கொழும்புப் பெண் வேண்டாம்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: September 4, 2026
பார்வையிட்டோர்: 104 
வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்

(1965ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

முன்பு கொழும்புப் பெண்ணைப் பற்றி எழுதி னேன் அல்லவா? அதனால் வந்த விபரீதங்கள், தொல் லைகள் அப்பப்பா! 

“கொழும்புப் பெண்ணைப் பற்றியெல்லாம் இப் படி எழுதலாமா? இதைப் படித்தால் அல்லது படித்த வர்கள் சொல்லக் கேட்டால் எந்தக் கொழும்புப் பெண் ணும் உன்னை மணக்க முன்வர மாட்டாளே! நிச்சய மாகும்போல் இருக்கும் கொழும்புப் பெண்கூட இதை அறிந்தால் உன்னை எட்டியும் பார்க்க மாட்டாளே! எல் லாவற்றையும் கெடுத்துவிட்டாயே!” என்றெல்லாம் பெற்றோர்கள் மிகுந்த கவலையுடனும் கோபத்துடனும் என்மீது குறைப்படுகிறார்கள்; சீறிப்பாய்கிறார்கள். 

இதையெல்லாம் கேட்டதும் எனக்கு மிகுந்த ஆச்சரியமாகவும் இருந்தது; மகிழ்ச்சியாகவும் இருந்தது. 

ஆச்சரியத்துக்குக் காரணம், கொழும்புப் பெண் ணைப்பற்றி இவ்வளவு எழுதியும், பெற்றோர்கள் கொழும்புப் பெண்கள்தான் என்னை வெறுப்பார்கள் என்று நினைக்கிறார்களே தவிர நான் கொழும்புப் பெண்ணை வெறுப்பதைப் புரிந்துகொள்ள வில்லையே என்பதுதான்! ஒருவேளை எல்லாவற்றையும்போல் இதுவும் ‘யாவுங் கற்பனை’ என்று நினைக்கிறார்களோ என்னவோ! 

மகிழ்ச்சிக்குக் காரணம், எனது கட்டுரையைப் பற்றி அறிந்த கொழும்புப் பெண்கள் என்னை விரும் பவோ மணந்துகொள்ளவோ மாட்டார்கள் என்று பெற்றோர்கள் கூறியதுதான் ! 

‘கொழும்புப் பெண் என்ற அபாயம் வாழ்வில் குறுக்கிடக்கூடாது, நிச்சயமாகிவரும் கொழும்புப் பெண்கூட குதி உயர்ந்த காலணியும் தலைமுடியும் கழன்று விழக்கூடிய வேகத்தில் திரும்பி ஓடிவிட வேண்டும்’ என்னும் எனது கோக்கம் ஒரு வேளை நிறைவேறலாம் என்ற நம்பிக்கையில்தான் ‘கொழும் புப் பெண்’ என்ற கட்டுரையை எழுதினேன். இப் போது பெற்றோர்கள் என் மீது குறைப்படுவதிலிருந் தும் சீறிப் பாய்வதிலிருந்தும் எனது நோக்கம் ஒரு வேளை என்ன நிச்சயமாகவே நிறைவேறலாம் என ஆறுதல் அடைந்தேன். 

கொழும்புப் பெண் வேண்டாம் என நான் கூறுவதற்கு ஏராளமான காரணங்கள் உண்டு. சில வற்றை மட்டும் இங்கு கூறுகிறேன். 

முதலாவது, கொழும்புப் பெண்ணுக்குத் தீனி போட்டுக் கட்டாது. தீனி என்று நான் குறிப்பிடுவது மாட்டு இறைச்சியையோ ஐஸ் போட்ட மீனையோ அல்ல. நான் குறிப்பிடுவது அவர்களுக்குத் தினமும், தவறு, ஒவ்வொரு வேளையும் அலங்காரப் பொருட்க ளுக்கு (அலங்கோரப் பொருட்கள் என்பர் பெரியோர்) போடவேண்டிய பணம் என்ற தீனியேயாகும்! 

இரண்டாவது, கொழும்புப் பெண்ணைக் கட்டிக் கொண்டால் கூடவே ஒரு வேலைக்காரனையும் கட்டிக் கொண்டு மாரடிக்க வேண்டும். இல்லாவிட்டால் சமையல் வேலை அல்லது ஒட்டலில் உணவு எடுத்து வரும் வேலை, குழந்தைகள் பராமரிப்பு வேலை போன் றவைகளெல்லாம் என் தலையில் வந்து விழும். 

மூன்றாவது, கொழும்புப் பெண்ணைக் கட்டிக் கொண்டவன் அலுவலக நாட்கள் நேரங்கள் தவிர்ந்த ஏனைய ஓய்வு நாட்களில் அல்லது நேரங்களில் மனை வியுடன் தெரு வீதி வலம் திரிந்து கடைப் படிகள் ஏறி இறங்க வேண்டும். ஓய்வு நேரங்களில் படிப்பதி லும் எழுதுவதிலும் இன்பம் காணும் என்போன்ற வர்களுக்கு இதெல்லாம் முடியக் கூடியதா? 

நாலாவது, கொழும்புப் பெண் அதிகமான நேரத்தைக் கண்ணாடி முன் கழிப்பதால் நான் கண் ணாடிமுன் நின்று வெளிக்கிடவோ வெளிக்கிட்டாலும் நேரத்துக்கு அலுவலகம் போய்ச் சேரவோ முடியாது. இன்னொரு கண்ணாடி வாங்கினால்போகிறது எனச் சிலர் அபிப்பிராயப் படலாம். அப்படி வாங்கினால் அவள் அதையும் வைத்துக்கொண்டு தனது பின் அழகையும் சரிசெய்துகொண்டிருப்பாளே! இதற்கு மேலும் கண்ணாடிகள் வாங்க எனது பொருளாதாரம் இடங்கொடாது மட்டுமல்ல அவைகளையெல்லாம் வைக்க எனது சிறிய வீட்டில் இடமும் இல்லை. அப்படி வாங்கி வைத்தாலும் அதற்கும் அவள் ஏதாவது வேலை வைக்க மாட்டாள் என்பது என்ன நிச்சயம்? 

ஐந்தாவது, கொழும்புப் பெண்ணைக் கட்டிக் கொண்டு அவள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றால் அதுவும் ஒரு கொழும்புப் பெண்ணாகத்தானே இருக் கும். ‘தான் போக வழியைக்காணாத மூஞ்சூறு விளக்கு மாற்றையும் கொண்டு போனதுபோல்’ இருப்பவ னுக்கு மூஞ்சூறு இரண்டு விளக்குமாறுகளைக் கொண்டு போனது போன்ற நிலை இதனால் ஏற்பட்டு விடுமல்லவா? (இதற்கு மேலும் பெண் குழந்தைகள் பிறந்தால் என்னவாகும் என்பதை, பிறக்கும் ஒவ் வொருபெண்ணுக்கும் ஒவ்வொரு விளக்குமாறு வீதம் கூட்டிக் கொள்ளவும்.) 

இவையெல்லாவற்றையும் பார்க்கும்போ யாரோ ஒருவர் கூறிய பழமொழி ஒன்று நினைவுக்கு வருகிறது. “வீட்டைக் கட்டிப்பார் கலியாணத்தைச் செய்து பார்” என்ற அப்பழமொழியைக் கூறியவர் நிச்சயம் ஒரு கொழும்புப் பெண்ணைத் திருமணம் செய்து அல் லல் பட்டவராகத்தான் இருக்கவேண்டும். அவர் அந்தக் காலத்தில் வாழ்ந்து அந்தக் காலத்துக் கொழும்புப் பெண்ணைக் கட்டியபடியால் அவ்வள வுடன் நின்று விட்டார். இந்தக் காலத்தில் வாழ்ந்து இந்தக் காலத்துக் கொழும்புப் பெண்ணைக் கட்டி யிருந்தாரானால் ‘செய்து பார்’ என்று சொல்லி எம்மை யும் அபாயத்தில் தள்ள எண்ணமாட்டார்.  ‘செய்து சா’ என்று எமக்கெல்லாம் எச்சரிக்கை அல்லவா செய்திருப்பார்? 

அதோ ஒரு கடிதம் வருகிறதே! எனக்கு நிச்சயமா கும்போல் இருக்கும் கொழும்புப் பெண்ணைப் பற்றிக் குறிப்பிட்டேனல்லவா? அவளுடைய பெற்றோர்களிட மிருந்து என்னை வேண்டாம் என்ற கடிதந்தான் வந் திருக்கிறது என்பதைச் சொல்லவும் வேண்டுமா? இப் பொழுது எனது மகிழ்ச்சிக்குக் கேட்கவும் வேண்டுமா? வாழ்க எனது பேனா! 

தப்பித்தவறி என் வாழ்வில் குறுக்கிட முய லும் கொழும்புப் பெண்கள் எங்காவது இருந்தால் அவர்கள் இந்த எனது கட்டுரையுடன் இனி எக் காலத்திலுமே குறுக்கிடமாட்டார்கள் என எண்ணுகிறேன். 

– கொழும்புப் பெண் (நகைச்சுவைக் கட்டுரைகள்), முதற் பதிப்பு: செப் 1965, கலைச்செல்வி பதிப்பகம், சுன்னாகம்.

பொ.சண்முகநாதன் எழுத்தாளர் பொ.சண்முகநாதன் (போனாச்சானா) இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க ஒரு சிறந்த சிறுகதை எழுத்தாளரும், நகைச்சுவை இலக்கிய முன்னோடிகளில் ஒருவரும் ஆவார். 'போனாச்சானா' என்ற பெயரிலும் எழுதியுள்ளார். வீரகேசரி' மூலம் 1961ல் எழுத்துலகில் நுழைந்த நகைச்சுவை எழுத்தாளர் திரு.பொ.சண்முகநாதன் அவர்கள் ஏனைய ஈழத்துப் பத்திரிகைகளான 'ஈழநாடு', 'கலைச்செல்வி', 'கலைவாணி, 'சங்கப்பலகை', 'சுதந்திரன்', 'செய்தி', 'தமிழ்முரசு', தினகரன்', 'புதினம்', 'விடுதலைப் பரணி, விவேகி', 'ராதா' ஆகியவைகளிலும் எழுதியுள்ளார். இவர் நகைச் சுவைக்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *