கதையாசிரியர்:
தின/வார இதழ்: அமுதசுரபி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 7, 2022
பார்வையிட்டோர்: 10,713 
 

(2019ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தொலைபேசி தொடர்ந்து தொல்லை கொடுக்க. இன்று என்ன ஒரு புதிய தகவல் – மளது சுருதி சேர்க்க விரைந்து போனை எடுத்து….

“ஹலோ! நான் ஜி.பி.கே. பேசறேன்….. ” என்றாள் கமலா.

“ஹாய்… நான் சீதா பேசறேன்… எப்படி இருக்க.”

“சீ..தா! எத்தளை நாளாச்சு உன்னோட பேசி! எள்ள விசேஷம்? எப்படி இருக்க… உன்னைப் பார்த்து நாளாச்சு.. பார்க்கணும் போல இருக்குடா….. ”

ஜி.பி.கே. எனும் கமலாவின் குரல் உடைந்தது. “என்ன ஆச்சு…ரிலாக்ஸ்… ஒரு நல்ல சமாச்சாரம் நாள். வர 23-ம் தேதி புது இடத்துல பால் காச்சறேன். கட்டாயம் வந்துடணும், காலம்பற டிபன் வகையறா ஏற்பாடு பண்ணிட்டேன். இனிமேல் தான் சூடா, பாலா, விஜிக்கு போன் பண்ண னும், நேர்ல விவரமா பேசலாம். நீங்கள்ளலாம் போன் -பேசி மீட்பண்ணி வந்துடுங்கோ … அட்ரஸ் எஸ்.எம்.எஸ். பண்றேன்.” பேசிமுடித்தாள் சீதா.

வரிசையாக தோழிகளை தொடர்பு கொண்டு அழைப்புகளை முடித்தபோது மணி 9 ஐத் தாண்டி விட்டது.

நல்ல நாள்….. பஞ்சமி கிகி.. அவர் நடித்திரத்துக்கு சந்திராஷ்டமம் இல்லை. நோ சாஸ்தரி, நோ ஹோமம்… சிம்பிள்.. வொவெரி சிம்பிள்.

தோழிகள் நாலு பேருக்கும் சரிகை இல்லாமல் சுங்குடி புடவை எடுத்திருந்தாள்.

லெஸ் லக்கேஜ் – மோர் கம்பர்ட்

எல்லாமே 2 சூட்கேஸ் – 2 அட்டை டப்பாவில் அடங்கி விட்டிருந்தது. எத்தனை வருட நட்பு….!

18 வயதில் க்ளார்காக அலுவலகத்தில் நுழைந்து…. 58 வயதில் ரிடயராகி வரும் வரை நெசவாகி போர்த்தப்பட்ட சிநேகம் அது.

சந்தோஷங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்ட லன்ச் அவர்ஸ்..

சங்கடங்கள் கொட்டப்பட்டு இலேசாகி தீர்வுகண்ட பஸடம்…. அனைத்துமே தோள் கொடுத்து, துணை நின்று உறவாகிய சரித்திர கல்வெட்டுகள்.

“அம்மா!”

“என்ன சிந்து!”

“மறுபடியும் யோசனை பண்ணினயா”

“எதுக்கு ?”

“இந்த கரஹப்ரவேசம் தேவையா?”

“ஆமாம்மா! ரேகாவுக்கு நல்லபடியா கல்யாணம் முடிஞ்சாச்சு! மாப்பிள்ளைக்கு எந்த ஊர்ல ப்ளேஸ்மெண்ட்ன்னு தெரியலை. ரேகாவும் வேலைக்கு போறா. நீ அவளுக்கு ஒத்தாசையா இருக்கணும். இனனம் எத்தனையோ நல்லதுகள் நடக்க இருக்கு. எனக்காக நீ சிரமப்பட கூடாது, நீ ஒண்டி உள்ளூர்ல இருக்கேங்கறதுக்காக உன் தலைல நாங்க ஏறி உக்காந்துக்கறது நியாயம் இல்லை. நானும் நாலு பெத்தவள்தான். எல்லாருக்கும் பெத்தவாளை காப்பாத்தற பொறுப்பு இருக்கு. ஐந்து விரல்களும் ஒண்ணாவா இருக்கு, வெளிநாட்டு படிப்பு மோகம் கண்ணை மறைச்சது. சொத்துல சம உரிமைங்கறப்ப… பாரம் சுமக்கறதுலயும் கட்டாயம் சமஉரிமை உண்டு தாள். ஆனால் எல்லாரும் இங்க வந்துடுங்கோ .. எக்காரணம் கொண்டும் எங்களை கைவிட்டுடாதீங்கோன்னு…. மைக் வச்சு மீட்டிங்கா பேசமுடியும். ”

பார்த்துப் பார்த்துப் பெண் தேடி –

குதிச்சு… கும்மாளமிட்டு தானே… அவாளை குடும்பஸ்தனாக்கி வைத்தோம். அந்த கூட்டுல கல் எறிஞ்சு கலைக்கறதுக்கு என்ன உரிமை இருக்கு? ஏன்னா…. அவா குடும்பம் அவாவாளுக்கு ரொம்ப முக்கியம். வயசாகி போச்சு. பாதுகாப்பு வேணும். அது யார்ட்டேந்து கிடைச்சா என்ன? கிடைச்சவாள்ளாம் உறவுதான். இது சௌகர்யம்.. நேரத்துக்கு சாப்பாடு கிடைச்சுடறது. தேவைக்கு மருத்துவ வசதி இருக்கு. ரூம் சர்வஸ்… இன்னம் என்ன?

உழைச்சு உழைச்சு…. உடம்பு ஓய்ந்து போச்சு. நீ வந்து வந்து பாத்துக்கற. இல்லைங்கல… தனியா… மெயின் டெயின் பண்ண முடியலை. அதான்…. பகவான் புண்ணியத்துல பென்ஷன் வரது, குழந்தைகள் தாங்கறேள். ரொம்ப சௌகர்யமா படறது எனக்கு. வீணா விழாரப்படாதே!”

“அம்மா ! பரத், ராம், மாது… எல்லாருமே இடக்கு மடக்கா பேசுவா… இந்த முடிவு அவாளை எப்படி பாதிக்குமோ….பிரச்சனை வரும்மா!”

“பைத்தியக்காரி! பிரச்சனையே வராது.!”

“என்னம்மா இப்படி அழுத்தமா சொல்ற..?”

“நரி கிழக்க போனா என்ன? மேற்க போனா என்ன… மேல விழுந்து பிடுங்காம இருந்தா சரின்னு இருப்பா.. அப்பாவை ஹாஸ்பிடல்ல சேர்த்தப்ப யாராவது வந்தாளா? நீ இருக்க பார்துப்பேன்னு சமாதானம் பேசினா! குழந்தைகளுக்கு பரீட்சை…… வெகேஷன் வரது…. மாமியார் மாமனார் வரா…..? இப்படி எதாவது அவா காலை கடிச்சிண்டு வந்துடும். ஒத்தர் மாத்தி ஒத்தரை கைகாமிச்சு நழுவுவா… நம்ப குழந்தைகளை நாமே தப்பு கண்டு பிடிக்க வேண்டாமே… மனகல கனத்தை ஏத்திக்காம வாழப் பழகிண்டா … எல்லாமே சுகம்தான்…. இது சௌகர்யம்மா… புரிஞ்சுக்கோ -”

சீதையின் வார்த்தைகளில் திடமும் தெளிவும் இருந்தது…..

அடுத்த இரண்டு நாட்களுமே செய்யும் வேலைகளிலும் அலைச்சலிலும் காணாமல் போக… விளக்கு வைக்கும் நேரத்தில் சிந்து வந்தாள்.

“வா சிந்து!”

“அம்மா. மாமி சேவை பண்ணினாள். அப்பாக்கு பிடிக்குமேன்று கொண்டு வந்தேன்!”

சீதா சிந்துவை தீர்க்கமாக பார்த்தாள். அங்கு பார்வை பேசியது, பாசம் நிரைபோட்டது….சிந்துவின் கை அழுத்தமாக சீதாவின் தோளை அழுத்தியது…… ‘அம்..மா.. “என்ன சிந்து ….!” “நீ எடுத்த முடிவு அப்பாவுக்கு சம்மதமா? அப்பா வருத்தப்படமாட்டாளா?”

“வருத்தப்பட மாட்டா… வருத்தப்பட என்ன இருக்கு.. எங்க போனாலும் அவர் சௌகர்யமாகத் தானே இருக்கப்போறார். அவர் என்னிக்கு கஷ்டப்பட்டிருக்கார்? உத்யோகம் புருஷ லட்சணம்னு சொல்லுவா. அது அவருக்கு பொருந்தல. பிசினஸ் பண்றேன் பேர்வழின்ன… கூடா நட்பு.– சகவாசம் ஏற்பட்டது, ரேக்கு போறது. களப்னு ஆளதுல. பாட்டி உன் அப்பாவை கழட்டி விட்டுட்டா, நமக்கு என்ன… தாலிகட்டிண்டது பார்த்துக்கட்டும்னு ஒதுங்கிட்டா. அவள் பெத்த நாலு பிள்ளைகள். முணு சீரும் சிறப்புமா ஓகோன்னு வாழறப்ப, இந்த மண்ணைத் திருத்தறது எனக்கெள்ள தலை எழுத்துன்னு. கழண்டுட்டா. அவளைச் சொல்லி என்ன லாபம்? தாத்தா இருந்தப்பவே திருந்தியிருக்கணும். அது ஒரு சுயநலமான குடும்பம். விடு.

புருஷன் உதவாக்கரையாப் போனா எல்லாரும் தான் என்வழி தளிவழின்னு பிரிஞ்சு போயிடுவா.. இவரை திருக்காது என் வேலை இல்லைன்னு திமிராத்தான் இருந்தேன். நாள் மட்டும் என்ன பண்ணினேன்? அவரைத் திருத்தியிருக்கலாமே… எனக்கு பொறுமையும் இல்லை. நேரமும் இல்லை.. அவர் திருத்திடுவார்னு நினைச்சேன்..போகப் போக மாறும்னு அழுதா என் அம்மா…. அவதான் கடைசி மட்டும் என் பொண்ணு வாழ்க்கை இப்படி ஆயிடுத்தேன்னு புலம்பித் தீர்த்துட்டா… அவள்தான் கடைசி மட்டும் துணையா இருந்து உங்களை ஆளாக்கிளா. இல்லைன்னா ஆபிஸ் போய் குப்பை கொட்டியிருக்க முடியுமா? நீங்கள்ளாம் வளர்ந்து படித்து ஆளாகியிருக்க முடியுமா? அவளும் உழைச்சு ஓடாகி என்னை உசத்தி… தான் போய்சேர்ந்தாள்… நான் இருக்கேன்… அவரைக் கைவிட்டுட மாட்டேன்று.. உங்கப்பாக்கு நன்னாவே தெரியும். அவர் வருத்தமே படமாட்டார். அவர் சுகவாசியான சுயநலம் பிடிச்சவா. இப்ப என்ன ஆச்சு…? உங்களை எல்லாம் கடைசநாள்ல….. கஷ்டப்படுத்த எனக்கு மனசில்லை . அதனால் தான் இந்த முடிவு”

சீதா கலங்காமல் திடமாகவே பேசினாள்.

“அம்மா !”

“என்ன சிந்து ….”

“பேசாம..என் கூடவே வந்துடும்மா !”

“என்ன பேசற நீ….. உன் எண்ண ம் நல்ல எண்ணம் தான்! பெத்தவ கஷ்டப் படப் போறாங்கற ஆதங்கத்துல பேசற.. பேசறப்ப நன்னா இருக்கு…. எதையும் ப்ராக்டிகலா அப்ரோச் பண்றப்ப… இதனுடைய கஷ்ட நஷ்டங்கள் தெரியும். உன் குடும்பம் அகனுடைய பளுன்னு இருக்கறப்ப… இந்த எக்ஸ்ட்ரா பளுவெல்லாம் வேண்டாம். பின்னால…. அவசரத்துல இந்த முடிவை எடுத்துட்டோமேன்னு வருத்தப்படும்படி ஆகவடும்..மனச போட்டு வீணா உழப்பிக்காதே….”

“அம்மா … நான் பரத்… மாது இவாள்ட்ட பேசிப் பார்க்கறேன்… என்னை ஒரு வார்த்தை கேக்காம… எப்படி இந்த முடிவுக்கு வந்தே….. ஏண்டி உனக்கென்ன மூளை இல்லையா… எங்கிட்ட சொல்லாம் ஏன் மூடி வச்சேன்னு கத்துவாம்மா……!”

“நீ பேசாம இரு…நான் பேசிக்கறேள்… உங்காத்துல நீங்க குடும்பத்தோட குலதெய்வம் கோவிலுக்கு போயிட்டு வந்தப்ப அப்பாக்கு கொஞ்சம் உடம்பு முடியாம போச்சு…டாக்டர் கிட்ட காண்பிச்சு மருந்து வாங்கிக் கொடுக்கப்ப…சரியா போயிடுத்து.. ஆனா பெரிசா எதாவது வந்தா அப்படின்னு பயம் வந்தப்ப… நான் தான் இந்த முடிவை எடுத்தேன்னு சொல்லிக்கறேன்….”

“வாரா வாரம் பேசறோமே… ஏம்மா இதை சொல்லலேன்னு குதிப்பாம்மா.. அவா மூணு பேருமே என்னை பீஸ் பீஸாக்கி தொங்க விட்டுடு வாம்மா… நீயும் இதுக்கு துணை போனியான்னு எகிறுவாம்மா… பளீஸ்மா…”

“வாரா வாரம் போன் பேசறது ஒரு கற்காப்புக்குத்தான். அவாளுக்கு கவலை இல்லாமல் இல்லை . உருகித்தான் போவா….. உடம்புன்னு வந்தா…ஆனால் அவாதான் என்ன பண்ணுவா! படிப்பை பணம் பண்ண வேலைக்குப் போனவா… அந்தக் காசைத் தக்க வைக்க பாடுபடும்படியாகிடுத்து. உழைச்சாதானே காசு! பிள்ளை பெண்ணு என்று குடும்பம் பெருகிடுத்து. அது முக்கியமா போயிட்டப்ப அப்பாவையும் அம்மாவையும் ஓரம் கட்டும் படியாகிவிட்டது, இதெல்லாம் காலம் செய்யற மாயம், யாரைச் சொல்லியும் குத்தமில்லை. நான் உன்னை பெத்து வளத்தேன். என்னை நீ காப்பாத்தணும்னு பேசறது சரியான வியாபாரத்தளம். எது நடந்ததோ… அது நல்லதுக்குதான். எது நடக்கப்போகிறதோ… அதுவும் நல்லதுக்குத்தான். என் கடமை என் குழந்தைகளை ஆளாக்கினேன். பலனை எதிர்பார்த்தா அது பைத்தியக்காரத்தனம்.

இதை நான் சொல்லலை,.. அந்த திருவல்லிக்கேணீல கோயில் கொண்டிருக்கானே, அந்தப் பார்த்தசாரதி சொன்னது. கிளம்பு நீ. மணியாச்சு.. நாளைக்குப் பேசிக்கலாம். ”

“சரிம்மா!” சிந்து கிளம்பிவிட்டாள்.

சிலுசிலுவென்றிருந்த அந்த விடியற்காலையில் விச்சுவின் தூக்கம் கலைந்தது. சற்றே புரண்டு படுத்ததில் பக்கத்தில் சிந்து இல்லை என்று புரிந்தது. மணியைப் பார்த்தான். 4 தான். சமையல் உள் அறையில் விளக்கு எரியவில்லை. எங்கே போனாள்? எழுந்தான். பூஜை அறையில் விளக்கு ஏற்றப்பட்டிருந்தது. அவன் கால்கள் அங்கு பயணித்தன. கல்லாய் அமர்ந்து கண்மூடி இருந்த சிந்துவின் கண்களிலிருந்து நீர்க்கோடுகள் வழிவதைப் பார்த்தான். அவன் அரைக்கப்பட்டான்.

“சிந்தும்மா…” அவன் கைகள் அவள் தோளைத் தழுவி, கண்களை துடைத்தன.

“விச்சு…. என்னால் தாங்க முடியலையே!” அவள் அவனில் இழைந்தாள்.

“புரியாதுடா!”

“இன்னிக்கு பரத், மாது, விஜய்ட்ட பேசத்தான் போறேன். அவாளுக்கு தெரியாமல் அம்மா எடுக்கற இந்த முடிவு தப்பு. கரெக்ட் தானே!”

“100% ஒ.கே. பேசிடலாம். கவலைப்படாதே -”

“எனக்கும் இதுல சத்தியமா உடன்பாடில்லை. நல்ல ஹோம் தான் பிரசாந்தி முதியோர் இல்லம், பக்கத்துல திருவான்மியூர்ல தான். பேமென்ட் கூட பால் காய்ச்சப் போறப்ப கொடுக்கலாமாம் முதல் தவணை ரூ.5,000/- தான். அட்வான்ஸ் ரூ.5,000/- கொடுத்தாச்சு. அது நான்ரிஃபன்டபிள், பரவாயில்லை . ஆனால் நாம இதை தடுத்து நிறுத்திடணும். விச்சு… நீங்களே சொல்லுங்கோ .. அப்பா பாவம். வேணும்னு எதுவும் செய்யல… எல்லாம் விதி, அப்படின்னும் விடமுடியலை. மொத்தத்துல அம்மா ரொம்ப கடப்படுவா. அவள் கடைசி நாள்ல நிம்மதியா இருக்கனும். அவள் தன் வாழ்க்கையை ரசிச்சு பொழலை, கடமையா வாழறா. கடனை அடைக்கறமாதிரி ஓடிஓடி உழைச்சா. அவள் விஸ்ராந்தியா வாழணும். இன்னிக்கு எல்லார் கிட்டயும் கான்ஃபரன்ஸ் கால் போட்டுப் பேசிடணும்.”

“கட்டாயமா பேசிடலாம், பரத் கேட்டா துடிச்சுப் போயிடுவான். அவன் என்ன பண்ணுவான். துபாய்ல வேலை… நினைச்சா வரமுடியாது. ஆனாலும் வருஷம் ஒரு தடவை தப்பாம் வந்திண்டு தான் இருக்கான். அவனுக்கும் குடும்பம் பெருகி சம்சாரியாகிட்டான். உழைப்புத்தான் தீர்வு என்று ஆயிட்டப்ப…பல காரியங்கள் நின்னுதான் போயிடறது.. மாது! அவன் சாதாரண வேலை. பம்பாய்ல போய் வாழும்படியாயிடுத்து, அஞ்சறைப் பெட்டியாய் பிளாட். காலை நீட்டி படுக்க வசதி இல்லை. பிறந்தது இரண்டும் பொண்ணா போயிடுத்து. இவளை வேற எங்க கொண்டு வச்சுக்க முடியும்?

விஜய்யோ …டில்லில் மாமியார் வீட்டோடு போரும்படியாயிடுத்து, அசலே முடியாது, யாரையும் எதுவும் சொல்ல முடியாது. அவாவா சூழ்நிலை அப்படியாயிடுத்து. எல்லாரையும் அர்ஜன்டா வரச்சொல்லி பேசி அம்மாவுக்குப் புரியவைப்போம். மண்ணுக்கு மரம் பாரமில்லைங்கற மாதிரி… பெந்த மக்களுக்கும் அம்மா-அப்பா பாரமில்லைன்னு நன்னாவே மளகல் புரியவைக்கறமாதிரி பேசி இதை நிறுத்திடலாம். கவலைப்படாதே சிந்து. எழுந்திரு!”

விச்சு கைபிடித்து சிந்துவைத் தூக்கி நிறுத்தினான்.

“விச்சு ரியலி யு ஆர் க்ரேட்… நான் ரொம்ப கொடுத்துவச்சவ… தேங்க் யு.”

“பைத்தியம்… எழுந்திரு… ஒரு நல்ல காபி குடிக்கலாம். அப்புறம் தெம்பா பேசலாம்.”

முடிவு எடுத்த வேளையில்….

மனக தெளிந்தது… அடுத்து வந்த அரைமணித் துளியில் மளசு வேகமாக திட்டங்கள் தீட்டியது.

தொலைபேசி…. தொடர்ந்து ஒலித்து என்னை எடு!.. பேசு!… என்று உசுப்பியது.

‘அம்மாவாத்தான் இருக்கும்!” சந்து ஓடிப்போய் போனை எடுத்தாள்.

“ஹலோ! அம்மா! ” சிந்து பேச ஆரம்பித்தாள்.

“சிந்து! நான் அம்மா இல்லை . அப்பா பேசறேன்!”

“என்…ன…ப்…பா!” சிந்துவின் குரலில் பதற்றம் ஏறியது.

அப்பாவா…. அப்பா… பேசவே மாட்டாளே…. எதுக்கு போன் பண்றா…. பல்ஸ் எகிறியது சிந்துவுக்கு.

“அம்மா எழுந்திருக்கவே இல்லை ….!”

“என்..னப்…பா… சொல்ற -!”

“மணி ஆறு ஆச்சே…. காப் தரலையான்னு எழுப்பினேன். எழுப்பினேன். அசையலை. வாசல் தெளிக்கற ஆயா வந்தாள். குரல் கொடுத்தேன், அவளும் வந்து அம்மாவைப் புரட்டினா…. ஆனால்… அம்மா…. அசையலை.. அவள் உடம்புல கைவச்சு பாத்தா.. ஜில்லிட்டிருந்தது. மூச்சு நின்னுபோயிடுத்து ஐயான்னு… அலறினாள் ஆயா…. உடனே பக்கத்து வீட்டிலேந்து பாஸ்கரை அழைச்சிண்டு வந்தா… டாக்டர் வந்தா… அம்மா தாக்கத்துலேயே போயிருக்கா.. செத்துப்போய் 3 மணிநேரம் ஆயிடுத்துன்னு சொல்றா.. ஓடிவாம்மா…..” கணபதி குரல் ஓலமிட்டு அழுதது.

“ஐயோ… விச்சு ஓடிவாங்களேன்… அம்மா செத்துப் போயிட்டா!” சிந்து கதறினாள்.

“எ..ன்..ன..!” விச்சு ஓடிவந்து சரிந்து விழுந்தவளைத் தாங்கிப் பிடித்தான்.

புதுவீட்டுக்கு பால் காய்ச்சணும்னு… கோடித்து கோடித்து ஆசைப்பட்டு திட்டமிட்டு…. காத்திருந்த அம்மா போயிட்டாளா….?

சிநேகிதிகளுக்கு பார்த்து பார்த்து புடவை வாங்கி சந்தோஷங்களைப் பேசிப் பேசி பரிமாறிக் கொள்ள மனசுக்குள்ளே கோலமிட்டுக் காத்திருந்த அம்மா போயிட்டாளா…!

அம்மா…. நீ எத்தனை ஆசைபட்ட…. உன் திட்டத்தை தடுக்கணும்னு நான் நினைச்சது உனக்கு பிடிக்கலயா.. அதான் போயிட்டயா? எப்படிம்மா போன… நீ…உனக்கு எப்படிம்மா எங்களை விட்டுப் போக மனசு வந்தது….- புரண்டு புரண்டு அழுதாள்…

அடுத்து வந்த மணித்துளிகள் காற்றில் கரைந்தன…. தொலைபேசிகள் இயக்கப்பட்டு பின்னல் கோலாட்டம் இட்டன.

அப்படியே உறைந்து போனார் கணபதி.

என் சீதா போயிட்டா…. என்னைத் தனியாக விட்டுட்டுப் போயிட்டா.

போறுமடா சாமி உன்னோடு வாழ்ந்தது என்று போய்விட்டாள் நிம்மதியாக.

ஓடி ஓடி உழைத்த கைகளும் கால்களும் கட்டைவிரல் கட்டப்பட்டு நீட்டப்பட்டுக் கிடக்கிறாள். எதுவுமே சுமையில்லை என்று குடும்பம் சுமந்தவள் எனக்கு நானே சுமை என்று உணரவைத்து விட்டுப் போய்விட்டாள்.

எத்தனையோ உறவுகள் எனக்கிருந்தாலும் என்னை உறவாக்கிக் கொண்டவள் இனி இல்லை. நான் என்ன பண்ணுவேன்….! ஒண்ணுமே புரியவில்லையே!…..

நாம இரண்டு பேரும் முதியோர் காப்பகத்துக்குப் போகிறோம். என்ன புரிஞ்சுதா… என்று சொன்னாளே!

அவளா போய்விட்டாள்! இனிமேல் நான் தனி! தனியா வாழணும்! உண்மை சுட்டுப் பொசுக்கியது.

“சீதா! நான் என்னடி பண்ணுவேன்! என்னை அனாதையாக்கிட்டேயே!” மிகப் பெரியதாக… ஓங்கி அலறினார் கணபதி.

பாவம் சீதா…. இந்த புண்ணியவானை கல்யாணம் பண்ணிண்டு ஒரு சுகப்படலை. குரங்கு கை பூமாலையாய் கஷ்டப்பட்டாள், தெய்வத்துக்கே அடுக்கலை. அழைச்சுண்டுடுத்து.

பல்வேறு உணர்ச்சிக் குவியல்கள் பட்டாசாய்த் தெறித்தன.

செய்தி கேட்டு ஓடிவந்த சிநேகிதிகள் கட்டிக் கதறிப் புலம்பித் தீர்த்தனர்.

பத்து மாத பந்தங்கள் பாசத்தை இடியாக இறக்கி கண்ணீரை மழையாக்கி அவளைக் குளிப்பாட்டித் தீர்த்தனர்.

கணபதியின் குரல் திரும்பத் திரும்ப இடியாய் இறங்கயது,

அப்பா போய் அம்மா இருந்திருந்தா… பிள்ளைகள் காலத்தை பாகப் பிரிவினை செய்து அம்மாவைக் கடத்திக் கொண்டு போயிருப்பார்கள்..

ஆனால் அம்மா போயிட்டா….

அப்பாவின் காக்குரலுக்கு என்ன பதில்!

பிள்ளைகளின் மனதில் பேரிடியாய் இறங்கியது கணபதியின் குரல்.

“மாமா! அழாதிங்கோ. நான் இருக்கேன்! இதோ சிந்து இருக்கா….. நீங்க எங்கயும் போகவேண்டாம். மாமா! நாங்க இருக்கோம்!”

விச்சு உரத்த குரலில் உறுதி செய்து அவரை அணைத்துக் கொண்டான். கணபதி கண்கள் விரிய அவனைப் பார்த்தார்.

அங்கு விச்சு தெரியவில்லை. பூமிக்கும் ஆகாசத்துக்குமாக…. கிருஷ்ணன்…. அந்த பரமாதமா…. நான்கு கைகளுடன்… சங்கு சக்கரம்…கதாயுதத்துடன் மந்தஹாளமாக சிரித்தான். விஸ்வருபமாய் வியாபித்தான் கண்ணன்.

பாலாலே கால் அலம்பி பட்டாலே துடைத்து துளசி தளத்துடன் பெண்ணை தாரை வார்த்த மகாவிஷ்ணுவே தொந்தான். ஓம் நமோ நாராயணா.. என் புருஷனுக்கு இனிமேல் கவலை இல்லை …. என் மாப்பிள்ளை அவரைப் பார்த்துப்பான்.

சீதாவின் ஆன்மா “ஓம் நமோ நாராயணா…!” எனும் ப்ரம்மத்தில்….கலந்து இலேசானது.

– மார்ச் 2019

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *