பணியார மழை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: August 9, 2026
பார்வையிட்டோர்: 94 
வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்

(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு ஊர்ல புருசம் பொண்டாட்டி இருந்தாங்க. பொண்டாட்டிய, வீட்ல இருக்கச் சொல்லிட்டு, புருச கருதறுக்கப் போறா. கருதறுக்கயில, கூட அறுக்ற கொமரிக. இவனப் பாட்டுப் படிண்டு சொன்னாங்க. சொல்லவும், எனக்குப் பாட்டுத் தெரியாதுண்டு சொல்றா. அப்ப! பாட்டுத் தெரியலண்டா; நாளக்கிருந்து, எங்க கூட கருதறுக்க வரக்கூடாதுண்டு சொல்லிட்டாங்க. 

அப்ப இவ், என்ன நெனக்கிறா, பாட்டுப் பழகப் போறேண்டு, இருவத்தஞ்சு ரூவா வாங்கிக்கிட்டு, வீட்ட விட்டு வெளியேறிப் போறா. 

போகும்போது, வழில ஒருத்த பாட்டுப் பாடிக்கிட்டே, எரச்சுக்கிட்டிருந்தா. 

அவங்கிட்டப் போயி, அண்ணே!! இந்த இருவத்தஞ்சு ரூவாய வச்சுக்கிட்டு, எனக்குப் பாட்டுச் சொல்லிக்குடுண்டு கேட்டா. 

இருவத்தஞ்சு ரூவாய, அவ் வாங்கி வச்சுக்கிட்டு, இப்படிப்பட்ட இளிச்ச வாயங்க இருக்குறாங்களேண்டு மனசுல வச்சுக்கிட்டு, 

பாட்டுச் சொல்லிக் குடுக்குறா. பாட்டுகளப் பழகிக்கிட்டு, நா போயிட்டு வாறேண்டு சொல்லிட்டு, வீட்டுக்கு வாரா. 356 

அப்ப: பாட்டுச் சொல்லிக் குடுத்தவ் சொன்னா; தம்பி! போகும் போது; 

புங்கமரம் புது நெழலு 

தென்றலே தென்றல் ண்டு 

பாடிக்கிட்டே போண்டு சொன்னா, சொல்லவும், இவனும் அப்டித்தா, 

புங்கமரம் புது நெழலு 

தென்றலே தென்றல் ண்டு

பாடிக்கிட்டே வீட்டுக்கு வாரா. 

வர்ற வழில, ஒரு ஆறு குறுக்க போகுது. ஆத்தக் கடக்கும் போது இவ், புங்கமரம் புது நெழலு – ண்டு சொன்னா, தென்றலே தென்றல்ங்ற வாத்த மறந்துபோச்சு. 

மறந்துபோன, தென்றலே தென்ல்ங்ற வாத்த, ஆத்துக்குள்ள வி ழுந்திருச்சுண்ட்டு, ஆத்து தண்ணிய அணகெட்டி எரக்கிறா. ஆனா! தண்ணி வத்தல, பொழுதும் விழுந்திருச்சு. 

பொழுசாய வீட்டுக்கு வந்தா. வந்ததும் வராததுமா, பாய விரிடிண்டு சொன்னா. பொண்டாட்டி, பாய விருச்சா. விரிக்கயில, …ங்…. புங்கமரம் புது நெழலு, அதுக்கு மேல் அந்து போச்சுடிண்டு பாடுறா. 

பாடவும், அவ, அட வெக்கங் கெட்ட மனுசா! ஒனக்கென்னா பைத்தியமா? சும்மா இரு. ஒன்னயப் போயி பாட்டுப் பழகச் சொன்னேன்பாரு, எம் புத்திய செருப்பாலடிக்கணும்ண்டு சொல்லிக்கிட்டா. 

அப்ப, அவங்க வட்ல ஒரு காளைமாடு இருந்திச்சு. மனுசா! மனுசா! இத வச்சு என்னா செய்யப் போற? உழுகுறதுக்கு நம்மகிட்ட நெலமில்ல. இதக்கொண்டுபோயி, சந்தயில வித்துட்டு வாண்டு சொன்னா. சொல்லவும், சரிண்ட்டு, மாட்டப் புடுச்சுக்கிட்டுப்போறா. போற வழில, ஒரு கரட்டான், வேலில படுத்துக் கெடக்கு. இவனப் பாத்ததும், கரட்டான் தலய ஆட்டுச்சு. கரட்டான் தலய ஆட்டவும்,அண்ணே! அண்ணே! கரட்டான் அண்ணே! இந்த மாட்ட வெலக்கி வாங்கிகிறயாண்டு கேக்குறா. அதுக்கும் கரட்டான் தலய ஆட்டுச்சு. 

ரெண்டு மாடு, இருவத்தஞ்சு ரூவாண்டு சொன்னா. அதுக்கும் கரட்டான் தலயாட்டுச்சு. அப்ப! துட்டு? இப்ப இல்லி யாக்கும். அப்பண்டா டா! ரெண்டுநா கழிச்சு வந்து வாங்கிக்கிறேண்டு சொன்னா. அதுக்கும் கரட்டான் தலயாட்டுது. மாட்ட, மரத்ல கெட்டி வைக்கட்டாண்டு கேட்டா. அதுக்கும் கரட்டான் தலய ஆட்டுச்சு. 

மாட்ட, கருவல மரத்ல கெட்டி வச்சிட்டு, வீட்டுக்கு வந்திட்டா. வந்து, பொண்டாட்டிகிட்ட வெவரத்தச் சொன்னா. சொல்லவும், பொண்டாட்டி, புடுச்சு எக்கச் செக்கமா வையிரா. பொம்பள! பேசாம இரு, நாளக்கிப் போயி கரட்டாங்கிட்ட, பணத்த வாங்கிக்கிட்டு வந்திருரேண்டு சொல்றா. 

சொல்லிட்டுப் படுத்திருக்கா. அண்ணக்கி ராத்திரி விடியவும், எந்திரிச்சு, சொல்லாமக் கொள்ளாமப் போறா. 

போகயில, அந்தக் கரட்டான், அந்தக் கருவல மரத்ல இருக்கு. இவனப் பாத்ததும் பம்மிக்கிருச்சு. 

கரட்டான் அண்ணே! ஒழியாத, நானு ஒன்னய பாத்திட்டே. என்னா? ரூவா இருக்காண்டு கேக்குறா.

கேக்கவும், கரட்டான் தலய ஆட்டுச்சு. என்னடா, நம்ம பேசிக்கிட்டே இருக்கோம், கரட்டான் அதுபாட்டுக்குத் தலய ஆட்டிக்கிட்டே இருக்கு. கரட்டான், தலய ஆட்டாம என்னா செய்யும், ஆட்டவும், இப்பப்பாருண்டு, ஒரு கல்ல எடுத்து கரட்டானப் பாத்து எறிஞ்சா. எறியவும், கரட்டான் ஓடிப் போயி ஒரு பொந்துக்குள்ளே நொழஞ்சுகிருச்சு. பொந்துக்குள்ள தான இருப்ப! இரு! ஒன்னய வந்து பேசிக்கிறேண்ட்டு வீட்டுக்குப் போனா. 

அங்க, பொண்டாட்டி புடுச்சு மானங்கெட வையிரா. அந்தக் கோவத்ல, மம்பட்டிய எடுத்துக்கிட்டு வாரர். வந்து, கரட்டான் நொழஞ்ச பொந்தப் புடுச்சு வெட்டுறா. வெட்டிப் பாக்கயில, அந்தக் கரட்டான், அண்டாப் பணத்து மேல படுத்திருக்கு. ஏண்ணே! இப்பயாவது, இருப்பதஞ்சு ரூவாயக் குடு, நானு வீட்டுக்குப் போகணும்ண்டு கேக்குறா. அப்பவும் கரட்டான், தலய ஆட்டுச்சு. 

ஆட்டவும், கரட்டான் அண்ணே! சரிண்டு சொல்லி ருச்சுருண்ட்டு, இருவத்தஞ்சு ரூவாய மட்டும் எடுத்துக்கிட்டு, பொந்த மூடி வச்சிட்டு, வீட்டுக்கு வந்திட்டா. 

வந்து, பொண்டாட்டிகிட்ட ரூவாயக் குடுத்திட்டு, கரட்டான் அண்ணே! எத்தம் பெரிய பணக்காரருண்டு ஒனக்குத் தெரியுமாடி? அவரப் போயி வையிரயே! கொஞ்சங் கூட மனுசத்தம்மயில்லாம, அண்டாப் பணத்து மேல, எம்புட்டு சொகுசாப் படுத்துக் கெடக்காருதெரியுமாண்டு சொல்றா. 

சொல்லவும், அட கூறு கெட்ட மனுசா! கரட்டான் பணத்து மேல படுத்துக் கெடக்குதுண்டு சொன்னய, காமிண்டு கூட்டிட்டுப் போறா. 

கூட்டிக்கிட்டுப் போகயில, ஒண்ணொண்ணா சொல்லிக் கிட்டே போறா. கிட்டத்ல போயி, அண்டாப் பணம் இருக்ற எடத்தக் காமிச்சா. 

அண்டாப் பணத்தப் பாத்தவ, எடுத்துட்டுப் போயிறலாம்ண்டு நெனச்சு, எடுக்கப்போனா. போகவும், அண்டாப் பணத்த எடுத்துட்டுப் போ; நா போயி ராசாகிட்டச் சொல்றேண்டு சொன்னா. 

சொல்லவும், இவ, ஒரு கூறு கெட்ட பய, சொன்னாலுஞ் சொல்வாண்ட்டு, அண்டாப் பணத்த எடுக்காம, வீட்டுக்கு வந்திட்டாங்க. 

புருசன ஒரங்கப் போட்டுட்டு, ராத்ரில போயி, அண்டா பணத்த எடுத்திட்டு வந்து, வீட்ல வச்சுக்கிட்டா. 

பணத்த ஒளிச்சு வச்சிட்டு, பணியாரஞ் சுடுறா. இவ – பந்தல் மேல ஏறிப் படுத்துக் கெடக்கர். படுத்துக் கெடக்கயில, பணியாரத்த அவ் மேல எறிஞ்சுவிட்டுட்டு, தண்ணிய மோந்து அவ்மேல் ஊத்துறா. ஊத்திட்டு, அடக் கூறுகெட்ட மனுசா! பணியார மழ பேஞ்சு எல்லாரும் பெறக்குறாங்க. நிய்யி படுத்துக் கெடக்கயேண்டு சொன்னா. சொல்லவும், ஏண்டி! சத்தம் போடுற, இங்ஙயும் வி வி ழுகுதுடி பணியார மழண்டு சொல்லிட்டு, பணியாரத்தப் பெறக்கி கிரக்கித் திண்டுப் பிட்டுப் போயிப் படுத்துக்கிட்டா. ராத்ரிக்கு – ராத்திரியாப் போயி, அண்டாப் பணத்த எடுத்திட்டு வந்து, வீட்ல வச்சுக்கிட்டு, விடியவும் புருசங்கிட்டப் போயி, அண்டாப் பணத்த எடுத்திட்டு வந்திட்டேண்டு சொன்னா. சொல்லவும், அப்டியா சங்கதிண்ட்டு, வேகமா வெளியேறிப் போயி, ராசாகிட்டச் சொல்லிட்டா 

எப்டிச் சொன்னாண்டா! என்னய ஒரங்கப் போட்டுட்டு, எம் பொண்டாட்டி, கரட்டான் அண்ண வச்சிருந்த அண்டாப் பணத்த எடுத்துட்டு வந்து, வீட்ல வச்சிருக்காண்டு சொல்லி, அரமண ஆளுகளக் கூட்டிட்டு வாரர். 

வரயில், இங்க, இவ கிளிஞ்ச சீலயக் கெட்டி, வாசப் படில் ஒக்காந்திருக்கா. அவ ராசாவக் கூட்டிக்கிட்டு வாரர். 

வந்ததும், வாசல்ல ஒக்காந்திருந்தவகிட்ட அண்டாப் பணப் பொதயல எனக்கு எப்டிசாமி பொதயலு கெடைக்கும்ண்றா. ஒம்புருசீ சொன்னாண்டு ராசா சொல்றாரு. ஐயையோ எம்புருச் ஒரு பைத்தியம். எண்ணக்கி எடுத்திட்டு வந்தேண்டு, அவரக்கேளுங்க ராசாவேண்டு சொல்றா. 

ஓம் பொண்டாட்டி, எண்ணக்கிப் பொதயல எடுத்திட்டு வந்தாண்டு ராசா கேட்டாரு. அறிசல்ச் 

அதுக்கு அவ, எனக்கு நல்லாத் தெரியுமே, பணியார மழை பேஞ்சண்ணக்கிண்டு சொன்னா.

பாத்தீங்களா ராசாவே! இந்த மதிகெட்ட மனுச் பேச்சக் கேட்டு, நீங்களும் வந்திருக்கீங்களேண்டு சொன்னா. சொல்லவும், அவனத்தான வஞ்சுவிட்டுட்டு, ராசா போயிட்டாரு. பெறகு பணத்த வச்சு நல்லா பொளச்சாங்களாம். 

இவனமாதிரி, அவளும் இருந்தால் எப்டி இருக்கும். அதா ஒண்ணு, ஆம்பள வெவரமா இருக்கணும், இல்ல பொம்பள வெவரமா இருக்கணும். ரெண்டும் ஒண்ணு மாதிரி இருந்தால் எப்டி இருக்கும். இது மாரிதா இருக்கும். 

– மதுரை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள், நகைசுவைக் கதைகள், முதற் பதிப்பு: 1999, மதுரை காமராசா பல்கலைக் கழகம், மதுரை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *