலியாணஞ் செய்து கொடாமல் வைத்துக்கொண் டிருக்கிறேனென்று, ஊரில் என்னைக் கேலி செய்கிறார்கள். யாரோ சில வம்பர்கள், சீதை ருதுவாய்விட்டாள் ; மறைத்து வைத்திருக்கிறோம் என்று விண்ணாணம் கட்டி விடுகிறார்களென்று, உன் மதுனி கண்ணீர் வடிப்பது உனக்குத் தெரியுமே. இப்பொழுதே ஒரு நல்ல நாளில் கலியாணத்தை முடித்து விடுவதில் உனக்கென்ன ஆக்ஷே பம்?

அம்மாளு :- ஆக்ஷேபம் என்ன, அண்ணா , எனக் கென்ன ஆக்ஷேபமிருக்கும்? நீர் எனக்கு இவ்வளவு செய்திருந்தும், நான் அட்டி சொல்வேனா? அதொன்று மில்லை; மைலாப்பூர் ஜோஸியரைக் கேட்ட பிற்பாடு ஜாத கப் பொருத்தத்தைப் பற்றித் தான் கொஞ்சம் சந்தேகமா யிருக்கிறது; இன்று காலையில் மதுனியிடத்தில் கூடச் சொல்லிக் கொண்டிருந்தேன். நமக்கென்ன, நம்ம கால மாய் விட்டது; அதுகள் சின்னஞ் சிறிசுகள், ஆயிரங் காலப் பயிர்கள் ; அதுகள் க்ஷேமமாய் வாழவேணு மென்பது தானே நம்ம கவலையெல்லாம்? நம்ம சௌகரியத் தையோ மனோபீஷ்டத்தையோ உத்தேசித்து, கிரகபலன் களைக் கவனியாமல், தோணினபடி செய்யலாமா?

கேசவையர் :- (பட படப்பாய்] கண்ணனூர் ஐயங்கா ரைவிடக் கெட்டிக்கார ஜோஸியனும் பிருதிவியிலே இருக் கானா? அவரே உத்தமப் பொருத்தம் என்று சொல்லிவிட் டாரே. மனசறிந்து, ஜாதகம் பொருந்தாவிட்டால், நானே என் ஸீமந்த புத்திரியைக் கொடுக்கிறேனென்று சொல்வேனா? வாப நஷ்டம் எனக்கில்லையா? என்ன அம் மாளு! நீ என்னிடத்தில் இப்படிப் பேசுவாயென்று நான் சொப்பனத்திலும் நினைக்கவில்லையே! என்ன, ஜோஸியர் கள் தெய்வமா? பிரகஸ்பதிக்கும் பதில் தானா? மற்ற வீடு களைவிட ஜோஸியன் வீட்டில் அமங்கலிகள் அதிக மென்று பழமொழியுமுண்டே.

அம்மாளு :–அண்ணாவுக்கு நான் சொல்லுகிறது கோபம் வருகிறது; பெற்ற தாய்க்குக் கவலை யிருக்குமே என்று கூட நினைக்கவில்லை. கொஞ்ச நாளைக்கு முன்பு, வக்கீல் வேம்பையர் ரமணனுக்குப் பெண்ணையும் தந்து இரண்டாயிரமும் கையில் தருகிறேனென்று சொன்னார். நான் அதைப் பெரிதாக நினைத்தேனா! உம்மிடத்தில் சொல்லக்கூட வில்லையே.

சுந்தரி :- இரண்டாயிரமா? நாலாயிரத்துக்கு மேலே யிருக்குமே, உங்கள் குடும்பத்துக்கு இதுவரையும் உங் கண்ணா செலவழித்திருக்கிறது! எந்தத் தமயன் தன் தங்கைக்காக இப்படிச் செலவழித் திருக்கிறான், காட்டு பார்ப்போம். அப்படி யிருந்தும், யாரோ, எங்கேயோ கிடந்தவன், பணம் தருகிறேன் என்றானாம், அது தான் பெரிதாகத் தோணுகிறது! உன் பிள்ளையை யார் படிக்க வைத்து இவ்வளவு முன்னுக்குக் கொண்டுவந்தது?

அம்மாளு – நீ இந்த வீட்டிலே காலெடுத்து வைக்கு முன்னாலே, அவர் எனக்கு அண்ணா , அப்புறம் தான் உன் உறவெல்லாம். எனக்கு எல்லாம் செய்யத்தான் செய்தார்; ஆனால், அவர் தகுதிக்கு அது பெரிதில்லையே? இவ்வளவு பெரிய உத்தியோகஸ்தன், தன் தங்கையைத் தெருவிலே திண்டாட விடுவானா? என் பிள்ளையும் வருஷா வருஷம், பள்ளிக்கூடச் சம்பளமில்லாமல், மேற் செலவுக்கும் கூட ஏதோ சம்பாதித்துக் கொண்டு தான் வாசித்தான். சொந் தத் தங்கையையும் அவள் குழந்தைகளையும், ஒரு தமயன் காப்பாற்றுகிறது அதிசயமா? அவரே கைவிட்டு விட்டா லும், மஹாராஜா ஊட்டுப் புரையிலாவது பிழைத்திருப் போம்.

இந்த மாதிரித் தன் தங்கை பேசுவது கேசவைய ருக்கு அருவருப்பா யிருந்தது ; அவள் இப்படிப் பேசுவா வென்று அவர் எண்ண வில்லை. அவளுக்குச் சீர் வேண்டு மென் றிருந்தால், எக்கடன் பட்டாவது, தான் ஆயிரம் ரூபாய் கொடுப்பதாகச் சொன்னார்.

“இவ்வளவுக் கப்புறம், நான் உம்மிடத்திலேயே பணம் வாங்கினால், ஊரிலே என்ன சொல்லமாட்டார்கள்? என்னவோ, ரமணனைக் கேட்டுக்கொள்ளும்; அவன் இன்னும் குழந்தை யில்லையே,” என்று சொல்லிக் கொண்டே, அம்மாளு வெளியே போய்விட்டாள். பின்பு கேசவையர் தன் மருமகனைக் கேட்டார். அவன் கூச்சத் தால் நேரிற் பதிற் சொல்லவில்லை ; அழுத்திக் கேட்கவே, தனக்கொன்றும் தெரியாதென்றும், தன் தாயாரிஷ்டம் போற் செய்யலா மென்றும் அவன் சொல்லிவிட்டான். அன்று மாலை, புஸ்தக சாலைக்குச் சென்று தன் மகன் எம். ஏ. பரீட்சைக்கு வேண்டிய புஸ்தகங்களை வாசிப்ப தற்கு, மைலாப்பூரில் குடியிருப்பது அசௌகரியமாக யிருக்கிறதென்று, அம்மாளு சொல்லிக்கொண்டிருந்தாள். மறு நாள் கேசவையர் கச்சேரிக்குப் போன பின்பு, அவள், தன் சாமான்களை எடுத்துக்கொண்டு, குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு, நுங்கம்பாக்கத்தில் ஒரு வீட்டுக்குக் குடிப்போய்விட்டாள்.

கச்சேரியிலிருந்து வந்து சமாசாரத்தைத் தெரிந்த வுடன், கேசவையருக் குண்டான கோபம் அளவு சங்கை யில்லை. உடனே நுங்கம்பாக்கத்துக்குப் போய், ஆயிரத் தைந்நூறு ரூபாய் தருவதாயும், தன்னுடன் வீட்டுக்குத் திரும்பிவந்து தன் பெண்ணைக் கலியாணஞ் செய்துக் கொள்ளும்படிக்கும், தங்கையையும் மருமகனையும் மாறி மாறிக் கெஞ்சி வேண்டிக் கொண்டார். அம்மாளு, ஜாத கப் பாட்டையே பதிற் பாடினாள். கலியாணப் பேச்சை நிறுத்திவிட்டு, தன்னுடன் வந்து முன்போல் குடியிருக் கும்படி வேண்டினார்; அதற்கும் இணங்கவில்லை. தன் உதவியின்றி எவ்வாறு அவர்கள் தனிக் குடித்தனம் செய்ய முடியுமென்பது, அவருக்கு விளங்கவில்லை.

அதற்குப் பதினைந்தாவது நாளில், பி.ஏ. பட்டம் பரிசுகள் பெற்ற சிரஞ்சீவி ரமணனுக்கு, வெகு ஆடம் பாத்துடன், ஹைகோர்ட்டு வக்கீல் கனம். இராமநா தையாவர்களுடைய புத்திரி கன்னிகாதானம் செய்து கொடுக்கப்பட்டாள். பித்தளை வெள்ளி தங்கப் பாத்திரங் கள் சீர்கள் தவிர, ரொக்கம் ஐயாயிரம் ரூபாயும் அம்மாளு பெற்றுக்கொண்டர் ளென்று ஊரில் வதந்தி; அவ்வளவு பெரிய மனுஷனுடைய மாப்பிள்ளையாகி விட்ட ரமணனுக் குப் பின்பு என்ன குறை? அப்பொழுது தான் தன் தங்கை யின் துணிவும் பேராசையும் கேசவையருக்கு விளங்கிற்று.

இந்த வெட்கங் கெட்ட அநியாயத்தைப் பற்றிச் சுந்தரி சொன்ன சொற்களையும், தான் பட்ட மனவெரிச் சலையும் நம்மாற் கூறி முடியாது; கனம் இராமநாதைய ரவர்களையே, பிள்ளை பிடிக்காரன்’ என்று அவள் ஏசினா ளென்றால், முழு மூடத்தனமாய்த் தன் பணத்தை யெல் லாம் பாழாக்கி, நன்றி கெட்ட முண்டையாகிய தன் நாத்த னார் குடும்பத்துக்காக வாரியிறைத்த தன் கணவர் கேச வையருக்கு அவள் கொடுத்த கொடையை விவரிக்க வேண்டாமே. கேசவையர், பதிலே பேசவில்லை ; தலை குனிந்து ஸ்தம்பித்திருந்தார். அவர் மனமெல்லாம் ஒரே குழப்பமா யிருந்தது; அவர் வைதீகக் கொள்கைகளெல்லாம் தலை கீழாகும்படித் தத்தளிப்பா யிருந்தார். ஆயுசு பரியந்தம் செய்த அபரிமிதமான உபகாரங்களை யெல்லாம் மறந்து, சுபாவ வாஞ்சையையும் துறந்து, ஒரு சகோதரி யே தன் சொந்தச் சகோதரன் விஷயத்தில் இப்படி நடக்கும்படிக்குச் செய்யும் (வா தக்ஷணை) வழக்கத்தைப் பற்றி என்ன நினைப்பதென்று அவருக்குத் தெரியவில்லை . ” ஆயிரம் ரூபா கொடுத்தால் எத்தனையோ பிள்ளைகள் வேறு கிடைக்கும் ; நம்ம சம்மந்தம் கிடைக்கவேண்டுமே என்று விரும்புகிறவர்கள் எத்தனையோ பேர் ; இனிமேல் தாமஸிக்கவே கூடாது ; மோசம் வந்துவிடும்; உடனே வேறு பிள்ளை யொன்றைப் பார்த்து, கன்னிகா தானம் செய்து கொடுங்கள். ” என்று அலட்டினாள் அவர் மனைவி. ஆனால், ஆலோசனையில் ஆழ்ந்தவராய், கேசவையர் அதை யும் கவனிக்க வில்லை. கலியாணப் பேச்சே அவருக்கு மனக்கசப்பையும் வெறுப்பையும் உண்டு பண்ணிற்று. தன் பெண் சீதையிடத்தில் மட்டும் முன்னிலும் அதிகப் பல மாக நடந்து வந்தார்; அவள் எப்பொழுதாவது அருகே சென்றாலும் அவளை அருமையாய்த் தடவிக் கொடுப்பார்; தன்னை யறியாமலே இவ்வாஞ்சை மட்டும் தழைத்தோங்கி வந்தது. ஒருநாள் அவர் கச்சேரியில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது, ஒரு சேவகன் துண்டுக் காகி தத்தைக் கொண்டு வந்து கொடுத்தான் ; அதில் உடனே வரவேணும் என்று அவர் மனைவி சுந்தரி கையெழுத் தில் எழுதியிருந்தது; கண்ணீர் ஒரு சொட்டு விழுந்து அழிக்கப்பட்ட கறையுமிருந்தது. கேசவையர் வேகமாய் வீடு சென்றார். அவர் மனைவி, கண்ணும் கண்ணீருமாய்த் தெருவாசற் படியில் நின்று, அவர் வாவை எதிர் பார்த் துக் கொண்டிருந்தாள்.

“ஏன்? என்ன சங்கதி? யாருக்கென்ன? ஏன் நீ அழுகிறாய்?” என்று பரபரப்பாய்க் கேசவையர் கேட் டார். ” நம்மசீதை,-நம்மசீதை,–” என்று சுந் தரி தேம்பி யழுதாள் ; துக்கம் நெஞ்சை யடைப்பதால், மேலொன்றும் பேச முடியவில்லை.

“ஏன் ? அவளுக்கென்ன?” என்று கேட்டுக் கொண் டே, கேசவையர் வெறி கொண்டாற் போல் வீட்டுக்குள் ஓடினார். சுந்தரி, உடுப்பைப் பிடித்திழுத்து அவரை நிறுத்தித், தன் கண்ணீரைத் துடைத்துத் துக்கத்தையும் அடக்கிக் கொண்டு, சீதை ருதுவாய்விட்டா ளென்றும், குடும்பத்துக்குத் தீராப்பழி நேர்ந்து விட்ட தென்றும் அரிதிற் கூறி முடித்தாள்.

இதற்குத்தானா இவ்வளவு என்று ஆசுவாசப் பட்டார் கேசவையர்.

சுந்தரி :- யாரேனும் ஒரு பிள்ளையை உடனே பாருங் கள். இதை நான் கொஞ்ச நாளைக்கு மறைத்து வைத் திருக்கிறேன் ; எந்தப் பிரமசாரியானாலும் சரி, என்ன பணம் கேட்டாலும் சரி; என் நகைகளை யெல்லாம் வேண்டு மானாலும் விற்றுவிடுங்கள். எப்படியாவது உடனே ஒரு தாலியைக் கட்டி வைத்து மானத்தைக் காப்பாற்றுங்கள்.’ என்று உருக்கமாய்க் கெஞ்சினாள்.

கேசவையரோ, சொப்பனத்தி லிருப்பவர் போ லிருந் தார்; விசாரம், கவலை, அந்தக்குறி யொன்றுமே அவர் முகத்தில் காணவில்லை. கொஞ்ச நேரங் கழித்து, அவர் தன் மனைவிக்குப் பின் வருமாறு பதிற் சொன்னார்:

நம்ம கண்மணி சீதையை எப்படியாவது யார் கையி லாவது பிடித்துக் கொடுத்து விட வேண்டு மென்று நான் அவரசரப்படவே மாட்டேன்; உலக அபவாதத்திற்காக நான் கவலைப் படவுமில்லை. ஒரு பெண்ணைக் கண்ணில் வைத்து இமையால் முடி அருமையாக வளர்த்துக், கடைசி யில் எவனுக்காவது இப்படிக் கட்டிக் கொடுப்பது, கேவ லம் பாபம் என்றே நான் மனப்பூர்வமாய் நம்புகிறேன். அப்படிச் செய்வது தெய்வத்துக்கே பொறுக்காது. இங்கி லீஷ் படித்த பிள்ளை தான் வேண்டுமென்கிற பைத்திய மும்; அந்தச்சாதி கூடாது, இந்தச் சாதிகூடாது என்கிற நிர்ப்பந்தங்களுந்தான், நம்மை இந்தப் பாழுங் கதிக்குக் கொண்டுவந்து விட்டன. இங்கிலீஷ் படிப்பாம் படிப்பு! எத்தனை முதல் கிளாஸ் ஆனாலென்ன, எத்தனை தங்கப் பதக்கங்களானாலென்ன, எத்தனை பரிசுகளானா லென்ன? என்மருமகன் ரமணனைப்போல் ஒருவன் நடப்பதா யிருந் தால், அவன் படிப்பினால் ஒரு செம்பாலடித் தகாசும் பிர யோசன முண்டோ ? என் தங்கை ஏழை, ஜடம்; அவளை நான் குற்றஞ் சொல்ல மாட்டேன், தெரிந்ததே அம்மட் டுத்தான். பரீக்ஷைகள் கொடுத்துப் பட்டங்களும் பரிசு களும் பெற்ற என் மருமானோ, குப்பை கூட்டுகிற தோட்டி ஒருவன் யோக்கியனா யிருந்தால் இவனுக்கு அவன் எவ்வளவோ மேலாகவே மதிப்பேன். யார்பெண்ணை இவன் கலியாணம் செய்து கொண்டா லென்ன? எவ் வளவு பெரிய உத்தியோகத்தை இவன் அடைந்தால் கானென்ன? இவ்விதமான சாதிக்கட்டும் நிர்ப்பந்தங் களும் உள்ளவரை, நாம் ஒருநாளும் முன்னுக்கு வரப் போகிறதே யில்லை. இதைப்பாரேன்: ஒரு தேவடியாள் வீட்டுக்கு நான் ஒருநாள் போவதா யிருந்தால், அவளுக்குக் கையிலே பணம் கொடுத்து, அவளைத் தாங்கித் தடுக்கிட வேண்டியதா யிருக்கிறது. ஆனால் ஒரு பிராமணப் பெண்ணை, தலைமுறை தலைமுறையாக வரும் உத்தமஸ்திரீ கள் வமிசத்தில் பிறந்த குலமகளை, கள்ளங் கபடறியாத கற்பாசியை, கண்ணுள் மணியாகவும் உயிருக்குயிராக வும் பாராட்டி வளர்த்து வந்த அவள் தகப்பன், வாழ்வி லும், தாழ்விலும், சௌக்கியத்திலும், அசௌக்கியத்தி லும், என் னுடனிருந்து சகல சுகதுக்கங்களையும் அநுப வித்து, என் வீட்டில் அடிமைபோல் உழைத்து, என் குடித் தனத்தைக் காப்பாற்றி, என் வம்சம் விருத்தியாகும்படி சொல்ல முடியாத நோவைப் பொறுத்து என் குழந்தை களைப் பெற்று வளர்த்து, நான் அடித்தாலும் அணைத் தாலும் என்னைத் தவிர வேறு கதியின்றி என்னைக் காத லித்துத், தன் வாழ்நாள் முழுதையும் எனக்கே அர்ப் பணஞ் செய்யும் பதிவிரதையான பத்தினியாக அவளைக் கன்னிகா தானம் செய்து கொடுப்பதாக என்னை வேண்டவே, உடனே என்னாலான மட்டும் அவன் கைப்பணத்தைப் பறித்து, அவனை ஓட்டாண்டியாக்கித், தனக்குப் பெண் பிறந்த தினத்தையே நினைத்து அவன் மனம் நோகும்படி செய்வதோ ஆரியதர்மம்? சற்குண சம்பன்னராய், தபோ நிதிகளாய், தர்ம சொரூபிகளாய், இந்தப் புண்ணிய பூமியில் வாழ்ந்து வந்த மகரிஷி கணங்களே! உங்கள் கோத்திரங் களையே கொண்டு குலாவும் உங்கள் சந்ததிகளாகிய நாங் கள், பணவாசை யென்னும் பாழான பேய்பிடித்து, இந்த நாளில் எவ்வளவு துஷ்கர்மிகளான கீழ்மக்களாகிவிட் டோம்! நீ கண்ணீரைத் துடைத்துக்கொள் ; விசாரப் படாதே. முன்னாளில், ராஜ ரிஷியான ஜனகர் வீட்டி லிருந்த சீதாதேவியை ஸ்ரீராமர் விவாகம் செய்து கொண் டது போல, நம் சீதையையும், அவளுக்குத் தக்க நாயகன் தானாகவே தேடிவந்து மணம் புரியும் வரை, அவள் சுக மாயும் சந்தோஷமாயும் நம்மாத்திலேயே வாழட்டும்.

– குசிகர் குட்டிக் கதைகள் – மூன்றாம் பாகம், 1924, ஆசிரியர் அச்சுப்பிரசுராலயம் புஸ்தகசாலை, மயிலாப்பூர்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *