பங்கு – பாகம்
கதையாசிரியர்: வீ.அய்யனார்
கதைத்தொகுப்பு:
நகைச்சுவை
கதைப்பதிவு: August 9, 2026
பார்வையிட்டோர்: 97
(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு ஊர்ல பெரிய சொக்கன் சின்னச் சொக்கண்டு அண் ந் – தம்பி ரெண்டுபேரு இருந்தாங்க. பெரிய சொக்கன் விவசாயம் செய்யுறது. சின்ன சொக்கன் குண்டடிக்கிறது, பம்பரங் குத்துறது, வெ-ளாண்டுகிட்டுத் திரிஞ்சுட்டு, வீட்டுக்கு வந்து திங்கிறது, போயிறது. சின்ன சொக்கன் பொண்டாட்டி, எங்க பொம்பளைக, குளியாஞ்சுட்டி வச்சு வெள்ளாடுறாங்களோ, அங்க போயி வெள்ளாடுறது.
அப்பஃ பெரிய சொக்கன் பொண்டாட்டி, என்னாங்க! நம்ம வயல்ல வேல செய்றோம், ஒங்க தம்பி, இப்டி வெள்ளாண்டுகிட்டு இருக்காறே. எப்டிங்கண்டு கேக்குறா. பங்கு பாகம் பகுந்து விட்டுருங்கண்டு சொல்றா.
சொல்லவும், சரிண்ட்டு பங்கு பாகம் பகுந்து விடுறா. எப்டிண்டா! வெளஞ்ச வெள்ளாமயில; வெ-ளஞ்ச கருது பெரிய சொக்கனுக்கு. வெளையாத கருது சின்னச் சொக்கனுக்கு. முட்டையிடுகிற கோழி பெரிய சொக்கனுக்கு, சாவ (சேவல்) சின்னச் சொக்கனுக்கு, கார வீடு பெரிய சொக்கனுக்கு, கூர சின்னச் சொக்கனுக்கு. இவ், வெள்ளாண்டுகிட்டு திருஞ்சதுனால; பங்கு பாகம்ண்டா என்னாண்டு தெரியல. அண்ணன் பாத்து, குடுக்குறத வாங்கிக்கிட்டா. வாங்கிப் பெறக்கி, பொண்டாட்டிகிட்ட பாத்துக்கிண்டு விட்டுட்டு; இவ் வெளியேறிப் போறா. போகயில -, அங்ஙட்டு ஒரு சின்னக் கிராமம் இருக்கு. அந்தக் கெராமத்ல, நமக்கோடி நாராயணஞ் செட்டியாருண்டு ஒருத்தரு. பெரிய பணக்காரு. அந்த ஊர்ல போயி வேல இருக்காண்டு நமக்கோடி நாராயணஞ் செட்டியாருகிட்டக் கேக்குறா. யாரு? சின்னச் சொக்கன். வேல இருக்கு. ஒன்னால் செய்ய முடியுமாண்டு செட்டியாரு கேக்குறாரு.
குடுங்க, செய்றேங்குறீர். யப்பா! நிய்யி சின்னப் பய. இங்க இருக்ற வேலயச் செய்ய மாட்ட. குடுத்த வேலயச் செய்ய முடியலண்டா; ஒரு காத அறுத்துக்கிட்டு விட்டுருவோம். செஞ்சுட்டா, எஞ்சொத்துல பாதியும், எம் பொண்டாட்டிகள்ல ஒண்ணுங் குடுத்துருரேண்டு சொல்லி, சின்னச் சொக்கன வேல செய்யச் சொல்லிட்டாரு.
என்னன்னா வேலண்டா, விடிஞ்சா(ல்)
ஆயிரம் கட்டுப் புல்லறுக்கணும்
ஆயிரம் பான தண்ணி யெடுக்கணும்
அழுத பிள்ளய ஆட்டி விடணும்
ஆறு பான சோறாக்கணும்
நெல்லு குத்தணும் அரிசி யாக்கணும்
மெத்த விரிக்கணும் – காலமுக்கணும்
குதுரைகளுக்கு தண்ணி காட்டணுமுண்டு
வரிசயா சொல்லிக்கிட்டே இருக்கா. இத்தன வேலைகளுஞ் செஞ்சு, எண்ணக்கி; இவ் செட்டியாருக்கு நல்ல பிள்ளையாகுறது. செஞ்சு பாத்தா, எத்தனை வேலைகளச் செய்யுறது. பொழுது விடுஞ்சு, பொழுது விழுகுறதுக்குள்ள இத்தன வேலைகளச் செய்ய முடியுமா? எனண்டு செய்யுறது. செய்ய முடியாமப் போகவும், செட்டியாரு ஒரு காத அறுத்துக்கிட்டுப் போகச் சொல்லிட்டாரு. காது வழி ரத்தம் வந்தவாக்குல, வீட்டுக்குப் போறா.போகவும் -, அண்ணன் பாத்தா. என்னா தம்பிண்டு கேட்டா.
கேக்கவும் -, அந்த ஊர்ல, நமக்கோடி நாராயணஞ் செட்டியாருண்டு இருக்காரு. அவருகிட்ட வேல செய்றேண்டு கேட்டே: யப்பா! இங்க வேல கடுமயா இருக்கும். செஞ்சுட்டயிண்டா, எஞ்சொத்துல பாதி சொத்து, எம்பொண்டாட்டில் ஒண்ணும் தரேண்டு சொன்னாரு. சரிண்டு செஞ்சே. என்னால் செய்ய முடியல, காதறுத்துக்கிட்டு போகச் சொல்லிட்டாரு. வந்தேண்டு சொன்னா.
அண்ணணுக்கு வேகம் வந்து; நிய்யி, இங்க வெவசாயத்தப் பாரு. நா அங்க போறேண்ட்டுப் போறா.
போகயில, ஒரு கொளம் இருக்கு அந்தக் கொளத்துக்கர வழியா போறா. போகயில, கொளத்துக் கரயில ஒக்காந்து, நமக்கோடி நாராயணஞ் செட்டியாரு பல்லு வௌக்கிட்டிருக்காரு. இவ், போகயிலலேய… நமக்கோடி நாராயணஞ் செட்டியாருண்றது யாரு? நமக்கோடி நாராயணஞ் செட்டியாருண்றது யாருண்டு கேட்டுக்கிட்டே போறா. அங்ஙன எதுக்கால ஒக்காந்திருந்தவரு; நாந்தாப்பா! ஒனக்கு என்னா வேணும்ண்டு கேட்டாரு.
ஒங்ககிட்ட வேல இருக்காம்ல, அந்த வேலய, நாஞ் செய்றேண்டா. இப்பத்தா ஒருத்த காதறுத்துக்கிட்டு போறா. நிய்யி வேறயாண்டு செட்டியாரு சிரிக்குறாரு. சிரிச்சுட்டு, வா-ண்டு கூட்டிட்டுப் போறாரு. போயி-, வேலைகளச் சொன்னாரு. சொல்லவும், சரிண்ட்டு செய்யுறா.
மொதல்ல போயி -. ஆயிரங்கட்டுப் புல்லறுத்திட்டு வா-ண்டு செட்டியாரு சொன்னாரு. சொல்லவும், சரிண்ட்டுப் போறா. போற வழில, ஒரு கடயில ஒரணாவுக்கு நூல் கண்டு ஒண்ண வாங்குனா. வாங்கிட்டுப் போறா. போயி -, ஒரு கட்டுப் புல்ல அறுத்து; அத ஆயிரங்கட்டாக்கட்டி, அந்த ஆயிரம் கட்டயும் ஒண்ணா வச்சுக்கட்டி, தலயில வச்சுக்கிட்டு வாரா.
வரவும், எங்கடா ஆயிரங்கட்டு? பின்னால் வருதாண்டு செட்டியாரு கேட்டாரு. யோ! வந்து கடட எண்ணிப் பாருய்யாண்டு, ஆயிரம் கட்ட எண்ணிப் போட்டா. செட்டியாருனால மறுபேச்சுப் பேசமுடியல.
சரி போயி -, ஆயிரம் பான தண்ணி எடுத்துக்கிட்டு வா-ண்டு செட்டியாரு சொன்னாரு. சரிண்டு, பானய எடுத்துக்கிட்டுப் போனவ், படிக்கொரு பானயப் போட்டு ஓடச்சா. படிக்கொரு பானய ஒடைக்கவும், செட்டியாரு எத்தன பான வாங்கிக் குடுப்பாரு.
சரிடா நிய்யி தண்ணியெடுக்க வேணாம், ஆயிரம் குதுரைகள் அவுத்து, தண்ணி காட்டுண்டு செட்டியாரு சொன்னாரு. இவ், ஆயிரங் குதுரகளயும் அவுத்து, தண்ணிகிட்டக் கொண்டு போயிக், காட்டிட்டுக் கெட்டி வச்சுறது. பாத்தாரு செட்டியாரு. இவ் நம்மள மிஞ்சிருவா போலண்ட்டு இந்த வேலய நாஞ் செஞ்சுகிறே. நிய்யி போயி, அழுத பிள்ளய ஆட்டிவி டுண்டு சொன்னாரு. அங்க போயி -, பிள்ளய ஆட்டி விடுற மாதிரி நறுக்குண்டு கிள்ளி விட்டுறது. பிள்ள வீர் வீரண்டு அழுகுது.
இவன ஒண்ணுஞ் செய்ய முடியாது. இவன எங்கிட்டாச்சுங் கொண்டு போயி விட்டுரணும்ண்ட்டு, செட்டியாரோட மாமியா வீட்டுக்குப் போகச் சொல்றாரு.
பணியாரஞ் செஞ்சு கொடத்ல வச்சுக்கிட்டு வண்டியக் கட்டிக்கிட்டுப் போறாங்க. நமக்கோடி நாராயணஞ் செட்டியாரே! எனக்கு வகுத்தப் பசிக்குதுய்யாண்டா.
இந்தக் கட்டுச் சோற, அந்த தண்ணித் தொறயில வச்சுத் திண்டுட்டு, எனக்குக் கொஞ்சம் வச்சுட்டு வாடாண்டு செட்டியாரு சொன்னாரு.
கட்டுச் சோறக் கொண்டு போயி திண்டுட்டு, மீதிய அங்ஙனதான வச்சுப்பிட்டு வந்திட்டா. வரவும் -, எங்கடா எனக்குச் சோறுண்டு செட்டியாரு கேட்டாரு. நிய்யிதானய்யா அங்ஙன வச்சுட்டு வரச்சொன்ன. அதா, அங்க வச்சுட்டு வந்திட்டேண்டு சொன்னா.
இவன என்னா செய்யுறதுண்ட்டு, சரி; இந்தக் கொடத்த பாத்துக்க, இதுக்குள்ள கைய விட்டுறாத, உள்ள பாம்பு; தேளு; பல்லிக கெடக்குதுண்டு சொல்லிட்டு, செட்டியாரு சோறு தின்ன, தண்ணி மோக்கப் போனாரு.
இவ, செட்டியாரு வரங்குள்ள, கொடத்ல இருந்த பணியாரத்தத் திண்டுபிட்டு, மீதிய அங்ஙன இருந்த மாட்டுக்காரங்களுக்கு குடுத்துத் திங்க விட்டுட்டு, அங்ஙிட்டுக் கெடந்த பாம்பு – பல்லிகளப் புடுச்சுப் போட்டு நெப்பி, மேலாக ஒரு செனத் தேளப் போட்டு, மூடி வச்சிட்டா.
வண்டி போகுது. போகயில, செட்டியாரு – – லேசா வண்டுக்கட்ட அவுத்துக்கிட்டு, கொடத்துக்குள்ள கைய விட்டாரு செட்டியாரு. விடவும், மேலாகக் கெடந்த செனத் தேளு, கையில வாங்கி விட்டுருச்சு. வாங்கவும் மனுச துடிக்கிறா.
வலியோட வலியா, வண்டி மாமியா வீட்டுக்குப் போயிருச்சு. இந்தத் தேளுக்கடிக்கு என்னாடா செய்யுறது சொக்காண்டு, செட்டியாரு கேட்டாரு.
காப்டி கேப்பய நனச்சு இடுச்சு, புளிச்ச தண்ணில காச்சிக் குடிக்கச் சொல்லிட்டா. காச்சிக் கரச்சுக் குடுத்தாங்க. குடிச்சாரு செட்டியாரு. ரெண்டாங் கெட்ட நேரத்ல, செட்டியாருக்கு வகுத்தால் புடிங்கிருச்சு. புடுங்கவும், சந்து பொந்தெல்லாம் பேண்டு மாமியா வீட்டக் கெடுத்துப்பிட்டாரு. இவன வச்சிருந்தோம்ண்டா, நம்மள ரெம்ப அவமானப் படுத்திப்பிடுவாண்ட்டு, பேசுனது போல, சொத்துல பாதியும், நமக்கோடி நாராயணஞ் செட்டியாரு பொண்டாட்டிகள்ல ஒரு பொண்டாட்டியும் குடுத்துப் போகச் சொன்னாராம்.
வாங்கிட்டு, ஊருக்கு வந்து, பெரிய சொக்கனும் -சின்னச் சொக்கனும், நல்லாப் பொளச்சாங்களாம்.
– மதுரை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள், நகைசுவைக் கதைகள், முதற் பதிப்பு: 1999, மதுரை காமராசா பல்கலைக் கழகம், மதுரை.
தொடர்புள்ள சிறுகதைகள்
லார்ட் பெட்லிங்டனும் அப்புசாமியும்
ஜ.ரா.சுந்தரேசன்
August 19, 2026
வக்கணை
வீ.அய்யனார்
August 9, 2026
பூதம் – கீதம்
வீ.அய்யனார்
August 9, 2026