பத்மாவதி கதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 14, 2022
பார்வையிட்டோர்: 5,130 
 

(1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அவளைப்போன்ற அழகான ஒருத்தி இந்த உலகத்திலேயே இருக் கமுடியாது என்றே எனக்குத் தோன்றிற்று அப்படி ஒரு அழகு.

பத்மா வீட்டுக்கு வந்து போகும் போதெல்லாம் நான் அவளைச் சுற்றிச் சுற்றித்திரிந்தேன் அவள் முகத்தை இமைவெட்டாமல் பார்த்தபடியே இருந்திருக்கிறேன்

பத்மா இவ்வளவு அழகிதான் ஆனாலும் வறுமையும் அவளது குடும்பச்சொத்தாகி இருந்தது. படிப்பு வாசனை அவளால் அறிய முடியவில்லை.

எங்கள் வீட்டில் எல்லோரும் அவளை பத்மா பத்மா என்று சுப் பிட தானும் அப்படியே தொடங்கி விட்டேன் எனக்கும் அவளுக்கும் குறைந்தது எட்டுவயதாவது வித்தி பாசமிருக்கும் யாரும் எனக்கு பத்மா அக்காவென்று சொல்லித்த ரவில்லை. ராணி அக்கா, பயா அக்கா என்று பக்கத்துவீட்டு அக் காமாரைச் சொல்லித்தந்துவிட்டு, தாக்குத்தவறி ராணி என்றுவிட்டால் பொல்லெடுத்து ஓங்கும் பாட்டி கூட பேசாமல் இருந்துவிட்டாள். எனக் கென்ன ! நானும் அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை. சரி, பத்மா!

பத்மாவுக்கு கலியாணப் பேச்சு நடந்து கொண்டிருந்தது. கென்னமோ மனசு சஞ்சலமாக இருந்தது இவளுடைய அழகுக்கு எப்படி ஒருத்தன் வந்து வாய்க்கப் போகிறாளோ!

சரி, யாரோ ஒருத்தனை அவள் கட்டித்தானே ஆகவேண்டும். பேசாமல் இருந்துவிட்டேன்.

நான் எதிர்பார்த்தது போலவே ஒருவன் வந்து அவளைக் கட்டிக் கொண்டான். எனக்கு அவனைக் கொஞ்சமும் பிடிக்கவில்லை கரி நிறம். கோணல் மூஞ்சி துவதை டைய அழகுக்கும் அவனுக்கும் எது வித சம்பந்தமும் இருக்கவில்லை . பத்மாவுக்குப் பக்கத்தில் நிற்கும் போது அவன் இன்னும்கூட கறுப் பாகவே தெரிந்தான். அவளை நினைத்து மிகவும் கவலைப்பட் டேன் ரெண்டு மூன்று தினங்கள் சாப்பிடுவதற்குக்கூட கஷ்டமாகலிருந்தது.

பின்னர் ஒருவாறு ஆறுதலா னேன். பத்மாவின் கைகள் கழுத்துக்களில் நிறைத்த நகைகள். அவளின் செல்வச் செருக்கு பத்மாவின் உடம்பில் தெரிந்தது.

எனக்கு விபரம் தெரிந்த வரையில் முதன்முதல் ‘நெக்கிளெஸ்’ என்ற பெயர் அறிமுகமானது அவளுடைய கழுத்தில் இருந்துதான்.

பத்மாவையும் அவள் கணவனையும் எல்லோரும் கூப்பிட்டு விருந்து கொடுத்தார்கள். எங்கள் வீட்டிலும் கொடுத்தார்கள். வரும் போது அவள் அழகிய ‘சொக்கள் லட்’ பெட்டியொன்று வாங்கி வந்தாள். அக்கா அவளுக்கு புதுக் குடை வாங்கிக் கொடுத்தாள். அம்மா புதுச்சாதி வாங்கிக் கொடுத்தா. மகிழ்ச்சியோடு விடை பெற்றார்கள். எனக்குச் சந்தோசமாக இருந்தது.

அவன் வேறு ஊர் போக்குவரத்து லொகாவில் வேலைபார்த்தான். பத்மாவையும் அவன் தன்னோடு கூட்டிப்போகவில்லை, கிழமையில் ஒரு தடவை மட்டும் ஊருக்கு வருவான்.

வந்து போகும் அந்த ஒரு நாளி ஒம்கூட பத்மாவோடு சண்டை போட்டான். அவனுக்குச் சரியான தாழ்வுச்சிக்கலாக இருக்கவேண்டும். பத்மாமீது சந்தேகப்பட்டான். சண்டை முற்றி அடிக்கவும் ஆரம்பித்தான், பத்மாவை நினைக்கப் பாவமாக இருந்தது.

அவன் போன மறுநாள் வீட்டுக்கு வந்து சொல்லிச்சொல்லி அழுவாள். தடித்த தமும்புகளைக் காட்டி விம்முவாள். அவளது சிவந்த உடம்பில் தளும்புகள் அப்படியே பளிச்செனத் தெரியும். அம்மாவும் அக்காவும் ஆறுதல் சொல்வார்கள். அவளோடு இருந்த அவளது அம்மாவும் கொஞ்சநாளில் செத்துப்போளாள்.

பத்மா வீட்டுக்கும் எங்கள் வீட்டுக்கும் இடையில் ஒரு சிறிய பலசரக்குக் கடையிருந்தது. அந்தக்கடையில் ரொமையா என்று ஒருமலைநாட்டு இளைஞன் வேலை பார்த்து வந்தான். பத்மாவின் புருஷன் வெறிபோட்டுவிட்டு உதைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் இராமையாதான் கச்சிதமாக அவளைக் காப்பாற்றி எங்கள் வீட்டில் சேர்த்திருக்கிறான்.

நாட்கள் செல்லச்செல்ல இராமையாவுக்கும் பத்மாவுக்கும் முடிச்சுப்போட்டு ஊர் கதை கட்டி விட்டது. எல்லோரும் அவளை வெறுத்தார்கள். ஒதுக்கினார்கள். எங்கள் வீட்டில் மட்டும் அவளுக்கு ஓரளவு இடம் கிடைத்தது.

பத்மாவின் புருஷன் இப்போ உச்சத்தில் தாண்டவமாடினான். அவளால் தாங்கமுடியவில்லை. இராமையா ஆறுதல் கூறினான். தைரியம் கொடுத்தான்.

ஒரு நாள் அவள் இராமையாவோடு அவனது ஊருக்கு ஓடிப் போய்விட்டாள். எங்கள் வீட்டில் எல்லோருக்கும் கவலையாக இருந்தது.

அதன் பிறகு அவள் புருஷனும் அங்கு வருவதில்லை. வீடு வெறுமையாக இருந்தது.

ஒரு வருடம் போயிருக்கும். ஒருநாள் பத்மா அழுதபடி வீட்டுவாசலில் வந்து நின்றாள். ஊர்ச்சனங்கள் அவளைத் திட்டினார்கள். வாய்க்கு வந்தபடி யெல்லாம் ஏசினார்கள். சிலர் காறியும் உமிழ்ந்தார்கள். அவள் குனிந்தபடி அழுது கொண்டிருந்தாள்.

இராமையாவால் குடும்பம் நடத்தமுடியவில்லை. ஒருவருஷமாயும் ஊர்ச்சனங்களும் அவளை ஏற்கவில்லை. பாரபட்சம் காட்டினார்கள். இராமையாவின் இயலாமையும் சேர அவளை அடித்துத்துரத்திவிட்டான்.

என்னுடைய அம்மாவை நினைக்க சிலவேளை நெஞ்சம் விம்மும் பெருமையாக இருக்கும். ஊர்ச் சனங்களை அம்மா கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. அவளை ஆதரவாக வீட்டுக்குள் கூட்டிப் போனாள்.

ஆறுமாதங்கள் அமைதியாகக் கழித்தன. ஊர்க்கதையும் அடங்கியது. எங்கள் தெருவுக்கு அடுத்த தெருவில் வசிக்கும் இளைஞன் ஒருவன் பத்மாவைக் காதலித்தான். அவளும் விரும்பினாள். கடிதப்போக்குவரத்து நடந்தது. அவளால் எழுத வாசிக்க முடியாது. அக்காவின் உதவியை நாடினாள் அக்காவுக்குப் பிடிக்கவில்லை. மறுத்துவிட்டாள். என்னைப்கேட்டாள். மகிழ்ச்சியோடு உதவினேன், காதல் வளர்ந்தது. ஊர் முணுமுணுக்கத்தொடங்கியது. இப்ப இவள் மூண்டாவது ஆளையும் புடிச்சிட்டாள் – விபச்சாரி என்றது. இதனால் எங்கள் வீட்டுக்கும் சிக்கல் வந்தது.

அந்த இளைஞன், தான் அவளை வேறு எவருக்குக் கட்டிப்போவதாக அம்மாவிடம் சம்மதம் கேட்டான். அம்மாவும் சம்மதிக்க ஊரைவிட்டுப் புறப்பட்டார்கள். நான் பஸ் ஸ்ராண்ட் வரை கூட்டிப்போனேன். ஊரில் அவள் விபச்சாரி என்ற பேரெடுத்திருந்ததால் வேலிக்குமேலால் தலைகள் நீண்டன. அவர்கள் மூன்னே செல்ல, என் கால்கள் பத்தடி பின்ஊர்ந்து நகர்ந்தது.

பஸ் ஸ்ராண்டை அண்மித்திருப்போம். ஒரு பொலிஸ் ஜீப் வந்து பத்மாவின் அருகில் நின்றது. இன்ஸ்பெக்டர் சிவிலில்தான் வந்திருந்தான். இறங்கி பத்மாவை பிடரியில் பிடித்து இழுத்தான் நிலத்தில் போட்டு உதைந்தான். அந்த இளைஞன் பேயறைந்தவன் போல நின்றான். எனக்கும் ஒன்றும் செய்யமுடியவில்லை. அழுகை அழுகையாகவந்தது. என்ன நினைத்தாளோ தெரிய வில்லை. ஜீப்புக்குள் இருந்த இன்ஸ்பெக்டரின் மனைவி ஓடி வந்து தடுத்தாள்.

அந்த இளைஞனும் பத்மாவும் அன்று காரைவிட்டுப் போனவர்கள்தாள். பிறகு வரவேயில்லை. எங்கு போனார்கள் எப்படியானார்கள் எதுவும் தெரியாது. ஐந்தாறு வருடங்கள் தாண்டி விட்டது. நாங்களும் அவளை மெதுவாக மறந்தே விட்டோம்.

எனக்குத் தொலைவூரில் ஒரு நண்பன் இருந்தான். ஒரு முறை அவனைச்சந்திக்க வேண்டியிருக்க அங்குபோனேன், பஸ் ஸ்டாண்டில் ஒரு பெண் குரல், தம்பி… என்றது. பின் என் பெயரைச் சொல்லியே கூப்பிட்டது. நண்பன் ஆச்சரியத் தோடு என்னைப் பார்த்தான். முகம் சுழித்தான், எனக்குப்புரியவில்லை. பாசத்தோடு ஓடிவந்தாள். பத்மா…!

காரைவிட்டு ஓடி வந்த அந்த இனளஞனும் அவளைக் கைவிட்டு விட்டானாம். இப்போ அந்த பஸ் ஸ்ராண்டில் அவள் ஊரறிந்த பகிரங்க விபச்சாரியாம்.

பத்மா என்னோடு நெருக்கமாகக் கதைத்துக்கொண்டிருந்தாள். நண்பன் விலகி விலகி ஓடினான்.

அவள், அம்மா, அக்கா எல்லோரையும் அன்பொழுக விசாரித்தாள். எனக்கு அப்பிள் வாங்கிக் கொடுக்க விரும்பினாள். நான் வேண்டாம். வேண்டாம் என்று தடுத்தேன். அவள் விடவில்லை. கடைக்கு ஓடினாள். ரெண்டு பெரிய அப்பிள்கள் வாங்கி என்னிடம் கொடுத்தான். அவள் கண்கள் கலங்கி இருந்தன.

நீண்ட நேரம் அவளோடு பேசிக் கொண்டு நிற்பதும் எனக்குச் சங்கடமாக இருந்தது. விடை பெற்றுக் கொண்டேன். அவள் பாசம் பொங்க, என்னையே பார்த்தபடி சிலையாய் நின்றாள்…

(இலங்கையில் நடந்த ஒரு உண்மைக் கதை)

– ஓசை, 1993 சித்திரை-ஆனி

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *