கிண்டியாய நமஹ
கதையாசிரியர்: கி.வா.ஜகந்நாதன்
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: April 16, 2026
பார்வையிட்டோர்: 78

அந்தப் பிராமணர் ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்து நீராடி விட்டுக் கையில் ஒரு பாத்திரத்தை ஏந்திக் கொண்டு வீடு தோறும் சென்று ‘கிருஷ்ணாய நமஹ’ என்று சொல்லி நிற்பார். வீட்டுக்காரர் போடும் அரிசியை வாங்கிக் கொள்வார். பல வீடுகளில் கிடைக்கும் அரிசியைக் கொண்டு அவர் ஜீவனம் நடத்தி வந்தார்.
ஒரு நாள் ஒரு வீட்டிற்குள் சென்று, “கிருஷ்ணாய நமஹ” என்று சொல்லி நின்றார். கூடத்தில் யாரும் இல்லை. சுற்றும் முற்றும் பார்த்தார்.
யாரும் இல்லை. அங்கே ஒரு கிண்டி இருந்தது. அதை எடுத்துத் தம் பையில் போட்டுக்கொண்டு புறப்பட்டு விட்டார்.
பிறகு வீட்டுக்காரர்கள் கூடத்தில் இருந்த கிண்டியைக் காணாமல் எங்கும் தேடினார்கள். அது கிடைக்கவில்லை. இரண்டு நாட்கள் ஆயின. அந்த இரண் நாளும் அந்தப் பிராமணர் அந்த வீட்டுக்குப் போகவில்லை. மூன்றாவது நாள் போனார். அங்கே நின்றபோது அவருடைய மனதில் கிண்டியைத் திருடின நினைவு தோன்றியது. மார்பு ‘படக் படக்’ கென்று அடித்துக்கொண்டது. “கிருஷ்ணாய நமஹ” என்று சொல்லவேண்டியவர் “கிண்டியாய நமஹ” என்று சொல்லிவிட்டார். அவர் மனதில் இருக்தது அவரை அறியாமலே வாயில் வெளிப்பட்டுவிட்டது.
அதைக்கேட்ட வீட்டுக்காரர்கள் ‘இவர் என்ன கிண்டியாயகமஹ, என்றாரே, இவரேகிண்டியைத் திருடியிருப்பாரோ?’ என்று எண்ணி, “ஒய்! பிராம்மனா, கிண்டி எங்கே? என்று அதட்டிக் கேட்டார்கள், முன்பின் இத்தகைய காரியத்தைச் செய்து அறியாதவராதலின் அவர் தடுமாறினார். கடைசியில் கிண்டியைத் தாமே எடுத்துச் சென்ற தாகவும் மறுநாள் கொண்டு வந்து கொடுப்பதாகவும் ஒப்புக்கொண்டார்.
மறுகாள் கிண்டி வந்து சேர்ந்தது. ‘கிருஷ்ணாய நமஹ, ‘கிண்டியாய நமஹ, ஆனதை எண்ணி வீட்டுக்காரர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.
– தேன் பாகு (சிறுவர் கதைகள்), முதற் பதிப்பு: ஏப்ரல் 1991, அமுத நிலையம் லிமிடெட், சென்னை.
![]() |
கி. வா. ஜ என்றழைக்கப்பட்ட கி. வா. ஜகந்நாதன் (ஏப்ரல் 11, 1906 - நவம்பர் 4, 1988) குறிப்பிடத்தக்க தமிழ் இதழாளர், கவிஞர், எழுத்தாளர் மற்றும் நாட்டுப்புறவியலாளர், இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த தமிழறிஞர்களில் ஒருவர் (1906-1988). இவர் தமிழறிஞர் உ. வே சாமிநாதய்யரின் மாணாக்கராவார். கலைமகள் இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார். 1967 இல் இவரது வீரர் உலகம் என்னும் இலக்கிய விமர்சன படைப்பிற்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது.…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
அச்சம் தவிர்!
வளர்கவி
April 21, 2026
மூவர் செய்த மேஜிக்
இரா.கலைச்செல்வி
April 18, 2026
தேன்பாகு
கி.வா.ஜகந்நாதன்
April 16, 2026
