நாச்சியப்பனின் உரை

 

(இதற்கு முந்தைய ‘அரட்டைக் கச்சேரி’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது).

ஒருநாள் விடுமுறையின் காரணமாக சென்னையில் இருந்து திம்மராஜபுரத்தில் என் வீட்டிற்குப் போயிருந்தேன்.

என் வீட்டிற்கு அடுத்த வீடுதான் நாச்சியப்பன் வீடு. ஆனால் ஒரு சின்ன சந்து மாதிரி இடையே போய் அதன் கடைசியில் அமைந்திருக்கும் அவருடைய வீடு.

என் சித்திக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச தொடர்புகூட எனக்கு அவரிடம் கிடையாது. திம்மராஜபுரம் போனால் ராத்திரிகளில் என் வீட்டின் பால்கனியில் நான் படுத்துத் தூங்குவது வழக்கம்.

பல நேரங்களில் என்னால் தூங்க முடியாமல் நாச்சியப்பன் குழுவினரின் சப்தமான அரட்டைக் கச்சேரி எனக்குப் பெரிய இடைஞ்சலாக இருக்கும். சில நேரங்களில் தலை வேதனையாக இருக்கும். எட்டு தெருவிற்கு கேட்கிற மாதிரியான உச்சக் குரலில் பேச்சுக்கள் போய்க் கொண்டிருக்கும். இத்தனைக்கும் பேசப்படுகிற சமாச்சாரங்கள் எல்லாம் ரொம்ப ரொம்ப ரகசியமானவை! அந்தரங்கமானவை!!

இரண்டாவது தெருவில் இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கும் யாராவது ஒருத்தர் சமாச்சாரத்தின் சுவாரஸ்யத்தால், காதில் விழுந்ததை யாரிடமாவது சொல்லி வைப்பார். அவர் அதை இன்னொருத்தரிடம் போய்ச் சொல்வார். திம்மராஜபுரம் குண்டுச்சட்டி போன்ற ஒரு சின்ன ஊர்தானே! அதனால் பல காதுகளில் விழுந்து புறப்பட்ட சங்கதி, கடைசியாகக் கேள்விப்படும் போது நாச்சியப்பனின் குழுவினரில் ஒருத்தராக இருப்பார்.

உடனே இரண்டாவது தெருவில் இருப்பவருக்கு அரட்டைக் கச்சேரியை ‘ஒட்டுக் கேட்டதாக’ ஒரு பயங்கர எச்சரிக்கை போகும்! தேவைதான் அவருக்கு! ராத்திரி பன்னிரண்டு மணிக்கும் ஒரு மணிக்கும் வெட்ட வெளியில் உட்கார்ந்துகொண்டு இரண்டாம் வகுப்பு வாத்தியார் மாதிரி கத்திக் கத்தி பாளையங்கோட்டைக்கு கேட்கிற மாதிரி பேசிக் கொண்டிருந்துவிட்டு, ஒட்டுக் கேட்பதாகக் கோபப்பட்டால் என்ன அர்த்தம்?

‘ஒட்டுக் கேட்கிற காதில் பூட்டுப் போட்டு விடுவேன்’ என்கிற மிரட்டல் கூட நாச்சியப்பனிடம் இருந்து சில சமயங்களில் வந்தது உண்டு! பூட்டுக்குப் பயந்து யாரும் அதனால் பொதுவாக வாயைத் திறப்பது கிடையாது. நியாயமாகப் பார்த்தால் நாச்சியப்பனின் வாய்க்குத்தான் பூட்டு போட வேண்டும் பூட்டு! ஆனால் நடப்பது என்னவோ நேர் எதிராக…

அன்றைக்கு ராத்திரி பதினோரு மணிக்கு எங்கள் வீட்டுப் பால்கனியில் நான் படுத்திருந்தபோது, நாச்சியப்பன் குழுவினரின் அரட்டைக் கச்சேரியில் குரல்கள் வழக்கத்திற்கு மாறாக உச்சத்தில் ரொம்ப உற்சாகமாக ஒலித்துக் கொண்டிருந்தது. அப்போது திடீரென நாச்சியப்பன் “வாய்யா டாக்டரு மாப்ளே வா! எங்கே நீ வருவாயோ மாட்டாயோன்னு நெனச்சேன்… வந்திட்டியே..” என்றார்.

“பெரியவங்க வந்து பாக்கச் சொல்லியிருக்கும் போது எப்பிடி மாமா வராம இருக்க முடியும்?” கமலாச் சித்தியின் மகன் ராஜாராமனின் குரல்.

“பெரியவங்களை வந்து பாத்தா மட்டும் போதாது மாப்ளே. பெரியவங்க சொல்றதைக் கேக்கவும் செய்யணும். தெரியுதா? உன் அம்மா வந்து மூக்கால அழுதிட்டுப் போறா! நீ என்னமோ தமன்னா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ரேஞ்சுல ரொம்ப அழகானவளா பாத்துத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு மொரண்டு பிடிக்கிறியாமே? வேணுகோபாலோட மவளைப் பண்ணிக்க முடியாதுன்னு சொல்றேயாமே…?”

“பொண்டாட்டி அழகானவளா இருக்கணும்னு நான் ஆசைப்படறது தப்பா மாமா?”

“மூட்டை மூட்டையா வீட்ல துட்டை வச்சிக்கிட்டு அப்படி ஆசைப்பட்டா தப்பில்லை! இப்ப நீ இருக்கும் நிலைமையில அப்படி ஆசைப்பட்டா தப்புத்தான் மாப்ளே! என்னடா மாமா இப்படிப் பேசறாரேன்னு பாக்காதே, நான் உன் நெலமையோட யதார்த்தத்தைச் சொன்னேன். இப்ப வேணுகோபால் வந்து லட்சம் லட்சமா கொண்டாந்து உன் கால்ல கொட்டி, அவனோட மவளையும் உனக்குக் கட்டித் தரேன்னு சொல்லலைன்னு வச்சிக்க – அப்ப கதையே வேற!”

“அப்ப என் கதையையே நீங்க மாத்திப்பிடணும்னு சொல்றீங்க?” ராஜாராமனின் குரல் மிகவும் தணிந்து கேட்டது. பதிலுக்கு நாச்சியப்பனின் குரல் உயர்ந்தது.

“மாப்ளே… நான் கதை எழுதறவன் கிடையாது. ஆனா நெறைய கதை கேக்கறவன்! வேணுகோபால் இப்ப உனக்கு அள்ளி அள்ளித் தரேன்னு சொல்லி இருக்கிற கதை இருக்கே – இதை எந்தக் கதையிலும் இதுவரை நான் கேட்டதில்லை தெரியுமா? அவன் தரேன்னு சொல்ற சமாச்சாரத்தை எல்லாம் நீயா சம்பாரிக்கிறதா இருந்தா, எத்தனை வருஷம் நீ கழுத்ல ஸ்டெத்தாஸ்கோப்பை மாட்டிக்கிட்டு ஓடணும் தெரியுமா? அப்பக்கூட எனக்கு அதில் சந்தேகம் உண்டு ஒனக்கு பேஷண்ட் படை தெரண்டு வருமா இல்லையான்னு… ஒருவேளை திரண்டு வந்தாத்தான் கொஞ்சம் நிம்மதி.

“……………..”

“நம்ம ஊர்லயே எத்தினி டாக்டருங்க ஈ ஓட்டிக்கிட்டு இருக்கானுங்கன்னு தெரியுமா ஒனக்கு? ஈ ஓட்டிக்கிட்டு என்னிக்கி நீ சம்பாரிக்கிறது; என்னைக்கு நீ வீடு கட்றது? எப்ப ஹைஎண்டு கார் எல்லாம் வாங்கறது? ஒனக்கு நல்லபடியா அவன் பொண்ணோட கல்யாணம் ஆனதும், வேணுகோபால் அங்கே ஹாஸ்பிடல் கட்றதுக்கு அஸ்திவாரம் எல்லாம் தோண்டி தயாரா வெச்சிருக்கானாம்… நீ இங்கே சரின்னு ஒரு வார்த்தை சொல்லிட்டீன்னா அங்கே வேலையை ஆரம்பிச்சிருவான் அவன்!

இதுல இன்னொரு விஷயமும் இருக்கு மாப்ளே! வேணுகோபால் எதையாவது தொட்டாலே அது பவுனாயிடும்! அந்த மாதிரியான யோகக்காரன் அவன். மஹா லக்ஷ்மி எப்பவுமே அவன் தோள் மேலேயே உக்காந்திருக்கா! அவன் மகளை நீ கட்டிக்கிட்டா அடுத்த நிமிசமே மஹா லக்ஷ்மி ஒன் தோள் மேலும் ஏறி ஒக்காந்திருவா! பெறகு இந்த சென்மத்ல அவ ஒன் தோளை விட்டு இறங்க மாட்டா.. புரிஞ்சுக்க.

இதை நான் பத்திரத்ல எழுதி கையெழுத்து வேணுமானாலும் போட்டுத் தர்றேன்! யோசனையே பண்ணாத மாப்ள. உன் மாமன் நான். நாளைக்கு மாமன் சாஸ்திரத்துக்கு நான்தான் வந்து நிக்கணும் சொல்லிப்புட்டேன் மறந்துராத…”

ராஜாராமனிடமிருந்து பதில் பேச்சே இல்லை. சில நிமிடங்களுக்கு நாச்சியப்பனிடமிருந்தும் எந்தப் பேச்சும் இல்லாமல் இருந்தது. சற்று இடைவெளி விட்டு அப்புறம் ஒலித்தது அவரது குரல்.

“யோசனையே பண்ணாதன்னு இப்பத்தான் சொன்னேன்… நீ பாட்டுக்கு இப்ப யோசனையில் இருக்க. பொண்ணு அழகா இல்லையேன்னு யோசிக்கிறே போல இருக்கு..”

“வேணுகோபாலோட மக ரொம்ப அசிங்கமா இருப்பாள்னு எல்லோருமே சொல்றாங்களே மாமா?” ராஜாராமனின் குரல் கிணற்றில் இருந்து பேசிய மாதிரி மெலிதாகக் கேட்டது. 

தொடர்புடைய சிறுகதைகள்
(இதற்கு முந்தைய ‘மூச்சுத் திணறல்கள்’ கதையைப் படித்தபின், இதைப் படித்தால் புரிதல் எளிது) சபரிநாதனை கல்யாணம் செய்துகொள்ள ராஜலக்ஷ்மி சம்மதம் சொல்வாள் என பெரியசாமி எதிர்பார்க்காவிட்டாலும் கூட, மனசுக்குள் அவள் ஒரு பணக்காரனுக்காக காத்துக் கொண்டிருக்கிறாள் என்ற நினைப்பில் அவள் மேல் அவனுக்கு ...
மேலும் கதையை படிக்க...
சேலம். பணக்காரர்கள் அதிகம் வசிக்கும் குடியிருப்பு பகுதி. அந்தத் தெருவிலுள்ள வயதானவர்கள் பலர், பெரியவர் ஆவுடையப்பன் வீட்டில் அன்றும் ஒன்று கூடினார்கள். அவ்வப்போது அந்தத் தெருவில் நடந்து கொண்டிருக்கும் ‘அந்த’ அசிங்கத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தேயாக வேண்டும் என்று மறுபடியும் அவரிடம் முறையிட்டார்கள். இது இன்று ...
மேலும் கதையை படிக்க...
எனக்கு வயது பதினைந்து. என் அப்பாவை எனக்குப் பிடிக்காது. காரணம் அப்பா எப்போது பார்த்தாலும் பணம் வைத்துச் சீட்டாடுவார். ஆயிரக்கணக்கில் அடிக்கடி தோற்றுப் போவார். அதனால் என் பெரியப்பாவுக்கும் அப்பாவுக்கும் அடிக்கடி சண்டையும், வாக்குவாதமும் உண்டாகும். உடனே அப்பா கோவித்துக்கொண்டு வீட்டைவிட்டு ஓடிப் போய்விடுவார். அதன்பிறகு ...
மேலும் கதையை படிக்க...
(இதற்கு முந்தைய ‘உறக்கம் வராதவர்கள்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது) சுகுணா காலையிலேயே ஊருக்கு கிளம்பிவிட்டாள். யாருடைய பேச்சும் அருகாமையும் இல்லாமல் இருந்தால் போதும் என்ற மனநிலையில் இருந்த சபரிநாதனுக்கு மகள் சுகுணா கிளம்பிப் போனது நிம்மதியாக இருந்தது. சுப்பையா ஒரு ...
மேலும் கதையை படிக்க...
(இதற்கு முந்தைய ‘சாக்ரடீஸ்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது). இந்துக்களின் திருமணச் சடங்கில் அம்மி மிதித்தல், அருந்ததி காட்டல் என்று சில சடங்குகள் இருக்கின்றன. ஆகாயத்தின் வடக்குப் பகுதியில் ஏழு நடசத்திரங்கள் அடங்கிய ‘சப்தரிஷி மண்டலம்’ என்று ஒரு தொகுதி உண்டு. ...
மேலும் கதையை படிக்க...
தன்னுடன் அலுவலகத்தில் பணி புரியும் சுந்தரத்தை வீட்டுக்கு அழைத்து வந்திருந்தார் தீனதயாளன். இருவரும் வரவேற்பறையில் அமர்ந்து அலுவலக விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். சிறிது நேரத்தில் பேச்சு குடும்ப விஷயத்துக்குத் திசை திரும்பியது. எட்டாவது படிக்கும் தன் மகன் சரியாகவே படிக்கமாட்டேன் ...
மேலும் கதையை படிக்க...
(இதற்கு முந்தைய ‘சபரிநாதனின் கொக்கரிப்பு’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது) இரண்டொரு கணங்கள் பூட்டிய கதவின்மேல் சாய்ந்தபடியே நின்றார். மலங்க மலங்க விழித்தார். பின்பு வேகமாகச்சென்று கொல்லைப்புற கதவைத்திறந்து பின்புறமாக ஓடலானார். பின்னால் திரும்பிப் பார்த்துக்கொண்டே ஓடினார். மனித நடமாட்டமில்லாத கற்களும் ...
மேலும் கதையை படிக்க...
எனக்கு தற்போது வயது பத்தொன்பது. ஊர் திம்மராஜபுரம். படிப்பு எனக்கு எட்டிக்காயாக கசந்தது என்பதால் பத்தாம் வகுப்பில் இரண்டு தடவைகள் பெயிலானேன். அதன் பிறகு தற்போது என் அப்பாவுக்கு உதவியாக வெல்ல மண்டியைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஆங்....இந்தக் கதை என்னைப்பற்றியல்ல. என் அம்மாவையும், பாட்டியையும் ...
மேலும் கதையை படிக்க...
அன்று காலை என் கணவர் ஆபீஸ் கிளம்பியதும், நான் என் வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு, முகநூல் பக்கத்தைத் திறந்தபோது, அதில் என் நட்பை வேண்டி கிஷோர் என்பவன் செய்தி அனுப்பியிருந்தான். எனக்கு அவன் யார் என்றே தெரியாது. இருப்பினும் என்னுள் ஒரு படபடப்பு ...
மேலும் கதையை படிக்க...
திங்கட் கிழமை காலை ஒன்பது மணி. விஷயம் அதி வேகமாகப் பரவி அந்தச் சென்னை கிளை அலுவலகம் பரபரப்புடன் காணப் பட்டது. பெண் ஊழியர்கள் தங்களுக்குள் கூடி கூடி பேசிக் கொண்டனர். ராமநாதன் அந்த மாதிரி செய்திருக்க மாட்டார்... அவர் அப்படிப்பட்டவரில்லை என்று தங்கள் ...
மேலும் கதையை படிக்க...
மூத்தவளின் நகைகள்
துவஜஸ்தம்பம்
வைக்கோல் உறவுகள்
காந்திமதியின் சீற்றம்
நதிகள், குணங்கள்…
மதிப்பெண்கள்
தெய்வீகக் காந்திமதி
அம்மாவும் மாமியாரும்
முகநூல் நட்பு
வாலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)