கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 30, 2022
பார்வையிட்டோர்: 5,228 
 

கல்பனா வெளியில் விளையாடிக் கொண்டு இருந்தாள்,அவளின் அம்மா கேதீஷ்வரி கல்பனாவை சாப்பிட கூப்பிட்டாள்,வாரேன் அம்மா என்று பாதியில் விளையாட்டை விட்டு வர மனம் இல்லாம் எழுந்து வந்தாள் அவள்,என்னடி காலையில் இருந்து கொளுத்தும் வெயிலில் விளையாட்டு என்று அதட்டினாள் பரமேஷ்வரி,நான் வெயிலில் விளையாட வில்லை,அம்முவுடன் பல்லாங்குழி தான் விளையாடினேன் என்றாள் கல்பனா,உனக்கும் அவளுக்கும் வேறு வேலையே இல்லை,சேர்ந்து படிக்க மட்டும் போகாதே,விளையாட மட்டும் ஓடி விடு என்றாள் அம்மா,இன்னைக்கு சனிகிழமை தானே,எந்த நாளும் படிக்க முடியாது,அதனால் தானே பாடசாலையே லீவு விடுறாங்கள் என்றாள் மகள்,ஆமாடி நீ மண்ணில் பிரண்டு உருண்டு வருவதற்கு தான் லீவு கொடுக்குறாங்கள் என்றாள் பரமேஷ்வரி,ஆமாம் என்றாள் மகள்,உன்னிடம் வாய் பேச எனக்கு நேரம் இல்லை,வேலை இருக்கு,வந்து சாப்பிடு பாத்திரங்களை கழுவி வைத்து விட்டு அப்பாவிற்கு சாப்பாடு எடுத்துக்கிட்டு போகனும் என்றாள் பரமேஷ்வரி,நீ சாப்பிடவில்லையா என்றாள் மகள் சாப்பிட தான் போறேன் என்று இருவரும் சேர்ந்து சாப்பிட்டு முடித்தார்கள்,நீயும் வா நம்ம நிலத்தில் நிலகடலை அறுவடை செய்றாங்கள் என்றாள் பரமேஷ்வரி,சரி வாரேன் எனக்கு நிலகடலை சுட்டு தருவீயா என்றாள் கல்பனா,அதற்கு தான் அம்மா அவசரமாக ஓடுறேன் என்றாள் அவள்,நீ எதுவும் செய்ய தேவையில்லை,அப்பா சுட்டு தருவார் என்று சொன்னப்படி கல்பனா அம்மாவுடன் நடந்தாள்

நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த பாண்டு,மகளை கண்டவுடன் முகம் எல்லாம் கருத்து போய் இருக்கு,காலையில் இருந்து வெளியில் ஆட்டம் போட்டியா என்றான்,அவள் இல்லை அப்பா என்று அவனை கட்டிப் பிடித்துக் கொண்டாள் கல்பனா,ஏய் அவரை விடு வேலை செய்யும் போது என்று அதட்டினாள் பரமேஷ்வரி,உனக்கு என்ன என் அப்பா உனக்கு பொறமை என்றாள் மகள்,சரி சரி உங்கள் சண்டையை இங்கு ஆரம்பிக்காதீங்கள் என்று மகளை கட்டிப் பிடித்துக் கொண்டான் பாண்டு,மகளை கொஞ்சியது போதும் வந்து சாப்பிடுங்கள் என்றாள் பரமேஷ்வரி,உனக்கு பொறாமையடி என்றான் பாண்டு,ஆமாம் அதிசிய அப்பா மகள் உங்களை பார்த்து நான் பொறாமை படுறேன் எனக்கு வேறு வேலையில்லை என்றாள் பரமேஷ்வரி,உன்னை உன் அப்பன் கொஞ்சவில்லை அந்த கடுப்பு உனக்கு என்று சிரித்துக் கொண்டே வந்து உட்கார்ந்து சாப்பிட்டான் அவன்,பாண்டு சாப்பிடும் போது மகளுக்கு இரண்டு வாய் ஊட்டி விட்டான்,போதும் அப்பா நான் இப்ப தான் சாப்பிட்டு வந்தேன் என்றாள் மகள்,அப்பா நீங்கள் சாப்பிட்டு எனக்கு கடலை சுட்டு தாறீங்களா என்றாள் மகள்,சரிடா வேலை செய்பவர்களுக்கு காப்பி தண்ணி கொடுக்க அடுப்பு பற்ற வைப்போம் அப்போது சுட்டு தாறேன் என்றான் அவன்,அவள் சந்தோஷமாக எழுந்து ஓடினாள்,என்னடி உனக்கு இரண்டு வாய் ஊட்டி விடவா என்றான் பரமேஷ்வரியிடம்,அது தான் மகள் வந்தப் பிறகு நம்மை கணக்கெடுப்பது இல்லையே வேண்டாம் என்றாள் அவள்,என்னடி இப்படி பொசுக்கென்று சொல்லிப்புட்ட நீ தாண்டி என்னுடைய தங்கம் என்றான் அவன்,இதற்கு மட்டும் குறைச்சல் இல்லை என்று சிரித்தால் பரமேஷ்வரி,சரி சாப்பிட்டு எழும்புங்கள் வேலையை பார்ப்போம் என்றாள் பரமேஷ்வரி

பாண்டு மகளிடம் வெயிலில் திரியாதே மரநிழலில் போய் உட்கார்,இல்லை என்றால் போட்டிருக்கும் கூடாரத்தில் உட்கார்ந்து இரு என்றான் பாண்டு,நீங்கள் மட்டும் வெயிலில் வேலை செய்றீங்கள் என்னை மட்டும் விட மாட்டேங்குறீங்கள் என்று சினுங்கினாள் மகள் அதற்கு இல்லை வெயிலில் திறிந்தால் கருத்துப் போய் விடுவ அதற்கு சொன்னேன் என்றான் பாண்டு,இப்ப மட்டும் நான் என்ன வெள்ளையாகவா இருக்கேன் என்றாள் மகள், நீ எனக்கு எப்போதும் அழகான குட்டி தான் என்றான் பாண்டு,பக்கத்தில் பரமேஷ்வரி இங்கு நான் ஒருத்தி இறங்கி வேலை செய்றேன்,என்னை பார்க்க உங்கள் இரண்டு பேருக்கும் பாவமாக தெரியவில்லை,மகள் வெயிலில் உட்கார்ந்து இருப்பது தான் உங்களுக்கு பெரிதாக தெரிகிறது என்றாள் அவள், நீ என்னடி அவளுடன் போட்டி போடுற என்றான் பாண்டு,நான் ஏதும் அவளுடன் போட்டி போடவில்லை,இப்படி பார்த்து பார்த்து வளர்த்து நாளைக்கு பட்டணத்திற்கா கட்டி கொடுக்க போறீங்கள் என்றாள் பரமேஷ்வரி,சொன்னாலும் சொல்லா விட்டாலும் பட்டணத்து மகாராசனுக்கு தான் கட்டி கொடுப்பேன் என்றான் பாண்டு,உங்கள் கனவு பழிக்கட்டும் என்றாள் பரமேஷ்வரி

அப்பா காப்பி தண்ணி வைக்கவில்லை என்றாள் மகள்,நீ வேலையை பாரு நான் அடுப்பை பற்ற வைத்து அவளுக்கு கொஞ்சம் கடலையை சுட்டு கொடுத்து விட்டு வந்து விடுறேன்,இல்லை என்றால் என்னை நிம்மதியாக வேலை செய்ய விடமாட்டாள் உன் மகள் என்று பரமேஷ்வரியிடம் சொன்னப் படி போனான் பாண்டு,மகளும் அப்பா பின்னாடியே ஓடினாள்,கொய்யா மரத்தில் இரண்டு பழத்தை பிடுங்கி கொடுத்தான் பாண்டு,அப்பா உங்களுக்கு என்றாள்,எனக்கு வேண்டாம் நீ சாப்பிடு என்று மகளிடம் சொன்னவன்,அடுப்பை பற்ற வைத்து தண்ணியை சூடாக்கினான்,ஏன் அப்பா இந்த வேலையெல்லாம் நீங்கள் செய்றீங்கள் என்றாள் மகள்,உனக்கு கடலை சுட்டு தருவதற்கு மற்றவர்களிடம் சொன்னால் ஒழுங்காக சுட்டு தற மாட்டார்கள் என்றான் பாண்டு,நீங்கள் என் செல்ல அப்பா என்றாள் மகள்,அடுப்பில் நிலக் கடலையை போட்டு பக்குவமாக சுட்டு மகளுக்கு கொடுத்தான் பாண்டு,சுடும் பார்த்து உடைத்து சாப்பிடு என்று மகளிடம் சொன்னவன்,எல்லோருக்கும் காப்பி போட்டு வைத்து விட்டு குரல் கொடுத்தான்,வேலை செய்தவர்கள் வந்து காப்பியை குடித்தார்கள்,பரமேஷ்வரியிடம் மகள் கொய்யா பழத்தை நீட்டினாள் சாப்பிடு என்று,எனக்கு வேண்டாம் நீ கண்டதையும் சாப்பிட்டு விட்டு இரவு வயிறு வலி என்று அழாதே என்றாள் அவள்,வேலைக்கு வந்திருந்ததில் ஒருத்தி,பரமேஷ்வரியிடம் வீட்டுக்குப் போய் கொஞ்சம் ஓமத்தை வறுத்து தண்ணிய ஊற்றி கொதிக்க வைத்து குடிக்க கொடு என்றாள்,சரி ஆத்தா செய்து கொடுக்கிறேன் என்றாள் பரமேஷ்வரி,எனக்கு அது எல்லாம் வேண்டாம் பாட்டி என்றாள் கல்பனா,அது எல்லாம் உடம்புக்கு நல்லது கொஞ்சம் குடிக்கனும் என்றான் பாண்டு,சரி அப்பா என்றாள் மகள்,நீ சொன்னால் மட்டும் தான் உன் புள்ள கேட்க்குது என்று சிரித்தாள் அந்த பெண்மணி அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல ஆத்தா என்றான் பாண்டு

அனைவரும் வேலை முடிந்து வீட்டுக்கு புறப்பட்டார்கள்,அனைவருக்கும் அன்றைய கூலியை கொடுத்துவிட்டு நாளைக்கும் வேலை இருக்கு வந்திடுங்கள் என்றான் பாண்டு,நாளைக்கு ஞாயிற்றுக் கிழமை அப்பா என்றாள் கலபனா,ஆமாம் அதை நான் மறந்து விட்டேன்,திங்கள் கிழமைக்கு வந்து விடுங்கள் என்றான் மறுப்படியும்,பரமேஷ்வரி நாளைக்கு வந்தால் வேலையை முடித்து விடலாம் தானே என்றாள், நீ பேசாமல் இரு அம்மா,அப்பா நாளைக்கு வீட்டில் இருக்கனும் என்றாள் கல்பனா,ஒரு நாள் சரி அப்பா என்னுடன் இருக்கட்டும் என்றாள் மகள்,எந்த நாளும் உன்னுடன் தானே இருக்கார்,பிறகு என்ன உனக்கு என்றாள் பரமேஷ்வரி,அது எந்த நாளும் எனக்கு பாடசாலை,கொஞ்ச நேரம் தான் அப்பா என்னிடம் இருக்கார்,நாளைக்கு நிறைய நேரம் இருக்கலாம் என்றாள் கல்பனா,சரி விடுடி ஒரு நாள் தாமதம் ஆகினால் எதுவும் குறைந்து விடாது என்று பாண்டு அதட்டினான் பரமேஷ்வரியை

ஏதோ பன்னுங்கள் என்றப்படி வீட்டை நோக்கி நடக்கப் துடங்கினாள் பரமேஷ்வரி,அப்பாவும் மகளும் ஆறுதலாக நடந்தார்கள்,இடைக்கிடை பர்மேஷ்வரியை வம்புக்கு இழுத்தான் பாண்டு,ஏண்டி ஓடுற ஓட்ட பந்தயம் நடதவில்லை யாரும்,மெதுவாக நட என்றான் பாண்டு,அப்பா ஏதும் சொல்லாதீங்கள் இரவு சாப்பாடு போட மாட்டார்கள் என்றாள் கல்பனா,மூவரும் வீட்டை அடைந்தார்கள்,கிணற்றில் தண்ணியை அள்ளி தலைக்கு ஊற்றிக் கொண்டான் பாண்டு,கல்பனா தானும் குளிப்பதாக வந்து நின்றாள்,பரமேஷ்வரி தற்போது தலைக்கு தண்ணி ஊத்திக்காதே,சளி பிடிக்கும் முடி காயாது என்றாள்,எனக்கு வேர்க்குது அப்பா எனக்கும் தலைக்கு தண்ணி அள்ளி ஊத்துங்கள் என்றாள் மகள்,நீங்கள் போங்கள் நான் குளுப்பாட்டி விடுறேன் என்று பரமேஷ்வரி வந்து நின்றாள்,என்னடி நீ இன்னும் கொஞ்ச நாட்களில் குமரி ஆகிவிடுவ,அப்பாவை தலைக்கு தண்ணி ஊத்த சொல்ற என்றாள் பரமேஷ்வரி,என்னுடைய அப்பா தானே என்றாள் கல்பனா,ஆமாடி உன்னுடைய அப்பா தான்,யார் இல்லை என்று சொன்னது,அதற்கு இது எல்லாம் அப்பாவிடம் சொல்லக் கூடாது என்றாள் பரமேஷ்வரி,சரியென்று தலையை ஆட்டினாள் மகள்,மகளை குளுப்பாட்டி விட்டு,தானும் தலைக்கு தண்ணியை அள்ளி ஊற்றிக் கொண்டாள் பரமேஷ்வரி

பாண்டு சாமி விளக்கை ஏற்றினான்,கல்பனாவின் முடியை நன்றாக துவட்டி விட்டாள் பரமேஷ்வரி,தற்போதே தலையை கட்டாதே,முடி நன்றாக காய்ந்தப் பிறகு சீவி கட்டி விடுறேன் என்று சொன்னப் படியே இட்லி ஊற்றி வைக்க சென்று விட்டாள் அவள்,கல்பனா படிக்கப் போவதாக புத்தகத்தை கையில் எடுத்தாள்,மூவரும் எட்டு மணியளவில் சாப்பிட்டார்கள்,சட்னி நல்லா இருக்கு என்றாள் கல்பனா,உனக்கு பிடிக்கும் என்று தான் தேங்காய்சட்னி செய்தேன் என்றாள் பரமேஷ்வரி,மூவரும் சாப்பிட்டு முடித்தார்கள் பாத்திரங்களை கழுவதற்கு பரமேஷ்வரி சென்று விட்டாள்,பாண்டு மகளுக்கு தலையை நன்றாக சீவி பின்னல் போட்டு விட்டான்,அப்பா தோளில் சாய்ந்த கல்பனா,அப்படியே

தூங்கி போனாள்,படுக்கையை விரித்து மகளை படுக்க வைத்தாள் பரமேஷ்வரி,அடுத்த நாள் பாண்டு வீட்டில் இருந்தான், அவனுக்கு வீட்டில் இருந்தால் வெளியில் எங்காவது போகனும்,பக்கத்து ஊரில் இருக்கும் தியேட்டருக்கு படம் பார்க்க சென்றார்கள்,பத்து மணிக்கு படம் தொடங்கியது,பார்த்து விட்டு,பகல் சாப்பாட்டை வெளியில் சாப்பிட்டு,மகளுக்கு தேவையானதை வாங்கி கொடுத்து விட்டு,பரமேஷ்வரியும் பாண்டுவும் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு மூவரும் வந்து சேர்ந்தார்கள்,இப்படி ஓடியது அவர்களின் குடும்பம்

ஒரு சனி கிழமை,கல்பனா அம்மாவிடம் மெதுவாகப் வந்து சொன்னாள்,அம்மா என்னுடய உள் பாவாடையில் ஏதோ பட்டு இருக்கு என்றதும்,மகள் வயதுக்கு வந்து விட்டாள் என்பது புரிந்தது பரமேஷ்வரிக்கு,பக்கத்து வீட்டு மாமியை கூப்பிட்டு பார்க்கச் சொன்னாள்,அவளும் பார்த்து விட்டு உன் மகள் உட்கார்ந்துட்டா என்று கூறிவிட்டு சென்று விட்டாள்,உடனே வேலைக்குப் போன பாண்டுவுக்கு தகவல் அனுப்பினாள் பரமேஷ்வரி,உடனே வீட்டுக்கு ஓடி வந்து விட்டான் பாண்டு,கல்பனாவை பார்க்க விடவில்லை பரமேஷ்வரி,என்னடி மகளை பார்க்க கூட விட மாட்டியா என்றான் பாண்டு,என்னங்க பேசுறீங்கள் ஏழு நாட்களுக்கு அவள் எந்த ஆண் முகத்திலும் முழிக்க கூடாது என்றாள் அவள்,சரி விடு இப்போது என்ன செய்யனும் என்றான் பாண்டு,நல்ல நேரம் பார்த்து இன்னைக்கு தலைக்கு தண்ணி ஊத்தனும்,அத்தைமார்களுக்கு தகவல் அனுப்பனும்,அப்படியே கடைக்குப் போய் தேவையான நாட்டுக் கோழி முட்டையும்,நல்லெண்ணெய்,கருப்பட்டி,உழுந்து,பழம் வெற்றிலை,பாக்கு வாங்கிட்டு வந்து விடுங்கள்,வரும் வழியில் தான் வண்ணார் வீடு இருக்கு அவர்களிடம் மாற்றுத் துணி கொண்டு வரும்படி சொல்லனும் என்றாள் பரமேஷ்வரி,சரிடி பிள்ளைய கவனமாக பார்த்துக் கொள் என்று கூறிவிட்டு பாண்டு புறப்பட்டான்

மாலை நேரத்தில் தண்ணி ஊத்துவதற்கு கல்பனாவின் அத்தை மார்கள் வந்து இருந்தார்கள் நல்லநேரம் பார்த்து தலையில் சிறிதளவு அருகம்புல்லும் பாலும் வைத்து அத்தை மார்கள் தண்ணி ஊற்றினார்கள்,பச்சிலையால் கட்டிய குடிசையில் கல்பனாவை உட்கார வைத்தார்கள்,பாலும் பழமும் கொண்டு வந்து கொடுத்தாள் பரமேஷ்வரி கல்பனாவிற்கு எனக்கு வேண்டாம் குடலை பிரட்டுகிறது என்றாள் அவள்,அது அப்படி தான் இருக்கும் சாப்பிடு சரியாகி விடும் என்றாள் பரமேஷ்வரி,வந்தவர்களுக்கு அவள் செய்த கேசரியை தட்டில் வைத்து காப்பி போட்டு கொண்டு வந்து கொடுத்தாள் பரமேஷ்வரி,அனைவரும் காப்பியை குடித்தப் படியே மறுத் தண்ணி ஊற்றுவதைப் பற்றி கதைத்துக் கொண்டார்கள் மூன்றாம் நாள்,ஐந்தாம் நாள்,ஏழாம் நாள் தலைக்கு தண்ணி ஊத்தனும் நாங்கள் வந்து ஊத்திவிடுகிறோம்,அவளுக்கு பார்த்து சத்தான சாப்பாட்டை கொடு,நாளை பகல் சாப்பாட்டை நான் கொண்டு வந்து தருகிறேன் என்றால் வந்தனா அத்தை,இப்படி ஒவ்வொருவரும் அவர்கள் சாப்பாடு கொண்டு வந்து தரும் நாளை கூறி விட்டு அவர்கள் புறப்பட்டு விட்டார்கள், மகளுக்கு உழுந்தம் களி,நல்லெண்ணெய், முட்டை என்று பார்த்து பார்த்து சாப்பிட கொடுத்தாள் பரமேஷ்வரி,ஏழு நாட்களில் கொஞ்சம் உடம்பு வைத்து பார்க்க அழகாகவே இருந்தாள் கல்பனா,ஏழாவது நாள் தலைக்கு பால் வைத்து வண்ணார் வீட்டில் இருந்து வந்த ஒரு சுமங்கலி பெண் சில சாங்கியங்களை செய்து அத்தைகளுடன் சேர்த்து ஐந்து பெண்மணிகள் கல்பனாவின் தலைக்கு தண்ணி ஊற்றி வீட்டுக்கு அழைத்துக் விட்டார்கள்

பிறகு நல்ல நாள் பார்த்து சொந்தகங்களை அழைத்து கல்பனாவிற்கு சடங்கு சுற்றுவதற்கு ஏற்பாடு பன்னினார்கள்,ஊரில் உள்ள ஒரு புரோகிதர் வந்து இருந்தார்,அவர் சாங்கியங்கள் செய்து அன்றும் கல்பனாவின் தலைக்கு தண்ணி ஊற்றி தாய்மாமன் கொண்டு வந்திருந்த சீர்தட்டில் இருந்த பட்டுப் புடவை கட்டி அழகாகவே இருந்தாள் அவள்,நீளமான முடி,மாநிறம்,துரு துரு என்ற ஆயிரம் கதை பேசும் கண்களுடன்,தலை நிறைய மல்லிகை சரம்,கழுத்தில் மலர் மாலையுடன் புடவையி்ல் கொஞ்சம் பெரியவளாகவே தெரிந்தாள் அவள்,பாண்டுவிற்கு ஆச்சிரியமாக இருந்தது,தன்னையறியாமல் கண்கள் கலங்கி விட்டது,இன்னும் பத்து வருடத்தில் இதே போல் கணவன் பக்கத்தில் நிற்பாள் என்று நினைக்கும் போது பாண்டுவிற்கு பக் என்றது,எவ்வளவு செல்லம் கொடுத்து வளர்த்தாலும் இன்னொரு வீட்டுக்கு வாழப் போய் விடுவாள்,என்று நினைக்கும் போதே கவலையாக இருந்தது அவனுக்கு,என்னங்க என்று பரமேஷ்வரி பாண்டுவை தட்டும் போது தான் என்னடி என்றான்,அங்கு ஐயர் கூப்பிடுறார் இங்கு என்ன கனவு என்றாள் அவள்,முறைப்படி சடங்கு செய்து முடித்தார்கள் கல்பனாவிற்கு,வந்தவர்களுக்கு வயிறார சாப்பாடு போட்டு அனுப்பினார்கள்,நாட்கள் ஓடியது,கல்பனா வெளியில் விளையாடுவது,நிலத்திற்கு போவது என்று சந்தோஷமாக இருந்தாள்,பரமேஷ்வரி தான் அடிக்கடி இன்னும் சின்ன பிள்ளை மாதிரி விளையாடிக்கிட்டு இருக்க,கழுதை வயதாகி விட்டது என்று அதட்டுவாள்,கல்பனா அப்பாவிடம் சினுங்குவாள்,இன்னும் எத்தனை நாளைக்கு விடுடி என்று பரமேஷ்வரியை அதட்டுவான் அவன்,கட்டி போற இடத்தில் எதுவும் தெரியவில்லை என்றால் உங்களை எதுவும் சொல்ல மாட்டார்கள்,என்னை தான் திட்டி தீர்ப்பார்கள் புள்ளைய சரியாக வளர்க்கவில்லை என்று,இது எனக்கு தேவையா என்பாள் பரமேஷ்வரி

நான் கட்டி போக மாட்டேன்,அப்பாவுடன் தான் இருப்பேன் என்பாள் கல்பனா,நாங்களும் பார்க்கத் தானே போறோம் என்பாள் பரமேஷ்வரி,அவள் ஏதோ வெவரம் பத்தாம ஏதாவது சொன்னா அதற்கு ஏண்டி அவள் கூட மல்லுக்கு நிக்கிற என்பான் பாண்டு,கல்பனாவின் கல்வி சாதாரண தமிழ் பாடசாலையில் முடிந்து போனது,தாவணி போடும் அளவிற்கு வளர்ந்து நின்றாள்,மெதுவாக மாப்பிள்ளை பார்க்களாம் என்று வீட்டில் பேச்சி அடிப்பட்டது,கல்பனா அப்பாவிடம் வீட்டோடு மாப்பிள்ளை பாருங்கள் என்றாள்,மண் வாசனை நிறைந்த ஊரையும்,பெற்றோர்களின் அளவு கடந்த அன்பையும் விட்டுப் போக அவளுக்கு மனமில்லை,உங்களை விட்டு எனக்கு போக முடியாது என்று அடம் பிடித்தாள்

யாரும் அதற்கு ஒத்துக்க மாட்டார்கள் அம்மா,அது முறையும் இல்லை,நீ தான் வேறு வீட்டுக்கு வாழப் போகனும் என்று பாண்டு எடுத்து சொன்னான்,அரை மனதோடு ஒத்துக் கொண்டாள் அவள்,நாட்கள் ஓடியது கல்பனாவிற்கு வரன் அமைந்தது,கனேசன் ஒரு கம்பனியில் வேலை,நன்றாக படித்தவன் அப்பா அம்மா அண்ணா என்று சிறிய குடும்பம் அவனுடையது கல்பனாவை பெண் கேட்டு வந்தார்கள்,பரமேஷ்வரி கொஞ்சம் பயந்தாள்,நன்றாக படித்த மாப்பிள்ளை,கல்பனா அந்தளவிற்கு படிக்கவில்லை,பிறகு பிரச்சினை வரும் அவள் தகுதிக்கு ஏற்ற மாதிரி மாப்பிள்ளை பார்ப்பது நல்லது தானே என்றாள் அவள்,என்னடி நீ மாப்பிள்ளை நன்றாக படித்திருந்தால் நல்லது தானே என்றான் பாண்டு,அது இல்லிங்க நாளைக்கு மாப்பிள்ளை யோசித்து விடக் கூடாது படித்த மனைவியை கட்டியிருக்களாம் என்று அப்படி ஏதாவது பிரச்சினை வந்து விடுமோ என்று பயமாக இருக்கு என்றாள் பரமேஷ்வரி

நாங்கள் ஏமாற்றியா கட்டி கொடுக்கிறோம்,கல்பனா இவ்வளவு தான் படித்திருக்காள் என்று தெரிந்து தானே பெண் கேட்டு வந்து இருக்கார்கள் என்றான் பாண்டு,கல்பனாவிடம் பாண்டு கேட்டான்,என்னம்மா மாப்பிள்ளை படித்திருக்கார் நீ அந்தளவிற்கு படிக்கவில்லை உனக்கு சம்மதம் என்றால் சொல்லு,பேசி முடித்து விடுவோம் என்றான் பாண்டு,நீங்கள் பார்த்து சரி என்று சொன்னால் போதும் அப்பா என்றாள் மகள்,உன்னை நன்றாக பார்த்துக் கொள்வார் என்று நினைக்கிறேன்,சம்மதம் சொல்லி விடுவோம் அம்மா என்றான் பாண்டு,அதன் பிறகு ஒரே செல்ல மகளின் திருமணத்தை வெகு சிறப்பாக நடத்தி முடித்தார்கள்,பாண்டுவிற்கு மகளை பிரியும் கவலை,பரமேஷ்வரி தான் ஆறுதல் சொன்னாள்,அவளுக்கும் கவலை தான் பாண்டுவிடம் காட்டிக் கொள்ளவில்லை,கல்பனா அப்பாவை கட்டிப் பிடித்து அழுது தீர்த்தாள்,அதைப் பார்த்த கனேசனுக்கும் கவலையாக இருந்தது,பரமேஷ்வரி ஆறுதல் சொன்னாள்,கல்பனாவிற்கு அவள் குடும்பத்தை பிரிந்து கனேசன் வீட்டில் வாழ ஆரம்பித்து விட்டாள்.

சிறிது நாட்களில் கனேசனுக்கு இடம் மாற்றம்,அதுவும் வெளியூர் போகவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது,இதை அறிந்த பாண்டு துடித்துப் போய்விட்டான்

கம்பனி உத்தரவு போடும் போது அதை மறுக்க முடியாது,கல்பனாவையும் அழைத்துக் கொண்டு போவதற்கு ஏற்பாடு நடந்தது,நினைத்தவுடன் போய் பார்த்துக் கொள்ளும் தூரத்தில் இருக்கும் போதே,பாண்டுவால் அதை தாங்க முடியவில்லை,தற்போது வெளியூர் என்றதும் நெஞ்சே அடைத்தது,எப்படி பிரிந்து இருப்பது என்று மனதில் ஆயிரம் கவலைகள்,கல்பனா கனேசனுடன் ஊருக்கு வந்து இருந்தாள்,கவலை படாதீங்கள் மாமா,ஒவ்வொரு வருடமும் ஊருக்கு வந்து போய் விடுவோம் என்றான் கனேசன்,சரி மாப்பிள்ளை அவளை செல்லமாக வளர்த்து விட்டோம்,பிரிந்து இருப்பதை நினைத்தால் தான் கவலையாக இருக்கிறது என்று பெருமூச்சி விட்டான் பாண்டு,கவலை படாதீங்கள் மாமா,உங்கள் மகளை சந்தோஷமாக பார்த்துக் கொள்வேன் என்றான் கனேசன்,நாங்களும் நீங்கள் விமான நிலையம் செல்லும் போது வருகிறோம் என்றான் பாண்டு,சரி மாமா இரண்டு நாட்களுக்கு முன்பாக நம்ப வீட்டுக்கு வந்து விடுங்கள் அங்கு இருந்து விமான நிலையத்திற்கு போவதற்கு வசதியாக இருக்கும் என்றான் கதிரேசன்,கல்பனா அது மட்டும் இங்கு இருக்கட்டும் என்றாள் பரமேஷ்வரி, விட்டுவிட்டுப் போவது பிரச்சினை இல்லை அத்தை,எடுத்துக் போவதற்கு தேவையானது எல்லாம் வாங்க வேண்டும்,அடுக்கனும் அது தான் யோசனையாக இருக்கு என்றான் கனேசன்

உங்களுக்கு வேலை எதுவும் இல்லை என்றால் எங்களிடம் சேர்ந்து வந்து விடுங்கள்அடுத்த வாரம் நாங்கள் போய் விடுவோம்,அது மட்டும் கல்பனாவுடன் இருக்கலாம் தானே என்றான் கனேசன்,கல்பனாவும் வாங்க அப்பா,ஒரு வாரம் தானே என்றாள்,அடுத்த நாள் கனேசன் வண்டியில் நால்வரும் வந்து சேர்ந்தார்கள்,அவர்களை கண்டதில் கனேசன் குடும்பத்திற்கு அளவில்லாத சந்தோஷம்,ஒரு வாரம் பார்த்து பார்த்து கவனித்துக் கொண்டார்கள்,நாட்கள் நெருங்க நெருங்க பாண்டுவிற்கு கவலையாக இருந்தது,கல்பனா அப்பாவின் முன்பாக கவலை படுவதாக காட்டிக் கொள்ளவில்லை,அவர்கள் போக வேண்டிய நாளும் வந்து விட்டது,அனைவரும் விமான நிலையத்திற்கு சென்றார்கள்,அப்போதும் அப்பாவை கட்டிப் பிடித்து கல்பனா அழுது விட்டாள்,பாண்டுவும் கண்கலங்கி தான் போனான்,பரமேஷ்வரியும் அழுது தீர்த்து விட்டாள்,கல்பனா கண்களில் கண்ணீர் கொட்டியது,அப்பா அம்மாவை விட்டு போறோம் என்ற கவலை,அவள் நெஞ்சை அடைத்தது,ஒரு வழியாக அனைவரிடமும் விடைப் பெற்ற கல்பனா,அப்பா அம்மாவை திரும்பி திரும்பி பார்த்தப் படியே நடந்தாள் சற்று நேரம் மட்டும் அவர்கள் தலைகள் தெரிந்தது,அதன் பிறகு யாரும் தெரியவில்லை கண்களில் கண்ணீருடன் நடந்த கல்பனாவின் கைகளை பிடித்துக் கொண்டான் கனேசன் அழாதே நான் இருக்கேன் தானே,பிறகு ஏன் என்று ஆறுதலாக சொன்னான்,அவள் கண்ணீர் கொஞ்சம் கொஞ்சமக அடங்கியது,முதல் தடவையாக விமானத்தில் கால் பதிக்கவே கல்பனாவிற்கு பயமாக இருந்தது,ஊரை தவிர எதுவும் தெரியாத அவளுக்கு இது பிரமிப்பாக தான் இருந்தது,பல மணி நேரம் பயணம் செய்து அவர்கள் போய் சேர்ந்தார்கள்,கம்பனி அபார்மென்ட் ஏற்பாடு பன்னி இருந்தது,அவர்கள் தங்குவதற்கு,பெரிய கட்டிடங்களை காணும் போது கல்பனாவிற்கு வியப்பாக இருந்தது இருவரும் வந்து சேர்ந்து விட்டதாக கனேசன் வீட்டுக்கு போன் பன்னி சொன்னான் கல்பனாவிடமும் போனை கொடுத்தான்,பாண்டு கதைத்தான் கவனமாக இருக்கனும் அம்மா என்று கூறும் போதே அவனின் குரல் தழுதழுத்தது,அதற்கு மேல் அவனுக்கு கதைக்க முடியவில்லை,பரமேஷ்வரி போனில் அழுதே விட்டாள்,கல்பனாவிற்கும் அழுகையாக வந்தது உடம்பை இருவரும் பார்த்துக் கொள்ளுங்கள் என்று போனை வைத்து விட்டாள் அவள், அதற்கு மேல் அவளுக்கும் கதைக்க முடியவில்லை,கல்பனா அழுது தீர்த்தாள்,கனேசன் அமைதியாக விட்டு விட்டான்,அடுத்த நாள் பாண்டுவும் பரமேஷ்வரியும் ஊருக்கு புறப்பட்டு விட்டார்கள் எல்லாம் கனவு போல் இருந்தது

கல்பனாவிற்கு இரண்டு நாட்கள் கஷ்டமாக இருந்தது,அதன் பிறகு வழமைக்கு திரும்பினாள் அவள்,வெளியில் எங்கும் போகவில்லை,கனேசன் வந்த அடுத்த நாளே வேலைக்கு போக வேண்டும்,ஊரில் என்றால் ஏதாவது காரணம் சொல்லி விடுப்பு எடுக்களாம் இங்கு அதுவெல்லாம் முடியாது,உனக்கு தனியாக இருக்க முடியும் தானே என்றான் கல்பனாவிடம்,மனதுக்குள் கொஞ்சம் பயம் என்றாலும்,சரியென்று தலையை மட்டும் ஆட்டினாள் அவள்,இரண்டு நாட்களில் ஞாயிறு வந்து விடும்,அன்று வெளியில் அழைத்துக் கொண்டுப் போகிறேன் என்றான் கனேசன்,இவள் மட்டும் வீட்டில் தனியாக இருந்தாள்,கொண்டு வந்த பொருட்களையெல்லாம் அடுக்கி வைத்தாள்,அடிக்கடி கல்பனாவிற்கு போன் பன்னிக் கொண்டான் கனேசன்,பயம் இல்லாமல் இரு,இங்கு தனியாக இருப்பது எல்லாம் பயம் இல்லை,யாரும் கதவை தட்டினால் திறக்காதே,என்னிடம் சாவி இருக்கு,நான் கதவை திறந்து வந்து விடுவேன் என்பதையெல்லாம் போனில் ஞாபகம் படுத்துவான்,அன்று ஞாயிறுக் கிழமை கனேசன் வீட்டில் இருந்தான்,அவன் அடிக்கடி கம்பனி விடயமாக இங்கு வந்து போனவன் தான்,அதனால் அவனுக்கு எதுவும் பெரிதாக தெரியவில்லை,அன்று இருவரும் வெளியில் போனார்கள்,கல்பனாவிற்கு ஆச்சிரியமாக இருந்தது,எங்கும் சுத்தமாக இருந்தது,வீதிகளில் யாரும் நடப்பதுவே குறைவாக இருந்தது,அனைவரும் விதவிதமான வாகனங்கள் வைத்து இருந்தார்கள்,உயரமான கட்டிடங்கள்,மின் விளக்குகள்,விசாலமான கடைகள் கை வைத்தால் கதவு தானாகவே திறப்பதுவே அவளுக்கு வியப்பாக இருந்தது,அவ்வளவு பொருட்களும் அழகாகவும்,சுத்தமாக வைத்திருந்தார்கள் எல்லா பொருட்களும் கிடைக்கின்றது எதுவும் இல்லையென்று இல்லை,எல்லாம் நம் ஊரை விட விலை அதிகம் என்றாள் கல்பனா நீ ரூபாயில் கணக்கு பார்த்தால் அப்படி தான் தெரியும்,இங்கு இந்த மக்களுக்கு டாலரில் குறைவு தான் நம் ஊரை விட என்றான் கனேசன்

சில இடங்களை சுற்றி பார்த்தார்கள்,வெளியில் சாப்பிட்டார்கள்,கல்பனாவிற்கு அவ்வளவாக சாப்பாடு பிடிக்கவில்லை,காய்கறிகள் சப்பென்று இருக்கு என்றாள்,நீ ஊரில் சாப்பிட்டு பழகியவள்,அந்த ருசி இங்கு வராது,கொஞ்ச நாட்களில் பழகிவிடும் என்றான்,இருவரும் வீட்டுக்கு சென்றார்கள்,அடுக்கு மாடி கட்டிடம் எல்லா கட்டிடங்களும் ஒரே மாதிரி இருந்தது,எப்படி நம் வீட்டை கண்டு பிடித்து போவது என்றாள் கல்பனா ஒவ்வொரு கட்டிடத்திற்கும் ஒவ்வொரு நம்பர் இருக்கும்,நாங்கள் இருப்பது 132 அடுத்த கட்டிடம் நம்பர் 133 இப்படி எல்லாவற்றுக்கும் நம்பர் இருக்கும்,நாங்கள் பத்தாவது மாடியில் இருக்கோம்,நம் வீட்டு கதவில் 50 என்று போட்டு இருக்கு தானே அதை நினைவு வைத்துக் கொள் லிப்டில் ஏறி 10 என்று அழுத்த வேண்டும்,மேலே போய் லிப்ட் திறக்கும் நீ வலது பக்கம் திரும்பி ஆறு வீடுகள் தாண்டி நடக்கும் போது நம் கதவில் 50 என்று இருக்கும் அது தான் நம் வீடு என்றான் அவன்,இப்படி ஒவ்வொன்றையும் படிக்க வேண்டி இருந்தது கல்பனாவிற்கு அது ஆர்வமாகவும் இருந்தது

அவளுக்கு இந்த அபார்ட்மென்ட் வாழ்க்கையே அதிசியமாக தான் இருந்தது,நிலத்தோடு வீட்டில் இருந்து பழக்கப் பட்டவளுக்கு, எந்த நேரமும் கதவை பூட்டிக் கொண்டு உள்ளே இருப்பதுவும் நன்றாக தான் இருந்தது,எந்த புகையும் இல்லாம்,சமைக்க குடத்தில் தண்ணி தூக்கவே அவசியமே இல்லாமல்,எல்லா வசதிகளுடன் வீட்டுக்குள் இருப்பதற்கு சந்தோஷமாக இருந்தது,இடைக்கிடை வீட்டு நினைவுகள் வரும்,அப்பாவை பார்க்க வேண்டும் என்று இருக்கும்,தற்போது தான் கல்பனா வீட்டில் டெலிபோன் பூட்டுவதற்கான ஏற்பாடே நடக்கிறது,மகளிடம் பேச வேண்டும் என்பதற்காகவே அதிகம் செலவு செய்து பாண்டு ஊருக்கு டெலிபோன் கம்பி தூண்களை போடுவதற்கு ஏற்பாடு பன்னிக் கொண்டு இருந்தான்,அந்த வேலைகள் வேகமாக முடிந்து மகளுடன் டெலிபோனின் கதைக்க ஆரம்பித்தது விட்டார்கள்,பாண்டுவிற்கு அவ்வளவு சந்தோஷமாக இருந்தது,ஏதோ கல்பனாவே அருகில் இருப்பது போல் உணர்ந்தான்,அந்த உணர்வு கல்பனாவிற்கும் இருந்தது,அடிக்கடி போனில் நலம் விசாரித்துக் கொள்வார்கள்

நாட்கள் வேகமாக ஓடியது. ஓரளவிற்கு கல்பனா எல்லாவற்றையும் பழகியிருந்தாள். பக்கத்து சுப்பர்மார்க்கட்டில் போய் தேவையானதை வாங்கி கொண்டு மெசினில் பணம்,அல்லது காட் போட்டு பணத்தை கட்டும் அளவிற்கு முன்னேற்றம் அடைந்து இருந்தாள் அவள். வருடம் ஒரு முறை ஊருக்கு போய் வந்தார்கள். அவள் இரண்டு குழந்தைகளுக்கு தாயாகி விட்டாள்,அதிகளவு நண்பர்கள் இல்லை என்றாலும் ஒன்னு இரண்டு நண்பர்கள் இருந்தார்கள்,மெதுவாக இந்த வாழ்க்கை கசந்தது அவளுக்கு,ஊரில் சொந்த பந்தங்களுடன் வாழ்ந்தவளுக்கு,இந்த ஊரில் யாரும் இல்லாத ஓர் உணர்வு ஏற்பட்டது,எந்த நேரமும் வீட்டுக்குள் இருந்து பழகியிருந்தாலும் சில நேரங்களில் எரிச்சலாக இருந்தது கல்பனாவிற்கு,மண் தரையில் விளையாடியதும்,சுத்தமான காற்றை சுவாசித்ததும்,அப்பா மடியில் தலை சாய்த்து கதை கேட்டு தூங்கிய நாட்களும் இனி எப்போதும் நமக்கு கிடைக்காது எல்லாம் கனவாக போய்விட்டது என்று நினைத்தப்படி ஜன்னல் ஓரம் சாய்ந்து வானத்தைப் பார்த்துக் கொண்டு இருந்தாள் கல்பனா.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *