மரணதண்டனை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 3, 2022
பார்வையிட்டோர்: 4,360 
 

முகவுரை

அரிசுட்டாட்டில் சட்டத்தைப் பற்றி எழுதுகையில், தனிமனிதர்களின் ஆட்சியைவிட, சட்டத்தின் ஆட்சி மேலானது என்று குறிப்பிட்டார். அறிஞர் அண்ணா சட்டம் ஓர் இருட்டறை, அதில் வழக்கறிஞரின் வாதம் ஒரு விளக்கு, அது ஏழைக்கு எட்டாத விளக்கு. என்று கூறியுள்ளார்.

அரசியல்வாதி நினைத்தால் நீதிபதிகளின் தீர்ப்பை மாற்றலாம்.

***

கருத்தக் கோட் , கை விரல்களில் மூன்று இரத்தினக் கற்கள் பதித் த மோதிரங்கள் . வலது கையில் செல் போன் . அவருக்குப் பின்னால் பைல்களை தூக்கிய படி இரு ஜூனியர்கள் ,அந்த நாட்டின் பிரபல வழக்கறிஞர் மித்திரன் . ஆங்கிலம் ,சிங்களம், தமிழ் ஆகிய மூன்று மொழிகளும்சரளமாக தெரிந்தவர் . பல சிக்கலான வழக்குகளை வென்றவர் .சட்டத்தை கரைத்துக் குடித்தவர் .சட்டத்தில் உள்ள ஓட்டைகளை நன்கு அறிந்தவர் . சில காலம் சட்டக் கல்லூரியில் விரிவுரையாளராக இருந்தவர் .மாணவர்களால் மதிக்கப்பட்டவர் பின் சொந்தமாக தொழில் செய்ய ஆரம்பித்தார் வக்கீல் மித்திரன் . அவர் பலருக்கு மித்திரன் . சிலருக்கு பிடிக்காதவன் .

கொலை, கற்பழிப்பு போதைவஸ்து வியாபாரம் கடத்தல், உரிமை மீரால் இதுபோன்ற வழக்குகள் பலவற்றில் தோன்றி வெற்றி பெற்றவர்.

ஒரு நாள் அவரைத் தேடி வந்தது ஒரு சிக்கலான கேஸ் கைதாகி, வ விசாரணைக்குப் பின் போலீசால் வழக்கு தொடரப்பட்டவன் ஒரு பிரபல போதை வஸ்து வியாபாரி , ‘வம்போட்டா’ லொக்கா; சிங்களத்தில் லொக்கா என்றால் பெரியவன் மற்றது. வம்போட்டா என்றால் ‘குண்டு கத்திரி ’ என்பது அர்த்தம்

பெயர் வேடிக்கையாக இருந்தாலும், வம்போட்ட லொக்கா நாட்டின் தெற்கில் ஒரு சக்திவாய்ந்த சக்தியாக இருந்தவன் கப்பம் கோருதல் மற்றும் கடத்தல் தவிர இரட்டை இலக்கத்தில் இடம்பெற்ற கொலைகளுக்காக தேடப்படும் இவரின் பெயரை சொன்ன மாத்திரம் தங்காலை, பெலியத்த, வலஸ்முல்ல போன்ற பிரதேசங்களில் அச்சத்தை ஏற்படுத்தியது.

சூரியவெவ கிராமத்தில் கிதுல்முல்லகமகே சமன் குமார பிறந்தான் வம்போட்டா. ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த இருவரில் இளையவரான அவர், சூரியவெவ சந்தையில் கத்தரி விற்பனையில் தனது குடும்பத்திற்கு உதவினார், அங்குதான் அவர் தனது வாழ்நாள் முழுவதும் அவருடன் ஒட்டிக்கொள்ளும் பெயரைப் பெற்றார்.

வம்போட்டா மோசமான ‘ரத்னவீர’ கும்பலில் சேர்ந்தான், பின்னர் அவர்களை விட்டுவிட்டு தனக்கென ஒரு குற்றவியல் நிறுவனத்தைத் தொடங்கினார். தென் மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் எம்.கே.யின் ஆதரவுடன் பாதாள உலகக் குழுவின் முக்கிய உறுப்பினராக அவர் மாறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவனுக்கென்று ஒரு குழு உண்டு வெளிநாட்டில் இருந்து வந்து இறங்கும் போதை வஸ்துகளை அவனுடைய கூட்டாளிகள் நாட்டில் வினியோகிப்பது தான் முக்கிய நோக்கம்

இலங்கையின் கண்டி, காலி , நுவெரெலிய, போன்ற ஊர்களில் கண்டி அரசரின் காலத்து அதிகாரிகளின் பெரிய பங்களா போன்ற வளவு வீடுகள் இருந்தான. அது போன்ற வளவு வீடுகள் இரணடு லொக்கா வைத்திருந்தான், அந்த இரு வளவு வீடுகளில்

இரு வைப்பாட்டிகள் வைத்திருந்தான் . எவர்களுக்கு பிள்ளைகள் இருப்பதாக கேள்வி. நேரத்துக்கு ஒரு விலை உயர்ந்த கார்களில் லொக் பயணிப்பான் கழுத்தில் தங்கச் சங்கிலி. கருப்பு கண்ணாடி.தன மொட்டை தலையை மறைக்க விக் என்ற பொய் மயிர். வைத்துக் கொள்வான் . அரும்பு மீசை , தங்கப் பல், இரு கை விலைகளில் மோதிரங்கள் அணிந்து கொள்வான். அதிகம் பேச மாட்டான் சிரிக்க மாட்டான் முறைப்படி திருமணம் செய்யாதவன் ஆனால் அவனுக்கு நாலைந்து பிள்ளைகள் பல ஊர்களில் இருந்தார்கள் வெளிநாட்டில் முதலீடு டாலர்களில் அதிகம் உண்டு என்று பத்திரிகைகள் எழுதின .

அவனுடைய மாமன் ஒரு நாட்டு வைத்தியர். அவர் கிராமத்து மக்களுக்கு வைத்தியம் பார்ப்பதற்கு சிலசமயங்களில் அபின் கஞ்சா போன்ற போதை வஸ்துகளை பாவித்தார், அவரின் வீட்டுக்கு பின்னால் அவர் கஞ்சா செடி வளர்த்து வந்தார் தன் மருமகனுக்கு அதன் சூட்சுமத்தை சொல்லிக்கொடுத்தார்.

லொக்காவுக்கு இந்தியாவில் தமிழ்நாட்டிலும் கேரளாவிலும்மாநிலங்களில் தொடர்பு இருந்தது அ தனால் அவன் மலையாளம் தமிழும் பேசுவான் அந்த மாநிலங்களுக்கு அடிக்கடி சென்று வருவான் . அங்கும் அவளுக்கு சின்ன வீடுகள் இருந்தது என்று சிலர் சொன்னார்கள். அவன் சினிமா தயாரிப்பாளர்கலுக்கு பணம் கொடுத்து வந்ததால் அவனுக்கு சினிமா நடிகைகளின் தொடர்பு இருந்தது .அது எவ்வளவு உண்மை என்று ஒருவருக்கும் தெரியாது

இப்படிப்பட்ட ஒருவனின் குழு வின் செயலாளள் கிரி பண்டா வக்கீல் மித்ர்னின் உதவியை தேடி வந்தான். காரணம்.;லொக்கா களவாக கேரளாவில் இருந்து போதை வஸ்த்து தோணிகளில் கொண்டு வரும் போது நெடுந்தீவில் வைத்து கைய்யும் மெய் யுமாக இலங்கை கடற்படையினால் பிடிபட்டான்.

தீவிர விசாரணைக்கு பின் பல ஆதரங்கலளுடன் அவன் மீது வழக்கு அரசால் தொடராப் பட்டது.

மூன்று அனுபவம் உள்ள நீதிபதிகள் கொண்ட அந்த வழக்கில் வக்கீல் மித்திரன் லோக்காவுக்கு சார்பாக வழக்கை அவர் கையாண்ட விதம் எல்லாரையும் பிரமிக்க வைத்தது.

குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட லொக்காவைஅரசு வக்கீல் குறுக்கு விசாரணை செய்தார் ஆனால் அவனுக்கு ஏற்கனவே எப்படி பதில் சொல்ல வேண்டும் என்று வக்கீல் மித்திரன் சொல்லிக் கொடுத்துவிட்டார்.

சில நாட்களுக்கு வழக்கு தள்ளிப் போடப்பட்டதபின் திரும்பவும் அந்த வழக்கு தொடர்ந்து சில நாட்கள் நடந்தது. மூன்று நீதிபதிகள் அவனை சில கேள்விகள் கேட்டரர்கள்.

ஒரு நீதிமன்றத்தில், ஜூரி என்பது ஒரு குற்றத்தைப் பற்றிய உண்மைகளைக் கேட்கவும், குற்றம் சாட்டப்பட்ட நபர் குற்றவாளியா அல்லது n என்பதைத் தீர்மானிக்கவும் பொது மக்களிடமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களின் குழுவாகும். ஏழு ஜூரிகள் லொக்காவுகு எதிரான வழக்கை உன்னிப்பாக கேட்டுக் கொண்டு இருந்தனர் . பொலீஸ் ஆதாரத்துடன் வழக்கை தாக்கல் செய்து இருந்தது .

பார்க்க வந்திருந்த கூட்டம் இவனுக்கு நிச்சயம் மரண தண்டனை தான் என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர் .

கூட்டத்தில் ஒருவன் சொன்னான்,
இல்லை இந்த வழக்கில் இருந்து லொக்கா தப்பிவிடுவான், ஏனென்றால் வாகில் மித்திரன் தோன்றிய கேஸ்களில் அவர் தொற்றதில்லை அதோடு லோக்காவுக்கு உயர்மட்டத்தில் அரசியல்வாதிகளுடன் தொடர்பு உண்டு . அதனால் தீர்ப்பு அவனுக்கு சாதகமாக அமைந்துவிடும்”.

இன்னொருவன் சொன்னான்

”முக்கிய ஆதாரங்களுடன் இந்த வழக்கைத் தாக்கல் செய்திருக்கிறாரர்கள் அதுமட்டுமில்ல லொக்காவுகுக் எதிராக சாட்சியங்கள் இடம் பெற்றுள்ள து அவன் செய்த குற்றத்தை அவை உறுதி செய்து விட்டது. லொக்காவின் தொழிலால் சமூகம் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை விளக்கமாக நிரூபிக்கப் பட்டுள்ளது.

வக்கீல் மித்ரனின் வாதங்கள் வந்திருந்த எல்லோரையும் அதிரவைத்தது சட்டத்திலுள்ள நுணுக்கங்களை எடுத்துக்காட்டி லொக்காவை விடுதலை செய்யும்படி வாதாடினார்.

வழக்கை கேட்டுக்கொண்டிருந்த ஜூரிகள் மணிநேரம் அறைக்குள் சென்று கலந்து ஆலோசித்து விட்டு ஜூரி குழுவின் தலைவர் ஒரு பேப்பரில் தங்கள் தீர்ப்பை எழுதிக் கொண்டு வந்து நீதிபதிகளுக்கு கொடுத்தார்.

வழக்கு முடிவுக்கு வந்தது, ஜூரி கொடுத்த தீர்ப்பை கலந்து நீதிபதிகள் ஆலோசித்த பின் பிரதம நீதிபதி தீர்ப்பை வாசித்தார்.

கிதுல்முல்லகமகே சமன் குமார என்ற லொக்கா குற்றவாளி என்று தீர்ப்பு கொடுக்கப் பட்டது. அதனால் அவனுக்கு மரண தண்டனை சட்டதின்படி கொடுக்கப்பட்டது.

வழக்கு தோல்வி அடையும் என்று வக்கீல் மித்ரதின் எதிர்பார்க்கவில்லை அதுதான் அவர் இதுவரை இதுவரை நடத்திய கேஸ்களில் முதல் தோல்வி பொலீஸ் லோக்கவை கைவிலங்குகளுடன் வெலிக்கடை ஜெயிலுக்கு கூட்டி சென்றது.

சட்டத்தின் படி மரண தண்டனை கொடுத்தாகி விட்டது , இலங்கையில் மரண தண்டனை என்பது சட்டப்படியான தண்டனை. இருப்பினும், 23 ஜூன் 1976 முதல் மரணதண்டனை நிறைவேற்றப்படவில்லை, இருப்பினும் கொலை மற்றும் போதைப்பொருள் கடத்தல் குற்றங்களுக்காக உயர் மற்றும் உச்ச நீதிமன்றங்களால் மரண தண்டனைகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டன. இவை தானாகவே ஆயுள் சிறையாக மாற்றப்பட்டன. ஆனால் இலங்கையின் படி மரண தண்டனை அரசியல் காரணத்தால்1976 ஆம் ஆண்டுக்குப் பின் நிறை வெற்ற்ப்டவில்லை.

அதனால் வக்கீல் மித்ரன் லொக்காவுக்கு சொன்னார்

“நீ ஒன்றும் யோசிக்காதே லோக்கா .உன் உயிரை அவ்வள்ளவு கெதியில் அரசு எடுத்து விடாது ஏனென்றால் உன்னைப் போல் பலர் மரண தண்டனை பெற்று சிறையில் பல வருடங்கள் உயிருடன் இருக்கிறார்கள். உனக்கு சிறை அதிகாரிகள் பலரை தெரியும் அது மட்டும் இல்லை உன்னிடம் இருக்கும் பணத்தால் நீ சவுகரியமாக அங்கு சிறையில் வாழலாம் ”.

அதுக்கு லொக்கா சொன்னான் “ நான் எப்படி என்வைப்பாட்டிகளிடம் இருந்து பிரிந்து வாழ முடியும் இங்கு சிறைக்குள் என்னுடன் பெண்கள் இருப்பதற்கு அனுமதி கிடையாது அதுமட்டுமல்ல நான் சுதந்திரமாக பலவித கார்களில் ஊரில் திரிய முடியாது” என்று சொல்லி புலம்பினாரன்

அதுக்கு மித்ரான் சொன்னார் .” லொக்கா நீ ஒன்றுக்கும் யோசிக்காதே உன்னிடம் மில்லியன் கணகில் டொலரில் பணம் பல நாட்டு வாங்கிகளில் இருக்கிறது. இந்த அரசுக்கு இப்போது டொலருக்கு பஞ்சம் வந்துவிட்டது பிற நாடுகளில் வாங்கின கடனை கொடுக்க முடியாமல் அரசு இருக்கிறது பொருளாதாரம் சரிந்து கொண்டு போகிறது வெளிநாட்டில் வைத்திருக்கும் டாலர்களில் ஒரு பகுதியை நீ இந்த அரசுக்கு கொடுக்க முடியுமானால் நான் எனக்கு தெரிந்த ஒரு அரசியல்வாதி உடன் பேசி உன் விடுதலைக்கு ஒழுங்கு செய்கிறேன் நீ சம்ம தித்தல் . உன்னை ஜனாதிபதி நினைத்தால் உனக்கு விடுதலை கிடைக்கும்”

“இது சாத்தியமாகுமா”?என்று கேட்டான் லொக்காவக்கீலிடம்,

ஏன் முடியாது இப்போதைய ஜனாதிபதியும் முன்னாள் ஜனாதிபதியும் மரண தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்திருக்கிறார்கள் இலங்கை அரச சாசனத்தில் இடமிருக்கிறது.

ஒரு புத்த பிக்கு நீதிமன்றத்தை அவமதத்து பல வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை பெற்றவர் ஆனால் அவர் சில மாதங்களில் முன்னாள் முன்னாள் ஜனாதிபதியால் விடுதலை செய்யப்பட்டா’ர் இது போன்று துமிந்த சில்வா என்பவர் இலங்கையின் ஆளும்குடும்பத்தின் விருப்பமானவராக பரவலாகக் காணப்பட்டவர் , மேலும் 10 ஆண்டுகளுக்கு முன்பு தேர்தல் தொடர்பான தாக்குதலில் அவரது சொந்தக் கட்சியைச் சேர்ந்த போட்டி அரசியல்வாதி ஒருவரைக் கொன்றதற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டார். ஊயர் பதவியில் இருக்கும் அரசியல்வாதியின் தீர்ப்பு நீதிபதிகளின் தீர்ப்பை தூக்கி குப்பை குள் போட்டு விடும்

வக்கீல் சொன்னதை கேட்ட பின் லொக்கா சொன்னான்

“என்னிடம் அமெரிக்கா சுவிட்சர்லாந்து ஜப்பான் லண்டன் ஆஸ்திரேலியா கனடா போன்ற நாடுகளில் பல முதலீடுகள் இருக்கின்றது அது எல்லாம் நான் வியாபாரம் செய்து சேர்த்த பணம் அதில் இவர்களுக்கு இரண்டு பில்லியன் டாலர்கள் கொடுக்க நான் தயார் எனக்கு விடுதலை பெற முடியுமானால்.

“என்ன 2 பில்லியன் டாலர்களா?அப்போ உன்னுடைய வெளிநாட்டு முதலீடுகள் இதற்கும் பார்க்க கூடியதாக இருக்குமெ’

“எவ்வளவு முதலீடுகள் இருக்கிறதென்று பற்றி கேட்க வேண்டாம் இதை நான் கொடுக்க தயார் நீங்கள் அரசுடன் பேசி எனக்கு ஒரு முடிவை சொல்லுங்கள் “

இந்த உரையாடல் நடந்து ஒரு மாதத்திற்குப் பின்,

ஓரு நாள் சிங்கள, தமிழ், ஆங்கில பத்திரிகைகளின்முதல் பக்கத்தில் கொட்டை எழுத்துக்களில் ஒரு முக்கிய செய்தி வந்த வந்தது இந்த செய்தி பிரபல போதை மருந்து கடத்தல்காரன் மரண தண்டனையில் இருந்து ஜனாதிபதி தனக்குள்ள அதிகாரத்தைப் பாவித்து விடுதலைசெய்தார்

அந்த செய்தி லோகா சிரித்தபடியே ஜெயில்லில் இருந்து வெளிதே வருவதை படம் எடுத்துப் செய்தியுடன் போட்டிருந்தார்கள்.

இன்னும் சில நாட்களின் பின் ஒரு கூட்டத்தில் ஜானதிபதி பேசும்போது அவருக்குப் பின்னால் கருப்பு கண்ணாடியு/டன் லொக்க நிற்பதை செய்தி ஒன்றில் பத்திரிகை ஓன்று போட்டிருந்தது

***

லொக்கா விடுதலையான பின் ஒரு நாள் அவன் தன் சொந்த கிராமத்துக்கு தனது தாயாரை பார்க்கச் சென்றான்.

அவன் அந்தக் கிராமத்துக்கு வருவான் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த அவனுடைய குழுவுக்கு எதிரி வலு சுதாவின் போதைவஸ்து குழு லொக்காவை வை சுட்டுத் தீர்த்தது. செய்தித்தாள்களில் கீழ்கண்டவாறு வந்தது

“திணை விதைத்தவன் திணை அறுப்பான் வினை விதைத்தவன் வினை அறுப்பான் அதுபோல் லோக்கா டஎன்ற மரண தண்டனை பெற்று பின் சில மாதங்களில் ஜனாதிபதியால் விடுதலை செய்யப்பட்டவன் வலு சுதாவின் போதைவஸ்து குழுவினால் சுட்டுக்கொல்லப்பட்டார் அவன் சிறையில் இருந்திருந்தால் அவன் உயிருடன் இருந்திருப்பான், ஏனென்றால் மரண தண்டனை இப்போது இலங்கையில் நிறைவேற்றப்படுவதில்லை;

– யாவும் உண்மையும் புனைவும் கலந்தது

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *