குமுதம் மலர்ந்தது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 30, 2022
பார்வையிட்டோர்: 5,659 
 

(1940ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஜானகி அம்மாளுக்கு உடம்பு சரியில்லை என்கிற விஷயம் அந்த வட்டாரத்தையே ஒரு கலக்கு கலக்கி விட்டது. நல்ல உயரமும். அதற்கேற்ற பருமனும், பறங்கிப் பழம்போல் தளதள வென்ற உடலும் கொண்ட கம்பீரம் வாய்ந்த அந்த அம்மாளிடம் அங்குள்ளவர்களுக்கு ஒரு தனி மதிப்பு இருந்து வந்தது. பால்யத்தில் கணவனை இழந்த ஜானகி அம்மாள் பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றி ஓய்வு பெற்றுவிட்டாள். தன் வயிற்றுக்குக் கூடச் சரியாகச் சாப்பிடாமல் பணத்தை மிச்சப்படுத்தி, அதை வட்டிக்குக் கொடுப்பதில் அந்த அம்மாளுக்குத் தனி விருப்பம். பத்து ரூபாய்ப் பணத்தைக் கொடுத்து விட்டுத் திருப்பி வாங்கும் போது பதினொன்றே கால் ரூபாயாகப் பார்க்கையில் அவளுக்குச் சத்தோஷமாகவும் திருப்தியாகவும் இருக்கும். வட்டிக்கு விடும் சுபாவம் அவளிடம் அளவுக்கு மீறியே வளர்ந்து விட்டது.

வீடு நிறையப் பாத்திரங்கள், நகைகள், மரச்சான்மான்கள் என்று சேர்த்து விட்டாள். பெரிய வீடு ஒன்று வாங்கியாகி விட்டது. அவ்வளவு பெரிய வீட்டில் உலவி வர, குழந்தை குட்டிகள் யாரும் இல்லை. தூசு படியாமல் ஒவ்வொரு பொருளையும் துடைத்து வைத்துப் பார்த்துப் பூரித்துப் போனாள அவள. ஒரு சமயம் பொழுதுக்கு யாராவது வந்து எந்தப் பொருளைக் கேட்டாலும் இல்லை யென்று கூசாமல் சொல்லி அனுபபிவிடுவாள். ஒரு பொருளை யாருக்காவது கொடுப்பதில் தனக்கு ஏதாவது ஆதாயம் உணடா என்று சிந்திப்பதிலேயே அவளுடைய வாழ்க்கை கழிந்து வந்தது.

அவளிடம் வட்டிக்கடன் வாங்குவதற் கென்றே தியாகாசன் எனகிற ஏழை பிறந்திருக்க வேண்டும். சட்டும் சவலையுமாக வீடு நிறையக் குழந்தைகளைக் கொடுத்த கடவுள் பொருள் விஷயத்தில் தன்னுடைய கருணையை அவருக்கு வழங்கவில்லை.

அந்த மனிதருக்கு மாதச்சம்பளம் என்று எண்பது ரூபாய்களை ஏதே ஒரு கம்பெனி படி அளந்து வந்தது இனிப்பை மொய்க் தம் ஈக்களைப் போல ஸ்டோர் என்ற பெயரில் கட்டப்பட்டிருந்த ஒரு வீடடை சுவரைப் போன்றவர்கள் நிரந்தரமாக மாய்த்துக் கொண்டிருந்ததில் வியப்பில்லை. பதினைந்து ரூபாய் வாடகை என்று அந்தப் புலிக் கூண்டுக்குக் கொடுத்தது போக, எஞ்சியிருந்த பணம் எதற்குக் காணும்? வறுமை என்கிற மீள முடியாத நரகத்தில் அழுந்திக் கிடந்த தியாகராஜனுக்கு ஜானகி அம்மாள் பரதேவதை போன்று காட்சி அளித்தாள். சம்பளம் வாங்கிய அடுத்த நாளே பணப்பையைத் தலைகீழாக உதறினாலும், ஒரு நயா பைசா கூட அதில் மீதி இருக்காது. அப்பொழுது ‘ அஞ்சேல்’ ஒன்று அபயம் தந்து, வட்டிக்குக் கடன் கொடுத்து அவரை ஆதரித்து வந்தாள் ஜானகி அம்மாள். கம்பெனியில் வருஷா வருஷம் கொடுக்கும் ‘போனஸ்’ வட்டியுடன் ஜானகி அம்மாளிடம் போய்ச் சேர்ந்து விடும். போனஸைப் பற்றி அவர் எந்த விதமான கிளர்ச்சிகளிலும் பங்கு பெறுவதில்லை. காரணம் எத்தனை அதிகமாக வந்தாலும் வட்டியும் அசலுமாக அதை அடையப் போகிறவள் ஜானகி அம்மாள் தானே என்று தீர்மானித்து, அவர் கம்பெனி சிப்பந்திகளுடன் அந்த விவகாரங்களில் சேராமலேயே இருந்து விட்டார். அதனால் நல்ல பெயரும் அவருக்குக் கிடைத்தது.

காலத்துக்குப் பிறப்பைப் பற்றியும், இறப்பைப் பற்றியும், தேய்வைப் பற்றியும், வளர்ச்சியைப் பற்றியும் கவலை கிடையாது. தியாகராஜனின் மூத்த பெண் குமுதா மதமதவென்று வளர்ந்து திருமணத்துக்குத் தயாராக நின்றாள். கந்தல் பாவாடையும், நைந்து போன தாவணியும் அவள் வளர்ச்சியை அதிகமாகவே காட்டின. பெண்ணுக்கு வயசாகிக் கொண்டு வருவதை அவர் கவனியாமல் இல்லை. ஆனால் அவர் கவனிக்கவில்லை என்று அவர் மனைவி சாவித்திரி அநாவசியமாக அவர் மீது குற்றம் சாட்டினாள் “உங்களுக்கு எதில் தான் பொறுப்பு இருக்கிறது? நானும் தான் இருப்பத்தைந்து வருஷமாகப் பார்க்கிறேனே! வாயைத் திறக்காமல் கல்லுளி மங்கனைப் போல அந்தக் கடங்காரனுக்கு உழைத்து வருகிறீர்கள் அங்கங்கே சமபள உயர்வு கேட்டு எல்லோரும் பெறவில்லையா என்ன?” என்று அவள் சரம் தொடுக்க ஆரம்பித்த பிறகு அவருக்குத் தன் மகள் கலயாண விஷயமாகத் முதலாளியைக் கண்டு பண உதவி கேட்கும் அளவுக்குக் தைரியம் ஏற்பட்டது.

முதலாளி, தெய்வாதீனமாகத் தியாகராஜனின் பெண் குமுதாவின் கல்யாணத்துக்குத் தாராளமாகப் பண உதவி செய் தார். ஆயிரம் ரூபாய்களை முழுசாகக் கண்ட தியாகாாஜன் வரன் தேடி முடித்து, வீட்டில் கிடந்த பொட்டுப் பொடி தங்கத்தைச் சேர்த்து நகைகள் என்று செய்து ஒரு வழியாகக் கலயாணத்தை முடித்துப் பெருமூச்சு விட்டார்.

அடுத்த மாதம் தியாகராஜன் சம்பளம் வாங்கும்போது முதாலாளி அறுபது ரூபாயை அவரிடம் கொடுத்து விட்டு, மாதா மாதம் இருபது ரூபாயாக ஏற்கெனவே கொடுக்கப்பட்ட ஆயிரம் ரூபாய் ஈடு செய்யப் படும் என்பதைத் தெரிவித்த போது தியாக ராஜனின் கண்கள் இருண்டன.

கல்யாணத்துக்கு அடுத்தாற் போல் பண்டிகை பருவங்கள் நெருங்கி வந்து கொண்டிருந்தன. ஒவ்வொன்றையும் சமாளிக்க ஜானகி அம்மாளின் உதவியை நாடினார் அவர். கடன் வாங்கி அதைத் திருப்பிக் கொடுப்பதற்கும் சில நற்குணங்கள் அமைய வேண்டும். சொன்ன வார்த்தையைத் தட்டாமல் அதன்படி நடந்து வந்த தியாகராஜனிடம் ஜானகி அம்மாளுக்கு ஒரு தனி மதிப்பு இருந்து வந்தது. லேவாதேவி நடத்திக் கொண்டு வீட்டில் மன நிம்மதியாக வளைய வந்த ஜானகி அம்மாள் திடீரென்று வியாதியாகப் படுத்து விட்டாள். இரண்டுதரம் மயக்கம் வந்து விட்டது. மயக்கம் தெளிந்த பிறகும் அவளுக்கு நினைவு சரியாக இல்லை. தெருங்கிய உறவினர்கள் யாரும் இல்லாமையால் தியாகராஜன் தம் மகள் குமுதாவை ஜானகி அம்மாளுக்கு உதவியாக அனுப்பி இருந்தார்.

லேவாதேவிக்காரர்கள், நண்பர்கள் என்று பொழுது விடிந்து அஸ்தமிப்பதற்குள் பலர் ஜானகி அம்மாளின் வீட்டுக்கு வந்த வண்ணமாக இருந்தனர். குமுதாவும், அவளுக்கு முகம் கோணாமல் பணி விடை செய்து கொண்டு தான் இருந்தாள். பெரியவர்களுக்குத் தொண்டு செய்தால், இன்ப வாழ்க்கையும், சீரும், சிறப்பும் கிட்டும் என்று பெரியவர்கள் சொன்னதை மனத்தில் வைத்துக்கொண்டு குமுதா பக்தியுடன் நடந்து வந்தாள்.

அவளுக்குக் கல்யாணமான-அதாவது ஒரு வருஷ காலத்துக்குப் பிறகு ஒரு தடவைகூட அவள் கணவன் மாமியார் வீட்டுக்கு வரவில்லை. கல்யாணத்தின்போதே சம்பந்தி வீட்டாருக்கு ஏகப்பட்ட குறைகள். காப்பியிலிருந்து கல்கண்டு வரையிலும் அவர்கள் குற்றம் வளர்ந்து கொண்டே போயிற்று. குமுத மலர் போல் மலர்ந்த முகத்துடன் தந்தையின் வறுமையிலும், துன்பங்களிலும் பங்கு கொண்ட குமுதா தன் கணவன் வீட்டாரின் குணத்தைக் கண்டு வாடி வதங்கினாள். அடைய வேண் டியவனுடைய அன்பை அடைந்தால் போதும் என்று நினைத்து, தன் கணவனிடமிருந்து ஏதாவது கடிதம் வராதா என எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். பண்டிகைகளும், பருவங்களும் மக்களின் வாழ்க்கையை மலர வைத்துககொண்டு சென்றன. ஜோடி ஜோடியாய் மணமான தம்பதிகள் படக்காட்சிக்கும், விழாக்களுக்கும் போவதைப் பார்த்துப் பொருமினாள் குமுதா.

தியாகராஜன் தானாகவே மாப்பிள்ளைக்குக் கடிதம் எழுதினார். தன் சக்திக்கேற்ப சீர் சிறப்புடன் மகளை அழைத்து வருவதாகக் குறப்பிட்டிருந்தார். அதற்கு வந்த பதில் அவரைச் சமுதாயத்தின் முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திக்க வைத்தது. வடக்கே இருநூறு ரூபாய் சம்பாதிக்கும் தன் உணமையான அந்தஸ்தை அவர் உணரவில்லை என்றும், அவர் பெண்ணின் அழகைப் பார்த்து மணந்து கொண்ட தன்னையே நொந்து கொள்வதாகவும் அவன் எழுதி இருந்தான், குறைந்தது ஐந்நூறு ரூபாய்களுக்குக் குறையாமல் சீர் வரிசைகளுடன் கல்கத்தாவுக்கு வர விருப்பமானால் வரலாம் என்றும் குறிப்பிட்டிருந்தான்.

கோபமும் வருத்தமும் கொப்பளிக்க அவர் கடிதம் வந்த அன்று சாப்பிடாமலேயே வேலைக்குப் போய்விட்டார். மாலை வீடு திரும்பியதும் ஜானகி அம்மாள்-அவருடைய ஆபத்பாந்தவி-மயக்கமாக இருப்பதாகத் தகவல் கிடைத்தது. குமுதாவும் அந்த அம்மாளைக் கவனித்துக் கொள்ள அங்கே அனுப்பப்பட்டாள்.

2

பணத்தை ஒன்றுக்குப் பத்தாகப் பெருக்குவதில்,…அதைத் தர்மமாக விருத்தி செய்து, தர்மமாகச் செலவு செய்வதில் கிடைக்கும் திருப்தி வேறு வழிகளில் கிடைப்பதில்லை. ஏழை தியாகராஜன் ஜானகி அம்மாளிடம் வாங்கும் ஒவ்வொரு ரூபாயும், இரண்டணா குட்டி போட்டுக் கொண்டு அவளிடம் திரும்பிய பொழுது களிப்பில் ஆழ்ந்த அந்த அம்மாள் அம் மாதிரி வட்டிக்குக் கொடுத்து வாங்குவதில் ஒரு ஆனந்தத்தைக் கண்டாள். சேர்ந்த பணத்தை வைத்து ஏராளமான நகைகள், வெள்ளிப் பாத்திரங்கள், ரொக்கம், மனை என்று மேலும் சேர்ப்பதில் கருத்தாச இருந்தாள். அவள் கனவிலும் நனைலும் பணம் ஒன்று தான் குறிக்கோளா இருந்து வந்தது; பிறருக்கு வட்டி இல்மல் கொடுப்பது என்கிற விஷயமே ஜானகி அம்மாளுக்குத் தெரியாது. இந்த வாழ்க்கையும் பொன்னும் பொருளும் சதம் என்று இறுமாந்திருந்த ஜானகி அம்மாளின் உடலில் நாளடைவில் வாட்டம் ஏற்பட்டது. திடீர் திடீர் என்று தலை சுற்றலும், மயக்கமும் ஏற்பட்டன. அவள் எதிரே கண்ணாடி பீரோவில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த வெள்ளிச் சாமான்களும், புடவைகளும் அவள் இதுவரையில் வாழ்ந்து வந்த வாழ்க்கைக்குச் சான்றாக விளங்கின. அவைகளின் பளபளப்பும், பகட்டும் இம்மியளவும் மாறவில்லை. ஆனால், ஜானகி அம்மாள் மாறிவிடடாள்; தோல் சுருங்கி, நரை கண்டு, வற்றி உலர்ந்துபோய், கண்களின் கருமணிகள் சற்றே ஒளியிழந்து வயோதிகத்தை அடைந்துவிட்டாள். அவளும் ஒரு காலத்தில் அவைகளைப் போலப் பளபள வென்று இருந்தவள் தான். அவளுடைய காலம் ஓடி இறுதிக் கட்டத்துக்கு வந்து விட்டது. அவைகளுக்கு இன்னும் தேய்வு ஏற்படவில்லை.

தன்னுடைய தேய்வைப் பற்றிச் சிந்தித்த ஜானகி அம்மாள் தன் எதிரில் வளர்ச்சியின் உருவமாக உட்கார்ந்திருக்கும் குமுதாவைப் பார்த்தாள். குமுதா, படுத்திருந்த ஜானகி அம்மாளின் முகத்துக்கு நேராகக் குனிந்தாள்.

“மாமி! உங்களுக்கு என்ன வேண்டும்?”

ஜானகி அம்மாள் தன்னைச் சுற்றிலும் ஒரு முறை பார்த்துக்கொண்டாள். அருகில் ஒரு சிறு மேஜையின் மீது மருந்துப் புட்டி கள், ஆரஞ்சுப் பழங்கள் முதலியன வைக்கப்பட்டிருந்தன. திடீரென்று தனக்கு என்ன வந்து விட்டதென்பதே அவளுக்குப் புரியவில்லை.

குமுதா திரும்பவும் மெதுவான குரலில், “மாமி! ஏன் அப்படிப் பார்க்கிறீர்கள் ? உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டாள்.

“என் உடம்புக்கு என்ன அம்மா? எத்தனை நாட்களாக நான் இப்படிப் படுத்திருக்கிறேன்?” என்று கேட்டாள் ஜானகி அம்மாள்.

குமுதாவுக்கு அந்த அம்மாளைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது. ஒவ்வொரு வரையும் தோரணையுடன் அதட்டி உருட்டி வேலை வாங்கியும், கொடுக்கல் வாங்கலில் சற்றும் விட்டுக் கொடுக்காமல், கறாராகவும் இருந்தவள் இரண்டே நாட்களில் எப்படி ஒருங்கிக் கிடக்கிறாள் என்பதை நினைத்து வியந்தவாறு உட்கார்ந்திருந்தாள் குமுதா.

கட்டிலில் படுத்திருந்த ஜானகி அம்மாளின் கண்களிலிருந்து ஊற்றுப் போல் கண்ணீர் பெருகிக் கொண்டிருந்தது. மயங்கிக் கிடந்த அந்த இரண்டு நாளும் அவள் உள்ளுணர்வு விழித்துக் கொண்டுதான் இருந்தது. தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறியாமல் கிடந்த அவள், தன் உள்ளுணர்வு கேட்கும் கேள்விக்குப் பதில் கூற முடியாமல் திணறிக்கொண்டிருந்தாள். ‘யாருக்காக வாழ்ந்தாய்? எதற்காக வாழ்ந்தாய்?’ என்று மனம் பெருங் குரலெடுத்து அவளை ஏசும்போது அவள் இதயம் வெடித்துவிடும் போல் இருந்தது. மூச்சு துரத்தித் துரத்தி வாங்கியது. யாரோ அவளை ஊசியால் குத்துவதும் தெரிந்தது. மனத்தோடு போராடிவிட்டு அன்றுதான் அவள் கண் விழித்துக் குமுதர்வைப் பார்த் தாள்.

“குமுதா! உன் அப்பா என் இந்த வீட்டுப் பக்கமே வரவில்லை?” என்று நீளமான குரலில் கேட்டாள் அவள்.

“காலையில் கூட வந்திருந்தார் மாமி. நீங்கள் மயங்கிக் கிடந்தீர்கள்! திரும்பவும் சாயங்காலம் வருகிறேன் என்று சொல்லித்தான் போனார்.”

“வரவில்லையே. அவரைப் பார்க்க வேண் டும் என்று ஆசையாக இருக்கிறது குமுதா.”

“விளக்கேற்றிவிட்டதே, மாமி. அப்பா நாளை தான் வருவார். கிராமத்தில் என் சித்தப்பா ரொம்பவும் படுத்த படுக்கையாக இருக்கிறாராம். சென்னைக்கு அழைத்து வந்து வைத்தியம் செய்தால் உடம்பு தேறும் என்று சொல்கிறார்களாம். அழைத்து வரப் போயிருக்கிறார்…”

குமுதாவின் குரல் சித்தப்பாவைப் பற்றிய கவலையினால் கரகரத்து விட்டது. ஜானகி அம்மாள் புரண்டு படுத்தாள். அன்றலர்ந்த செந்தாமரையை நினைவூட்டும் அந்த அழகிய யுவதியைச் சற்று நேரம் இமைக்காமல் பார்த்தவாறு யோசனையில் ஆழ்ந்திருந்தாள் அவள். குமுதாவின் அந்த நீண்ட கண்கள் யாருடைய வரவை யோ எதிர்பார்த்து ஆவலைத் தேக்கி வைத்திருப்பதைப் பார்த்தாள். பவளத் துண்டங்கள் போல் வெற்றிலையால் சிவந்திருந்த அதரங்கள் ஆபிரம் பேச்சுக்களை மொழிய ஆவலுடன் காத்திருப்பதைக் கண்டாள். முத்துப்பற்கள் மோகன நகை புரியத் தயாராக இருந்தன. ஆனால், வர வேண்டியவன் அந்தத் தீபாவளி அன்று வர, ஏதேதோ ஆட்சேபங்களைத் தெரிவித்திருந்ததை மட்டும் அவள் அறியவில்லை.

“பாவம்! உன் அப்பாவுக்கு இருக்கிற கவலைகள் போதாதென்று இந்தப் புதுக கவலை வேறா? தீபாவளி வரப்போகிறதே, உன் புருஷன் வருவான் இல்லையா?”

“வரும்படிதான் அப்பா கடிதம் போட் டார். அவரைப் பொறுத்தவரையில் பிறருக்கு ஏதாவது செய்து கொண்டு இருக்க வேண்டும் என்கிற எண்ணம்தான். இங்கே நாங்கள் படுகிற பாட்டில், சித்தப்பாவுக்கு வைத்தியம் செய்யக் கொட்டியா கிடக்கிறது? அவரைக் கேட்டுப் பாருங்கள் : அதற்கு ஏதாவது காரணம் சொல்லுவார்…”’

குமுதா ஆத்திரம் தொனிக்கப் பேசி ஓயும் வரை ஜானகி அம்மாள் ஏதும் பேசவில்லை.

‘அவரைப் பொறுத்தவரையில் பிறருக்கு ஏதாவது செய்துகொண்டிருக்க வேண்டும் என்கிற எண்ணம்தான்’ என்கிற வார்த்தைகளை அவள் ஆராய்ந்து பார்த்தாள். பொன்னையும், பொருளையும் சேர்த்துக் குவித்திருக்கும் தனக்குக் கிட்டாத அமைதியையும், நிறைவையும் ஏழைத் தியாகராஜன் எங்கிருந்து பெற்றார்? பிறருக்கு உதவுவதில் இருக்கும் மகிழ்ச்சியிலிருந்துதான் அவர் மன நிறைவை அடைந்திருக்க வேண்டும்.

ஜன்னலுக்கு வெளியே வானம் நிர்மலமாகத் தெரிந்தது. எண்ணற்ற தாரகைகள் பளிச்சிட்டன. தேய்ந்து கொண்டே வந்து ஒரு தினம் மறைந்து போனாலும் அடுத்த நாளே மக்களுக்கு ஒளியைத் தந்து விட வேண்டும் என்கிற மகத்தான ஆசை யுடன் கீற்றுப்போல் வான வீதியில் வந்துவிடும் மதியின் விந்தையை நினைத்து அதையே பார்த்துக்கொண்டு இருந்தாள் அவள். குமுதா அங்கு நிலவியிருந்த மௌனத்தைக் கலைத்தாள்.

“என்னைக் கல்கத்தாவுக்கு அனுப்ப, சித்தப்பாவுக்கு வைத்தியம் செய்ய எல்லாமாக அப்பா உங்களிடம் ஆயிரம் ரூபாயாவது கடனாகக் கேட்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தார். நீங்கள் தான் சமயத்தில் தட்டாமல் கொடுப்பவர்கள். எங்களுக்கு வேறு யார் இருக்கிறார்கள் மாமி?”. நீர் தேங்கியிருந்த தன் கண்களைக் குமுதாவின் பககம் திருப்பிப் பார்த்த ஜானகி அம்மாள், தள்ளாமையைப் பொருட்படுததாமல் விருட்டென்று எழுந்து இரும்புப் பீரோவின் அருகில் சென்று அதைத் திறந்தாள்.

ஒரு கட்டு ரூபாய் நோட்டுகளை எடுத்து வந்து குமுதாவின் அருகில் உட்கார்ந்தாள்.

“குமுதா! இவ்வளவு காலமாக இருண்டு கிடந்த என் உள்ளம் இன்று ஒளி பெற்று விட்டது. இந்த ஆயிரம் ரூபாய் உன் வாழ்க்கையை மலர வைத்து, நோயாளி ஒருவரைக் காப்பாற்றி அவர் குடும்பத்துக்கு உதவினால் அதைவிட எனக்கு வேறு எதிலும் ஆனந்தம் கிடைக்காது. இந்தா அம்மா! இதை வாங்கிக் கொள்; அப்பா வந்ததும் உன் கணவனைத் தீபாவளிக்கு வரச்சொல்லி எழுதச் சொல்.”

குமுதா சிலையாக நின்றாள்.

“கடனாகக் கொடுத்துக் கடன் பளுவை மேலும் உன் அப்பாவின் தலையில் சுமத்த மாட்டேன். உனக்காக நான் தரும் பரிசு இது. நீ குழந்தை குட்டிகளோடு கணவனுடன் வாழும் சமயத்தில் என்னை நினைபாய் அல்லவா?”

ஜானகி அம்மாளின் முகத்தில் பழைய களையும் தேகத்தில் புதுத்தெம்பும் ஊவிட்டாற்போல இருந்தது சந்திரனைக் கண்டு மலரும் குமுதா மலரைப்போல் குமுதா மலர்ந்த முகத்து அவள் எதிரில் நின்றிருந்தாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *