இருட்டிலும் ஒலி கேட்கும்
கதையாசிரியர்: முல்லா
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: March 11, 2019
பார்வையிட்டோர்: 17,776
வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்
முல்லா ஒரு மாலை நேரத்தில் தன் நண்பர் ஒருவர் வீட்டிற்குச் சென்று அவருடன் நேரம் போனது தெரியாமல் பேசிக் கொண்டிருந்தார்.
இருட்டாகி விட்டது.
நண்பருக்கு மெழுகுவர்த்தியை எங்கு வைத்தேன் என்று தெரியவில்லை.
இருட்டில் அங்குமிங்குமாக அலைந்து கொண்டிருந்தார்.
”என்ன சமாச்சாரம்”, என்று கேட்டார் முல்லா.
”மெழுகுவர்த்தியை எங்கோ வைத்து விட்டேன், இருட்டில் உட்கார்ந்தா நாம் பேசிக் கொண்டிருப்பது?” என்று நண்பர் வருத்தத்தோடு கூறினார்.
”இதற்காகவா கவலைப்படுகிறீர்கள்?. நமது பேச்சு ஒலி இருட்டில் கூட நம் இருவர் காதுகளில் விழும் என்பதை மறந்து விட்டீரா?” என்றார்.
முல்லாவின் சந்தர்ப்பத்துக்கு ஏற்ற சாதுரியமான நகைச்சுவையை அனுபவித்து ரசித்த நண்பர் மகிழ்ச்சியோடு சிரித்துக் கொண்டார்.
தொடர்புள்ள சிறுகதைகள்
A for ஆப்பிள் – O for JOY
எஸ்.பவிஷ்
June 23, 2026
நல்ல மனம் வாழ்க!
வளர்கவி
June 20, 2026
கருங்கல்லும் கூழாங்கல்லும்!
வளர்கவி
June 17, 2026