அப்பாவுக்கு ஒரு கடிதம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 16, 2026
பார்வையிட்டோர்: 28 
வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்

(ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

சங்கரி அவள் கணவன் கோபாலின் வருகைக்காகக் காத்திருந்தாள். வேலை முடிந்து அவன் வரும் நேரம் கடந்து விட்டது. கடிகாரம் எட்டு மணியைத் தாண்டி விட்டது.

முன்பெல்லாம் கோபால் சரியாக இரவு ஏழு மணிக்கு வந்து விடுவான். எப்பொழுது குடிப்பழக்கம் ஆரம்பித்ததோ, அப்போதிலிருந்து அவன் வீட்டுக்கு வருவதில் காலதாமதம் ஆனது.

தாசில்தார் ஆபிசில் அவன் வேலை பார்க்கிறான். சாதாரண கிளார்க் வேலைதான். பாழாய்ப் போன குடிப்பழக்கம் எப்படியோ அவனைத் தொற்றிக் கொண்டு விட்டது. எப்பொழுதாவது ஒரு நாள் என்று தொடங்கி இப்போது தினந்தோறும் குடிக்கும் குடிமகனாக ஆகி விட்டான்.

சங்கரி நல்லதனமாக சொல்லிப் பார்த்தாள். அவள் கூறிய அறிவுரைகள் எதுவும் அவனை மாற்ற முடியவில்லை.

சங்கரி பயந்த சுபாவம் உடையவள்; கணவன் அடித்தாலும் உதைத்தாலும் திட்டினாலும் தாங்கிக் கொள்வாள்; எதிர்த்துப் பேச மாட்டாள்.

சங்கரிக்கு ஒரு பையன் ராமு. கல்லுரியில் பி. காம் இரண்டாம் ஆண்டு படிக்கிறான். கோபால் போதையுடன் வீட்டுக்குள் நுழைந்தான். ”வாங்க சாப்பிடலாம்” என்றாள் சங்கரி.”நான்தான் தாசில்தார் . என்னை யாரும் தொந்தரவு செய்யக் கூடாது என்று உளறி விட்டு படுத்துவிட்டான். இது தினந்தோறும் நடக்கும் கூத்து. குடித்து விட்டு உளறுவான்.

ராமு “நான் அப்பாகிட்டே சொல்றேன். நான் சொன்னால் அப்பா கேட்பார்” என்று சொன்னதோடு இல்லாமல் அப்பா நீ னிமேல் குடிக்கக் கூடாது . உன் உடம்பு கெட்டுவிடும். குடிப்பதை விட்டு விடு ” என்று சொன்னான்.

கோபாலுக்குக் கோபம் வந்தது. ராமுவின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டான். ”ஏண்டா முளைச்சு மூணு இலை விடலை. எனக்கு நீ புத்தி சொல்ல வந்துட்டயா. எனக்கு எல்லாம் தெரியும் . இன்னொரு வாட்டி என்கிட்டே இது மாதிரி சொன்னே உன்னைத் தொலச்சுடுவேன், தொலைச்சு ” என்று கத்தினான்.

ராமு அன்று இரவு ரொம்ப நேரம் தூங்கவேயில்லை. அப்பா குடிப்பதும் அதனால் உளறுவதும் அவனுக்குப் பிடிக்கவில்லை. ”அவர் எப்போது குடிப்பழக்கத்தை நிறுத்துவார்? நல்லது சொன்னால் ஏன் கோபப் படணும்?” என்று யோசித்துக் கொண்டே தூங்கி விட்டான்.

இப்படி பலமுறை அப்பாவிடம் குடிக்காதே என்று கெஞ்சிக் கெஞ்சி ராமு அடிபட்டதுதான் மிச்சம். கோபால் திருந்த நினைக்கவில்லை. ஒரு நாள்

கோபால் குடித்து விட்டு வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் சாக்கடைக்குப் பக்கத்தில் விழுந்திருந்தான். அவன் பக்கத்தில் பன்றி ஒன்று புரண்டு கொண்டிருந்தது. பிரக்ஞை இல்லாமல் இருந்த அவன் ஒரு கையைப் பன்றியின் மீது பன்றியின் மீது போட்டிருந்தான். வேட்டியெல்லாம் சாக்கடை நீர் பட்டு அழுக்காயிருந்தது.

ராமுவுக்கு அப்பாவை அந்த நிலையில் பார்க்க கோபம் பொத்துக் கொண்டு வந்த்து. அவரை கை கொடுத்துத் தூக்கினான். ”நீ படுத்திருக்கிறது சாக்கடை. எழுந்திரு. வீட்டுக்குப் போகலாம்”. அங்கிருந்த ஒருவர் உதவியோடு அப்பாவைத் தூக்கி ஆட்டோவில் ஏற்றி அவரை வீட்டுக்கு அழைத்து வந்தான்.

சங்கரி மிகவும் பதறிப் போனாள். “எத்தனை முறை சொன்னாலும் கேட்காமல் குடித்துவிட்டு வந்தால் என்ன செய்வது? கடவுள்தான் அவருக்குப் புத்தியைக் கொடுக்க வேண்டும். “ என்றாள்.

அடுத்த நாள் காலை ராமு அப்பா இருந்த அறைக்குள் போனான்..

“அப்பா கடைசியா கேக்கிறேன். நீ குடிப்பதை நிறுத்துவாயா? மாட்டாயா? நீ குடிப்பதும் உளறுவதும் எனக்கு கஷ்டமாகயிருக்கிறது.”

கோபால் ராமுவை எட்டி உதைத்தான்.

கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தால்தான் அப்பாவின் மனம் மாறும். என்ன செய்யலாம் என்று ராகவன் ரொம்ப நேரம் யோசித்தான். ஒரு காகிதத்தை எடுத்து எதையோ எழுதினான். வீட்டை விட்டு கிளம்பினான்.

ரயில் நிலையத்திற்கு வந்தான். ரயில் வந்து கொண்டிருந்தது. சட்டென்று பிளாட்பாரத்திலிருந்து குதித்து ரயிலை நோக்கிப் பாய்ந்தான். எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே கண் மூடீ திறக்கும் நேரத்தில் அந்தக் கொடூரம் நடந்துவிட்டது.

ரயில் அவன் மேல் ஏறிவிட்டது. எல்லோரும் அதிர்ச்சியுடன் கத்தினார்கள்.. ரயில்வே போலீசார் உடலை மீட்டனர்.

ராமுவின் மரணத்தைக் கேள்விப் பட்டு கோபாலும் சங்கரியும் சம்பவம் நடந்த இடத்திற்கு ஓடினார்கள். பிணத்தின் சட்டைப்பையில் ஒரு கடிதம் இருந்தது. அந்தக் கடிதத்தில் இருந்ததாவது –

அப்பாவுக்கு,

எல்லோருக்கும் சாரி… எனக்கு உயிரோடு இருக்கப் பிடிக்கலே. உடனே இந்த வயசிலே என்ன கஷ்டம் என்று யோசிக்காதீங்க. எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லே. என் சாவுக்கு யாரும் காரணம் இல்லே. செத்ததுக்கு அப்புறம் என்ன நடக்கப் போவது என்று தெரியலே. பார்த்துக்கலாம். எனக்குக் காதல் பிரச்சனை எதுவுமில்லை. எத்தனையோ முறை என் அப்பாவிடம் குடிப்பழக்கத்தை விட்டுவிடும்படி மன்றாடிக் கேட்டுக்கொண்டேன் . அவர் குடியை நிறுத்தவில்லை. என் சாவு ஒன்றுதான் அவர் மனத்தை மாற்றும் என்னும் நம்பிக்கையில் என் உயிரை விடுகிறேன்.

என் அப்பாவை முடிஞ்சா குடிக்கிறதை விட்டு ஒழுங்காருக்க சொல்லுங்க. அம்மாவை விட்டுப்போவது எனக்குக் கஷ்டமாகத்தான் இருக்கிறது . ஆனால் எனக்கு வேறு வழி தெரியவில்லை. அம்மா என்னை மன்னிச்சுடு. யாரும் பீல் பண்ணாதீங்க.

இப்படிக்கு உங்களை விட்டு
நிரந்தரமாக பிரியும்,
ராமு

அதைக்கேட்ட சங்கரி பதறினாள்; கதறினாள். ”ராமு போயிட்டயே. என் பிள்ளயை உயிரோட பறி கொடுத்துட்டு நிக்கறேனே. ஆண்டவா! உனக்கு இரக்கம் என்பது கொஞ்சம் கூட இல்லையா?” என்று அரற்றினாள். அந்தச் சம்பவம் கோபாலின் மனதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திவிட்டது. கோபால் விம்மி விம்மி அழுதான். இனிமேல் குடிக்க மாட்டேன் என்று பிணத்தின் மீது சத்தியம் செய்தான்.

அடுத்த நாள் தின இதழில் அந்தக் கடிதத்தைப் பற்றிய செய்தி வந்திருந்தது . அதைப் படித்தவர்கள் கண் கலங்கினார்கள்.

காரியம் எல்லாம் முடிந்தது . வீடே சோகமாய் இருந்தது. அன்று மாலை ஆறு மணி இருக்கும். கோபால் வீட்டில் இல்லை. எங்கேயோ வெளியே போயிருந்தான். பக்கத்து வீட்டிலிருக்கும் பொன்னி, ”அக்கா, கடை வீதி வழியாக வரும்போது உன் வீட்டுக்காரரை டாஸ்மாக் கடைக்கிட்டே பார்த்தேன்” என்றாள்.

சங்கரிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை “அடப்பாவி மனுஷா! நீ என்னிக்குமே திருந்த மாட்டாயா?” என்று நொந்து கொண்டே டாஸ்மாக் கடையை நோக்கி ஓடினாள். அங்கு தன் கணவனைத் தேடினாள். அப்போது “குடிக்காதீங்க. குடிக்காதீங்க” அடிக்கடி கேட்கும் பரிச்சியமான குரல் அவள் காதில் விழுந்தது. குரல் வந்த திக்கை நோக்கினாள்; ஸ்தம்பித்து நின்றாள்.

அங்கே கோபால் ஒரு அட்டையில் குடியால் என் மகனைப் பறி கொடுத்துவிட்டேன்” என்று எழுதிக் கழுத்தில் மாட்டிக் கொண்டு டாஸ்மாக் கடைக்குள் போகும் குடிமகன்களை இரு கைகூப்பி கைகூப்பி “குடிக்காதீங்க, குடிக்காதீங்க” என்று கெஞ்சிக் கொண்டிருந்தான்.

– எதிர்வீடு (சிறுகதைகள்), வெளியீடு: FreeTamilEbooks.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *