கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: October 3, 2021
பார்வையிட்டோர்: 44,566 
 

(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அடி வயிற்றில் ஆவேசத்துடன் செருகப்பட்ட அந்த ஒன்பது அங்குலக் கத்தி கல்லீரலையும், மண்ணீரலையும் சிதைத்து மரணத்தை உண்டாக்கியிருக்கிறது. மரணம் இரவு எட்டு மணியிலிருந்து ஒன்பது மணிக்குள் திகழ்ந்திருக்கலாம்.

போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் கண்களை ஓடவிட்டிருந்த இன்ஸ்பெக்டர் தன்ராஜ் ஒருமுறை அந்த மரணத்தின் கோரத் தன்மையை நினைத்துச் சிலிர்த்தார்.

இன்ஸ்பெக்டர் பதவி ஏற்ற இந்த ஆறு மாத காலத்தில் அவர் கையாளப் போகும் மூன்றாவது கொலைக் கேஸ் இது. முதலிரண்டு வழக்குகளில் குறிப்பிட்ட நபர் தான் குற்றவாளி என்பதற்கான அறிகுறிகள் – தக்க ருசுக்கள் கிடைத்ததன் பயன்… வழக்குகளில் அலைச்சல் இல்லாமல் போய் ஹாய்யாகக் குற்றவாளிகளில் ஒருவனுக்கு மரண தண்டனையும், இன்னொருவனுக்கு ஆயுள் தண்டனையும் வாங்கித் தந்தார்.

kalki1980-07-27_0058-pic

இந்தக் கொலை வழக்கு அவரைக் கண்ணா மூச்சி ஆட வைத்தது. கொலையுண்ட முருகானந்தம் இருபத்தியேழு வயதான அழகான இளைஞன், கல்யாணமாகாதவன், நண்பர்கள் அதிகம் இல்லாதவன், வாரத்துக்கு ஒரு தடவை ஞாயிற்றுக் கிழமையன்றைக்கு பாலக்காடு பஸ் பிடித்து பாலக்காட்டின் தென்னந் தோப்புக்களில் கள்ளைக் குடிக்க மட்டும் போகிறவன். அவனுடன் பழகும் ஒரு நண்பன் சத்தியனின் மேல் அபரிமிதமான பீரியம் கொண்டவன்.

சென்ற வார ஞாயிற்றுக் கிழமையன்று பாலக்காட்டில் ஒதுக்குப்புறமான தென்னத் தோப்பில் – வாய்க்கால் பக்கமாக அடி வயிற்றில் செருகப்பட்ட கத்தியோடு பிணமாகக் கிடந்த முருகானந்தம் இன்ஸ்பெக்டர் தன்ராஜின் பிரச்னையானான்.

யாரோடும் அதிகம் நெருங்கிப் பழகாத முருகானந்தத்துக்கு – கொலை செய்யும் அளவுக்கு விரோதிகள் எப்படி இருக்க முடியும்?

கேரளப் போலீஸ் இப்படி வாதித்தது. ‘குடிக்க வந்த இடத்தில் ஏதேனும் சில்லறைத் தகராறு ஏற்பட்டு எவனாவது ஆத்திரத்தில் குத்தியிருக்கலாம். நாங்கள் புலன் விசாரணை செய்து ரிப்போர்ட் அனுப்புகிறோம்’.

ஆனால் இன்ஸ்பெக்டர் தன்ராஜின் மனத்தில் மட்டும் ‘இது அப்படி நடந்திருக்கக் கூடிய கொலையல்ல’ என்ற சந்தேகம் மெல்ல மெல்ல வியாபித்தது.

இது நிச்சயமாய்த் திட்டமிட்டுச் செய்த கொலை தான்! முருகானந்தத்தின் ஒரே நண்பன் சத்தியனை விசாரித்தால் ஏதேனும் தகவல் கிடைக்காதா? முருகானந்தத்திற்கு இருந்த ஒரே நண்பன் விரோதியாய் மாறியிருக்க முடியாதா என்ன?

ஒருவித நப்பாசையோடு சத்தியன் தங்கியிருந்த ராம்நகர் பகுதியை நோக்கித் தன் ஜாவாவைச் செலுத்தினர் தன்ராஜ்.

தனியார் நிறுவனம் ஒன்றில் கிளார்க்காக வேலை பார்க்கும் சத்தியன் ராம்நகர் காளிதாஸ் ரோட்டின் வளைவில் இருந்த ஒரு மாடியில் ஐம்பது ரூபாய் வாடகையில் அற யொன்றைப் பிடித்துத் தங்கியிருந்தான். தன்ராஜ் சென்ற சமயம் சத்தியன் நுரை பொங்கும் சோப்பு முகத்தோடு ஷேவிங்கில் இருந்தான், இன்ஸ்பெக்டரைக் கண்டதும் புன்னகை பூத்தான்.

“ஹல்லோ இன்ஸ்பெக்டர் ப்ளிஸ் கம் இன்…”

தன்ராஜ் உள்ளே நுழைந்தார். சத்தியன் ஒரு மடக்கு நாற்காலியை விரித்துப் போட்டான்.

“நீங்க ஷேவிங்கை முடிச்சுட்டு வாங்க மிஸ்டர் சத்தியன்” – பேசிக் கொண்டே நாற்காலியில் சாய்ந்தார் தன்ராஜ்.

சத்தியன் பரபரவென்று ஷேவிங்கை முடித்துக்கொண்டு முகம் கழுவித் தேங்காய்ப்புக துவாலையில் முகத்தை ஒற்றிக் கொண்டே வந்தான்.

“எனி க்ளூஸ் இன்ஸ்பெக்டர்?”

“நோ” என்றார் தன்ராஜ். பிறகு சிகரெட் ஒன்றை உதட்டில் பொருத்திக் கொண்டே சத்தியனைப் பார்த்தபடி சொன்னார்: “மிஸ்டர் சத்தியன்! உங்க நண்பர் முருகானந்தத்தைப் பற்றி வேறு ஏதாவது தகவல் உங்களுக்குத் தெரிஞ்சிருந்தா மறைக்காமல் சொல்லுங்களேன், இந்தக் கேஸை ஈஸியா உடைக்சுடலாம்…. ஏன் அவருக்கு இருந்த ஒரே நண்பர் நீங்கதான்…”.

“வாஸ்தலம் தான் இன்ஸ்பெக்டர்.. பட் அவனைப் பற்றிப் புதுசாச் சொல்ல ஒன்றுமே இல்லை; அன்னிக்கு நான் உங்ககிட்ட சொன்னதையே தான் இன்னிக்கும் சொல்லணும், அவன் குடிப்பான்… ஆனா பெண்கள் சகவாசம் இல்லே… விரோதின்னு சொல்ல ஒரு ஈ, எறும்பு கூட இல்லே…”.

தன்ராஜ் புகையை உதடுகளில் வழிய விட்டார். பிறகு கேட்டார்: “போன ஞாயிற்றுக் கிழமை நீங்க முருகானந்தத்தைப் பார்க்கவேயில்லையா?”

“இல்யே இன்ஸ்பெக்டர்… நிச்சயமா நான் அவனை பார்க்கல்லே, அன்னிக்கு எனக்கு வயிறு சரியில்லை, டிஸண்ட்ரி மாதிரி இருந்தது. காலையிலிருந்து எங்கேயும் போகாமல் ரூமுக்குள்ளேயே படுத்திருந்தேன். கிழே குடியிருக்கிற வீட்டுக்கார அம்மாள் வெந்நீர் வெச்சு அப்பப்பா குடுத்துக்கிட்டிருந்தாங்க, உங்களுக்கு டவுட் இருந்தா ப்ளீஸ் ஆஸ்க் தெம்…”.

“நோ… நோ…. மிஸ்டர் சத்தியன்.. உங்க மேலே எனக்கு டவுட்ஸ் ஏதும் இல்லே.”

“தேங்க்யூ இன்ஸ்பெக்டர்” என்றவன் கொஞ்சம் பயமாய் “வில் யூ ஹேவ் எனி ட்ரிங்க்ஸ் இன்ஸ்பெக்டர்?” என்றான்.

சிகரெட்டைக் கிழே போட்டு பூட்ஸ் காலால் நசுக்கியபடியே ‘டீ’ என்றார் தன்ராஜ்.

“ஒன் மினிட் இன்ஸ்பெக்டர்….எதிரில் இருக்கும் ஹோட்டலில் சொல்லிட்டு வந்துடறேன், சத்தியன் சட்டையை மாட்டிக் கொண்டு வெளியேறினான்.

தன்ராஜுக்குக் குழப்பம் தலையை முழுக்கக் கவ்வியது. இந்தக் கொலை வழக்கின் முடிச்சு இறுகியது, இறுகியபடியே இருப்பதை எண்ணி மனத்தில் ஆயாசம் பொங்க விழிகளைச் சுழற்றினர். அலமாரியின் மேல் தட்டிலிருந்த அந்தப் பத்திரிகையின் அட்டைப் படம் அவர் கண்களை உறுத்தியது.

எழுந்து அந்தப் பத்திரிகையை எடுத்தார். அது ஒரு தமிழ் வார இதழ், தேதியைப் பார்த்தார். போன வாரத்திய இதழ்.

பக்கங்ககாத திருப்பத் தொடங்கினர். துணுக்குகள் மட்டும் மேய்த்துவிட்டு சினிமா விமர்சனம் ஒன்றைப் படித்துவிட்டு மன மளவென்று பக்கங்களைப் புரட்டிவிட்டுப் புத்தகத்தைக் கவிழ்த்து வைத்தார்.

அந்த இதழின் பின்புற அட்டை இப்போது கண்ணில் பட்டது. அதை அசட்டையாகப் பார்த்தவர் சட்டென்று நிமிர்ந்து உட்கார்ந்தார்.உடம்பெல்லாம் அந்தப் பரபரப்பு மோத ஆரம்பித்தது. பின்புற அட்டையின் வலது பக்கமாய் விழிகள் நிலைத்து நின்றது. அதே விநாடி… சத்தியன் மாடிப் படிகளில் ஏறி வரும் சத்தம் கேட்டது. அந்த வார இதழைக்கையில் எடுத்துக் கொண்டார் தன்ராஜ்.

சத்தியனே இரண்டு கண்ணாடி டமனர்களில் டீயை எடுத்துக் கொண்டு உள்ளே அழைத்தான், முகத்தில் லேசாய் வியர்வை.

“என்ன மிஸ்டர் சத்தியன்…நீங்களே வாங்கிக் கொண்டு வந்திட்டங்கள? என்னால உங்களுக்குச் சிரமம்..”

“இதிலென்ன சார் சிரமம்…ப்ளீஸ் ஹேவ் இட்…”

“தேங்க்யூ” – டீயை எடுத்துக் கொண்டார் தன்ராஜ். ஒரு வாய் டீயை உறிஞ்சிய படியே கேட்டார்: “இந்த வார இதழ் உங்களுடையதா மிஸ்டர் சத்தியன்?”

“ஆமாம் இன்ஸ்பெக்டர்… ஏன்?”

“இல்லே இந்த வார இதழ்லே பிராஸ்ட்டி டியூஷனைப் பற்றி ஓர் அருமையான ஆர்ட்டிகிள் போட்டிருக்கான், வீட்டுக்கு எடுத்துட்டுப் போய்ப் படிச்சுட்டுத் தரலான்னு நினைச்சேன், புத்தகம் உங்களுடையதா இருந்தா கொஞ்சம் சாவகாசமாகத் தரலாமேன்னு தான் கேட்டேன்”

‘லித் பிளஷர் இன்ஸ்பெக்டர். இந்தப் புத்தகத்தை நீங்களே வேணுமின்னாலும் வெச்சுக்குங்க,.. என்னேடதுதான்”

உற்சாகமாய்ச் சொன்னான் சத்தியன்.

“தேங்க்யூ …பை…த..பை…சத்தியன் எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சாகனும்…”

“கேளுங்க ஸார்.”

“இந்த வார இதழை எந்தக் கடையில வாங்கினீங்கன்னு சொல்ல முடியுமா மிஸ்டர் சத்தியன்”

ஒரு கணம் முகம் இருண்டான் சத்தியன். அடுத்த கணமே “ஏன் நம்ம ஊர் சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டிலதான் வாங்கினேன்” என்றான்.

தன்ராஜ் பாதி டீ டம்ளரை வைத்துவிட்டு எழுந்தார். குரலைச் சற்று உயர்த்திக்கொண்டார். “நிச்சயமா இந்த வார இதழை நீங்க நம்ம ஊர் சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டில் வாங்கல்ல, பாலக்காடு பஸ் ஸ்டாண்டிலே வாங்கியிருக்கீங்க…. ஸீ தி பேக் பேல் ஆப் திஸ் வீக்லி …”

சத்தியன் வியர்த்துப் போய் எழுந்து அந்த வார இதழின் பின்பக்க அட்டையைப் பார்த்தான். அவனுக்கு இதயத்தை அடைத்தது. இதை எப்படிக் கவனிக்காமல் விட்டோம்.

அந்த வார இதழின் பின் பக்க அட்டையில் – அழகான ரப்பர் ஸ்டாம்ப் முத்திரையில் – அந்த எழுத்துக்கள் தெரிந்தன:

ஸ்ரீ ராமன் நாயர் புக் ஸ்டால்
பாலக்காடு பஸ் ஸ்டாண்ட் – பாலக்காடு.
எல்லாவிதத் தமிழ் புத்தகங்களும் கிடைக்கும் ஒரே கடை.

தன்ராஜ் சத்தியனைக் கூர்மையாகப் பார்த்துக்கொண்டே சொன்னார்: “போன வாரம் ஞாயிற்றுக் கிழமை நீங்கள் பாலக்காடு போயிருக்கீங்க. சாயந்தரம் ஆறு மணிவரை உங்க ரூம்லே இருந்துட்டு கீழே இருக்கிற வீட்டுக்காரங்க சினிமாவுக்குப் போனப்புறம் நீங்க பாலக்காடு போயிருக்கீங்க. முருகானந்தத்தைத் தீர்த்துக் கட்டிட்டு ஒன்பது மணிக்குள்ளாறத் திரும்பியிருக்கீங்க, உங்க ஃபிரண்டை எதுக்காகக் கொலை செஞ்சிங்கங்கிறதை இனிமே உங்க வாயிலிருத்து வரவழைக்கிறது எங்களுக்கு ரொம்பவும் சுலபம். ஸ்டேஷன் வரை ஒரு நடை வந்துட்டுப் போறீங்களா மிஸ்டர் சத்தியன்?”

சத்தியன் திகைத்துப் போய் நின்றான்.

வாங்கின கடனை நாலு பேர் எதிரே இருக்கையில் அநாகரிகமாய் – அடாவடித் தனமாய்க் கேட்டு – முருகானந்தம் தன்னை அவமானப்படுத்தினான் என்பதற்காக – கள் குடிக்கப் போன அவனைப் பாலக்காடு தென்னத் தோப்பில் குரிக் கத்தியால் கிழித்துப் போட்டுவிட்டு பஸ் ஏற பாலக்காடு பள் ஸ்டாண்டுக்கு வருகையில் எதிர்ப்பட்ட நண்பர் ஒருவரின் கண்களில் பட்டுவிடக் கூடாது என்பதற்காக அந்தப் புத்தகக் கடையில் நுழைந்து ஏதோ ஒரு வார இதழை வாங்கப் போக…. அந்த வார இதழே அவனுக்கு ஒரு வலையாய் அமையுமென்று சத்தியன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

– 27-07-1980

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *