கூகுள் மேப் கடவுள்
கதையாசிரியர்: தேவதர்ஷினி செல்வராஜ்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: May 1, 2026
பார்வையிட்டோர்: 1,929

திலீப் Phone-அ எடுத்தான். Google Map-ல `சிவன் கோயில்` னு தேடுனான். வழி காட்டுச்சு. Bike-அ Start பண்ணி Follow பண்ணான்.
கொஞ்ச தூரம் போனதும் ஒரு டீ கடை. மேப் “நீங்க வந்து சேர்ந்து விட்டீர்கள்” னு சொல்லுச்சு.
திலீப்: “என்னடா இது? கோயில காணோம்?”
சரி காபி குடிச்சுட்டு போகலாம்னு குடிச்சான். கிளம்பி மறுபடி Map பாத்தா… இப்போ வழி வேற மாறி காட்டுது. காட்டுக்குள்ள போகுது.
திலீப்: “Google Map பொய் சொல்லாது” னு நம்பி உள்ள போனான்.
கொஞ்ச தூரத்துல Phone Signal கட். Map காலி. Bike-ம் நின்னுருச்சு.
திடீர்னு வானத்துல இருந்து ஒரு குரல். அசரீரி.
“டேய் திலீப்… நீ யார தேடி போறியோ… அவன் தான் பேசுறேன்”
திலீப் உறைஞ்சு நின்னான்: “சா… சாமி?”
சிவன்: “ஆமாடா. நான் உங்க கிட்ட விளம்பரம் கேட்டேனா? போன தூக்கிட்டு, பைய தூக்கிட்டு, கூட்டமா கிளம்பி வர வேண்டியது. ‘Photo எடுக்குறேன், Video எடுக்குறேன்’ னு சாகசம் பண்ணி, மலைல இருந்து விழுந்து செத்து போயிட்டு, ‘காப்பாத்த வராத கடவுளை பாக்க வேற போறீங்க’ னு நாலு பேரு Comment போடுவான். அதுக்கு 40 Like வேற. இதெல்லாம் வேணாம் டா.”
திலீப் தலை குனிஞ்சான்.
சிவன்: “நீ உன் கடமைய சரியா செய். என்ன மனசுல நினைச்சுக்கோ. நம்பி செய். நான் நடத்தி தருவேன். நடக்கும் சரியா?”
“இப்போ நேரா போ. ஒரு சின்ன வீடு வரும். ஒரு கிழவன் மோர் செஞ்சுட்டு இருப்பான். முடிஞ்சா அவனுக்கு எதாவது உதவி செய்.” குரல் மறைஞ்சுது.
திலீப் நடந்து போனான். சின்ன குடிசை. கிழவன் மோர் கடைஞ்சுட்டு இருந்தாரு. திலீப் போய் மோர் வாங்கி குடிச்சான். பணம் குடுத்தான். கையில இருந்த ₹2000-அ குடுத்து, “தாத்தா, ஊருக்கு வெளிய ஒரு கடை போடுங்க. நான் வாரா வாரம் வருவேன்” னு சொல்லிட்டு வந்தான்.
Bike Start ஆச்சு. மனசுக்குள்ள கோயிலுக்கு போய் வந்த நிம்மதி. அப்படியே வீட்டுக்கு கிளம்பிட்டான்.
அங்க குடிசைல, மோர் கடை தாத்தா வானத்த பாத்து கை கூப்புனாரு: “வேண்டுதல நிறைவேத்திட்ட சிவனே… நன்றி.”
நீதி: கடவுள் கல்லுலயும் இருக்காரு. மனசுலயும் இருக்காரு. மனுஷனுக்கு செய்யுற உதவிலயும் இருக்காரு. தேடி போகணும்னு இல்ல… தேடி வருவாரு.
தொடர்புள்ள சிறுகதைகள்
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு!
வளர்கவி
September 18, 2026
இந்திரா
நீர்வை பொன்னையன்
September 18, 2026
இடைவேளை
எஸ்.சங்கீதா
September 18, 2026