மனசு – ஒரு பக்க கதை
கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 6,617
ஸாரி டியர், இன்னைக்கும் எனக்கு வேற வேலை இருக்கு. நீங்க முன்னாடி போங்க, நான் பஸ்லயே வந்திடறேன்.
கவிதாவின் வார்த்தைகளை கேட்டு ஆச்சரியப்பட்டு போனாள். அவளது தோழி சாந்தி. இந்த ஒரு வாரமாகவே அவளது நடவடிக்கையே சரியில்லை.
ஏய், என்னடி ஆச்சு உனக்கு? நானும் பத்து நாளா கவனிக்கிறேன.” நீ ஏதோ ஒரு காரணம் சொல்லி குமாரோட போறதை தவிர்க்கற… அப்படி என்னடி பிரச்சனை உங்களுக்குள்? என்றாள் சாந்தி.
அதில்லடி, எனக்கும் ஆசைதான். ஜாலியா அவனோட போய் காலேஜ்ல இறஙக. ஆனா, நான் அவனோட போகாத நாளெல்லாம் நம்ம கிளாஸ்மெட் வெங்கட்டை கூட்டிட்டு போறான். பாவம்டி அவன், போலியோ காலை வச்சிட்டு, பஸ்ல வர ரொம்ப கஷ்டப்படறான்..
இதைச் சொன்ன, குமாரோட மனசு சங்கடப்படுமேன்னு தான்… என்று தயங்கியவாறு சொன்னாள் சாரதா.
தனது தோழியின் உயர்ந்த உள்ளத்தை நினைத்து பூரித்து போனாள் சாந்தி.
– கோவை.நா.கி.பிரசாத். (நவம்பர் 2013)
தொடர்புள்ள சிறுகதைகள்
இவளே என் மனைவி!
அ.லஷ்மி
June 20, 2026
யார் அது?
இரஜகை நிலவன்
June 20, 2026
கந்தையரின் கடைசி வித்து!
மா.சித்திவினாயகம்
June 14, 2026