கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 15, 2019
பார்வையிட்டோர்: 5,874 
 

அத்தியாயம் -14 | அத்தியாயம்-15 | அத்தியாயம்-16

ஜோதி லக்ஷ்மணைப் பார்த்து சேகரைப் பதி விசாரித்தாள்.அவர் நிதானமாக “என்ன சொல்றது ஜோதி.நானும் வாரம் தவறாம அந்த வக்கீலைக் கேட்டுக் கிட்டு தான் இருக்கேன்.இது வரைக்கும் சேகரைப் பிடிச்ச போலீசார் அவன் மேல் இன்னும் கேஸையே போடலேயாம்..அவனை வெறுமனே ஜெயிலில் அடைச்சு வச்சு இருக்காங்க” என்று சொல்லும் போது அவர் கண்களீல் நீர் கசிந்தது.“நீங்க வீணா வருத்தப் படாதீங்க.அவர் இப்படி புத்தி இல்லாம காரியம் செஞ்சா,நாம என்ன பண்ண முடியுங்க.நாம் கஷடப் பட வேண்டியது தாங்க” என்று சொல்லி விட்டு ராணீயைக் கூட்டிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தாள் ஜோதி.வழி நெடுக ஜோதி தனக்கு இப்படி ஆகி விட்டதே என்று வருத்தப் பட்டுக் கொண்டே வந்தாள்.ராணீ அவளுக்கு ஆறுதலா பேசிக் கொண்டு வந்தாள்.

காலையில் ஜோதியும், ராணீயும் எழுந்து பல் தேய்த்து, குளித்து விட்டு.நாயர் கடையில் ‘டீ’ குடித்து விட்டு வேலைக்குக் கிளம்பினார்கள்.ராணீ அவள் பாட்டுக்கு வேலை செய்து வந்தாள்.ஆனால் தனக்கு வீட்டில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் நடராஜன் ராணீயோடு பேசி வந்தான்.ராணீயும் நடராஜன் கேட்டதெற்கெல்லாம் பதில் சொல்லி வந்தாள்.நடராஜன் இப்படி அவளிடம் நல்ல விதமாக சிரிச்சுப் பேசி வந்தது ராணீக்கு பிடித்து இருந்தது. அவன் கேட்டதுக்கு மேலேயே அவளும் நிறைய பேசி வந்தாள்.அவளுக்கும் நடராஜனோடு பேசி வருவது மிகவும் பிடித்து இருந்தது.

ராணீக்கு சென்னை சூழ் நிலை மிகவும் பிடித்து இருந்தது. வித விதமான ஆண்கள்,வித விதமாக ‘டிரஸ்’ பண்ணிக் கொண்டு போகும் பெண்கள்,பல விதமான வாகனங்கள்,பல விதமான உணவு வகைகள் எல்லாம் பார்க்கும் போது அவளுக்கு தான் என்னமோ வேறு புது உலகத்தில் இருப்பது போல் தோன்றியது.அவள் கையிலும் இப்போ பணம் நடமாட ஆரம்பித்தது.வயிறும் வாடவில்லை.மனதிலும் சந்தோஷத்துக்கு குறைவில்லை.இந்த வாழ்க்கையை அவள் மிகவும் ரசித்து வந்தாள்.’நாம் நல்லபடி நடந்துக் கொண்டு எப்படியாவது இந்த வீட்டு வேலையை நிரந்தரம் பண்ணிக் கொண்டு இந்த சென்னை வாழ்க்கையை தக்க வைத்துக் கொள்ள வேண்டும்’ என்று தன் மனதுக்குள் தீர்மானித்துக் கொண்டள்.

நடராஜன் தினமும் பலவிதமான உடல் பயிற்சிகள் செய்து வந்து உடம்பை மிகவும் கவர்ச்சிகரமாக வைத்து இருந்தான்.நல்ல முக வெட்டுடன் சுருள்,சுருள் தலை மயிருடன் இருந்த அவனை ராணீ மிகவும் ரசித்தாள்.இன்னும் கொஞ்ச நேரம் அவனுடன் அங்கேயே இருந்து வரமாட்டோமா என்று அவள் மனம் எண்ணியது.நடராஜனும் ராணீயும் நிறைய பேசி வந்து வந்தது நடராஜனுக்கு ஒரு மயக்கத்தை கொடுக்க ஆரம்பித்தது.ஒரு நாள் தைரியத்தை வரவழை த்துக் கொண்டு ராணீயிடம் தன் ஆசையைச் சொன்னான் நடராஜன்.அவள் திடுகிட்டாள் சட்டென்று “என்னங்க இது, நீங்க கல்யாணம் ஆனவரு. நானோ இன்னும் சின்னப் போண்ணு.கல்யாணம் ஆகாதவ.எனக்கு ஏதாவது ‘இசகு பிசகு’ ஆயிடுச்சின்னா அப்புறம் நான் என்னங்க பண்ணுவேன்.என் வாழ்க்கையே வீணகிப் போயிடுமேங்க.தயவு செஞ்சு வேணாங்க” என்றள் பயத்துடன் ராணீ.நடராஜனுக்கு என்ன பதில் சொல்வதேன்றே புரியவில்லை.அவன் மௌனமாய் இருந்தான்.நடராஜன் சும்மா இருந்து விட்டான்.

சிறுது நேரம் கழித்து நடராஜன் “அப்படி எல்லாம் நான் நிச்சியமா செய்ய மாட்டேன் ராணீ.என்னை நம்பு.நீ கவலைப் படாமே வேலைக்கு வந்து போய்க் கிட்டு இரு” என்று தன் தவறை உனர்ந்தவனாக நடராஜன் ராணீயிடம் “ராணீ நான் சொன்ன இந்த சமாசாரத்தே நீ அம்மா கிட்டே சொல்லிடாதே”என்றான் கரகரத்த குரலில்.எல்லா வேலை ளையும் முடித்து விட்டு “நான் நிச்சியமா சொல்லமாட்டேங்க.நான் வரேனுங்க,என்னை தப்பா எடுத்துக்காதீங்க” என்று சொல்லி விட்டு அவள் வீட்டுக்கு கிளம்பிப் போய் விட்டாள்.வழி நெடுகவும் வீட்டிலும் ராணீ தன் செய்தது ‘தவறா’ ‘சரியா’ என்று தெரியாமல் யோஜனைப் பண்ணிக் கொண்டு இருந்தாள்.அவளுக்கு ஒண்ணும் புரியவில்லை.

அந்த வருஷம் டிசம்பர் மாத குளிர் சற்று அதிகமாகவே இருந்தது.ஒரு நாள் நடராஜன் “கமலா,இந்த குளிர் நாளிலே நீ காலையிலேயே செஞ்சு வச்சுட்டுப் போற சாப்பாடு நான் மதியம் சாப்பிடும் போது மிகவும் ஆறி போய், சோறு எல்லாம் ரொம்ப விரைச்சுக்கிட்டு ஜவ்வு மாதிரி ஆயிடுது.சாப்பிடவே ரொம்ப கஷ்டமா இருக்கு” என்று சொல்லி வருத்தப் பட்டான்.“நீங்க சொல்றது ரொம்ப சரிங்க.நான்’ஆ·பீஸ்’க்கு கொண்டு போற சாப்பாடும் அப்படி தாங்க ஆயீடுது.சாப்பிடவே கஷ்டமா இருக்கு.என் சினேகிதிங்க எல்லாம் ‘காண்டீன்லே’ சூடா சாப்பிடுறாங்க” என்று சொன்னவள் கொஞ்சம் நேரம் யோஜனை பண்ணினாள். சற்று நேரம் கழித்து ”நான் ஒண்ணு பண்றேங்க.நான் காலையிலே நாஷ்டா மட்டும் பண்ணி விட்டு ‘ஆ·பீஸ்’ போய் விடுகிறேன்.நாம அதை சூடா சாப்பிடுங்க. நான் வந்து மதியம் ‘காண்டீன்லே’ சூடா சாப்பிட்டுக்கிறேன்.அந்த பொண்ணு ராணீக்கு ‘சமைக்க வருமா’ன்னு கேக்றேன். வரும்ன்னு சொன்னா அவளை உங்களுக்கு மதியம் சூடா சமைச்சு வக்கச் சொல்லலாம்.கூட கொஞ்சம் சம்பளம் குடுத்திடலாம் அந்த பெண்ணுக்கு” என்றாள் கமலா.”சரி கமலா,நீ சொல்றது ரொம்ப நல்ல ஐடியா” “என்று சொல்லி அவள் செய்த ஏற்பாட்டை புகழ்ந்தான் நடராஜன்.

அடுத்த நாளே ராணீ காலையில் னேலைக்கு வந்தப்ப “ராணீ உனக்கு சமைக்க தெரியுமா” என்று கேட்டாள் கமலா.”நான் நல்லா சமைப்பேங்க.ஊர்லே எங்க வீட்டிலே நான் தான் எல்லோருக்கும் சமையல் பண்ணுவேங்க” என்றாள் ராணீ.சட்டென்று கமலா ”அப்ப நீ ஒன்னு பண்ணு ராணீ.வேலைகளை எல்லாம் செஞ்சு முடிச்சு நீ விட்டு வூட்டுக்கு போறதுக்கு முன்னாடி, ஐயாவுக்கு சூடா சமையல் பண்ணி வச்சுட்டு போவ முடியுமா. நான் உனக்கு நூறு ரூபாய் சம்பளம் அதிகம் தரேன்” என்றாள் கமலா.“சரிங்க,நான் வேலை எல்லாம் முடிச்சுட்டு வூட்டுக்கு போவறதுக்கு முன்னாடி ஐயாவுக்கு சமையல் செஞ்சு வச்சுட்டுப் போறேங்க ” என்று சொல்லி விட்டு அவள் வேலைகளை செய்யப் போய் விட்டாள். இந்த ஏற்பாட்டின்படி ராணீ மதியம் சாப்பாடு செய்து வர ஆரம்பித்தாள். நடராஜனுக்கு இந்த ஏற்பாடு மிகவும் பிடித்து இருந்தது.சமைக்கும் நேரமும் ராணீ தன்னுடன் இருந்து வந்தாள்.தவிர தனக்கு எது பிடிக்கும் என்று கேட்டு அதை செய்து வந்தாள் ராணீ.இதனால் இவர்களிடையே நிறைய பேசும் சந்தர்ப்பமும் அதிகமாகியது.

நடராஜனுக்கு ராணீயிடம் இருந்த ஆசை மீண்டும் தலை தூக்க ஆரம்பித்தது.‘இவள் மட்டும் ‘சரி’ ன்னு சொன்னா நாம் இவளுடன் சந்தோஷமாக இருக்க முடியுமே’ என்று ஏங்கினான் நடராஜன். ராணீயிடம் நாம் மறுபடியும் மெல்ல சொல்லிப் பார்க்கலாம் என்று எண்ணி “ராணீ நீ ஒன்னும் பயப் பட வேணாம்.உனக்கு ஒன்னும் ஆவாது.நீ தவறாம கருத் தடைமாத்திரைங்களே போட்டுக் கிட்டு வந்தா நீ பயப் படுறது போல் ஒன்னும் ஆவாது” என்று அவளை தைரியப் படுத்தி நடராஜன்.உடனே ராணீ ”வேணாங்க,எனக்கு ரொம்ப பயமா இருக்குங்க. ஏதாவது ‘ஏடா கூடமா’ ஆயிடுமோன்னு நினைச்சா ரொம்ப பயமா வேறே இருக்குங்க.அப்படி ஆயிடுச்சினா நான் என்னங்க பண்ணுவேங்க” என்று மீண்டும் தன் பயத்தைச் சொன்னாள்.“சரி, ராணீ உனக்கு இஷடம் இல்லேன்னா,நான் உன்னே வற்புறுத்தலே.உன் சம்மதம் இருந்தா தான் நாம சந்தோஷமா இருக்க முடியும் ராணீ” என்று சொல்லி விட்டு நடராஜன்.வீட்டுக்கு வந்த ராணீ அன்று இரவு பூராவும் தூக்கமே வராமல் தவித்தாள்.காலையில் நடராஜன் தன்னிடம் மறுபடியும் கேட்டு அவள் மறுத்து விட்டதை எண்ணி எண்ணி அவள் மனம் குழம்பிக் கொண்டு இருந்தது.‘அவர் இஷடப் படி நாம் நடந்துக் கொள்ள முடியலே.ஆனா இந்த வூட்டே நாம நிரந்தரம் ஆக்கிக்கணும் என்கிற என்று ஆசை மட்டும் நமக்கு இருக்கே.கூழுக்கும் ஆசைப் படறோம்,மீசைக்கும் ஆசைப் படறோம்.இது எப்படி முடியும். என்ன பண்ணுவது என்றே ராணீக்குப் புரியவிலை.அவள் புழு போல் துடித்தாள்அவள் இரவு பூராவும் தூங்கவில்லை.

காலையில் மசூதியில் இருந்து இமாம் பாடல் உரக்க வரவே பொழுது விடிந்து விட்டது என்பதை உலகுக்கு பறை சாற்றியது.மனதில் சுமையோடு கமலா வீட்டுக்கு வேலைக்குக் கிளம்பிப் போனாள் ராணீ.’அவர் மறுபடியும் கேட்டா நாம் என்ன பண்ணுவது’ என்று யோசித்ததுக் கொண்டே போனாள். நல்ல வேளை அடுத்த ரெண்டு நாட்களும் நடராஜன் வீட்டில் இல்லை.அவனுக்கு ‘மார்னிங்க் டியூட்டி’.

ஒரு வாரம் ஓடி விட்டது.

நடராஜன் ஒன்னும் பேசாமல் அவன் வேலையை கவனித்துக் கொண்டு இருந்தான்.அன்று ராணீ நடராஜனுக்கு சமையல் பண்ணிக் கொண்டு இருக்கும் நடராஜன் ராணீயிடம் ஒன்னும் பேசவில்லை.‘அவர் ஆசைப் பட்டு கேட்டு நாம வேணாம்’ ன்னு சொன்னதால் ஒரு வேளை அவர் கோபிச்சு கிட்டு நம்ம கிட்டே ஒன்னும் பேசாம இருப்பாரோ’ என்று தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று ஆசை ராணீக்கு.அவ உடனே “இன்னிக்கு என்ன சமையல் செய்யட்டுங்க” என்று கேட்டாள் நடராஜனோ துளிக் கூட கோபம் இல்லாமல் இல்லாமல் மிகவும் சகஜமாக “ராணீ எது வேணுமானால் சமையல் பண்ணு.நீ எது பண்ணாலும் நல்லாவே இருக்குது ராணீ” என்று கூலாகச் சொன்னான் அவன்.ராணீக்கு நடராஜன் சொன்ன பதில் காதில் தேனாய் பாய்ந்த்தது.சந்தோஷத்தில் ராணீ அவன் மேலே விழுந்து நிறைய பேசி வந்தாள்.நடராஜனும் முன்னே பழகின மாதிரியே பழகி வந்தான்.நடராஜனுக்கு ராணீ பற்றின ‘இன்ப வெறி’ அவனை விட்டுப் போகவே இல்லை.அந்த வீட்டின் தனிமை,ராணியின் அழகு,ராணீயோடு நெருக்க மான இருக்கும் சூழ் நிலை எல்லாம் ஒன்றாக சேர்ந்து அவன் ஆசைக்கு இன்னும் நெய் விட்டு,இன்னும் அதிகமாக கொழுந்து விட்டு எரியச் செய்தது.அவன் மனம் யோஜனை செய்தது.ஒரு முடிவுக்கு வந்தான் நடராஜன். மெல்ல தைரியத்தை வரவழைத்துக் கொண்டான் நடராஜன்.‘இந்த ஒரு தடவை ராணீயை மீண்டும் கேட்டுப் பாப்போம் அவ பயததை நாம போக்க நாம் வழியை மறுபடியும் சொல்லுவோம்.அவ சம்மதிச்சா சரி.இல்லே அவ இப்பவும் மறுத் தாள்ன்னா,நாம் அவளை கேப்பதையே நிறுத்திக் கொள்ளுவோம்.அந்த ஆசையை நம் மனதில் இருந்து அறவே நீக்கிக் கொள்ளுவோம்’ என்று எண்ணினான்.கொஞ்ச நேரம் ஆனதும் ”ராணீ உன் பயம் எனக்கு நல்லா புரியுது.நீ நினைக்கிற மாதிரி ஆவாம இருக்க நீ தினம் ஒரு கருத் தடை மாத்திரை சாப்பிட்டு வரணும் அப்படி செஞ்சா உனக்கு ஒண்னும் ஆவாது ராணீ.நீ எதுக்கும் பயப் படவே வேணாம்.இந்த காலத்திலே காலேஜ் படிக்கிற பொண்ணுங்க எல்லாம் இந்த மாதிரி தான் கருத் தடை மாத்திரைங்களே உபயோகப்படுத்தி சந்தோஷமா இருந்து கிட்டு வறாங்க. அவங்க எப்போ குழந்தை வேணும்ன்னு நினைக்கிறாங்களோ அப்போ அந்த கருத் தடை மாத்திரை ங்களே நிறுத்தி விட்டு குழந்தையைப் பெத்துக்கிறாங்க,ராணீ”என்று மெதுவாக அவள் பக்கத்தில் வந்து அவளுக்கு தைரியம் சொன்னான் நடராஜன்.அவன் சொன்னதைக் கேட்டு இந்த தடவை ராணீ ஒன்னும் பதில் சொல்லவி ல்லை.அவள் லேசாக சிரித்துக் கொண்டு சும்மா இருந்தாள்.நடராஜனின் அழகிலும்,அவன் ஆண்மையிலும்,அவன் சொன்ன தைரியமான வார்த்தைகளிலும் தன்னை மறந்தாள் ராணீ.தன்னைப் பறி கொடுத்தாள்.‘இந்த தடவை அவளுக்கு அவர் சொன்னதை மறுக்க வேண்டும்’ என்றே தோன்றவே இல்லை.அவளுக்கும் ஆசை மேலிட்டது.

‘இந்த தடவையும் நாம மறுத்துட்டா நாம் பயந்தது போல் அவர் தன் சம்சாரத்து கிட்டே சொல்லி நம்மை வேலையை விட்டு நிறுத்தி விடுவாரோ என்கிற பயம் மறுபடியும் தலை தூக்கியது.அப்புறமா நாம இந்த வூட்டு வேலையே வுட்டுட்டு,வேறே வூட்டை தான் நாம வேலைக்குப் பிடிக்கணும்.வேறே வூடு கிடைக்க லேட்டானா, நாம் நம் அம்மாவுக்கு பணம் அனுப்ப முடியாதே. நாமும் பணத்தை சேக்காம,கையிலெ இருக்கிற பணத்தை செலவு பண்ணி வர வேண்டி இருக்குமே.தவிர புது வூட்டு வேலைக்கு போனா இந்த வூட்லெ கிடைக்கிற மாச சம்பளம் கிடைக்காதே. நாம கக்ஷ்டப் பட்டு வருவோமே.சித்திக்கு வேறே அவங்க புருஷன் சமாசாரம் மோசமா இருக்கே.அதனாலெ அவங்க வேறே யாரைச்சும் மறுபடியும் காதலிச்சு ‘அவன்’ கூட ஓடிப் போயிட்டங்கன்னா நாம இருக்கிற வூட்டுக்கு வேறே வாடகை தர வேண்டி இருக்குமே’ என்று எல்லாம் யோஜனைப் பண்ணினாள் ராணீ.அவளுக்கு பயம் வந்து விட்டது. இந்த பயமே அவளை ‘சரி’ என்று சொல்லி விட வேண்டும் என்கிற முடிவுக்குத் தள்ளியது.அவள் ஒரு நிமிஷம் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தவித்தாள்.

நீ இன்னும் பயப் டறேன்னு நான் நினைக்கிறேன்” என்று நடராஜன் சொன்னபோது அவளுக்கு ‘அப்படி இல்லீங்க’ என்று சொல்ல வேண்டும் போல் தோன்றியது.அவள் ஆசை உள் மனம் அவளை உந்தியது. மெல்ல வெக்கப் பட்டு கொண்டே “நீங்க சொன்னா சரிங்க.நான் அப்படியே செய்றேனுங்க” என்று சொன்னபோது அவள் சிவந்த முகம் இன்னும் குப்பென்று சிவந்தது. அவள் கைகளை முகத்தில் மூடிக் கொண்டு நின்றுக் கொண்டு இருந்தாள்.நடராஜன் ஆச்சரியப் பட்டான். ”உண்¨ மயாவா ராணீ,உனக்கு நான் சொன்னது உன் பயத்தைப் போக்கி இருக்குதா ராணீ. உனக்கும் நான் சொன்னதிலே சம்மதமா ராணீ” என்று கேட்டு விட்டு அவள் அருகில் வந்தான் நடராஜன்.ஆசையில் அவன் மேலேயே சாய்ந்து விட்டாள் ராணீ.அவன் காது அருகே “ஆமாங்க’ என்று சொல்லி விட்டு மீண்டும் அவள் முகத்தை தன் கைகளால் மூடிக் கொண்டாள்.நடராஜன் அவளை கைத்தாங்கலா அணைத்துக் கொண்டு தன் ‘பெட்’ ரூமுக்கு அழைத்துப் போனான். இருவரும் தங்கள் இளமையை ஆசைகளை ஆசை தீர அனுபவித்தார்கள். ராணீ தன் புடவையை சரி செய்துக் கொண்டு வீட்டுக்கு கிளம்பத் தயாரானாள்.“ராணீ,நீ கருத்தடை மாத்திரைங்களே கடையிலே வாங்கி,தினமும் ஒரு மாத்திரை வாங்கி நீசாப்பிட்டு வா.இது ரொம்ப முக்கியம்.மறந்துடாதே.இந்தா கருத்தடை மத்திரை வாங்கப் பணம்” என்று சொல்லி நடராஜன் ராணீயிடம் முன்னுறு ரூபாய் கொடுத்தான்.பணத்தை வாங்கிக் கொண்டாள் ராணீ.“சரிங்க நான் கருத்தடை மாத்திரைங்களே வாங்கி தினம் தவறாம சாப்ட்டு வறேன்” என்று மெல்ல ரகசியமாக சொன்னாள் ராணீ.“நான் போயிட்டு வரேனுங்க” என்று சொல்லி விட்டு கிளம்பினாள்.அவள் சிவந்த முகம் இன்னும் சிவப்பாகவே இருந்தது.வீட்டுக்குப் போன ராணீக்கு தான் செய்தது ‘சரியா’ இல்லை ‘தப்பா’ என்றே புரியாமல் தவித்தாள்.

நேரம் கிடைக்கும் போதெல்லாம் ‘நடராஜன் ராணீ லீலைகள்’ அந்த வீட்டில் நடந்து வந்துக் கொண்டு இருந்தது.நடராஜன் ஒவ்வொறு முறையும் “ராணீ நீ மறக்காம மத்திரையே போட்டுக்கிட்டு வரே இல்“என்ன ராணீ, நான் இவ்வளவு சொல்லியும் உன் பயம் உனக்குப் போகலேன்னு எனக்குப் படுது.லே.இது ரொம்ப முக்கியம் ஞாபகம் வச்சுக்க ராணீ” என்று சொல்லி கொண்டு இருந்தான். ராணீ மொட்டையாக “சரிங்க” என்று சொல்லி வந்தாள்.ராணீ கையில் மாதா மாதம் பணம் சேர்ந்து வந்தது ராணீக்கும் இந்த உறவு நீடிச்சி, நடராஜன் இஷடப்படி தான் நடந்து வந்தா இந்த வாழ்க்கை அவளுக்கு நிரந்தரம் ஆயிடும், நாம நி¢ம்மதியா இருந்து வரலாம் என்று கனவு கண்டுக் கொண்டு வந்தாள்.ராணீ தவறாம தன் அம்மாவின் உடம்பு எப்படி இருக்கிறது,முட்டி வலி எப்படி இருக்கிறது. முட்டி மருந்தை தவறாமல் சாப்பீடு வருகிறாங்களா என்றெல்லாம் விசாரித்து வந்தால் ராணீ. முத்தம்மா ராணீதவறாம தனக்கு மாசா மாசம் பணமும் அனுப்பி, தன் உடம்பை விசாரித்து வந்ததை எண்ணி மிகவும் சந்தோஷப் பட்டாள். நிம்மதியாக திண்டிவனத்தில் தனக்கு வந்த சம்பளத்துடன் ராணீ அனுப்பிய பணத்தில் வயிறார சாப்பிட்டு வந்தாள் முத்தம்மா.தினமும் கடவுளை வேண்டிக் கொண்டு வேலைக்குப் போய் வந்துக் கொண்டு இருந்தாள் ராணீ.நடராஜன் மாதம் தவறாமல் ராணீக்கு கருத் தடை மாத்திரைகளை வாங்க பணம் கொடுத்துக் கொண்டு இருந்தான்.

மூன்று மாதங்கள் ஒடி விட்டது.அன்று ஞாயிற்றுக் கிழமை நடராஜன் வீட்டில் தன் இருந்தான்.“நமக்கு நல்ல ‘நியூஸ்’ வரும் போல் இருக்குதுங்க. எனக்கு ‘நாள்’ தள்ளிக்கிட்டுப் போவுது. இன்னைக்கு டாக்டர் கிட்டப் போய் ‘செக் அப் ‘பண்ணிக் கொள்ள நாம் போய் வரலாங்க” என்றாள் கமலா.“வெரி குட், கமலா, வெரி குட்.இந்த நல்ல ‘ந்யூஸை’ நீ இது வரை என்னிடம் சொல்லவே இல்லையே. வா கமலா டாக்டர் கிட்டே இப்போவே போய் வரலாம்” என்று அவளை அவசரப் படுத்தினான் நடராஜன்.அன்று சாயந்திரமே இருவரும் நன்றாக ‘டிரஸ்’ பண்ணிக் கொண்டு டாக்டரை பார்க்க ‘நர்ஸிக் ஹோமுக்கு’ பைக்கில் பறந்தார்கள்.நர்ஸிங்க் ஹோமில் நடராஜன் வெளியில் தவித்துக் கொண்டு இருந்தான்.நல்ல ‘நியூஸ்’ வர வேணுமே என்று கவலைப் பட்டுக் கொண்டு இருந்தான்.அரை மணி நேரம் கழித்து கமலா வெளியில் வந்தாள். ஓடிப் போய் “ டாக்டர் என்ன சொன்னார் கமலா” என்று கேட்டான் நடராஜன்.கமலா வெக்கப் பட்டுக் கொண்டே“டாகடர் எனனை நல்லா ‘செக் அப்’ பண்ணி விட்டு,‘நல்ல நியூஸை’ ’கன்·பர்ம்’ பண்ணி விட்டாருங்க” என்று சொன்னாள்.‘ரிஷப்ஷனில்’ டாகடர் கேட்ட ‘பீஸை’க் குடுத்து விட்டு இருவரும் நேரே முருகர் கோவிலுக்குப் போனாகள்.பிறகு ஹோட்டலில் ‘ஸ்பெஷல் டின்னர் ‘சாபிட்டார்கள்.இருவரும் வீட்டுக்கு வந்து இந்த நல்ல ‘நியூஸை’ கமலா அப்பா அம்மாவுக்கும், தன் அப்பா அம்மாவுக்கு போன் பண்ணி சொன்னான் நடராஜன்.இந்த நல்ல சேதி கேட்டு இரண்டு குடும்பத் தாருக்கும் மிகவும் சந்தோஷப் பட்டார்கள்.அடுத்த நாள் கமலா வேலைக்கு வந்த ராணீயிடமும் இந்த நல்ல சேதியைச் சொன்னாள்.அவளும் மிகவும் சந்தோஷப் பட்டாள்.

பத்து நாள் ஆகி இருக்கும்.அன்று காலையில் ராணீ வேலைக்கு வந்தபோது நடராஜன் ‘ஈவினிங்க் டியூட்டி’ ஆனதால் அவன வீட்டில் இருந்தான்.கமலா வெளியில் போய் அவள் ‘டூ வீலரை’’ ஸ்டார்ட்’ பண்ணி அவள் கிளம்பிப் போனவுடன் நடராஜன் ராணீயை குரல் கொடுத்தான்.”இதோ வரேனுங்க” என்று சொல்லி அவள் கொஞ்சம் நேரம் தன் வேலை கவனித்துக் கொண்டு வராமல் இருந்தாள்.ஹாலுக்கு வந்த ராணீஅவள் முகத்தை தொங்கப் போட்டு கொண்டு இருந்தாள். நடராஜன் அவளைப் பார்த்து “ராணீ,ஏன் என்னவோ போல் இருக்கே.உனக்கு உடம்பு ஏதாச்சும் சரி யில்லையா என்ன”என்று சொல்லி அவள் நெத்தியைத் தொட்டுப் பார்த்தான்.“என் உடம்புக்கு ஒன்னும் இல்லீங்க….. நான் பயந்த அந்த ‘தப்பு’ நடந்து போச்சுங்க…..” என்று சொல்லும் போது அவள் தன் கைகளால் தன் முகத்தை மூடிக் கொண்டு விக்கி விக்கி அழ ஆரம்பித்தாள்.நடராஜனுக்கு ஒன்னும் புரியவில்லை.கவலையுடன் “என்ன ராணீ என்ன ‘தப்பு’ நடந்திச்சு,ஏன் நீ அழறே” என்று அவள் முகத்தில் இருந்து அவள் கையை விலக்கி விட்டு கேட்டான்.தன் கண்களை நன்றாகத் துடைத்துக் கொண்டு மூக்கை உரிஞ்சினவாரே ”எது நடக்கக் கூடாதுன்னு நாம நினைச்சோமோ அது நடந்து விட்டதுங்க…..” சொல்லும் போது அவள் மீண்டும் அழ ஆரம்பித்தாள் ராணீ.தீயை தீண்டியது போல் இருந்தது நடராஜனுக்கு.”என்ன சொல்றே ராணீ. நீ என்ன சொல்றே ராணீ.எப்படி இது…..எப்படி அப்படி ஆகும்” என்றான் நம்பிக்கை இல்லாதவனாக நடராஜன்.“எனக்கு நேத்து காலையிலே எழுந்ரிச்சதும் தலை சுத்திச்சுங்க.வாந்தி வராப் போல இருந்திச்சி.எனக்கு சந்தேகங்கமா இருந்திச்சுங்க. சாயந்திரம் எங்க தெருக் கோடியிலே இருக்கிற லேடி டாகடா¢டம் போய் என்னைக் காட்டினேங்க.அவங்க என்னை நல்லா ‘டெஸ்ட்’ பண்ணிப் பார்த்து விட்டு நான் கர்ப்பமா இருக்கிறேன்னு சொல்லிட்டாங்க……” என்று சொல்லும் போது அவள் கண்களில் கண்ணீர் தளும்பியது. அவள் மீண்டும் அழ ஆரம்பித்தாள்.நடராஜன் ஆடிப் போய் விட்டான்.அவனுக்கு இப்போ என்ன பண்ணுவது என்றே புரியவில்லை.கலவரப் பட்டு “ராணீ,நீ தவறாம கருத் தடை மாத்திரையே சாப்பிட்டு கிட்டு வந்தியா” என்று கேட்டான் நடராஜன்.”நான் தவறாம சாப்பிட்டு கிட்டு வந்தேங்க” என்றாள் ராணீ. ஒரு பத்து நிமிஷம் கழித்து நடராஜன் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு “ராணீ,நீ£ கவலைப் படாதே.நான் உனக்கு பணம் தரேன்.நீ அந்த லேடி டாக்டரைப் பாத்து இந்த கர்ப்பததை எப்படியாவது கலைச்சு விடும்படி சொல்லு.நான் என்ன பணம் ஆனாலும் உனக்குத் தரேன் ராணீ” என்று மிகவும் பயந்தவனாகச் சொன்னான் நடராஜன்.ராணீ “சரிங்க.நான் அவங்க கிட்டே கேட்டு பாக்கறேங்க” என்று கவலையுடன் சொன்னாள்.

நடராஜனுக்கு ‘·பாக்டா¢யில்’ வேலை செய்ய மனம் ஓடவில்லை.எதோ ‘மெஷின்’ போல எதிலும் ஈடுபாடு இல்லாமல் வேலை செய்துக் கொண்டு இருந்தான்.அடுத்த நாள் காலை ராணீ எப்போ வருவாள் என்று அவன் வழி மேல் விழி வைத்து எதிர் பார்த்துக் கொண்டு இருந்தான்.காலிங்க் பெல்’ அடித்தது. கமலா நடராஜனைக் கூப்பிட்டு “கொஞ்சம் கதவே திறங்க” என்று சொல்லவே நடராஜன் ஓடிப் போய் கதவைத் திறந்தான்.வாசலில் நின்றுக் கொண்டு இருந்தாள் ராணீ.அவளைஅங்கேயே நிக்க வச்சு ‘என்ன ஆச்சு’ என்று சைகையில் கேட்டான் நடரஜன்.அதற்கு ராணீ உதட்டை பிதுக்கி தலையை ஆட்டி ‘இல்லை ‘என்ற சைகையை காட்டினாள்.

– தொடரும்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *